Dec 6, 2010

17

எக்‌ஷெல்லில் படிவம் (Excel Form)

  • Dec 6, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து: செல்வம் வேண்டாததற்குப் பயன்படுத்தப்பட்டாலும் வேண்டாம் என்று சொல்லப்படுவதில்லை.

    வணக்கம் நண்பர்களே இதை பற்றி உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கலாம் அப்படி தெரிந்தவர்கள் இதில் தவறிருந்தால் எப்படி மேம்படுத்துவதென சொல்லுங்கள் போதிய நேரமின்மையால் இதனை தெரிந்துகொள்ள முடியாமல் இருந்த நண்பர்கள் கீழே தொடருங்கள் இந்த பதிவை நம் தளத்தின் நண்பர் திரு.சிகப்பு மனிதன் அவர்கள் மின்னஞ்சலில் ஒரு பதிவாக எழுதி அனுப்பியிருந்தார்கள் அவருக்கு நன்றியை தெரிவிப்பதோடு பதிவிற்குள் செல்ல்லாம்.

    உங்களுக்கு ஒரே மாதிரியான தகவல்கள் excel’எக்‌ஷெல்லில் உள்ளீடு செய்ய வேண்டுமெனில், அதன் கட்டங்களினால் (Cellells) உள்ளீடு செய்யும் பொழுது உங்களுக்கு சிலவேளைகளில் சிரமமாகலாம். உங்கள் கண்களுக்கு கூட எரிச்சல் பலவேளைகளில் ஏற்படும். இவற்றில் இருந்து தப்பிக்க அதே நேரத்தில், வேலையையும் மிக வேகமாக முடிக்க உதவுவதுதான் இந்த formsபடிவம் (Form)

    முதலில் forms படிவத்தை குயிக்லாஞ்ச் பகுதிக்கு கொண்டு வந்தால், பின்னாளில் உபயோகம் செய்ய எளிமையாக இருக்கும். அதற்கு, பின்வரும் செயலை செய்யவும். இந்த வழிமுறை தான் எக்‌ஷெல் 2003,2007,2010 மூன்றிலும் ஓரே மாத்ரியாகத்தான் இருக்குமென்று நினைக்கிறேன் ஆனால் இதில் எக்‌ஷெல் 2007 தான் இதன் வழிகாட்டுதலுக்காக எடுத்துக் கொள்ளப்படிருக்கிறது. முதலில் படிவத்த்தை முகப்பு பக்கத்திற்கு கொண்டு வந்துவிடலாம் , கீழிருக்கும் படங்கள் சிறிதாக இருப்பதாக நினைத்தால் படத்தை கிளிக்குவதன் மூலம் பெரிதாக்கி காணலாம்.

    எக்‌ஷெல்லை திறந்து ஆபிஸ் பட்டனை கிளிக்குவதன் மூலம் Excel Options என்பதை தெரிவு செய்யுங்கள்.



    இனி இப்படியாக திறக்கும் அதில் நீங்கள் செய்யவேண்டிய படி நிலைகளை எண்கள் வரிசையில் கொடுக்கப்பட்டிருக்கிறது அதன் படியே செய்யுங்கள் எக்‌ஷெல் 2003, எக்‌ஷெல் 2010 கொஞ்சம் மாறுதலாய் இருக்கும்.



    இப்பொழுது உங்கள் எக்‌ஷெல்லில் நான் கீழிருக்கும் படத்தில் அடையாளப்படுத்தியுள்ளது போல ஒரு ஐகான் உங்கள் குயிக் லாஞ்ச் ரிப்பனில் வந்து அமர்ந்திருக்கும்.



    இனி எப்படி படிவத்தை உபயோகபடுத்துவது என பார்க்கலாம் உதரணமாக உங்களிடம் இருக்கும் டேட்டாவானது Sl.No, Item, INV, Remarks என்பதான நிலைகளை கொண்டது என்பதாக நினைவில் கொள்ளுங்கள், முதலில் அதற்கான பெயரை கொடுத்து விடுங்கள் அடுத்ததாக நீங்கள் செய்யவேண்டியது நான் கட்டமிட்டு அடையாள எண் 9 என குறித்திருக்கிறேன் பாருங்கள் அந்த இடத்தில் ஏதாவது ஒரு செல்லில் கிளிக்கி நாம் முன்னமே குயிக் லாஞ்ச் ரிப்பனில் இனைத்த படிவத்தை கிளிக்கினால் ஒரு பாப் அப் திறக்கும் அதில் ஓக்கே கொடுத்து விடுங்கள்.



    நீங்கள் ஓக்கே கொடுத்ததும் படத்தில் உள்ளது போல ஒரு படிவம் வந்திருக்கும் இதன் வழியாக நீங்கள் கொடுக்க வேண்டிய டேட்டாக்களை பூர்த்தி செய்யலாம் இதன் வழியாக தேடுதல் வசதியும் இருக்கிறது.



    நான் உதாரணத்துக்கு மட்டுமே இந்த வகையில் பதிவு செய்துள்ளேன் நீங்கள் உங்கள் விருப்பதிற்கேற்றார் போல படிவத்தை தயார் செய்து கொள்ளலாம்

    நண்பர்களே இது உங்களுக்கு புரிந்ததா இதில் ஏதாவது சந்தேகம் இருப்பின் கேட்கலாம் எனக்கு தெரிந்தவரை சொல்லித்தர முயற்சி செய்கிறேன் எனக்கு தெரியாததை நண்பர் சிகப்பு மனிதன் அவர்களிடம் கேட்டு சொல்கிறேன். பதிவு பிடித்திருந்தால், உபயோகமானதாக இருந்தால் அவசியம் பதிவை பற்றிய கருத்துரையும், இன்ட்லியில் வாக்கும் பதிந்து செல்லவும்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    17 Comments
    Comments

    17 Responses to “எக்‌ஷெல்லில் படிவம் (Excel Form)”

    மாணவன் said...
    December 6, 2010 at 11:11 AM

    அருமை நண்பா,

    தெளிவாகவும் புரியும்படியும் அருமையாக
    படங்களுடன் விளக்கியுள்ளீர்கள் சூப்பர்
    கண்டிப்பாக இது பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்
    பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பா
    உங்கள் பொன்னான பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்களுடன்
    உங்கள்.மாணவன்


    மாணவன் said...
    December 6, 2010 at 11:15 AM

    இந்த பதிவு எழுதக் காரணமாய் அமைந்த நண்பர் சிகப்பு மனிதனுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்...

    தொடரட்டும் உங்கள் பணி

    வாழ்க வளமுடன்


    மாணவன் said...
    December 6, 2010 at 11:19 AM

    //ஒரு வரி கருத்து: செல்வம் வேண்டாததற்குப் பயன்படுத்தப்பட்டாலும் வேண்டாம் என்று சொல்லப்படுவதில்லை.//

    மிகவும் சரியான சிந்திக்கக்கூடிய கருத்துக்களையே தொடர்ந்து தருகிறீர்கள் நன்றாக இருக்கிறது தொடருங்கள்...

    நன்றி
    நட்புடன்
    மாணவன்


    Speed Master said...
    December 6, 2010 at 11:44 AM

    பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி


    Unknown said...
    December 6, 2010 at 10:32 PM

    Thanks Idli we have got good method to finish our job


    Vengatesh TR said...
    December 7, 2010 at 5:50 AM

    .என் பெயரை எல்லாம் போட்டு, என்னை புல்லரிக்க வைத்து விட்டீர்கள், நண்பரே ....


    .இது உங்கள் படைப்பு தான், சந்தேகத்திற்கு இடமில்லை !..


    .தகவலை பகின்றமைக்கு, நன்றி நண்பரே !!


    Vengatesh TR said...
    December 7, 2010 at 5:52 AM

    \\
    இந்த பதிவு எழுதக் காரணமாய் அமைந்த நண்பர் சிகப்பு மனிதனுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்...

    தொடரட்டும் உங்கள் பணி

    வாழ்க வளமுடன்
    \\


    .நன்றி, தோழரே !


    Indian said...
    December 7, 2010 at 6:52 AM

    good one. keep it up.


    Geetha6 said...
    December 7, 2010 at 3:03 PM

    useful.


    ஜிஎஸ்ஆர் said...
    December 9, 2010 at 9:13 AM

    @மாணவன்பயன்படுத்தி பாத்தீர்களா நண்பா அதிலும் அந்த ரிஜிஸ்டரி கிளீனர் அருமையாக இருக்கிறது


    ஜிஎஸ்ஆர் said...
    December 9, 2010 at 9:13 AM

    @மாணவன் நம் தளத்தில் தங்களை போல அவரும் நல்ல நண்பர்


    ஜிஎஸ்ஆர் said...
    December 9, 2010 at 9:14 AM

    @மாணவன்இது சொந்தமாக சிந்தித்தது இல்லை நண்பா


    ஜிஎஸ்ஆர் said...
    December 9, 2010 at 9:14 AM

    @Speed Masterவருகைக்கும் கருத்துக்கும் நன்றி


    ஜிஎஸ்ஆர் said...
    December 9, 2010 at 9:15 AM

    @M.S.Mohamed Thameemசந்தோஷம் நண்பா


    ஜிஎஸ்ஆர் said...
    December 9, 2010 at 9:16 AM

    @சிகப்பு மனிதன்உங்களிடம் கற்றுக்கொண்ட விஷயத்தை உங்களிடமிருந்து தான் கற்றேன் என்று சொல்வதில் என்ன பெரிய விஷயமிருக்கிறது


    ஜிஎஸ்ஆர் said...
    December 9, 2010 at 9:17 AM

    @Indianவருகைக்கும் கருத்துக்கும் நன்றி


    ஜிஎஸ்ஆர் said...
    December 9, 2010 at 9:17 AM

    @Geetha6வருகைக்கு நன்றி


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர