May 2, 2010
டோரண்ட் தேடலும் ஓப்ரா தரவிறக்கமும்
நாம் சில கணினி புரோகிராம்கள் மற்றும் இன்னும் பிற தகவல்கள் சில நேரம் ரோரண்ட் பைலாக இருக்கும் அது பற்றி தெரிந்தவர்கள் எளிதாக தரவிறக்கி விடுவார்கள் தெரியாதவர்கள் என்னவென்று புரியாமல் அல்லது முயற்சிக்காமல் விட்டு விடுவார்கள் இருப்பினும் எல்லோருக்கும் எளிதாக பயன்படுத்தும் வகையில் நான் இங்கு சில குறிப்புகளை தருகிறேன் நிச்சியமாக உங்களுக்கு உதவியாக இருக்கும், கூகுளில் தேடி கிடைக்காதவை கூட டோரண்டில் கிடைத்த அனுபவம் இருக்கிறது.
சரி நண்பர்களை டோரண்டில் எப்படி தேடுவது நீங்கள் சாதரணமாக Bittorrent அல்லது UTorrent கிளையண்ட் வழியாக தரவிறக்கமோ தேடுதலோ மேற்கொள்வீர்கள் ஆனால் நாம் பார்க்கபோவது இந்த இரண்டும் இல்லாமல் எளிதாக தேடி தரவிறக்குவது என்பது பற்றித்தான்.
முதலில் நீங்கள் ஓப்ரா பிரவுசர்
தரவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள் அதிக வேகமான பிரவுசர் என்கிற அறிவிப்போடு இருக்கிறது மேலும் இதில் டர்போ எஞ்ஜின் பயன்படுத்தபட்டிருக்கிறது தளம் திறக்கும் வேகம் நன்றாக இருக்கிறது, மேலும் தற்போது ஓப்ராவில் மட்டுமே நேரடியக டோரண்ட் தரவிறக்க வசதி இருக்கிறது ஆனால் தமிழ்மொழியில் எழுத்து பிரச்சினை இருக்கிறது.
இனி உங்கள் ஓப்ரா பிரவுசரை திறந்து டோரண்ட் தேடுதளமான ஐ எஸ் ஓ ஹண்ட்
தளம் செல்லுங்கள் இனி தேடுதல் கட்டத்தில் உங்களுக்கு வேண்டிய புரோகிராம் அல்லது அதன் பெயர் கொடுத்து தேடுங்கள் சந்தேகத்திற்கு படத்தை பாருங்கள் புரியும்.
இபோது நீங்கள் தேடிய புரோகிராம் மேலே அடையாளம் காட்டியுள்ளபடி வந்திருக்கும் இனி அதை கிளிக்குங்கள் அடுத்த்தாக கீழே இருக்கும் படத்தில் உள்ளது போல ஒரு விண்டோ திறக்கும் அதில் நான் அடையாளம் காட்டியுள்ள DOWNLOD.TORRENT என்பதை கிளிக்கினால் அடுத்து ஒரு சிறிய விண்டோ படத்தில் உள்ளபடி திறக்கும் அதில் Opera என்பதை தேர்வு செய்து Save என்பதற்கு பதிலாக Open என்பதை தெரிவு செய்யவும்.
இனி கீழிருக்கும் படம் போல ஒரு விண்டோ திறந்திருக்கிறதா அதில் Choose என்பதில் நீங்கள் சேமிக்க விரும்பும் இடத்தை தெரிவு செய்து yes கொடுக்கவும் இனி என்ன தானகவே டோரண்ட் பைல் தரவிறங்க தொடங்கிவிடும்.
இப்போது ஒரு புதிய பிரவுசர் விண்டோ திறந்து அதில் Download எனும் பெயரில் நாம் தரவிறக்க நினைத்த பைல் தரவிறங்கி கொண்டிருக்கிறதா அப்படியே படத்தின் கீழே பாருங்கள் எத்தனை Seeds எத்தனை Peers என்பதையும் காணலாம்.
என்ன நண்பர்களே இது உங்களுக்கு உபயோகமானதாக இருப்பின் மற்றவர்களுக்கும் சென்றடையட்டும். மேலும் Bittorrent:, UTorrent: இவையிரண்டும்தான் எங்களுக்கு வசதியாக இருக்கிறது என நினைப்பவர்கள் வேண்டுமானால் Azureus
உபயோகப்படுத்தி பார்க்கவும், ஆனால் என்னுடைய தேர்வு ஓப்ரா பிரவுசர் வழி ஐ எஸ் ஓ ஹண்டில் தேடி டோரண்ட் தரவிறக்குவது மிகவும் எளிமையாகவும் விரைவாகவும் இருக்கிறது இதை விட எளிமையான வழிமுறை இருந்தால் கருத்துரையில் பகிர்ந்துகொள்ளவும்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
இந்த பதிவை எழுதியது: ஜிஎஸ்ஆர்
நான் தொழில்முறை சார்ந்த எழுத்தாளன் இல்லை, எனக்கு தெரிந்த விஷயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்வதற்க்காவும்,அடிப்படை கணினி சார்ந்த விஷயங்கள் தெரியாதவர்களுக்கு கற்றுக்கொள்ளும் வாய்ப்பாக இந்த தளத்தை எழுதி வருகிறேன். பதிவு பயனுள்ளதாகாவோ, பிடித்தமானதாகவோ இருந்தால் வாக்கும் கருத்துரையும் அளித்துச்செல்லுங்கள் மேலும் பலரை சென்றடையட்டும் அன்புடன் Gsr
11 Responses to “டோரண்ட் தேடலும் ஓப்ரா தரவிறக்கமும்”
-
Manoj (Statistics)
said...
May 2, 2010 at 3:03 PMசார் ரொம்ப நல்ல பதிவு... மனங்கனிந்த பாராட்டுக்கள்..... எனக்கு ஒரு சின்ன doubt...என்னோட இயங்குதளம் விண்டோஸ் விஸ்டா home premium 64 bit...அதில் utooretn மற்றும் bittorrent இல் இருந்து torrent files download பண்ண முடிவதில்லை...என்ன காரணமாக இருக்கும் என நினைகிறீர்கள்... anyway நான் இதை பண்ணி பார்கிறேன்...
-
ஜிஎஸ்ஆர்
said...
May 2, 2010 at 4:56 PM@Statistics
மன்னிக்கவும் நண்பா எதனால் தரவிறக்கமுடியவில்லை என்பதை உணர்ந்து கொள்ள முடியவில்லை இது பற்றி தெரிந்தால் நிச்சியம் தெரிவிக்கிறேன்
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர் -
Manoj (Statistics)
said...
May 2, 2010 at 9:53 PMthanks nanba....
-
Prasanna
said...
May 2, 2010 at 10:19 PMUseful Info.. Thanks :)
-
ஜிஎஸ்ஆர்
said...
May 3, 2010 at 8:47 AM@பிரசன்னா
தங்கள் கருத்துரைக்கும் வருகைக்கும் நன்றி
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர் -
mak
said...
May 5, 2010 at 11:46 PMmy tech blog
makdns.blogspot.com
thanks
kader -
நண்பன்
said...
May 10, 2010 at 8:32 AMநீ சிரித்தால் உலகம் உன்னோடு சேர்ந்து சிரிக்கும், அழுதால் நீ மட்டுமே அழவேண்டும்.
-
Vengatesh TR
said...
November 27, 2010 at 8:29 PM.தற்போது, க்ரோம் மற்றும் பயர்பாக்ஸ் ப்ரௌசர்க்கும், வந்துவிட்டது !
.தகவலை பகின்றமைக்கு நன்றி, நண்பரே ! -
Vengatesh TR
said...
November 27, 2010 at 8:30 PM.ie, by including addon/extensions, we can download !
-
ஜிஎஸ்ஆர்
said...
November 29, 2010 at 9:57 AM@சிகப்பு மனிதன்அப்படியா தகவலுக்கு நன்றி
-
ஜிஎஸ்ஆர்
said...
November 29, 2010 at 9:58 AM@சிகப்பு மனிதன்இதுவும் எனக்கு புதிய தகவல் தான்
அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்
சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>