May 23, 2010

9

எக்‌ஸெல் டேட்டாவை கிடைமட்டமாக ஒட்டலாம்

  • May 23, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து: அறிவை விட தைரியத்தினால் தான் சில பெரிய காரியங்கள் சாதிக்கபடுகின்றன.

    சாதரணம் நமக்கு எல்லோருக்குமே தெரியும் எக்‌ஷெல்லில் காப்பி எடுத்து பேஸ்ட் செய்வது ஆனால் நாம் பார்க்க போவது கீழிருக்கும் படத்தை பாருங்கள் ஒரு டேட்டா உங்களிடம் செங்குத்தான வரிசையில் இருக்கிறது இதை அப்படியே காப்பி எடுத்து பேஸ்ட் செய்வதுதான் எளிதாயிற்றே அப்படியே இரண்டாவதாக இருக்கும் பத்தையும் பாருங்கள் அதாவது செங்குத்தான வரிசையில் இருந்த டேட்டாவை கிடைமட்டமாக பேஸ்ட் செய்திருக்கிறேன் அது எப்படி என பார்க்கலாம் இது எப்போதாவது உங்களுக்கு தேவைப்படும் உதாரணமாக நீங்கள் எக்‌ஷெல்லில் டேட்டா பில்ட்டர் பயன்படுத்தும் போது கிடைமட்டமாக இருந்தால் வசதியாய் இருக்கும்.





    இனி நீங்கள் மாற்ற நினைக்கும் டேட்டாவை காப்பி எடுத்துக்கொள்ளுங்கள் எலியின்(மவுஸ்) வலது பக்கம் கிளிக்கி அதில் Paste Special என்பதை தேர்ந்தெடுங்கள்.



    இனி புதிதாய் ஒரு விண்டோ திறக்கும் அதில் Transpose என்பதை தெரிவு செய்ய அதன் அருகில் உள்ள கட்டத்தில் டிக் குறி ஏற்படுத்தி ஓக்கே கொடுக்கவும்.



    என்ன நண்பர்களே இப்போது பாருங்கள் மொத்த டேட்டாவும் கிடைமட்டமாக மாறியிருக்கும் என்ன நண்பர்களை இது தேவையில்லை என நினைக்கிறீர்களா? தெரிந்து கொள்வதில் தவறில்லையே! உப்யோகமான தகவல் என்றால் உங்கள் நண்பர்களுக்கும் சென்றடையட்டும்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    9 Comments
    Comments

    9 Responses to “எக்‌ஸெல் டேட்டாவை கிடைமட்டமாக ஒட்டலாம்”

    nilalgal said...
    May 23, 2010 at 7:27 PM

    very gud tips keep going on


    puduvaisiva said...
    May 23, 2010 at 10:08 PM

    thanks ஞானசேகர்


    Vengatesh TR said...
    November 27, 2010 at 7:24 PM

    .மீண்டும், தன்யன் ஆனேன் !!

    .பகிர்ந்தமைக்கு நன்றி !!



    .எனக்கு ஒரு சந்தேகம் !

    .can u explain about forms in excel ?


    ஜிஎஸ்ஆர் said...
    November 29, 2010 at 10:17 AM

    @nilalgal தொடர்கிறேன் நண்பர்களின் துனையோடு


    ஜிஎஸ்ஆர் said...
    November 29, 2010 at 10:17 AM

    @♠புதுவை சிவா♠வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி


    ஜிஎஸ்ஆர் said...
    November 29, 2010 at 10:18 AM

    @Shanவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி


    ஜிஎஸ்ஆர் said...
    November 29, 2010 at 10:19 AM

    @சிகப்பு மனிதன்கேள்வி கொஞ்சம் தெளிவாக இருந்தால் உதவ வசதியாய் இருக்கும்


    Vengatesh TR said...
    November 30, 2010 at 4:01 AM

    .Assume i had a document of 100 records ( 100rows of data )

    .each record has 12 columns

    .if need to input directly means, it be confusing and time consuming la !

    .so, if we used forms concept, it displays like box of fields name, we can input data on that box, it will be stored on excel rows, directly

    .it automatically switched to next row, on completion of each row la !



    .மன்னிக்கவும், தமிழில் எப்படி கூறுவது என தெரியவில்லை, எனவே ஆங்கிலத்தில் கூறி உள்ளேன் !


    ஜிஎஸ்ஆர் said...
    December 2, 2010 at 11:28 PM

    @சிகப்பு மனிதன்தகவலை இன்னும் கொஞ்சம் நேரம் ஒதுக்கியாவது தமிழில் எழுதியிருந்தால் புரிந்துகொள்வதில் சிரமமிருக்காது


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர