May 4, 2010

13

உலகெங்குக்குமான அவசர உதவி எண்

  • May 4, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து: வாழ்க்கை பயணம் செய்யும் வழியில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

    ஒவ்வொரு நாட்டிலும் அதில் உள்ள மாநிலங்களிலும் மக்களின் சேவைக்காக அவசர உதவி எண் வழங்கபட்டிருக்கும் இதில் மருத்துவ வசதி, தீயனைப்பு படை, அவரச போலீஸ், ஆம்புலன்ஸ் இப்படி ஒவ்வொன்றுக்கும் ஒரு எண் கொடுத்து இருப்பார்கள் நாம் ஒவ்வொருவரும் இதுபோல அவசர உதவி எண்களை ஞாபகம் வைத்திருக்கிறோமா என்றால் நிச்சியம் இல்லையென்கிற பதிலாகத்தான் இருக்கும்.

    நாம் நமது தமிழ்நாட்டில் உள்ள அவசர உதவி எண்களை நாம் எப்படியாவது தெரிந்து வைத்துகொள்ளலாம் ஒரு வேளை நீங்கள் வேறு ஒரு மாநிலம் அல்லது வேறு நாட்டிற்கு சென்றிருக்கிறீர்கள் அங்கு உங்களுக்கு ஒரு பிரச்சினை ஏற்படுகிறது அப்போது உங்களுக்கு அவசர உதவி எண் இருந்தால் எளிதாக தொடர்பு கொள்ளலாமே அதை தெரியப்படுத்த தான் இந்த பதிவு.

    உங்கள் அலைபேசியில் 911 என்கிற இந்த மூன்று இலக்க அவசர அழைப்பு எண்ணை குறித்து வைத்துக்கொள்ளுங்கள், இந்த எண் எப்படி எல்லா நாட்டிற்கும் பொருந்தும் என நினைக்கிறீர்களா ஒவ்வொரு நாட்டிற்குமான தொலை தொடர்பு சேவையில் இந்த 911 என்கிற அவசர அழைப்பு எண் இருக்கும் நீங்கள் அலைபேசி சேவையை உபயோகிப்பவர்களாக இருந்தாலும் இந்த எண் அழைப்பதற்கு தடையில்லை.

    நீங்கள் 911 அழைக்கும் போது அதுவாகவே உங்களுக்கு அருகில் உள்ள உதவிக்கான மையத்தை சென்றடையும் பின்னர் அதன் மூலம் உங்களுக்கு உதவிகள் கிடைக்க்கூடும் மேலும் இக்கட்டான சூழ்நிலையிலும் உங்களால் அழைப்பு ஏற்படுத்தி பேசி உதவி கேட்க முடியாவிட்டாலும் குறைந்தபட்சம் 911 என்கிற எண்ணிற்கு அழைப்பு ஏற்படுத்தி விட்டீர்கள் என்றால் அவர்களாகவே உங்கள் இருப்பிடத்தை கண்டுபிடிக்கும் வாய்ப்பும் இருக்கிறது.

    மேலும் ஒரு சின்ன தகவல் உங்கள் அலைபேசி நம்பர்பேட் (Keypad) பூட்டு (Lock) இடப்பட்டிருந்தாலும் இந்த 911 என்கிற எண் மட்டும் டயல் செய்ய இயலும் வேறு எந்தவொரு எண்ணும் இது போல டயல் செய்ய முடியாது இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் இந்த எண்ணின் அவசியம், நண்பர்களே குறித்து வைத்துக்கொள்ளுங்கள் ஏதாவது ஒரு நேரத்தில் நமக்கு இது பயன்படக்கூடும், இது உங்களுக்கு புதியதாக அல்லது உபயோகமானதாக இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் தெரிவியுங்கள்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    13 Comments
    Comments

    13 Responses to “உலகெங்குக்குமான அவசர உதவி எண்”

    யூர்கன் க்ருகியர் said...
    May 4, 2010 at 11:33 AM

    //உங்கள் அலைபேசி நம்பர்பேட் (Keypad) பூட்டு (Lock) இடப்பட்டிருந்தாலும் இந்த 911 என்கிற எண் மட்டும் டயல் செய்ய இயலும் வேறு எந்தவொரு எண்ணும் இது போல டயல் செய்ய முடியாது//

    Try 112 ...
    this too will work as an emergency call !!


    ஜிஎஸ்ஆர் said...
    May 4, 2010 at 11:48 AM

    @யூர்கன் க்ருகியர்

    நண்பா இதை நான் அறிந்திருக்கவில்லை தகவலுக்கு நன்றி


    என்றும் அன்புடன்
    ஞானசேகர்


    THANGAMANI said...
    May 4, 2010 at 7:50 PM

    பயனுள்ள தகவல்.நன்று.நன்றி.


    மதுரை சரவணன் said...
    September 1, 2010 at 2:30 PM

    தகவலுக்கு நன்றி. வாழ்த்துக்கள்


    ம.தி.சுதா said...
    September 1, 2010 at 4:43 PM

    தகவலுக்கு நன்றி சகோதரா....


    S.முத்துவேல் said...
    September 1, 2010 at 5:13 PM

    112 இந்த நம்பருக்கு கூட


    ஜிஎஸ்ஆர் said...
    September 2, 2010 at 10:33 AM

    @மதுரை சரவணன் நன்றி


    ஜிஎஸ்ஆர் said...
    September 2, 2010 at 10:35 AM

    @ம.தி.சுதாநன்றி


    ஜிஎஸ்ஆர் said...
    September 2, 2010 at 10:35 AM

    @muthuvel நல்லது


    Vengatesh TR said...
    November 27, 2010 at 8:20 PM

    .குறித்து கொண்டேன்,


    .உங்கள் எழுதானிக்கு நன்றி !


    ஜிஎஸ்ஆர் said...
    November 29, 2010 at 9:59 AM

    @சிகப்பு மனிதன் நண்பர் யூர்கன் க்ருகியர் சொன்னதையும் குறித்துக்கொள்ளுங்கள்


    Vengatesh TR said...
    November 30, 2010 at 4:08 AM

    .அதையும், குறித்து கொண்டுள்ளேன், நண்பரே !


    ஜிஎஸ்ஆர் said...
    December 2, 2010 at 11:26 PM

    @சிகப்பு மனிதன்புரிதலுக்கு நன்றி


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர