May 23, 2010

6

(Amicus Curiae)அமிக்கஸ் குயூர்ரி தெரியுமா?

  • May 23, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து: மகிழ்ச்சியும் துயரமும் எப்போதும் அடுத்தடுத்தே இருக்கின்றன.

    நான் சமீபத்தில் தெரிந்துகொண்ட ஒரு விஷயத்தை இந்த பதிவின் வாயிலாக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் சாதரணமாக குற்றவாளிகளை நீதிமன்றத்தில் நிறுத்தி வழக்கை விசாரிப்பார்கள் ஆனால் சில நேரங்களில் குற்றவாளிகளுக்கே தெரியாது அவர்கள் நீதிமன்றத்தின் விசாரனையில் இருக்கிறார்கள் என்பது அது பற்றித்தான் பதிவு.

    நான் மேலே குறிப்பிட்டுள்ள இந்த அமிக்கஸ் குயூர்ரி என்பவர் நீதிமன்றத்தின் நேரடி விருப்பம் அல்லது வருட வருமாணம் 17,000 க்கு குறைவாக உள்ளவர்கள் மற்றும் உடல் ஊனமுற்றோர்கள், மற்றும் வழக்கறிஞர் வைத்து வாதாட வசதி இல்லாதவர்கள் போன்றவர்களுக்கு நீதிமன்றம் இது போன்ற அமிக்கஸ் குயூர்ரியை நியமிக்கும் அந்த அமிக்கஸ் குயூர்ரி என்பவர் ஜுடிசனல் கீழாக வருபவர் மிகவும் எளிதாக சொல்ல வேண்டுமென்றால் இவரே ஒரு நீதிமன்றத்துக்கு சமமானவர் இவரின் விசாரனை தகவல்களை மட்டும் வைத்து சம்பந்தபட்டவரை விசாரிக்கமலே நீதிமன்றம் நீதி வழங்கலாம்.

    இந்த அமிக்கஸ் குயூர்ரி சாதரணமாக அதிக மக்கள் ஈடுபட்டுள்ள பொதுநலம் சம்பந்தபட்ட பிரச்சினைகளை மட்டும் தான் கையில் எடுக்கிறது அதாவது சமுதாயத்திற்கு அதிகம் பிரச்சினைகள் விளைவிக்க கூடியவர்கள் மற்றும் மாபியா கும்பல்கள்(சிவில் வழக்குகள் மற்றும் குற்ற வழக்குகள்) இவர்களுக்கு எதிராகவும் மேலும் அரசு பொதுநல வழக்குகளுக்கும் அமிக்கஸ் குயூர்ரி நியமிக்க படுகிறார்.

    அமிக்கஸ் குயூர்ரி வெறும் ஒரு வழக்கிறிஞர் மட்டுமல்லமால் இந்த நேரத்தில் ஒரு புலனாய்வு துறை அதிகாரியின் தைரியத்தோடும் சாதுரியத்துடனும் செயல்படுவார்கள் இவர்களை பிரித்து அறிவது என்பது முடியாத காரியம் மேலும் ஒரு வழக்கறிஞர் சில வழக்குகளுக்கு எதிராக தன்னையே அமிக்கஸ் குயூர்ரியாக நியமிக்க மனு கோரலாம் இருப்பினும் அதை பரிசீலித்து முடிவெடுப்பது நீதி மன்றமே.

    இந்த முறையில் இவர்கள் காண்பதே ஒரு ஆதாரமாக எடுத்துக்கொள்ளப்படும் காரணம் நீதிமன்றமும் தான் தனக்கு பதிலாக அமிக்கஸ் குயூர்ரியை நியமிக்கிறது அதற்காக இந்த அமிக்கஸ் குயூர்ரி சொல்வதை அவர் தரும் அறிக்கையை மட்டுமே வைத்து தீர்ப்பளிப்பதில்லை அதை ஒரு பெஞ்ச் கூடி அதனை அலசி ஆராய்ந்து தீர்ப்பு வழங்குவார்கள்.

    உதாரணத்துக்கு நாம் ஒரு குற்றவாளி ஆனால் நம்மீது இது வரை வழக்குகள் இல்லை எந்தவிதமான தெளிவுகள் அல்லது புகார் எதுவும் இல்லாத பட்சத்திலும் நீதிமன்றத்துக்கு தேவைப்பட்டால் நமக்கு எதிராக ஒரு அமிக்கஸ் குயூர்ரி நியமித்து குற்றத்தை வெளியே கொண்டுவருவார் மேலும் குற்றவாளியுடைய விவாதம் கேட்காமலே தீர்ப்பு வழங்கி தண்டனை வழங்கும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு உண்டு.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    6 Comments
    Comments

    6 Responses to “(Amicus Curiae)அமிக்கஸ் குயூர்ரி தெரியுமா?”

    சௌந்தர் said...
    May 23, 2010 at 9:47 AM

    நல்ல தகவல்...


    ஜிஎஸ்ஆர் said...
    May 29, 2010 at 9:43 AM

    @soundar

    நன்றி நண்பா

    வாழ்க வளமுடன்

    என்றும் அன்புடன்
    ஞானசேகர்


    Vengatesh TR said...
    November 27, 2010 at 7:15 PM

    .தற்போது, தெரியும் அமிக்கஸ் குயூர்ரி யாரென்று !

    .பகிர்ந்தமைக்கு நன்றி !


    ஜிஎஸ்ஆர் said...
    November 29, 2010 at 10:19 AM

    @சிகப்பு மனிதன்தஙக்ளின் புரிதலுக்கும் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி


    அ மயில்சாமி said...
    December 30, 2010 at 5:58 PM

    சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்கும் பயன்படுகின்ற தகவல். இது போன்றவை
    தான் இப்போது நமக்குத் தேவை.வாழ்க உங்கள் சமூகத்தொண்டு!


    ஜிஎஸ்ஆர் said...
    January 1, 2011 at 6:57 PM

    @Myilsami நமது நோக்கம் நமக்கு தெரிந்த விஷயங்களை எளிதாக மக்களிடம் கொண்டு செல்லவே விரும்புகிறேன் அதற்கு தங்களை போன்ற நண்பர்களின் துனையும் அவசியம்


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர