Dec 28, 2010

24

மதுரை மீனாட்சியம்மன் மற்றும் சுவாமி ஐய்யப்பன் கோவிலை சுற்றிப்பார்க்கலாம்.

  • Dec 28, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து: எல்லாம் வல்லவன் இறைவன்.

    வணக்கம் நண்பர்களே நான் வழக்கமாய் எழுதும் பதிவில் இருந்து இந்த பதிவு முற்றிலும் மாறுபட்டது நான் என்னுடைய சில பதிவுகளில் கடவுளை பற்றிய என சிந்தனைகளை எழுதியிருக்கிறேன் ஆனால் இந்த முறை பெரிதாக நான் ஒன்றும் எழுதபோவதில்லை உங்களுக்கு இரண்டு தளங்களை அறிமுகம் செய்கிறேன் நீங்கள் உங்கள் கணினியில் இருந்தபடியே மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மன் கோவிலையும், அருள்மிகு மணிகண்டன் ஐய்யப்பனையும் காண்பதற்கு ஏற்ற வகையில் மிகச்சிறப்பாக பனோரமா தளங்கள் இரண்டை உருவாக்கி இருக்கிறார்கள் அதிலும் மதுரை மீனாட்சியம்மன் தளத்தை பார்க்கும் போது என்னையறியாமல் ஒரு நெருக்கம் இருப்பதாய் உணர்கிறேன் ஒருவேளை நான் அடிக்கடி கடந்த சென்ற பாதையாய் இருக்கலாம் அதோடு சுவாமி ஐய்யப்பனின் தளத்தை நுழைந்தால் ஒலிக்கும் பாடல் நம்மை கோவிலுக்குள் இருப்பதாகவே உணரச்ச்செய்கிறது தொலைவில் இருக்கும் நண்பர்கள் இந்த ஆலயங்களுக்கு வரமுடியாதவர்கள் இந்த தளங்களை பாருங்கள் நீங்கள் நேரடியாக சென்று வந்த அனுபவத்தை உணர்வீர்கள்.

    முதலாவதாக Madurai Meenachi Amman Temple கிளிக்குவதன் மூலம் தளத்திற்கு செல்லுங்கள் சுற்றிப்பாருங்கள் மிக அருமையாய் இருக்கிறது நிச்சியம் உங்கள் மனதிற்கு புத்துணர்வு கிடைக்கும்.



    இரண்டாவதாகSwamy Iyyappan Temple கிளிக்குவதன் மூலம் தளத்திற்கு செல்லுங்கள் சுற்றிப்பாருங்கள் மிக அருமையாய் இருக்கிறது நிச்சியம் உங்கள் மனதிற்கு புத்துணர்வு கிடைக்கும்.



    என்ன நண்பர்களே புத்தாண்டுக்கு கோவிலுக்கு செல்ல எல்லோருக்கும் விருப்பம் இருக்கும் சூழ்நிலை சிலருக்கு ஒத்துவராமல் இருக்கலாம் அதனால் என்ன இனையம் வழியாகவே மீனாட்சியம்மனையும், ஐய்யப்பனையும் தரிசிக்கலாமே. தளம் பயனுள்ளதாய், மனதிற்கு நிறைவு அளிப்பதாக இருந்தால் அவசியம் உங்கள் கருத்துக்களையும், இன் ட்லியில் வாக்கும் அளிப்பதன் மூலம் நீங்கள் பெற்ற மன நிறைவை மற்றவர்களும் பெறட்டும்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    24 Comments
    Comments

    24 Responses to “மதுரை மீனாட்சியம்மன் மற்றும் சுவாமி ஐய்யப்பன் கோவிலை சுற்றிப்பார்க்கலாம்.”

    மாணவன் said...
    December 28, 2010 at 2:06 PM

    //ஒரு வரி கருத்து: எல்லாம் வல்லவன் இறைவன்.//

    அருமை நண்பா மிகவும் பயனுள்ள வழிபடுவதற்கான தளங்களை பகிர்ந்துள்ளீர்கள் வாழ்த்துக்கள், அதுவும் என்னைப் போன்ற வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு மிகவும் பயனுள்ளதாய் இருக்கும் கோவிலுக்கு நேரில் சென்று வர முடியாவிட்டாலும் இந்த தளங்களுக்கு சென்று வழிபடுவதற்கு உதவியாய் மன நிறைவாய் புத்துணர்வு அளிக்கும்.


    மாணவன் said...
    December 28, 2010 at 2:11 PM

    //முதலாவதாக Madurai Meenachi Amman Temple கிளிக்குவதன் மூலம் தளத்திற்கு செல்லுங்கள் சுற்றிப்பாருங்கள் மிக அருமையாய் இருக்கிறது நிச்சியம் உங்கள் மனதிற்கு புத்துணர்வு கிடைக்கும்.//

    தளங்களுக்கு சென்று பார்த்தேன் நண்பரே மிக அருமையாய் வடிவமைத்துள்ளார்கள் சூப்பர்,

    நீங்கள் சொல்வதுபோன்று தளத்திற்கு சென்று வந்தால் நேரில் சென்று வழிபட்டதுபோன்ற மனநிறைவும் மனதிற்கு புத்துணர்வும் கிடைக்கிறது நண்பா

    வழிபாட்டுத் தளங்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பா

    தொடரட்டும் உங்கள் பொன்னான பணி.....


    ஜிஎஸ்ஆர் said...
    December 28, 2010 at 2:25 PM

    @மாணவன் நெடு நாட்களுக்கு முன்னதாகவே இதை பகிர்ந்துகொள்ள நினைத்திருந்தேன் ஆனால் பின்னர் அதைகுறித்து நினைவில்லாமல் இருந்தேன் இப்போது புதுவருடம் பிறக்க போகிறது இதைவிட இதை பகிர்ந்துகொள்ள சிறந்த தருணம் வேறெது இருக்க முடியும்?!


    மாணவன் said...
    December 28, 2010 at 3:27 PM

    //ஜிஎஸ்ஆர் said... 3
    December 28, 2010 12:55 PM
    @மாணவன் நெடு நாட்களுக்கு முன்னதாகவே இதை பகிர்ந்துகொள்ள நினைத்திருந்தேன் ஆனால் பின்னர் அதைகுறித்து நினைவில்லாமல் இருந்தேன் இப்போது புதுவருடம் பிறக்க போகிறது இதைவிட இதை பகிர்ந்துகொள்ள சிறந்த தருணம் வேறெது இருக்க முடியும்?!//

    உண்மைதான் நண்பரே மிகச் சரியான நேரத்திற்குதான் பகிர்ந்துள்ளீர்கள் அருமை, புத்தாண்டு பிறக்க இருக்கும் சமயத்தில் நண்பர்கள் அனைவரும் வழிபடுவதற்கு உதவியாய் இந்த தளங்கள் இருக்கும்

    உங்களுக்கு மீண்டும் என் நன்றிகள் பல...


    guru said...
    December 28, 2010 at 5:31 PM

    தளங்களுக்கு சென்று பார்த்தேன்...
    அருமை நண்பரே..
    அறிமுகம் செய்து வைத்தமைக்கு மிகவும் நன்றி நண்பரே..


    அ மயில்சாமி said...
    December 28, 2010 at 6:49 PM

    கோயிலுக்குப் போகாமலேயே இருந்த இடத்திலிருந்தே பார்க்கும் அனுபவம்....நன்றி


    muthu said...
    December 28, 2010 at 7:16 PM

    fantastic post.thank u Mr.gsr.


    Jegan said...
    December 28, 2010 at 11:12 PM

    நன்றி. ஐயப்பன் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும்.


    Good citizen said...
    December 28, 2010 at 11:15 PM

    I don't belive in any wordly god but madura temple is known for it's art of sculture ,Very certainly the best post you sir ,,a very special thanks from me


    avvavm said...
    December 29, 2010 at 10:54 AM

    ஒரு ஆன்மீக சுற்றுலவுக்கே அழைத்து சென்று விட்டீர்கள். மன மகிழ்ச்சியோடு மன அமைதியையும் தருகிறது என்றால் அது நிச்சியமாய் மிகை இல்லை.


    ம.தி.சுதா said...
    December 29, 2010 at 12:35 PM

    நன்றி.. நன்றி... இது மிகவும் பயனள்ள பதிவுகளில் ஒன்று.. சகோதரம்...

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.
    பத்து ஆண்டினுள் பாதித்த பாடல்கள்.


    ஜிஎஸ்ஆர் said...
    December 29, 2010 at 6:45 PM

    @guruதங்களின் புரிதலுக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே


    ஜிஎஸ்ஆர் said...
    December 29, 2010 at 6:46 PM

    @Myilsami நல்லது நண்பரே உங்கள் மனம் மகிழ்ந்தால் சந்தோஷம் தான்


    ஜிஎஸ்ஆர் said...
    December 29, 2010 at 6:46 PM

    @muthu பாரட்டுதலுக்கு நன்றி நண்பரே


    ஜிஎஸ்ஆர் said...
    December 29, 2010 at 6:47 PM

    @Jeganஎல்லாம் வல்ல இறைவன் என்னைப்போல எல்லோரையும் காத்தருளட்டும்


    ஜிஎஸ்ஆர் said...
    December 29, 2010 at 6:48 PM

    @moulefriteமுடிந்தால் ஒரு முறை நேரடியாக சென்று வாருங்கள் முழுதாக ஒரு நாள் போதாது அப்படியே இராமேஸ்வரம் ராமர் கோவில் செல்லுங்கள் அங்கு மேற்கூரையில் வரைந்திருக்கும் ஓவியத்தை பாருங்கள் பிரமிப்பாய் இருக்கும்


    ஜிஎஸ்ஆர் said...
    December 29, 2010 at 6:49 PM

    @avvavmயாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்


    ஜிஎஸ்ஆர் said...
    December 29, 2010 at 6:49 PM

    @ம.தி.சுதா நன்றி சகோதரா


    ADMIN said...
    December 30, 2010 at 12:10 PM

    // சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்...// பதிவைவிட கடைசியில் இருக்கும் இந்த வரிகள் தான் எங்களை மீண்டும் தங்கள் தளத்திற்கு வரவைக்கிறது.. கவர்ச்சியான வார்த்தைகள்..! வித்தியாசமான பதிவு இட்டு எங்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுவிட்டீர்கள்..! மனநிறைவு ஏற்பட்டது..! வாழ்த்துக்கள்..!


    avvavm said...
    December 30, 2010 at 5:50 PM

    இதை offline ல் பார்க்க முடியுமா ? hard disk ல் save செய்ய முடியுமா நண்பரே ?


    தர்சிகன் said...
    December 31, 2010 at 2:49 PM

    ///////யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்/////////
    பார்த்தேன் வியந்தேன்...
    நன்றிகள்.....


    ஜிஎஸ்ஆர் said...
    January 1, 2011 at 6:50 PM

    @தங்கம்பழனி தங்கள் அன்பிற்கு நன்றி நண்பரே


    ஜிஎஸ்ஆர் said...
    January 1, 2011 at 6:51 PM

    @avvavm

    www.httrack.com முயற்சித்து பாருங்களேன்


    ஜிஎஸ்ஆர் said...
    January 1, 2011 at 6:52 PM

    @வருணன்வருகையோடு புரிதலுக்கு நன்றி


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர