Nov 3, 2010

17

விண்டோஸ் XP SP2 – விண்டோஸ் XP SP3 ஹேக்கிங்

  • Nov 3, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து: நல்லவற்றை குப்பையென ஒதுக்கினால் நஷ்டம் நமக்குதான்.

    வணக்கம் நண்பர்களே இந்த பதிவின் வழியாக ஒரு சின்ன ஹேக்கிங் பற்றி பார்க்கலாம் இப்பொழுது அதிக நண்பர்கள் விண்டோஸ் 7 இயங்குதளம் பயன்படுத்துகிறார்கள் சிலர் அதை பயன்படுத்துவதில்லை அதற்கு கணினியின் தன்மையும் ஒரு காரணமாக இருக்கலாம் அல்லது அதனை விரும்பாமலும் இருக்காலாம் ஆனால் நாம் பார்க்க போவது விண்டோஸ் XP SP2 பற்றி மட்டுமே இந்த தகவல் பொருந்தும்.

    நாம் ஏற்கனவே ஒரு பதிவில் விர்ச்சுவல் டிரைவ் என்பதாக ஒரு பதிவு எழுதியிருந்தேன் அதில் இல்லாத ஒரு டிரைவ் இருப்பதாக கணினியை செயல்பட வைத்தோம் இதுவும் அதுபோலத்தான். சரி நண்பர்களே இந்த பதிவு எழுத நேர்ந்ததன் காரணம் நண்பர் ஒருவரின் கணினியில் விளையாட்டு மென்பொருள் இன்ஸ்டால் செய்ய முயற்சித்திருக்கிறார் ஆனால் அது இன்ஸ்டால் ஆவதற்கு பதிலாக உங்கள் கணினி விண்டோஸ் XP SP2 அதற்கு பதிலாக நீங்கள் இன்ஸ்டால் விண்டோஸ் XP SP3 செய்தால் மட்டுமே நான் இன்ஸ்டால் ஆவேன் என அடம் பிடித்திருக்கிறது அதற்கு தீர்வாகத்தான் இந்த பதிவு.

    நீங்களும் ஒருவேளை விண்டோஸ் XP SP2 உபயோகிக்கிறீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள், நீங்களும் ஒரு விளையாட்டை இன்ஸ்டால் செய்ய முயற்சிக்கிறீர்கள் அப்போது மேலே சொன்னபடி அறிவிப்பு வந்தால் என்ன செய்வீர்கள் உங்களிடமோ விண்டோஸ் XP SP3 இல்லை ஆனால் எப்படியும் இன்ஸ்டால் செய்ய விரும்புவீர்கள் தானே நாம் இப்போது தான் நாம் ஏற்கனவே பார்த்த விர்ச்சுவல் டிரைவ் போல இதையும் ஏமாற்றுவது எப்படி என பார்க்கலாம்.

    இப்போது நீங்கள் உங்கள் My Computer-ல் வலது கிளிக் செய்து அதன் பிராப்பர்ட்டிஸ் திறந்து பாருங்கள் Service Pack 2 என்பதாக இருக்கும் இனி இதைத்தான் நாம் Service Pack 3 என்பதாக மாற்றபோகிறோம்.



    நீங்கள் செய்யவேண்டியது Start ->Run-> type regedit என டைப் செய்து ஒரு எண்டர் கொடுக்கவும் இப்போது உங்களை ரிஜிஸ்டரி பக்கத்திற்கு கொண்டு செல்லும். ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதை Backup எடுத்துக்கொள்ளவும்.



    அடுத்ததாக நீங்கள் செய்ய வேண்டியது HKEY_LOCAL_MACHINE\SYSTEM\ CurrentControlSet\Control\Windows கண்டுபிடித்து வலது பக்கம் இருக்கும் பான் விண்டோவில் CSDVersion என்பதை இருமுறை கிளிக்கினால் இப்போது ஒரு குட்டி பாப் அப் விண்டோ திறக்கும் அதில் ஏற்கனவே அதன் வேல்யூ 200 என்பதாக இருக்கும் நீங்கள் அதை 300 என்பதாக மாற்றி விடுங்கள் அவ்வளவுதான் சந்தேகத்திற்கு படத்தை பாருங்கள் புரியும்.





    மேலே நான் சொன்னவற்றை எல்லாம் சரியாய் செய்திருந்தால் ஒரு சபாஷ் சொல்லிக்கொள்ளுங்கள். இனி உங்கள் My Computer வலது கிளிக் செய்து அதன் பிராப்பர்ட்டிஸ் பாருங்கள் Service Pack 3 மாறியிருக்கும் இனி விண்டோஸ் XP SP3 ல் மட்டுமே இன்ஸ்டால் ஆகும் மென்பொருள்கள் உங்கள் விண்டோஸ் XP SP2 விலும் இன்ஸ்டால் ஆகும்.

    நண்பர்களே இது உங்களுக்கு புரிந்ததா இதில் ஏதாவது சந்தேகம் இருப்பின் கேட்கலாம் எனக்கு தெரிந்தவரை சொல்லித்தர முயற்சி செய்கிறேன் பதிவு பிடித்திருந்தால், உபயோகமானதாக இருந்தால் அவசியம் பதிவை பற்றிய கருத்துரையும் வாக்கும் பதிந்து செல்லவும்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    17 Comments
    Comments

    17 Responses to “விண்டோஸ் XP SP2 – விண்டோஸ் XP SP3 ஹேக்கிங்”

    மாணவன் said...
    November 3, 2010 at 9:24 AM

    அருமை நண்பா,
    மிகவும் பயனுள்ள தகவலை தெளிவாகவும் அனைவரும் புரிந்துகொள்ளும்படியும்
    அழகாக விளக்கியுள்ளீர்கள் இது பலருக்கும் பயன்படும் எனினும் என்னைபோன்ற வன்பொருள் [hardware] துறையில் வளர்ந்துவரும் பொறியாளருக்கு மிகவும் உதவியாய் இருக்கும்

    சிறப்பான தகவலை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

    வாழ்க வளமுடன்
    என்றும் நட்புடன்
    உங்கள் மாணவன்


    மாணவன் said...
    November 3, 2010 at 9:26 AM

    அன்பின் நண்பருக்கு,

    உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் மற்றும் பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    வாழ்க வளமுடன்
    நன்றி
    என்றும் நட்புடன்
    மாணவன்


    ம.தி.சுதா said...
    November 3, 2010 at 11:49 AM

    சகோதரா ஆரம்பத்திலேயே சொன்னென் தானெ இவை அத்தனையும் எனக்கு புதுமையானவை தான்.. அனால் என்றோ ஒரு நாள் நானும் இவை அனைத்தையும் செய்து பார்த்த பின் இதே இடம் வந்து நன்றி சொல்லிப் போவேன்...


    ம.தி.சுதா said...
    November 3, 2010 at 11:52 AM

    சகோதரா... எப்படி இந்த முதன்மைக் கருத்துரையாளர் பெட்டியை உருவாக்கினீர்கள்.... சொல்லித் தர முடியுமா..???


    ஜிஎஸ்ஆர் said...
    November 4, 2010 at 8:00 AM

    @மாணவன் ஆம் நண்பா நிச்சியமாக உங்களை போன்ற பொறியாளர்களுக்கு சில நேரங்களில் தேவை ஏற்படலாம்


    ஜிஎஸ்ஆர் said...
    November 4, 2010 at 8:01 AM

    @மாணவன்வாழ்த்துகளுக்கு நன்றி நண்பா

    தங்களுக்கும் வாழ்த்துகள்


    ஜிஎஸ்ஆர் said...
    November 4, 2010 at 8:02 AM

    @ம.தி.சுதாஇவை எல்லாமே வரும் காலத்தில் உங்களுக்கு தெரிந்தவையாக மாறிவிடும்


    ஜிஎஸ்ஆர் said...
    November 4, 2010 at 8:02 AM

    @ம.தி.சுதா நிச்சியம் சொல்லி தருகிறேன் கொஞ்சம் நேரம் தேவை

    தீபாவளி வாழ்த்துகள்


    ramalingam said...
    November 4, 2010 at 11:05 AM

    எனக்கு ஒர்க் ஆகிறது. நன்றி.


    தர்சிகன் said...
    November 5, 2010 at 9:39 PM

    மிக்க பயன் உள்ள தகவல்.
    நன்றி.


    ஜிஎஸ்ஆர் said...
    November 6, 2010 at 9:34 AM

    @ramalingamயாரவது ஒரு நபராவது இதை சோதித்து பார்த்து அதன் பலனை சொல்லமாட்டார்களா என நினைத்திருந்தேன் நன்றி நண்பரே


    ஜிஎஸ்ஆர் said...
    November 6, 2010 at 9:36 AM

    @வருணன்தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே


    Unknown said...
    November 6, 2010 at 2:22 PM

    its good and usefull however can please tell me what is the difference between sp2 sp3.


    ஜிஎஸ்ஆர் said...
    November 6, 2010 at 10:17 PM

    @shahulஅதாவது நண்பா ஒரு பதிப்பு வெளிவந்து அதன் பின்னர் வெளிவரும் பதிப்பில் முந்தைய பதிப்பில் இருக்கும் பிழைகளை சரிசெய்து வெளியிடப்படும் இன்னும் உங்களுக்கு தெளிவாக உங்களுக்கு அறிந்துகொள்ள விருப்பம் என்றால் http://answers.yahoo.com/question/index?qid=20081210044724AA9aHhM இங்கே பாருங்கள் அங்கு ஒரு பிடிஎப் தரவிறக்கம் கிடைக்கும் தரவிறக்கி பாருங்கள் உங்களுக்கு முழுமையான விபரம் கிடைக்கும்

    சரியான புரிதலுக்கு நன்றி நண்பரே


    Vengatesh TR said...
    November 26, 2010 at 8:32 AM

    .எனக்கு பிற்காலத்தில் உபயோகபடும் என நினைக்கிறேன் .. !

    .பகிர்ந்தமைக்கு நன்றி !!


    ஜிஎஸ்ஆர் said...
    November 26, 2010 at 8:13 PM

    @சிகப்பு மனிதன்அப்ப்டியானல் நீங்கள் விளையாட்டு சம்பந்த மென்பொருள்கள் உபயோகிப்பதில்லை என நினைக்கிறென் சரி தானே?


    Vengatesh TR said...
    November 26, 2010 at 9:06 PM

    .அமாம், புத்தியை கூர்மை ஆக்க தான், கணினியும் வளையும் வாங்கினனே தவிர, புத்தி தவற விட அல்ல !


    .ஆனாலும், செஸ், சொடுக்கு(sudoku) போன்ற சிறு பிள்ளைகள் விளையாட்டில் மற்றும் ஆர்வம உண்டு கணினியில் விளையாட !


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர