Jul 3, 2010

13

சிடி எஜெக்டர் ஹாட்கீ

  • Jul 3, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து:மூடிய மனதில் ஒரு புதிய யோசனை மடிவதுபோல் வேகமாக வேறெதுவும் மடிவதில்லை. நன்றி-தமிழார்வன்

    வணக்கம் நண்பர்களே நாம் சாதரணமாக கணினியில் சந்திக்கும் பிரச்சினைகளில் சிடி டிரைவ் திறப்பதில் இருக்கும் பிரச்சினையும் அடங்கும் அதற்கு தீர்வாகத்தான் இந்த பதிவு.

    CD DVD Ejector அல்லது CD DVD Ejector அல்லது CD DVD Locker அல்லது CD DVD Ejectorஅல்லது CD DVD Ejector ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பாய் இருக்கிறது உபயோகிப்பதற்கு எளிதானது என்பதால் கணினியில் நிறுவுவதற்கோ அல்லது ஹாட் கீ எப்படி செயல்படுத்துவது என்பதை பற்றி நான் இங்கு விளக்க போவதில்லை காரணம் இது மிகவும் எளிமையான புரோகிராம் இந்த மென்பொருளை நிறுவுவதன் மூலம் தங்கள் சிடி டிரைவ் திறப்பதில் இருக்கும் பிரச்சினை தீரும் மேலும் இதை சிடி டிரைவ் திறப்பதில் பிரச்சினை இல்லை என்றாலும் இதை பயன்படுத்துவதின் மூலம் பிரச்சினைகள் வராமல் தவிர்க்கலாம். மேலும் இன்ஸ்டால் செய்தவுடன் உங்கள் கணினியின் வலது பக்க மூலையில் வந்து அமர்ந்துகொள்ளும் அதில் நீங்கள் வலது கிளிக்கில் செட்டிங்கஸ் திறப்பதின் மூலம் ஹாட்கீ மாற்ற முடியும் இதில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் உங்கள் சந்தேகங்களை கருத்துரையில் பதியவும்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

    வாழ்க வளமுடன்

    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    13 Comments
    Comments

    13 Responses to “சிடி எஜெக்டர் ஹாட்கீ”

    vino said...
    July 3, 2010 at 10:33 AM

    ரொம்ப பயனுள்ள கிறுக்கல் ஞானசேகர் சார்!
    =)

    பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...
    July 3, 2010 at 11:50 AM

    gud post :-)

    WebPrabu said...
    July 3, 2010 at 12:12 PM

    மீண்டும் தங்களிடமிருந்து பயனுள்ள பதிவு. உங்களின் பங்களிப்பு இல்லாத கணினி பதிவுலகை பார்ப்பது என்பது ஒரு பெரும் விழுக்காடுகளில் மனக்குறையுடன் பார்ப்பது போன்றே எனக்கு தோன்றியது. இந்த குறையுடன் மேலும் ஒரு தலைச்சிறந்த, தமிழ் மொழியின் மேல் பற்றும் ஈடுபாடும் கொண்டுள்ள, தான் கற்று அறிந்ததை மற்றவர்களுக்கும் அருளிய ஒரு எளிய தமிழ் மனிதரை இழந்து விட்டது போல் ஒருவித குற்றஉணர்வு மாதிரியான உணர்வு இருந்தது. உங்களின் உயரிய பங்களிப்பை உங்களின் வலைத்தளத்தில் மட்டும் அல்லாது மதிப்பிற்குரிய பி.கே.பி அவர்களின் வலைத்தளத்தில் படித்து பயனடைந்தவர்கள் பலர். உங்களின் பதிவுகள் அனைத்துமே எல்லோருக்கும் பயனுடைய பதிவாகவே இருந்ததது என்பது மறுக்கமுடியாது. நீங்கள் நினைத்ததிற்கும் மேல் உங்களின் பதிவுகள் பயனுள்ளவையே இன்றி பொழுதையும், நேரத்தையும், தவறான வழிநடத்தலையும், சமுதாயத்திற்கு சீர்கேடு ஏற்படுத்துவதும் இல்லை. நீங்கள் உங்களின் பதிவுகளுடன் மற்ற முற்போக்கு எண்ணமுடைய சகபதிவர்களுடன் இணைந்து நம் சமுதாயத்தையும் சீர்ப்படுத்துகிறீர்கள், ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்துகிறீர்கள்,இளையதலைமுறையினருக்கு வழிகாட்டியை மட்டுமல்லாமல் அவர்களின் அறிவை வளர்த்து அவர்களையும் நம்சமுதாயதிற்கு உதவ ஒரு உந்துதலாய் இருகிறீர்கள். உங்களை அறியாமலே இவ்வளவு செயலையும் செய்துள்ளீர்கள், இதுமாதிரியான செயல்களை அறிவுஜீவிகளால் கூட செய்ய முடியுமா என்பது எப்போதும் சாத்தியமா என்பதுடன் ஒரு கேள்விக்குறியே. நீங்கள் உங்களை யாரென்பதை எல்லோருக்கும் தெரியபடுத்திவிட்டீர்கள், உங்களுகென்று ஒரு பாதையை ஏற்படுத்தி சென்று கொண்டு இருக்கும் உங்களை பின்தொடர்ந்து வருவதில் நாங்கள் அனைவரும் பெருமகிழ்ச்சி அடைகிறோம். உங்களுக்கான அங்கீகாரம் மிகவிரைவில் உயரும் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமும் இருப்பதாக தெரியவில்லை. தொடர்ந்து எங்களுடன் இணைத்திருந்து உங்களின் உயரிய பணியை சிறப்பாக செய்யுங்கள். எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு என்றும் துணை இருப்பார். வாழ்க பல்லாண்டு!!!
    பி.கு: சமுதாய இணைப்பு தளங்களான Facebook , Twitter இன்னபிற தளங்களில் உங்களுன் பதிவுகளை இணைப்பதன் மூலமாகவும் தங்களின் பதிவுகள் பலருக்கும் பயன்படும். மேலும் உங்களின் வலைத்தளத்தில் Facebook -ன் like பட்டன்-ணினை பொருத்துவதன் மூலமும் பயனடைந்தவர்களின் எண்ணிக்கையை தெரிந்துகொள்ளமுடியும். Google Reader -ல் பதிவுகளுக்கு நேரிடையான Comment , Vote போன்ற வசதிகள் ஏற்படுத்தி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். மேலும் அதில் உள்ள Like -ன் மூலம் பதிவர்களுக்கு Notification செல்லுமாறு இருந்திருந்தாலும் பயனடைந்தவர்களின் எண்ணிக்கையை பதிவர்கள் எளிதாக தெரிந்து கொண்டிருக்க முடியும். இவை அனைத்தும் களையும் வரை சிறந்த ஒருங்கிணைப்பு இல்லாமலே இருக்கும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.

    WebPrabu said...
    July 3, 2010 at 12:12 PM

    மீண்டும் தங்களிடமிருந்து பயனுள்ள பதிவு. உங்களின் பங்களிப்பு இல்லாத கணினி பதிவுலகை பார்ப்பது என்பது ஒரு பெரும் விழுக்காடுகளில் மனக்குறையுடன் பார்ப்பது போன்றே எனக்கு தோன்றியது. இந்த குறையுடன் மேலும் ஒரு தலைச்சிறந்த, தமிழ் மொழியின் மேல் பற்றும் ஈடுபாடும் கொண்டுள்ள, தான் கற்று அறிந்ததை மற்றவர்களுக்கும் அருளிய ஒரு எளிய தமிழ் மனிதரை இழந்து விட்டது போல் ஒருவித குற்றஉணர்வு மாதிரியான உணர்வு இருந்தது. உங்களின் உயரிய பங்களிப்பை உங்களின் வலைத்தளத்தில் மட்டும் அல்லாது மதிப்பிற்குரிய பி.கே.பி அவர்களின் வலைத்தளத்தில் படித்து பயனடைந்தவர்கள் பலர். உங்களின் பதிவுகள் அனைத்துமே எல்லோருக்கும் பயனுடைய பதிவாகவே இருந்ததது என்பது மறுக்கமுடியாது. நீங்கள் நினைத்ததிற்கும் மேல் உங்களின் பதிவுகள் பயனுள்ளவையே இன்றி பொழுதையும், நேரத்தையும், தவறான வழிநடத்தலையும், சமுதாயத்திற்கு சீர்கேடு ஏற்படுத்துவதும் இல்லை. நீங்கள் உங்களின் பதிவுகளுடன் மற்ற முற்போக்கு எண்ணமுடைய சகபதிவர்களுடன் இணைந்து நம் சமுதாயத்தையும் சீர்ப்படுத்துகிறீர்கள், ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்துகிறீர்கள்,இளையதலைமுறையினருக்கு வழிகாட்டியை மட்டுமல்லாமல் அவர்களின் அறிவை வளர்த்து அவர்களையும் நம்சமுதாயதிற்கு உதவ ஒரு உந்துதலாய் இருகிறீர்கள். உங்களை அறியாமலே இவ்வளவு செயலையும் செய்துள்ளீர்கள், இதுமாதிரியான செயல்களை அறிவுஜீவிகளால் கூட செய்ய முடியுமா என்பது எப்போதும் சாத்தியமா என்பதுடன் ஒரு கேள்விக்குறியே. நீங்கள் உங்களை யாரென்பதை எல்லோருக்கும் தெரியபடுத்திவிட்டீர்கள், உங்களுகென்று ஒரு பாதையை ஏற்படுத்தி சென்று கொண்டு இருக்கும் உங்களை பின்தொடர்ந்து வருவதில் நாங்கள் அனைவரும் பெருமகிழ்ச்சி அடைகிறோம். உங்களுக்கான அங்கீகாரம் மிகவிரைவில் உயரும் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமும் இருப்பதாக தெரியவில்லை. தொடர்ந்து எங்களுடன் இணைத்திருந்து உங்களின் உயரிய பணியை சிறப்பாக செய்யுங்கள். எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு என்றும் துணை இருப்பார். வாழ்க பல்லாண்டு!!!

    Rajarajan said...
    July 3, 2010 at 3:24 PM

    பயனுள்ள பதிவு.வாழ்க

    பிரகாசம் said...
    July 3, 2010 at 11:18 PM

    தங்கள் பதிவுகளுக்கு நன்றிகள். பயனுள்ள பல தகவல்களைத் தெரிவித்துள்ளீர்கள். நான் சில ஆண்டுகளுக்குமுன் பதிவிறக்கிய ejectcd
    என்னும் மென்பொருள் 32 kb அளவே உள்ளது. இதுவும் மிகவும் எளிமையான மென்பொருள். கட்டளைகள் மட்டும் பிரஞ்ச் உச்சரிப்பில் இருக்கும் ஆனால் இப்போது எந்தத் தளத்தில் கிடைக்கிறது என்று தெரியவில்லை. தேவைப்படுபவர்கள் என்னுடைய மின்னஞ்சலில் தொடர்பு கொண்டால் அனுப்பி வைக்கிறேன்.
    m.prakasham@gmail.com

    ஜிஎஸ்ஆர் said...
    July 4, 2010 at 8:56 AM

    @vino

    நன்றி நண்பரே

    ஜிஎஸ்ஆர் said...
    July 4, 2010 at 8:57 AM

    @பாலகுமாரன், வத்திராயிருப்பு.

    தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி

    ஜிஎஸ்ஆர் said...
    July 4, 2010 at 8:58 AM

    @Rajarajan

    நன்றி நண்பரே

    ஜிஎஸ்ஆர் said...
    July 4, 2010 at 9:02 AM

    @பிரகாசம்
    தங்களுக்காக 32kb யை காட்டிலும் குறைவான அளவு வெறும் 16kb அளவே இந்த மென்பொருள் ஆங்கிலத்தில் தான் இருக்கிறது இதையும் முயன்று பாருங்களேன் நீங்கள் பயன்படுத்துவதை காட்டிலும் ஒரு வேளை சிறப்பாக இருந்தால் நல்லது தானே தரவிறக்க முகவரி http://www.4shared.com/file/vb5PbpTR/winecd.html
    நீங்கள் தங்களிடம் உள்ள மென்பொருளை ஏதாவது ஒரு தளத்தில் அப்லோட் செய்து அதன் உரலை இங்கு பகிர்ந்து கொள்ளலாமே!

    ஜிஎஸ்ஆர் said...
    July 4, 2010 at 9:12 AM

    @WebPrabu

    அன்பின் நண்பர் பிரபு அவர்களுக்கு மிக நீளமான ஒரு பின்னூட்டத்தை எழுதியிருக்கிறீர்கள் நீங்கள் என்மேல் வைத்திருக்கும் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் என்றும் கடமைப்பட்டுள்ளேன் ஆனால் உண்மையில் உங்கள் பாரட்டுகளுக்கு நிச்சியமாக நான் தகுதியானவன் இல்லையென்றெ நினைக்கிறேன் ஆனால் உங்கள் அன்பிற்கு தகுதியானவனாக இருப்பேன்.
    \\ பி.கு: சமுதாய இணைப்பு தளங்களான Facebook , Twitter இன்னபிற தளங்களில் உங்களுன் பதிவுகளை இணைப்பதன் மூலமாகவும் தங்களின் பதிவுகள் பலருக்கும் பயன்படும். மேலும் உங்களின் வலைத்தளத்தில் Facebook -ன் like பட்டன்-ணினை பொருத்துவதன் மூலமும் பயனடைந்தவர்களின் எண்ணிக்கையை தெரிந்துகொள்ளமுடியும். Google Reader -ல் பதிவுகளுக்கு நேரிடையான Comment , Vote போன்ற வசதிகள் ஏற்படுத்தி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். மேலும் அதில் உள்ள Like -ன் மூலம் பதிவர்களுக்கு Notification செல்லுமாறு இருந்திருந்தாலும் பயனடைந்தவர்களின் எண்ணிக்கையை பதிவர்கள் எளிதாக தெரிந்து கொண்டிருக்க முடியும். இவை அனைத்தும் களையும் வரை சிறந்த ஒருங்கிணைப்பு இல்லாமலே இருக்கும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.\\
    இவற்றில் எனக்கு பெரிதாக ஒன்றும் தெரியாது நீங்கள் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது கூகுள் அரட்டையில் வந்து உதவமுடியுமா மேலும் நான் சமுதாய தளங்களை பயன்படுத்துவதில்லை.
    தங்களின் சரியான புரிதலுக்கு மிக்க நன்றி

    Vengatesh TR said...
    November 27, 2010 at 11:58 AM

    .சோதனையும் செய்து விட்டேன், நன்றாக வேலை செய்கிறது, நண்பரே !!

    .பகின்றமைக்கு நன்றி !

    ஜிஎஸ்ஆர் said...
    November 29, 2010 at 11:12 AM

    @சிகப்பு மனிதன்சரியான புரிதலுக்கு நன்றி

    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe

    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர