Dec 12, 2010
அடையாள அட்டை உருவாக்கலாம் II (ID Card Creator II)
வணக்கம் நண்பர்களே நான் ஏற்கனவே அடையாள அட்டை உருவாக்கலாம் I (ID Card Creator)எழுதியிருந்தேன் அந்த பதிவிலேயே இன்னும் சில மென்பொருள்கள் இருக்கிறது அதையும் விரைவில் எழுதுகிறேன் என்பதை குறிப்பிட்டதோடு பின்னர் எழுத மறந்தே விட்டிருந்தேன் சரி இந்த நேரத்தில் புதிதாக ஒன்றும் எழுதவில்லை அதற்கு பதிலாக இதையாவது எழுதலாமே என்கிற எண்ணம் தான் இந்த பதிவு நான் இப்போது பதிவுகள் அதிகம் எழுதுவதில்லை இருந்தாலும் தொடர்ந்து நம் தளத்திற்கு வந்து செல்லும் நண்பர்களுக்கு நன்றி சொல்லி அந்நியபடுத்த விரும்பவில்லை மாறாக தொடர்ந்து இனைந்திருக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
முதலாவதாக Visual Business Cards பற்றி பார்க்கலாம் Visual Business Cards தரவிறக்கி பயன்படுத்த பாருங்கள் இதில் லோகோ எதுவும் இனைக்கமுடியாது.
இரண்டாவதாக Eximious Soft Business Card Designer பற்றி பார்க்கலாம் Eximious Soft Business Card Designer தரவிறக்கி பயன்படுத்த பாருங்கள் இவற்றில் எல்லா வசதியும் இருக்கிறது.
மூன்றவதாக Advanced Business Card Maker பற்றி பார்க்கலாம் Advanced Business Card Maker தரவிறக்கி பயன்படுத்த பாருங்கள் இவற்றில் எல்லா வசதியும் இருக்கிறது.
இந்த மூன்று மென்பொருளிலும் நிறைய வசதிகள் இருக்கிறது அதை ஒவ்வொன்றாக செய்து பார்த்தால் இதில் நீங்கள் நிறைய வழிகளை கற்றுக்கொள்ள முடியும். பயன்படுத்தி பார்த்து இதன் வித்யாசம் புரிந்து உங்களுக்கு சரியானதை தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள்.
நண்பர்களே இதில் ஏதாவது சந்தேகம் இருப்பின் கேட்கலாம் எனக்கு தெரிந்தவரை சொல்லித்தர முயற்சி செய்கிறேன் பதிவு பிடித்திருந்தால், உபயோகமானதாக இருந்தால் அவசியம் பதிவை பற்றிய கருத்துரையும் வாக்கும் பதிந்து செல்லவும்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
இந்த பதிவை எழுதியது: ஜிஎஸ்ஆர்
நான் தொழில்முறை சார்ந்த எழுத்தாளன் இல்லை, எனக்கு தெரிந்த விஷயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்வதற்க்காவும்,அடிப்படை கணினி சார்ந்த விஷயங்கள் தெரியாதவர்களுக்கு கற்றுக்கொள்ளும் வாய்ப்பாக இந்த தளத்தை எழுதி வருகிறேன். பதிவு பயனுள்ளதாகாவோ, பிடித்தமானதாகவோ இருந்தால் வாக்கும் கருத்துரையும் அளித்துச்செல்லுங்கள் மேலும் பலரை சென்றடையட்டும் அன்புடன் Gsr
32 Responses to “அடையாள அட்டை உருவாக்கலாம் II (ID Card Creator II)”
-
மாணவன்
said...
December 12, 2010 at 11:12 AM//
Dec 12, 2010
0
அடையாள அட்டை உருவாக்கலாம் II (ID Card Creator II) //
அடையாள அட்டை உருவாக்குவதற்கு இத்தனை வகை மென்பொருள்களா அருமை நண்பா,
வழக்கம்போலவே பயனுள்ள் மென்பொருளை பதிவிட்டு அசத்தி விட்டீர்கள் சூப்பர்
உங்கள் பொன்னான பணி தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்களுடன்
உங்கள்.மாணவன -
மாணவன்
said...
December 12, 2010 at 11:17 AM//நான் இப்போது பதிவுகள் அதிகம் எழுதுவதில்லை இருந்தாலும் தொடர்ந்து நம் தளத்திற்கு வந்து செல்லும் நண்பர்களுக்கு நன்றி சொல்லி அந்நியபடுத்த விரும்பவில்லை மாறாக தொடர்ந்து இனைந்திருக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.//
நிச்சயமாக நாங்கள் எப்போதும் உங்களோடு தொடர்ந்து இணைந்திருப்போம் இதே ஊக்கத்துடன் தொடர்ந்து செல்லுங்கள்
தொடரட்டும் உங்கள் பணி
நன்றி
வாழ்க வளமுடன் -
Mohamed Faaique
said...
December 12, 2010 at 12:55 PMஇவ்வளவு இலகுவாக அடையாள அட்டை உருவாக்கலாமா? அரியத்தந்தமைக்கு நன்றி நண்பா..
-
eeasy baby
said...
December 12, 2010 at 6:12 PMதங்களின் கணினி அறிவு , அதை தமிழர்களுக்கு பகிர்ந்து கொடுக்கிறீர்கள். பல வகையான கலைகளையும் எட்டு திக்குகளில் இருந்தும் தமிழுக்கு கொடுத்து ,தமிழை உண்மையான செம்மொழி ஆக்குகிறீர்கள்.
நன்றிகள் -
Vengatesh TR
said...
December 13, 2010 at 4:00 AM.எப்போதும், தங்கள் தளத்தின் நண்பராகவே இருப்பேன்..
.தகவலை பகின்றமைக்கு நன்றி, நண்பரை ! -
arasan
said...
December 13, 2010 at 11:13 AMதங்களின் பதிவுகள் அனைத்தும் அருமையா உள்ளது..
உங்கள் பொன்னான பணி தொடரட்டும்..
நிறைய விடயங்கள் தங்கள் வலைப்பூ தெரிந்து கொண்டேன்.. அதற்க்கும் ஒரு மிகப்பெரிய நன்றி.. -
ADMIN
said...
December 13, 2010 at 5:03 PMதங்களின் ஈடுபாட்டை நினைத்து மெய் சிலிர்க்கிறேன்.. ஒவ்வொரு பதிவிலும் மிகச்சிறந்த பயன்பாடு அடங்கியிருக்கிறது..நன்றி! வாழ்த்துக்கள்!! தொடருங்கள்..!
-
ம.தி.சுதா
said...
December 13, 2010 at 6:01 PMஃஃஃஃஃபுத்திசாலிக்கும் முட்டாளுக்கும் அதிக வித்யாசம் இருப்பதில்லை.ஃஃஃஃ
சகோதரா எனக்கும் தங்களுக்கும் உள்ள வித்தியாசம் என்று சொல்லுங்கள்...
ஹ..ஹ...ஹ...ஹ -
ம.தி.சுதா
said...
December 13, 2010 at 6:03 PMதாங்கள் முதல் தந்ததையே என் நண்பர் பாவிக்கின்றார்.. உங்களின் இந்த முகவரியையும் அனுப்புகிறேன்...
-
avvavm
said...
December 15, 2010 at 5:57 PMநண்பர் GSR அவர்களுக்கு,
எனக்கு ஒரு 2 gb memory card கீழே கிடைத்தது. அதை என் cell ல் போட்டு read செய்தால் password கேட்கிறது. memory card ல் உள்ள data எதுவும் தேவை இல்லை. memory card ஐ அப்படியே format செய்ய முடியுமா? அல்லது password ஐ recovery செய்யலாமா ?
பதிவுக்கு சம்பந்தம் இல்லாத பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும். -
ஜிஎஸ்ஆர்
said...
December 16, 2010 at 9:38 AM@மாணவன் நன்றி நண்பா
-
ஜிஎஸ்ஆர்
said...
December 16, 2010 at 9:39 AM@மாணவன்அப்படியே ஆகட்டும் தஙகளை போன்ற நண்பர்கள் இருப்பதால் தான் நம் தள பதிவுகளில் கருத்துரை என்பதே இருக்கிறது
-
ஜிஎஸ்ஆர்
said...
December 16, 2010 at 9:40 AM@Mohamed Faaique பரவாயில்லை நண்பா எனக்கு தெரிந்த தகவலை நான் பகிர்ந்து கொண்டிருக்கிறேன் அவ்வளவுதான்
-
ஜிஎஸ்ஆர்
said...
December 16, 2010 at 9:40 AM@eeasy baby நம்மால் முடிந்ததை செய்வோம்
-
ஜிஎஸ்ஆர்
said...
December 16, 2010 at 9:40 AM@சிகப்பு மனிதன்அதுவே என் விருப்பமும்
-
ஜிஎஸ்ஆர்
said...
December 16, 2010 at 9:41 AM@தங்கம்பழனிஅவசியம் தொடர்கிறேன்
-
ஜிஎஸ்ஆர்
said...
December 16, 2010 at 9:42 AM@ம.தி.சுதாஇதற்கு நான் என்ன பதில் சொல்வது என தெரியவில்லை இதை இரண்டு விதமாக எடுத்துக்கொள்ளலாமே
-
ஜிஎஸ்ஆர்
said...
December 16, 2010 at 9:42 AM@ம.தி.சுதாஇதையும் கொடுங்கள் பயன்படுத்தி பார்க்கட்டும்
-
ஜிஎஸ்ஆர்
said...
December 16, 2010 at 9:45 AM@avvavmமுடிந்தவரை பாஸ்வேர்ட் ரெக்கவர் செய்ய முயற்சி செய்யுங்கள் அல்லாமல் தாங்கள் பார்மட் செய்ய நினைத்தால் அந்த மெமரி கார்ட் வீணாகிவிடும் அதற்கான வாய்ப்பே அதிகம்
-
ஜிஎஸ்ஆர்
said...
December 16, 2010 at 9:49 AM@அரசன்தங்களின் வரவிற்கும் கருத்திற்கும் நன்றி
-
avvavm
said...
December 16, 2010 at 11:23 AMநண்பர் GSR அவர்களுக்கு,
memory card password ஐ எப்படி கண்டுபிடிப்பது ? இதற்கு எதாவது software உள்ளதா ? இந்த card என்னுடையது அல்ல. -
அ மயில்சாமி
said...
December 16, 2010 at 5:10 PMI couldnot understand
-
ஜிஎஸ்ஆர்
said...
December 18, 2010 at 5:43 PM@avvavmஇருக்கிறது ஆனால் அவை எதுவுமே சரியாய் செயல்படுவதில்லை நானும் என் நண்பரின் ஒரு மெமரி கார்டை இது போல பிரச்சினையில் சரி செய்ய முயற்சித்து தோல்வியை அடைந்திருக்கிறேன் முயற்சி செய்து பாருங்கள் விடை கிடைத்தால் எனக்கும் சொல்லிக்கொடுங்கள்
-
ஜிஎஸ்ஆர்
said...
December 18, 2010 at 5:43 PM@Myilsamiஎது புரியவில்லை என்றால் உதவ வசதியாய் இருக்கும்
-
avvavm
said...
December 18, 2010 at 5:52 PMநண்பர் GSR அவர்களுக்கு
ஒரு website ல் கீழே உள்ளது போல் password ஐ ரெகவர் செய்ய சொல்கிறார்கள். அது எப்படி என்று எனக்கு விளங்கும்படி சொல்லுங்களேன். இதில் ' file manager' என்று எதை குறிப்பிடுகிறார்கள். file manager என்று ஒன்று cell ல் இல்லையே ? அந்த answer link யும் கீழே கொடுத்துள்ளேன்.
Que:I have lost the password for my 2GB micro SD card and now it is blocked.How to open the memory card?
Solution:
1. Go to file manager on your mobile,
2. In the "Settings" option,
3. Choose system folders,
4. In the "System" folder there's a file called "MMCSTORE",
5. Send that to your PC using IR/Bluetooth,
6. Then open it in notepad.
7. The password you need for your memory card is in that file
Above answer link: http://en.kioskea.net/faq/4154-micro-sd-card-lost-password -
ஜிஎஸ்ஆர்
said...
December 21, 2010 at 9:08 AM@avvavm
தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.
தாங்கள் உபயோகிப்பது நோக்கியா சிம்பியன் 2 பிளாட்பார்மிற்கு மேலானதாக இருந்தால் நிச்சியம் File Manager என்பதாக இருக்கும் மேலும் உங்கள் சரியான மொபைல் மாதிரியை தருவீர்களேயானால் என்னால் முடிந்த உதவியை செய்ய தயாராய் இருக்கிறேன் -
avvavm
said...
December 21, 2010 at 10:15 AMநண்பர் GSR அவர்களுக்கு,
நான் nokia 5130 xpressmusic பயன்படுத்துகிறேன் நண்பரே. -
avvavm
said...
December 21, 2010 at 1:24 PMநண்பர் GSR அவர்களுக்கு,
நண்பரே இந்த 2 GB memory card என்னுடைய nokia 5130 xpress music ல் password லாக் செய்தது கிடையாது. சாலையில் எந்த வாகனமோ ஏறி சிதைந்து போன cell ல் இருந்து உருப்படியாக கிடைத்தது இந்த memory card மட்டுமே. எந்த நண்பருடையதோ இந்த கார்டு? மற்றும் அந்த cell ? ஆனால்
அதை (2GB memory card) என் cell ல் போட்டு read செய்தால் password கேட்கிறது. -
ஜிஎஸ்ஆர்
said...
December 21, 2010 at 6:18 PM@avvavm என் நண்பனும் இந்த நோக்கியா xpressmusic பயன்படுத்துகிறான் ஆனால் அதில் File Manager இருக்குமே நான் அவனிடம் கேட்டு தகவல் சொல்கிறேன்
-
ஜிஎஸ்ஆர்
said...
December 21, 2010 at 6:21 PM@avvavmதவறாக நினைக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன் உண்மையில் இந்த மெமரி கார்டு பாஸ்வேர்ட் ரெக்கவர் என்பது வீண் வேலை தான் நானும் இப்படி என் நண்பனின் மெமரி கார்டில் பாஸ்வேர்ட் ரீமுவ் செய்ய முயற்சித்து தோற்றது தான் மிச்சம் ஆனால் இனையத்தில் Brute-force attack, Dictionary attack என்றெல்லாம் மென்பொருளிலில் காணப்படுகிறது ஆனால் முயற்சித்தால் தோல்வி தான் கிடைக்கிறது
-
mohamed khaiyum
said...
October 20, 2011 at 7:26 PMஅடையாள் அட்டை போல் காசோலைகளில் எந்தவித மென்பொருலுமின்றி பிரிண்ட் செய்யமுடியுமா?
-
ஜிஎஸ்ஆர்
said...
October 22, 2011 at 6:33 PM@mohamed khaiyumகாசோலைகள் பிரிண்ட் செய்வதற்கென மென்பொருள் இருக்கிறது அது மட்டுமல்லாம காசோலை பிரிண்ட் செய்யும் வகையிலான பிரிண்டர் கூட இருக்கிறது மேலும் இவையிரண்டும் இல்லாமலே உங்களால் பிரிண்ட் செட்டப் செய்ய முடியும் என்ன கொஞ்சம் இதற்கென நேரம் செலவழிக்க வேண்டியிருக்கும் ....
அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்
சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>