May 28, 2010

15

(Startup Drive Checkup) ஸ்டார்ட் அப் டிரைவ் செக்கப் நிறுத்த வழி

  • May 28, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து: வாழ்க்கை என்னவென்று தெரிவதற்குள் அதன் முக்கால் பகுதி கடந்து விடுகிறது.

    நண்பர் பிரபு அவர்களின் வேண்டுதலுக்காகவும் மேலும் இதுபோன்ற பிரச்சினைகள் நண்பர்களுக்கு வந்தால் அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்பதற்காகவும் இந்த பதிவு எழுதப்படுகிறது.

    சில நேரங்களில் கணினி இயக்கம் ஆரம்பிக்கும் போதே நீல நிற விண்டோவில் உங்கள் கணினியின் வன்தட்டுகளை சோதிக்கிறேன் ஏதாவது ஒரு விசையை அழுத்தசொல்லி வரும் நீங்கள் இதை தவிர்க்க நினைத்தாலும் விண்டோ மாறாமல் முழு வன்தட்டையும் சோதித்த பின் தான் விண்டோ திறக்கும் நாம் பார்க்க போவது இதை தவிர்ப்பதற்கான மாற்றுவழிகளைத்தான் இப்போது பார்க்கபோகிறோம்.



    முதல் வழி

    கணினியை இயக்கி F8 கீயை விட்டு விட்டு அழுத்துங்கள் உங்களுக்கு ஒரு கருப்பு விண்டோ திறக்கும் இனி அதில் Last Know Good Configuration என்பதை தெரிவு செய்து எண்டர் கொடுத்து போய் பாருங்கள் ஒரு வேளை பிரச்சினை சரியாகலாம்.

    இரண்டாவது வழி

    இல்லை இன்னும் சரியாகவில்லை என்றால் அடுத்ததாக மீண்டும் கணினியை இயக்கி Start ->Run->Programs->Accessories->System Tools->Restore என்பதை செலக்ட் செய்து புதிதாய் ஒரு விண்டோ திறக்கும் அதில் Restore My Computer to an Earlier Time என்பதை தேர்வு செய்து ஓக்கே கொடுங்கள் இனி அடுத்த பக்கத்தில் புதிய விண்டோவில் ஒரு பக்கம் தேதியும் மறுபக்கம் நீங்கள் கணினியில் ஏற்படுத்திய மாற்றங்களும் காணப்படும் இனி நீங்கள் உங்கள் கணினியில் எந்த நாளில் உங்கள் கணினி நல்ல நிலையில் இயங்கியது என்பதை ஒவ்வொரு தேதியாக கிளிக்கும் போதும் வலது பக்கம் தெரியும் உங்களுக்கு சரியானதாக தெரியும் ஒரு தேதியை தெரிவு செய்து ஓக்கே கொடுக்கவும் இனி உங்கள் கணினி ரீஸ்டோர் செய்ய தொடங்கிவும் சிறிது நேரத்திற்க்கு பிறகு உங்கள் கணினி அனைந்து மீண்டும் ரீஸ்டார்ட் ஆகி ஒரு பாப் அப் விண்டோ போல திறக்கும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் உங்கள் கணினி நல்ல நிலைக்கு வந்துவிட்டாதாவென ஒரு வேளை சரியாக பட்சத்தில் மீண்டும் வேறு ஒரு தேதியை முயற்சி செய்து பார்க்கலாம் பொருமை இல்லாதவர்கள் அடுத்த முயற்சிக்கு செல்லலாம்.



    மூன்றாவது வழி

    Start ->Run & Type msconfig என டைப் செய்து ஓக்கே கொடுக்கவும் இப்போது ஒரு சிறிய விண்டோ திறக்கும் அதில் Startup என்கிற டேப்பில் CHKDISK என்பது மாதிரியான பெயரில் ஏதாவது டிக் மார்க் செய்யப்பட்டுள்ளதா என பார்க்கவும் இருந்தால் மட்டும் அந்த டிக் மார்க் எடுத்துவிடுவதன் மூலம் அதை டிசாபிள் செய்யலாம் இனி கணினி ரீஸ்டோர் கேட்கும் ஓக்கே கொடுத்து விடுங்கள் இனி பிரச்சினை சரியாகும். ஒரு வேளை அப்படி இல்லையென்றால் ஒன்றும் பிரச்சினையில்லை அப்படியே மூடிவிடவும்.



    நான்காவது வழி

    விண்டோஸ் இயக்கம் தொடங்கும் முன் எந்த டிரைவில் பிரச்சினை இருப்பதாக சொல்லி டிரைவ் செக்கிங் செய்கிறதோ அந்த டிரைவின் பிராப்பர்ட்டிஸ் திறங்கள் உதாரணமாக D டிரைவில் பிரச்சினை என்றால் D டிரைவின் வலது பக்கம் கிளிக்கி Properties என்பதை தெரிவு செய்து திறக்கும் சிறிய விண்டோவில் Tool டேப்பை கிளிக்குங்கள் அதில் Check Now என்பதை கிளிக்கி அதில் டிக் மார்க் இருந்தால் எடுத்துவிட்டு ஓக்கே கொடுத்து விடுங்கள் இனி உங்கள் கணினியில் இந்த பிரச்சினை இருக்காது சரி இப்பவும் சரியாகவில்லை நண்பா நான் என்ன பண்றது அப்படினு கேக்கிற நண்பர்களுக்காக அடுத்த வழிமுறையும் பார்த்துவிடலாம்.



    ஐந்தாவது வழி

    இந்த முறையில் நிச்சியம் சரியாகிவிடும் நம்பிக்கையோடு செயல்படுங்கள் இனி நீங்கள் செய்ய வேண்டியது Start –> Run & Type cmd இப்போது உங்களுக்கு கமாண்ட் பிராம்ட் வந்திருக்கும் அதில் உங்களுக்கு D டிரைவ் பிரச்சினைக்குரியதாக இருக்கிறதோ அதற்கு தீர்வாக chkntfs /X D: என கமாண்ட் கொடுஙகள் இனி சரியாகிவிடும் ஒரு வேளை உங்களுடைய கணினியில் நான்கு டிரைவ்கள் அதாவது C, D, E, F என்பதாக இருக்கிறது இந்த நான்கு டிரைவிலும் பிரச்சினை இருக்கிறது அதற்கு Chkntfs /X C: D: E: F: என கொடுத்து பாருங்கள் இபோது உங்கள் கணினி இயங்கும் போது டிரைவ் செக்கிங் இருக்காது இனி இந்த கமாண்ட் கொடுப்பதிலும் பிரச்சினை இருக்கிறது ஒன்றும் கவலைப்படவேண்டாம் அடுத்து ரிஜிஸ்டரியில் மாற்றம் ஏற்படுத்தி முயற்சி செய்துபார்ப்போம்.

    ஆறாவது வழி

    உங்கள் கணினியில் Start –> Run & Type regedit என டைப் செய்து ஓக்கே கொடுங்கள் உங்களுக்கு கணினியின் இதயபகுதியான ரிஜிஸ்டரி பகுதி திறக்கும் இனி நீங்கள் செய்யவேண்டியது முதலில் ரிஜிஸ்டரி பேக்கப் எடுத்துவைத்துக் கொள்வதுதான் அடுத்து HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CURRENTCONTROLSET\CONTROL\Session Manager இதில் இந்த Session Manager கண்டுபிடித்ததும் அதை இருமுறை கிளிக்கி வலது பான் பக்கம் பார்க்கவும் அங்கு BootExecute என்கிற பெயரில் ஒரு ரெஜ் இருக்கும் இனி அதை டபுள் கிளிக் அல்லது Modify என்பதை தெரிவு செய்யுங்கள் ஏற்கனவே அங்கு autocheck autochk * என்பதாக இருக்கும் இனி நீங்கள் செய்யவேண்டியது D டிரைவில் பிரச்சினை என்றால் autocheck autochk /k:D * இப்படி மாற்றிவிடவும் இல்லை முறையாக மூன்று டிரைவ்களிலும் பிரச்சினை என்றால் autocheck autochk /k:C /k:D /k:E * என மாற்றிவிடுங்கள் இனி ஓக்கே கொடுத்து வெளியேறி விடுங்கள் ஒரு முறை கணினியை ரீஸ்டார்ட் செய்துவிடுங்கள் இப்போது எல்லாம் சரியாகி இருக்கும் இனியும் பிரச்சினை இருந்தால் மூன்றாம் நபர் மென்பொருள் உபயோகித்து பார்க்கலாம் இல்லையென்றால் உங்கள் விண்டோஸ் குறுந்தகடு இருந்தால் அதன் மூலமாக ரிப்பேர் செய்யலாம்.



    என்ன நண்பர்களே உங்களுக்கு இது உபயோகமில்லை என்று ஒதுக்கி விடாதீர்கள் ஏதாவது ஒரு நேரத்தில் பயன்படும் ஒரு வேளை உங்களுக்கு இது உபயோகமானது என்றால் மற்றவர்களும் பயனடைய உதவுங்கள்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    15 Comments
    Comments

    15 Responses to “(Startup Drive Checkup) ஸ்டார்ட் அப் டிரைவ் செக்கப் நிறுத்த வழி”

    www.thalaivan.com said...
    May 28, 2010 at 3:18 PM

    வணக்கம்
    நண்பர்களே

    உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

    உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
    நன்றி
    தலைவன் குழுமம்

    www.thalaivan.com


    Unknown said...
    May 28, 2010 at 4:29 PM

    அன்புள்ள அண்ணன், அஸ்ஸலாமு அலைக்கும் உங்களை யாருக்கு பிடிக்காது?
    உங்களின் பதிவு யாருக்கு பிடிக்காது?
    உங்களின் பதிவுக்கு முன் எழுதப்படும் பொண்மொழிகள் யாருக்கு பிடிக்காது?
    எல்லாபதிவுகளும் நல்ல பதிவுகள் தான் ஒரு பதிவிலேயே பல் பதிவிகளை எழுதி வியக்க வைத்த பெருமை உங்கள் ஒருவரையே சேரும் இதுபோல் பல பதிவுகளை எதிர்ப்பார்க்கும் ரிஸ்வானா வஸ்ஸலாமு அலைக்கும் வரமத்துலிலாஹி வ பரக்காத். ஆமின்.


    ஜிஎஸ்ஆர் said...
    May 29, 2010 at 9:08 AM

    @www.thalaivan.com

    நிச்சியம் இனைத்துவிடுகிறேன்


    வாழ்க வளமுடன்

    என்றும் அன்புடன்
    ஞானசேகர்


    ஜிஎஸ்ஆர் said...
    May 29, 2010 at 9:10 AM

    @hajath


    நிச்சியம் நண்பா உங்கள் விருப்பபடியே இன்னும் நல்ல பதிவுகள் எழுதலாம் தொடர்ந்து நம் தளத்தோடு இனைந்திருங்கள் நிரந்தரமாய்.

    வாழ்க வளமுடன்

    என்றும் அன்புடன்
    ஞானசேகர்


    பிரபு said...

    May 29, 2010 at 10:42 AM

    நண்பரே நான் உங்களுக்கு எப்படி நன்றி சொல்லுவதென்றே தெரியவில்லை.
    என்னுடைய வேண்டுகோளினையும் ஏற்றுக்கொண்டு ஒரு பதிவினை அளித்துள்ளிர்கள். மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன் நண்பரே...



    வாழ்க வளமுடன்

    என்றும் உங்கள் பதிவுகளுடன்
    பிரபு


    PRABU said...

    May 29, 2010 at 11:25 AM

    நண்பரே நான் 6வது வழியினை பின்பற்றி எனது கனிணியின் வன்தட்டு சோதித்தலை சரி செய்து விட்டேன். சுமார் ஆறு மாத காலமாக சரி செய்ய முடியாத இப்பிரச்சனையினை 60 வினாடிகளில் சரி செய்து விட்டேன். உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் நண்பரே

    வாழ்க வளமுடன்

    என்றும் உங்கள் பதிவுகளுடன்
    பிரபு


    shanuk2305 said...
    May 29, 2010 at 3:24 PM

    in my laptop everytime during start one notepad sheet is opening pl advice to stop this


    மு.ம.ராஜன் said...
    July 4, 2010 at 2:32 PM

    NICE


    ஜிஎஸ்ஆர் said...
    July 5, 2010 at 9:08 AM

    @தமிழன்வருகைக்கும் விலையுயர்ந்த கருத்துரைக்கும் நன்றி நண்பரே


    Vengatesh TR said...
    November 27, 2010 at 6:54 PM

    .இது எப்படி சரிசெய்வது என தெரியாமல், போன மாதம் தான், sw-engg ஐ அணுகி சரிசெய்தேன் !!

    .இனிமேல், நானே சரிசெய்து விடுகிறேன், வந்தால் !!

    .பகிர்ந்தமைக்கு நன்றி, நண்பரே !!


    ஜிஎஸ்ஆர் said...
    November 29, 2010 at 10:22 AM

    @சிகப்பு மனிதன்எல்லாவற்றிற்க்கும் ஏதாவது வழி இருக்கும் என்ன கொஞ்சம் நேரம் செலவழிக்க வேண்டும் கொஞ்சம் ஆர்வம் வேண்டும் இரண்டும் இருந்தால் ஓரளவிற்கு நாமே சரி செய்து விடலாம்


    Vengatesh TR said...
    November 30, 2010 at 3:55 AM

    .புரிந்து கொண்டேன், நண்பரே !


    ஜிஎஸ்ஆர் said...
    December 2, 2010 at 11:29 PM

    @சிகப்பு மனிதன் நன்றி


    katrukolpavan(VIJAY) said...
    September 18, 2011 at 12:50 AM

    6 solutions :)

    super and very useful:)

    thank u :)


    ஜிஎஸ்ஆர் said...
    September 29, 2011 at 6:18 PM

    @katrukolpavanபயணடைந்தால் சந்தோஷமே..


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர