Jul 4, 2010

6

எக்‌ஷெல்லில் பேக்கிரவுண்ட் இமேஜ்

  • Jul 4, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து: பொறுப்புணர்ச்சி என்பதே கடமையின் வித்து.

    வணக்கம் நண்பர்களே இது நாம் அன்றாடம் உபயோகபடுத்தும் எக்‌ஷெல்லில் பின்புலமாக ஏதாவது ஒரு இமேஜ் எப்படி உள்ளிடுவது என்பதை பற்றித்தான் நாம் 2007 மற்றும் 2003 இரண்டிலும் எப்படி பேக்கிரவுண்ட் இமேஜ் செட் செய்வது என பார்க்கலாம் இது சாதரணமாக யாரும் அதிகம் பயன்படுத்தாத ஒன்று தான் ஒரு வேளை சின்ன மாற்றங்களை விரும்பினால் மட்டும் முயற்சித்து பார்க்கவும்.

    2003 எக்‌ஷெல்

    நீங்கள் ஒரு புதிய எக்‌ஷெல் பைல் திறக்கவும் (Winkey + R then type excel இப்படியும் திறக்கலாம்) இனி நீங்கள் Format என்பதை கிளிக்கவும் பின்னர் Sheet என்பதை கிளிக்கவும் அதில் Background என்பதை கிளிக்கினால் ஒரு பாப் அப் விண்டோ திறக்கும் அதில் நீங்கள் உள்ளிட விரும்பும் படத்தை பிரவூஸ் செய்து ஓக்கே கொடுக்கவும் அவ்வளவுதான் இப்போது உங்கள் எக்‌ஷெல் பின்புலத்தில் இமேஜ் வந்திருக்கிறதா சரி வந்துவிட்டது ஆனால் எனக்கு தேவையில்லை அல்லது இமேஜ் மாற்ற நினைக்கிறீர்கள் மீண்டும் Format என்பதை கிளிக்கவும் பின்னர் Sheet என்பதை கிளிக்கவும் அதில் Delete Background கிளிக்கவும் இமேஜ் மறைந்திருக்கும் சந்தேகத்திற்கு படத்தை பார்க்கவும்.



    2007 எக்‌ஷெல்

    ஒரு புதிய எக்‌ஷெல் பைல் திறக்கவும் அதில் Page Layout என்கிற டேப்பை திறக்கவும் இனி Background என்பதை கிளிக்கவும் இப்போது திறக்கும் பாப் அப் விண்டோவில் உங்களுக்கு தேவையான இமேஜ் பிரவுஸ் செய்து ஓக்கே கொடுக்கவும் அவ்வளவுதான் இனி உங்கள் எக்‌ஷெல்லின் பின்புலத்தில் உங்களுக்கு பிடித்தமான இமேஜ் இருக்கும் சரி எப்படி நீக்குவதற்கு எனப்தற்கு கவலைபட தேவையில்லை மீண்டும் Page Layout என்கிற டேப்பை திறக்கவும் இனி Background கிளிக்கினால் போதும்.



    இனி உங்களுக்கு இப்படியாக உங்கள் எக்‌ஷெல் பைல் இருக்கும்



    இது ஒன்றும் தங்களுக்கு உபயோகமான பதிவாக இருக்காது இருப்பினும் ஒரு சின்ன விஷயத்தை தெரிந்து கொண்ட சந்தோஷம் கிடைக்கும்தானே நண்பர்களே பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் சென்றடையட்டும்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    6 Comments
    Comments

    6 Responses to “எக்‌ஷெல்லில் பேக்கிரவுண்ட் இமேஜ்”

    மின்னுது மின்னல் said...
    July 4, 2010 at 10:58 PM

    நல்ல பதிவு

    தமிழ்மண ஓட்டு பட்டை இல்லையே


    ஜிஎஸ்ஆர் said...
    July 5, 2010 at 9:11 AM

    @மின்னுது மின்னல் வணக்கம் நண்பா வலைதிரட்டிகளில் தமிழிஷ் தவிர வேற திரட்டிகளில் இனைப்பதில்லை காரணம் தமிழ்மணம் போன்ற திரட்டிகளில் என்னைபோல புதியவர்களுக்கு அங்கு இடமில்லை அதனால் தான் அவர்களின் ஓட்டுபட்டயை இனைக்கவில்லை


    மின்னுது மின்னல் said...
    July 6, 2010 at 10:02 PM

    தமிழ்மணம் போன்ற திரட்டிகளில் என்னைபோல புதியவர்களுக்கு அங்கு இடமில்லை
    //

    பதிவு பலரையும் சென்றடைய தமிழ்மணமும் வேண்டுமே !!

    இதில் புதியவர் பழைய பதிவர் முதியவர் இளைவர் என்ற பாகுபாடு வேண்டாமே

    பிடிச்சி இருந்தால் கண்டிப்பா ஓட்டு போடுவாங்க


    தமிலீஷில் இதுவரை யாருக்கும் ஓட்டு போட்டதில்லை


    ஜிஎஸ்ஆர் said...
    July 7, 2010 at 9:53 AM

    @மின்னுது மின்னல்தமிழ்மணம் திரட்டியின் வழியாக வரும் நண்பர்களை விட நம் தளத்திற்கு நேரடியாக வரும் நண்பர்கள் அதிகம் மேலும் அது எளிமையாக இருப்பது போல எனக்கு தெரியவில்லை நானே ஒரு பதிவை இனைத்துவிட்டும் எது எந்த பகுதியில் இருக்கிறது என்பதை கண்டுபிடிக்காமலே வெறுத்து வெளியேறியிருக்கிறேன் தங்களுக்கு தெரிந்தால் தமிழ்மணத்தில் பதிவை இனைப்பது பற்றி கொஞ்சம் விளக்குவீர்களா? தங்களுக்கு நேரமிருந்தால் மட்டும்


    Vengatesh TR said...
    November 27, 2010 at 11:50 AM

    .பயனுள்ள பதிவு தான், நண்பரே !!


    .பகிர்ந்தமைக்கு நன்றி !


    ஜிஎஸ்ஆர் said...
    November 29, 2010 at 11:13 AM

    @சிகப்பு மனிதன்வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றி


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர