Dec 1, 2010

28

யுஎஸ்பி-யில் கோப்பை மறைக்க பார்ட்டீசியன் உருவாக்கலாம்

  • Dec 1, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து: எதிரிகள் இல்லாமல் செய்ய ஓரே வழி அவர்களையும் நண்பர்களக்குவது தான்.

    வணக்கம் நண்பர்களே இந்த பதிவின் வழியாக நாம் அன்றாடம் பயன்படுத்தும் பெண் டிரைவில் ஒரு பார்ட்டிசியன் உருவாக்கி நம் ரகசிய கோப்புகளை மறைத்து வைக்கலாம் இதனால் என்ன பயன் நீங்கள் உபயோகப்படுத்தும் பெண் டிரைவை நண்பர்கள் அல்லது அலுவல் வேலையாக யாரிடமாவது பகிர்ந்துகொள்ள நேரிடலாம் அந்த நேரத்தில் உங்கள் கோப்புகள் திறந்த வெளியில் இருக்குமானால் அதை யாரும் எளிதாக திறந்து பார்க்கலாம் அதே நேரத்தில் நாம் பெண் டிரைவை யாரிடமாவது கொடுக்கும் போது நாம் மறைத்துள்ள கோப்புகள் வெளியே தெரியக்கூடாது அதே நேரத்தில் மற்ற கோப்புகளை நாம் பகிர்ந்துகொள்ளவும் முடியும் அதற்காக நான் இரண்டு வித மென்பொருளை அறிமுகம் செய்கிறேன்.

    முதலாவதாக SafeHouseExplorer இதை கணினியில் நிறுவி விடுங்கள் மிக எளிமையாக இருக்கிறது இதில் என்ன ஒரு விஷேசம் இருக்கிறதென்றால் நீங்கள் பார்ட்டிசியன் செய்து முடித்து கோப்புகளை மறைத்ததும் எப்போது நீங்கள் கணினியில் பெண் டிரைவை இனைக்கிறீர்களோ அப்போது இரண்டு பெண் டிரைவ் ஐகான் வந்திருக்கும் அதில் ஒன்று நாம் பார்ட்டிசியன் உருவாக்கியது இது எந்த கணினியில் இந்த மென்பொருளை நிறுவியிருக்கிறீர்களோ அந்த கணினியில் மட்டுமே இந்த பார்ட்டிசியன் தெரியும் அல்லாத கணினிகளில் இந்த பார்ட்டிசியன் வெளியே தெரியாது.



    இரண்டாவதாக Remora USB File Guard இது கொஞ்சம் வித்யாசம் இருக்கிறது இதைப் பொருத்தவரை இப்படியான ஒரு பார்ட்டிசியன் இருப்பதை வெளியே காண்பிக்கும் ஆனால் அதை அவர்கள் அனுகி திறக்க முடியாது பயன்படுத்தி பாருங்கள் எது உங்கள் தேவையை சரியாக தீர்க்கிறதோ அதையே பயன்படுத்துங்கள் ஆனால் இதில் ஒரு வசதி என்னவென்றால் நீங்கள் எங்கு சென்றாலும் உங்களின் கோப்புகளை திறக்க முடியும் காரணம் இதற்கான நிறுவல் உங்கள் யுஎஸ்பியில் தான் நிறுவுகிறீர்கள் ஆனால் இதிலும் ஒரு பிரச்சினை இருக்கிறது நாம் நமது கோப்புகளை திறக்க ஒவ்வொரு முறையும் நாம் பயன்படுத்தும் கணினியில் எக்ஸ்ட்ராக்ட் செய்யவேண்டி வரும் அதை கவணமாக அழித்துவிடுங்கள் இல்லையென்றால் நீங்கள் பாதுக்காப்பாக வைக்க நினைத்த கோப்புகள் மற்றவர்கள் காணக்கூடும்.



    மேலும் தங்களின் உபயோகத்திற்காக இன்னும் இரண்டு வகையான மென்பொருளையும் உங்கள் கவணத்திற்கு தருகிறேன் ஆனால் இந்த இரண்டு மென்பொருளும் எதை அடிப்படையாக வைத்து உருவாக்கியிருக்கிறார்கள் எனபதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை இனி USB True crypt மற்றும் ImationLOCK இரண்டையும் சோதித்து பார்க்க விரும்பும் நபர்கள் முயற்சித்து பாருங்கள் அது பற்றியதான தகவலை நம் தளத்தில் பகிர்ந்துகொள்ளுங்கள்.

    நான் ஏற்கனவே நம் தளத்தில் இனைந்திருக்கும் நண்பர்கள் என்ன காரணத்தால் வெளியேறி விடுகிறார்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என்பதை நான் ஏற்கனவே ஒரு பதிவில் எழுதியிருந்தேன் அதன் பின் தான் நான் நம் தளத்திற்காக புரியாத கிறுக்கல்கள் வழிகாட்டி என்பதாக ஒரு பதிவை எழுதியிருந்தேன் அன்று நான் நினைத்தேன் இதைப்பற்றி தெரியாத நண்பர்கள் தான் வெளியேறுகிறார்கள் என்று ஆனால் மிக சமீபத்தில் தான் தெரிந்துகொண்டேன் சில பதிவர்கள் தான் நம் தளத்தில் இருந்து வெளியேறுகிறார்கள் அவர்களின் சரியான நோக்கத்திற்கு நன்றி. இதை நான் இன்டிலியில் இருந்து தான் கண்டுபிடித்தேன் இன்டிலியில் என்னை ஒரு பதிவர் பின் தொடர்ந்தார் அவர் ஏற்கனவே நான் பதிவு எழுத தொடங்கிய காலத்திலேயே நம் தளத்தில் பாலோவராகவும் இனைந்திருந்தார் அவரை போன்ற பதிவர்கள் தான் காழ்ப்புணர்ச்சி அல்லது நம்மிடம் வேறு ஏதோ ஒன்றை எதிர்பார்த்து கிடைக்காததால் வெளியேறியிருக்கிறார்கள் அவர்களை போன்ற நண்பர்களுக்கு மிக்க நன்றி நீங்கள் வெளியேறியதால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை இதை நான் இங்கு எழுத காரணம் நான் உங்களை புரிந்துகொண்டேன் என்பதை உணர்த்துவதற்காக தான்.

    நண்பர்களே இது உங்களுக்கு புரிந்ததா இதில் ஏதாவது சந்தேகம் இருப்பின் கேட்கலாம் எனக்கு தெரிந்தவரை சொல்லித்தர முயற்சி செய்கிறேன் பதிவு பிடித்திருந்தால், உபயோகமானதாக இருந்தால் அவசியம் பதிவை பற்றிய கருத்துரையும், இன்ட்லியில் வாக்கும் பதிந்து செல்லவும்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    28 Comments
    Comments

    28 Responses to “யுஎஸ்பி-யில் கோப்பை மறைக்க பார்ட்டீசியன் உருவாக்கலாம்”

    மாணவன் said...
    December 1, 2010 at 11:31 AM

    வழக்கம்போலவே பயனுள்ள மென்பொருளை பதிவிட்டு அசத்திவிட்டீர்கள் அருமை நண்பா,

    பகிர்வுக்கு நன்றி

    தொடரட்டும் உங்கள் பணி


    மாணவன் said...
    December 1, 2010 at 11:34 AM

    //இந்த பதிவின் வழியாக நாம் அன்றாடம் பயன்படுத்தும் பெண் டிரைவில் ஒரு பார்ட்டிசியன் உருவாக்கி நம் ரகசிய கோப்புகளை மறைத்து வைக்கலாம் இதனால் என்ன பயன் நீங்கள் உபயோகப்படுத்தும் பெண் டிரைவை நண்பர்கள் அல்லது அலுவல் வேலையாக யாரிடமாவது பகிர்ந்துகொள்ள நேரிடலாம் அந்த நேரத்தில் உங்கள் கோப்புகள் திறந்த வெளியில் இருக்குமானால் அதை யாரும் எளிதாக திறந்து பார்க்கலாம் அதே நேரத்தில் நாம் பெண் டிரைவை யாரிடமாவது கொடுக்கும் போது நாம் மறைத்துள்ள கோப்புகள் வெளியே தெரியக்கூடாது அதே நேரத்தில் மற்ற கோப்புகளை நாம் பகிர்ந்துகொள்ளவும் முடியும் அதற்காக நான் இரண்டு வித மென்பொருளை அறிமுகம் செய்கிறேன்.//

    நான் எதிர்பார்த்த ஒரு மென்பொருள் பதிவு

    பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பா,


    மாணவன் said...
    December 1, 2010 at 11:36 AM

    //ஒரு வரி கருத்து: எதிரிகள் இல்லாமல் செய்ய ஓரே வழி அவர்களையும் நண்பர்களக்குவது தான்.//

    நகைச்சுவை கலந்த சிந்தனையான கருத்து அருமை,

    தொடருங்கள்....


    Mohamed Faaique said...
    December 1, 2010 at 1:10 PM

    usb'yil paavikka "folder lock" ethum ariveerhala? personal file vaikka mudiyala sir... irunthal sollunga.. plss


    வேலன். said...
    December 1, 2010 at 1:57 PM

    நான் ஏற்கனவே நம் தளத்தில் இனைந்திருக்கும் நண்பர்கள் என்ன காரணத்தால் வெளியேறி விடுகிறார்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என்பதை நான் ஏற்கனவே ஒரு பதிவில் எழுதியிருந்தேன் அதன் பின் தான் நான் நம் தளத்திற்காக புரியாத கிறுக்கல்கள் வழிகாட்டி என்பதாக ஒரு பதிவை எழுதியிருந்தேன் அன்று நான் நினைத்தேன் இதைப்பற்றி தெரியாத நண்பர்கள் தான் வெளியேறுகிறார்கள் என்று ஆனால் மிக சமீபத்தில் தான் தெரிந்துகொண்டேன் சில பதிவர்கள் தான் நம் தளத்தில் இருந்து வெளியேறுகிறார்கள் அவர்களின் சரியான நோக்கத்திற்கு நன்றி. இதை நான் இன்டிலியில் இருந்து தான் கண்டுபிடித்தேன் இன்டிலியில் என்னை ஒரு பதிவர் பின் தொடர்ந்தார் அவர் ஏற்கனவே நான் பதிவு எழுத தொடங்கிய காலத்திலேயே நம் தளத்தில் பாலோவராகவும் இனைந்திருந்தார் அவரை போன்ற பதிவர்கள் தான் காழ்ப்புணர்ச்சி அல்லது நம்மிடம் வேறு ஏதோ ஒன்றை எதிர்பார்த்து கிடைக்காததால் வெளியேறியிருக்கிறார்கள் அவர்களை போன்ற நண்பர்களுக்கு மிக்க நன்றி நீங்கள் வெளியேறியதால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை இதை நான் இங்கு எழுத காரணம் நான் உங்களை புரிந்துகொண்டேன் என்பதை உணர்த்துவதற்காக தான்.
    ஃஃ

    எனக்கும் இரண்டுபேர் காணாமல் சென்றுவிட்டனர்...எங்கிருந்தாலும் அவர்களும் வாழ்க வளமுடன்....

    தங்கள் கட்டுரை அருமை நண்பரே...
    என்றும் அன்புடன்.
    வேலன்.


    Rdr229 said...
    December 1, 2010 at 2:00 PM

    நான் எதிர்பார்த்த ஒரு மென்பொருள் பதிவு

    பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பா


    Vengatesh TR said...
    December 1, 2010 at 3:20 PM

    .இனி USB True crypt மற்றும் USB True crypt இரண்டையும்

    .இரண்டுமே ஒரே பெயரில், உள்ளது, நண்பரே !!




    .எப்போதும் போல தான், டவுன்லோட் செய்ய முற்பட்டேன் ...

    .அனால், டவுன்லோட் ஆக, மறுக்கின்றது !

    .பின் வரும், பிழை செய்தி, firefox browserலும், வருகிறது !

    ..Firefox can't establish a connection to the server at dc260.4shared.com.



    .தகவலை, பகின்றமைக்கு நன்றி, தோழரே !


    Vengatesh TR said...
    December 1, 2010 at 3:22 PM

    \\ அவர்களை போன்ற நண்பர்களுக்கு மிக்க நன்றி நீங்கள் வெளியேறியதால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை \\


    .தங்கள், மனக்கவலை தற்போது, நீங்கியுள்ளது என நினைக்கிறேன் !!


    மாணவன் said...
    December 1, 2010 at 9:58 PM

    @ஜிஎஸ்ஆர்
    //உங்கள் தளம் திற்க்கும் போது கூடவே ஒரு பாப் அப் திறக்கிறதே அது எனக்கு மட்டும் தான் திறக்கிறதா அல்லது நீங்களும் இந்த பிரச்சினையை சந்தித்திருக்கிறீர்களா? //

    எனது கணினியில் இந்த பிரச்சினை இல்லை நண்பா நீங்கள் கூறிய பிறகு Firefox, internet explorer இரண்டிலும் சோத்தித்துப் பார்த்துவிட்டேன் பாப்-அப் எதுவும் திறக்கவில்லையே நண்பா,

    முடிந்தால் என்ன காரணமாக இருக்குமென்று சோத்தித்துப் பார்த்து சொல்லுங்கள் நண்பா...
    இந்த பிரச்சினைப்பற்றி எனக்கு தெரியவில்லை

    உங்களது தகவலுக்கு மிக்க நன்றி நண்பா...

    வாழ்க வளமுடன்


    மாணவன் said...
    December 1, 2010 at 10:03 PM

    //நான் ஏற்கனவே நம் தளத்தில் இனைந்திருக்கும் நண்பர்கள் என்ன காரணத்தால் வெளியேறி விடுகிறார்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என்பதை நான் ஏற்கனவே ஒரு பதிவில் எழுதியிருந்தேன் அதன் பின் தான் நான் நம் தளத்திற்காக புரியாத கிறுக்கல்கள் வழிகாட்டி என்பதாக ஒரு பதிவை எழுதியிருந்தேன் அன்று நான் நினைத்தேன் இதைப்பற்றி தெரியாத நண்பர்கள் தான் வெளியேறுகிறார்கள் என்று ஆனால் மிக சமீபத்தில் தான் தெரிந்துகொண்டேன் சில பதிவர்கள் தான் நம் தளத்தில் இருந்து வெளியேறுகிறார்கள் அவர்களின் சரியான நோக்கத்திற்கு நன்றி. இதை நான் இன்டிலியில் இருந்து தான் கண்டுபிடித்தேன் இன்டிலியில் என்னை ஒரு பதிவர் பின் தொடர்ந்தார் அவர் ஏற்கனவே நான் பதிவு எழுத தொடங்கிய காலத்திலேயே நம் தளத்தில் பாலோவராகவும் இனைந்திருந்தார் அவரை போன்ற பதிவர்கள் தான் காழ்ப்புணர்ச்சி அல்லது நம்மிடம் வேறு ஏதோ ஒன்றை எதிர்பார்த்து கிடைக்காததால் வெளியேறியிருக்கிறார்கள் அவர்களை போன்ற நண்பர்களுக்கு மிக்க நன்றி நீங்கள் வெளியேறியதால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை இதை நான் இங்கு எழுத காரணம் நான் உங்களை புரிந்துகொண்டேன் என்பதை உணர்த்துவதற்காக தான்//

    விடுங்கள் நண்பா, அவர்களின் புரிதல்தன்மை அவ்வளவுதான் அவர்களின் குணம் அப்படி, இதையெல்லாம் நீங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் உங்கள் பணியில் தொடர்ந்து செல்ல வேண்டும், என்னைப் போன்ற பல நண்பர்கள் உங்களின் பின்னால் பக்கபலமாக எப்போதும் இணைந்திருப்போம்.

    உங்கள் பொன்னான பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்களுடன்
    உங்கள் மாணவன்

    வாழ்க வளமுடன்


    ஜிஎஸ்ஆர் said...
    December 2, 2010 at 11:00 PM

    @மாணவன்தஙகளின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா


    ஜிஎஸ்ஆர் said...
    December 2, 2010 at 11:00 PM

    @மாணவன் நன்றி நண்பரே


    ஜிஎஸ்ஆர் said...
    December 2, 2010 at 11:01 PM

    @மாணவன்நகைச்சுவையாய் இருந்தாலும் இது தான் சிறந்த வழியாக நான் நினைக்கிறேன் ஆனால் நடைமுறையில் சாத்தியமா?


    ஜிஎஸ்ஆர் said...
    December 2, 2010 at 11:01 PM

    @மாணவன்நகைச்சுவையாய் இருந்தாலும் இது தான் சிறந்த வழியாக நான் நினைக்கிறேன் ஆனால் நடைமுறையில் சாத்தியமா?


    ஜிஎஸ்ஆர் said...
    December 2, 2010 at 11:02 PM

    @Mohamed Faaique இந்த பதிவிலேயே அதற்கான விடை இருக்கிறதே


    ஜிஎஸ்ஆர் said...
    December 2, 2010 at 11:02 PM

    @வேலன்.போனவர்கள் போகட்டும் இங்கு எதுவும் நிரந்தரமல்ல


    ஜிஎஸ்ஆர் said...
    December 2, 2010 at 11:03 PM

    @Rdr229 சந்தோஷம் நண்பா


    ஜிஎஸ்ஆர் said...
    December 2, 2010 at 11:04 PM

    @சிகப்பு மனிதன்பிழையை சரி செய்து விட்டேன் எனக்கு தரவிறக்குவதில் பிரச்சினை இல்லையே இனியும் பிழை இருந்தால் சொல்லுங்கள் அந்த உரலை மின்னஞ்சலில் அனுப்பி வைக்கிறேன்


    ஜிஎஸ்ஆர் said...
    December 2, 2010 at 11:05 PM

    @சிகப்பு மனிதன் மனக்கவலை ஒன்றுமில்லை இவர்கள் யாரென்று எனக்கு தெரியாது வலைத்தளத்தில் அறிமுகம் இதைவிட மிகப்பெரிய விஷயங்களை என் வாழ்வில் இழந்திருக்கிறேன் அதற்கே நான் இன்னும் தளர்ந்து போகவில்லை இதற்காகவா நான் தளர்ந்துவிட போகிறேன்


    ஜிஎஸ்ஆர் said...
    December 2, 2010 at 11:06 PM

    @மாணவன்சரி நண்பரே நானும் முயற்சித்து பார்க்கிறேன்


    ஜிஎஸ்ஆர் said...
    December 2, 2010 at 11:06 PM

    @மாணவன்ஆனால் அந்த நபர் முகமூடி அணிந்து மற்றவர்களை ஏமாற்றுகிறார் நேரம் வரும் போது அவரை நான் உங்களுக்கு அடையாளம் காட்டுகிறேன்


    Vengatesh TR said...
    December 2, 2010 at 11:37 PM

    .இப்போது, எனக்கு, download ஆகிறது, நண்பரே !


    புலிகுட்டி said...
    December 3, 2010 at 9:20 PM

    ஒருத்தர் போனால் ஒன்பதுபேர்கள் வருவார்கள்.பதிவுலகத்தில் இதெல்லாம் சாதரணம்.இன்று முதல் நான் இனைகிறேன்.


    ம.தி.சுதா said...
    December 5, 2010 at 12:32 AM

    அருமையான தகவல் சகோதரம் மிக்க நன்றி...

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.

    நனைவோமா ?


    ஜிஎஸ்ஆர் said...
    December 5, 2010 at 8:56 AM

    @புலிகுட்டிதாங்கள் இனைந்ததிற்கு நன்றி நண்பா அதே நேரத்தில் இங்கு எதுவும் நிரந்திரமில்லை என்பதையும் நான் உணர்ந்தே இருக்கிறேன்


    ஜிஎஸ்ஆர் said...
    December 5, 2010 at 8:57 AM

    @ம.தி.சுதாதங்களின் கருத்துரைக்கு நன்றி


    முனைவர் இரா.குணசீலன் said...
    December 8, 2010 at 10:29 AM

    நண்பா இந்த மென்பொருளை நம் கணினியில் நிறுவவேண்டுமா? இல்லை நம் பென்டிரைவில் நிறுவினால் போதுமா?


    ஜிஎஸ்ஆர் said...
    December 9, 2010 at 9:49 AM

    @முனைவர்.இரா.குணசீலன்SafeHouseExplorer கணினியில் உள்ள வன்தட்டில் நிறுவ வேண்டியிருக்கும் அதே நேரத்தில் நாம் கொடுகும் அளவை நிரந்தரமாக மறைத்துவைத்துக்கொள்ளும் Remora USB File Guard நமக்கு வேண்டியவற்றை மட்டும் மறைத்துக்கொள்ளலம் இதனால் இடம் மறைக்கபடுவதில்லை அதே நேரத்தில் இதை நிறுவும் போது உங்களை பெண் டிரைவில் மட்டுமே இன்ஸ்டால் செய்ய அனுமதிக்கும் இந்த மென்பொருளை உங்கள் பெண் டிரைவில் இன்ஸ்டால் செய்துவிட்டால் உங்களால் எந்த கணினியில் இருந்தும் கோப்புகளை கையால முடியும் மற்றவர்களால் கோப்புகளை அனுக முடியாது நீங்கள் விரும்பினால் கடவுச்சொல் கொடுப்பதன் மூலம் எந்த கணினியில் இருந்தும் உபயோகிக்கலாம்


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர