May 26, 2010
ராஜா சின்ன ரோஜா
அன்பு நண்பர்களை எதை பற்றியெல்லமோ எழுதுகிறேன் ஆனால் அது எல்லாமே உங்களுக்கு பயன்படுமே என்கிற நோக்கில் தான், இன்று நான் எழுதுவதோ என் அன்பு மகனுக்கு ஒரு கவிதை கிறுக்கல் ஏற்கனவே நான் சில சமுதாய கருத்துள்ள கவிதைகள் எழுதியிருக்கிறேன அவையெல்லாம் நான் எதிர்பார்க்காத அளவிற்கு வாக்குகளும் கருத்துரைகளும் பதிவாகியிருந்தன அந்த நம்பிக்கையோடும் என் உள்ளக்கிடக்கையும் சேர்ந்து வந்ததுதான் இந்த ராஜா சின்ன ரோஜா கவிதை கிறுக்கல்.
ராஜா சின்ன ரோஜா
சின்ன பூமணியே
செந்தாழம் தேன் கனியே
வண்டாடும் சோலைக்குள்
புது மொட்டாய் பிறந்தாயோ
எந்நாள் வீட்டிற்க்குள்
தேன்சிட்டாய் உலா வருவாயோ
காமாட்சியம்மன் குத்துவிளக்கு
ஒளிச்சுடர் நீதானே
இருமுடி கட்டும்
சரணமும் நீதானே
புதிதாய் பிறந்த சூரியன்
அது நீதானே
விடிவெள்ளியின்
வெளிச்சமும் நீதானே
தவமிருந்து பெற்ற
செல்வம் நீதானே
என் தவத்தின்
வலிமையும் நீதானே
செந்தமிழ் செல்வன்
என் செல்லமகன் நீதானே
செந்தாழம்பூவின் கசியும்
தேன் துளியும் நீதானே
கடவுள் தந்த பிள்ளை- எங்கள்
வீட்டு சின்ன கிள்ளை நீதானே
நீங்களும் உங்கள் செல்ல குழந்தைகளுக்காக ஒரு கவிதை எழுதித்தான் பாருங்களேன் உங்கள் உள்ளத்தில் இருப்பதை வெளிப்படுத்த ஒன்றும் எதுகை மோனையின் அவசியம் இல்லை அன்பின் ஆழம் எதுகை மோனையில் இல்லை.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
இந்த பதிவை எழுதியது: ஜிஎஸ்ஆர்
நான் தொழில்முறை சார்ந்த எழுத்தாளன் இல்லை, எனக்கு தெரிந்த விஷயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்வதற்க்காவும்,அடிப்படை கணினி சார்ந்த விஷயங்கள் தெரியாதவர்களுக்கு கற்றுக்கொள்ளும் வாய்ப்பாக இந்த தளத்தை எழுதி வருகிறேன். பதிவு பயனுள்ளதாகாவோ, பிடித்தமானதாகவோ இருந்தால் வாக்கும் கருத்துரையும் அளித்துச்செல்லுங்கள் மேலும் பலரை சென்றடையட்டும் அன்புடன் Gsr
8 Responses to “ராஜா சின்ன ரோஜா”
-
எல் கே
said...
May 26, 2010 at 10:45 AMஅருமை நண்பரே. வாழ்த்துக்கள்
-
movithan
said...
May 26, 2010 at 11:31 AM//எதுகை மோனையின் அவசியம் இல்லை அன்பின் ஆழம் எதுகை மோனையில் இல்லை.//
அழகான கவிதை. -
Kousalya Raj
said...
May 27, 2010 at 12:27 PMமிகவும் சரியான கவிதை வரிகள்... நல்லா இருக்கிறது
-
ஜிஎஸ்ஆர்
said...
December 9, 2010 at 9:18 AM@LK நன்றி
-
ஜிஎஸ்ஆர்
said...
December 9, 2010 at 9:19 AM@malgudiபுரிதலுக்கு நன்றி
-
ஜிஎஸ்ஆர்
said...
December 9, 2010 at 9:19 AM@Kousalyaதங்களின் வருகைக்கும் சரியான புரிதலுக்கும் நன்றி
-
Vengatesh TR
said...
December 10, 2010 at 10:36 PM.சூரியனையே குளிர வைக்க பிறந்த,
என் செல்வ மகனே !
உன் விழி பார்வையில், நான்
தினமும் என்னையே தேடிக்கொண்டு இருக்கிறேன் ..
.உன்னை காணாத கண்கள்
இந்த பூவுலகில் இல்லை
அனைவரையும் காந்தமாக கவருவதில்
நீ காதல் மன்னன தான் !
.நீ சிரிக்கும் போதும் சரி,
பசியினால் அழும் போதும் சரி,
எங்கள் நெஞ்சம் வெடிக்கிறது !!
.இப்போது நீ செய்யும் குறும்புகளை,
பின்னாளில் கேட்டு, நீ சிரிப்பாய் !
இப்போதே நீ பின்னாளில் செய்யபோகும்
குறும்புகளை நினைத்து நான் சிரிக்கிறேன் !!
.எங்கள் விடி திங்கள், செவ்வாய், .. ஞாயிறு, எல்லாம்
நீ தானே, எந்தன் வேந்தனே !! -
ஜிஎஸ்ஆர்
said...
December 12, 2010 at 10:40 AM@சிகப்பு மனிதன் நன்றி
அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்
சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>