Nov 9, 2010
பிடிஎப் நிட்ரோ சூப்பர் பவர்புல் ஆல் இன் ஆல் (Nitro PDF)
வணக்கம் நண்பர்களே நான் ஏற்கனவே பிடிஎப் பற்றி சில பதிவுகள் எழுதியிருக்கிறேன் அதில் நண்பர்கள் பலர் பயனடைந்திருக்க கூடும் அந்த பதிவுகளை இது வரை பார்க்காதவர்கள் கீழிருக்கும் மூன்று பதிவுகளையும் பாருங்கள் ஆனாலும் இப்போது எழுதப்போகும் பதிவைத்தான் இனி நீங்கள் விரும்புவீர்கள் என நம்புகிறேன்.
பிடிஎப் வெட்டு ஒட்டு என்னவேணாலும் பண்ணு
பிடிஎப்-பில் பாஸ்வேர்டு
பூட்டிய பிடிஎப் பைலை திறக்கலாம்
என்ன நண்பர்களே மேலிருக்கும் பதிவை பார்த்தீர்களா? சரி பரவாயில்லை இந்த அவசர யுகத்தில் அதற்கெல்லாம் உங்களுக்கு எங்கே நேரம் இருக்க போகிறது? விஷயங்களை கற்றுக்கொள்வோம் ஆனால் கற்றுக்கொடுத்தவருக்கு நம்மால் ஒரு சிறு அங்கீகாரம் கிடைத்துவிடக் கூடாது என நினைப்பவர்கள் தானே நம் மக்கள். இதை நான் சொல்லக் காரணம் நம் பதிவை எத்தனையோ பேர் படிக்கிறார்கள், எத்தனையோ நண்பர்கள் நம் தளத்தில் கொடுக்கும் மென்பொருளை தரவிறக்குகிறார்கள் ஆனால் அவர்களில் சிலர் நினைத்தாலும் நம் பதிவை மேலும் பலருக்கு சென்றடைய வைக்க முடியும் ஆனால் வரும் நண்பர்கள் வாக்களிக்க தயங்குகிறார்கள், கருத்துரை எழுத தயங்குகிறார்கள் நான் என்ன என்னைபற்றி புகழ்ந்து எழுதவா சொல்கிறேன்? பதிவின் சாரம்சத்தை பற்றி கருத்து தானே கேட்கிறேன்?மேலும் நீங்கள் நினைத்தால் நம் தளத்தில் நண்பர்கள் பட்டியலில் இனையலாம் இப்படி இனைவதால் உங்களுக்கு ஒன்றும் நஷ்டமில்லை அதே நேரத்தில் எனக்கொன்றும் பெரிய இலாபமும் இல்லை ஆனால் படிக்க வருபவர்களுக்கு நம் தளத்தை நம்பிக்கைக்குறிய தளமாக காட்டுவதில் நண்பர்களாகிய உங்களுக்கு பங்கில்லையா?.
இந்த நிட்ரோ பிடிஎப்-பில் நிறைய வசதிகள் இருக்கிறது ஆனாலும் தமிழ் கன்வெர்ட் செய்யும் போது பிரச்சினை இருக்கத்தான் செய்கிறது. மென்பொருளை பற்றி முழுவதுமாக சொல்வதென்றால் இதைப்பற்றி குறைந்து ஐந்து பதிவுகள் வேண்டிவரும் முதலில் Nitro PDF (நிட்ரோ பிடிஎப்) செய்யுங்கள் இது ஒரு புரொபசனல் மென்பொருள்.
இந்த பதிவில் புக்மார்க் பற்றி பார்க்கலாம் சாதரணமாக சில பிடிஎப்-களில் இடது பக்கம் ஒவ்வொரு தலைப்பையும் அழகாக தொகுத்து புக்மார்க் செய்திருப்பார்கள் ஆனால் இது போன்ற வசதிகள் நாம் தரவிறக்கும் எல்லா பிடிஎப் பைல்களிலும் கிடைப்பதில்லை அதே நேரத்தில் சாதரணமாக இதை உருவாக்கி விடலாம். கீழிருக்கும் படத்தை பாருங்கள் இது தான் புக்மார்க்.
இந்த வசதி நாம் பிடிஎப் உருவாக்கும் போதே தானக உருவாகி விடும் இதைப்பற்றி கவலையில்லை.
இப்போது நமக்கு தேவையான புக்மார்க் உருவாக்குவது எப்படி என பார்க்கலாம் இதில் இரண்டு வழிமுறைகள் இருக்கிறது முதலில் நிட்ரோ பிடிஎப் திறந்து உங்களுக்கு தேவையான பிடிஎப் பைலை திறக்கவும் இதில் Insert and Edit என்கிற டேப் திறந்து படத்தில் உள்ள வழிமுறையை பின்பற்றவும். இப்போது நீங்களே உங்கள் தளத்தில் உள்ள பதிவுகளை மொத்தமாக ஒரு பிடிஎப் ஆக மாற்றி உங்கள் வாசகர்களுக்கு கொடுக்க நினைத்தால் அவர்கள் மொத்த பக்கங்களையும் புரட்ட முடியாது அதற்கு வசதியாக தான் இந்த புக்மார்க் பதிவின் தலைப்பை வைத்து புக்மார்க் செய்து விட்டால் படிப்பதற்கு எளிதாய் இருக்கும். எல்லாம் முடிந்ததும் அந்த பைலை Save as கொடுத்து சேமித்து விடுங்கள்.
இனி இன்னொரு வழிமுறையையும் பார்க்கலாம் ஏதாவது ஒரு பதிவின் தலைப்பை படத்தில் உள்ளது போல் செலக்ட் செய்து அதில் வலது கிளிக்கினால் திறக்கும் மெனுவில் Add Bookmark என்பதை கிளிக்கவும் இப்போது இடது பக்கம் படத்தில் உள்ளது போல வந்திருக்கும் பின்னர் அதை பெயர் மாற்றிக்கொள்ளவும் அவ்வளவுதான் இதிலேயே Signature வசதியும் இருக்கிறது.
இனி இந்த மென்பொருளில் இருக்கும் வசதிகளை பார்க்கலாம் வேர்டு அல்லது எக்ஷெல் பைலை இருந்து நேரடியாக பிடிஎப் ஆக மாற்றலாம் இன்ஸ்டால் செய்தவுடன் உங்கள் வேர்டு, எக்ஷெலில் இதுவும் இரு டேப்பாக வந்து அமர்ந்துகொள்ளும்.
நிட்ரோவில் இருந்து நேரடியாக பிடிஎப் உருவாக்க முடியும் பிடிஎப் பைலை நேரடியாக வேர்டு அல்லது எக்ஷெல், அல்லது நோட்பேடில் அல்லது அதிலிருக்கும் இமேஜ் மட்டும் பிரித்தெடுப்பது என எல்லா வசதிகளும் இந்த நிட்ரோ பிடிஎப்பில் இருக்கிறது.
Header மற்றும் Footer வசதி பேஜ் நம்பர் கொடுக்கும் வசதி இமேஜ் உள்ளிடுவது, வாட்டர் மார்க் மற்றும் எழுத்துகளை எடிட் செய்வது என இல்லாத வசதிகளை இல்லை எனுமளவில் இருக்கிறது.
ஏதாவது ஒரு இடத்தை குறிப்பிட்டு காண்பிக்கும் வகையில் ஹைலைட், கமெண்ட் வசதி இப்படி இன்னும் ஏரளானமான வசதிகளை கொண்டிருக்கிறது இந்த பிடிஎப்.
கோம்போ பாக்ஸ், ரேடியோ பட்டன் என வசதிகள் பெருகி கிடக்கிறது உண்மையில் நான் இந்த பதிவை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த சந்தோஷம்.
பிடிஎப் பைலில் பாஸ்வேர்டு இடுவது பற்றி நாம் ஏற்கனவே பார்த்திருந்தாலும் இந்த நிட்ரோ பிடிஎப்பிலும் இந்த வசதி கிடைக்கிறது.
பிடிஎப் பக்கங்களை அலைன்மெண்ட் செய்வதில் இருந்து திருப்புவதில் இருந்து அதாவது vertical ஆக இருக்கும் பிடிஎப் பைலை Horizontal ஆக மாற்றி பார்க்கவும் படிக்கவும் முடியும்.
நான் ஏற்கனவே எழுதிய எந்த மென்பொருளையும் போர்ட்டபிளாக மாற்றலாம் பதிவு நான் மிகவும் விரும்பினேன் இன்று அதைப்போலவை இந்த பதிவை மகழ்சியுடன் உங்களுடன் பகிர்ந்துகொண்டேன், இன்னும் சில நல்ல பதிவுகள் நம் தளத்தில் இருக்கின்றன அவசியம் படித்து பாருங்கள்.
நண்பர்களே இது உங்களுக்கு புரிந்ததா இதில் ஏதாவது சந்தேகம் இருப்பின் கேட்கலாம் எனக்கு தெரிந்தவரை சொல்லித்தர முயற்சி செய்கிறேன் பதிவு பிடித்திருந்தால், உபயோகமானதாக இருந்தால் அவசியம் பதிவை பற்றிய கருத்துரையும் வாக்கும் பதிந்து செல்லவும்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
இந்த பதிவை எழுதியது: ஜிஎஸ்ஆர்
நான் தொழில்முறை சார்ந்த எழுத்தாளன் இல்லை, எனக்கு தெரிந்த விஷயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்வதற்க்காவும்,அடிப்படை கணினி சார்ந்த விஷயங்கள் தெரியாதவர்களுக்கு கற்றுக்கொள்ளும் வாய்ப்பாக இந்த தளத்தை எழுதி வருகிறேன். பதிவு பயனுள்ளதாகாவோ, பிடித்தமானதாகவோ இருந்தால் வாக்கும் கருத்துரையும் அளித்துச்செல்லுங்கள் மேலும் பலரை சென்றடையட்டும் அன்புடன் Gsr
9 Responses to “பிடிஎப் நிட்ரோ சூப்பர் பவர்புல் ஆல் இன் ஆல் (Nitro PDF)”
-
ஜிஎஸ்ஆர்
said...
November 9, 2010 at 9:00 AM@மாணவன் ,@எஸ்.கே
நண்பர்களே முதலில் மன்னிக்கவும் எதிர்பாராத விதமாக இந்த பதிவை இண்ட்லியில் இனைக்க முடியவில்லை, இண்ட்லி நிர்வாகத்தினற்கு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறேன் (மேலும் அவர்களிடம் Top Voters குறித்தான வேண்டுதலை வைத்தேன் அவர்களும் ஆலோசிக்கிறோம் முடியுமானல் விரைவில் வழங்குகிறோம் என தெரிவித்திருக்கிறார்கள் ஆனால் உறுதியாக சொல்லவில்லை) எனவே 09/11/10 அன்று மீண்டும் பதிவை இனைக்க போகிறேன் அப்பொழுது இந்த பதிவு டிராப்ட் செய்யப்பட்டுவிடும்.
சரியான புரிதலுக்கு நன்றி
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர் -
மாணவன்
said...
November 9, 2010 at 12:11 PM"ஒரு வரி கருத்து: புதிய உண்மையை விட பழைய தவறு தான் யாவருக்கும் தெரியும்"
மிகச்சரியான கருத்து அருமையாக சொல்லியுள்ளீர்கள்
”நண்பர்களே முதலில் மன்னிக்கவும் எதிர்பாராத விதமாக இந்த பதிவை இண்ட்லியில் இனைக்க முடியவில்லை”
அதனாலென்ன நண்பா உங்களைப்பற்றி எப்போதுமே நல்ல எண்ணமும் சரியான புரிதலும் எங்களுக்கு உண்டு
மிகவும் நன்றி நண்பா பதிவைப்பற்றி விளக்கியதற்கு...
இண்ட்லியில் சென்று ஓட்டு போட்டுவிட்டேன்
பதிவைப்பற்றிய கருத்துரை நேற்றே இரண்டு முறை வழங்கிவிட்டேன்
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
உங்கள் மாணவன் -
ADMIN
said...
November 9, 2010 at 5:24 PMஉங்கள் ஆதங்கமும், குமுறல்களும் மிகவும் நன்றாகவே புரிகிறது.. என்ன செய்ய? அவசர கால உலகத்தில் நீங்களும் நானும் இருக்கிறோம் என்பதையும் நினைவுபடுத்தியுள்ளீர்கள்.. நன்றி.! மிகவும் உபயோகமுள்ள பதிவிட்டதற்கு...! வாழ்க்! வளர்க! மேலும் சிறக்கட்டும் உங்கள் பணி!
-
ஜிஎஸ்ஆர்
said...
November 10, 2010 at 9:40 AM@மாணவன்வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பா டெம்ப்ளேட்டில் சில மாற்றங்கள் செய்யப்போக தளம் திறப்பதில் பிரச்சினை இருந்து வந்தது ஒரு வழியாய் சரி செய்து விட்டேன்.
இன்னும் நீங்கள் சுட்டிக்காட்டிய நம் தளத்தில் இனைக்கப்படும் உரல்கள் வேறு ஒரு டேப்பில் திறக்க வேண்டும் என சொல்லியிருந்தீர்கள் இன்னும் சரி செய்யவில்லை விரைவில் சரி செய்து விடுகிறேன் நண்பரே
தங்களின் சரியான புரிதலுடன் கூடிய நட்பிற்கு நன்றி -
ஜிஎஸ்ஆர்
said...
November 10, 2010 at 9:43 AM@தங்கம்பழனிசில நேரங்களில் நம்மையறியாமல் கொஞ்சம் வெறுப்பும் வரத்தான் செய்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பா
-
Vengatesh TR
said...
November 26, 2010 at 8:25 AM.நான் இதை தான், பயன்படுத்தி வருகிறேன் ....
-
ஜிஎஸ்ஆர்
said...
November 26, 2010 at 8:14 PM@சிகப்பு மனிதன்இந்த மென்பொருள் மிக சிறப்பாக இருக்கிறது நண்பா ஆனால் தமிழில் தான் பிரச்சினையாக இருக்கிறது
-
ZAKIR HUSSAIN
said...
October 8, 2011 at 6:58 PMஅன்பு சகோதரர் ஞானசேகருக்கு....
நன்றி சொல்வதைப்பற்றி ஒரு கதை இருக்கிறது...ஒரு எறும்பு தண்ணீரில் விழுந்ததை பார்த்த ஞானி அதை எடுத்து கறையில் விட அது கையை கடித்ததாம்..பக்கத்தில் இருந்தவர் இப்படி கடிக்கும் எறும்புக்கு ஏன் உதவி செய்ய வேண்டும்? என கேட்க 'கடிப்பது அதன் புத்தி ' உதவி செய்வது என் புத்தி " என்றாராம்.
பதிவை பாராட்டி எழுதாமல் இருந்தாலும் உங்கள் மூலம் பயனடையும்போது ஏற்படும் மனநிறைவில் உங்களுக்கு மனதளவில் நன்றி போய் சேர்ந்து விடுகிறது.
ZAKIR HUSSAIN
....கதை சொல்ல ஆரம்பிச்ச உடனே..படுத்துக்கெடந்த கட்டில மொதக்கொன்டு தூக்கிட்டு போயிட்ரய்ங்க...எப்ப கெளம்பிடுரானுங்கனு தெரியலையே... -
ஜிஎஸ்ஆர்
said...
October 9, 2011 at 11:56 AM@ZAKIR HUSSAIN
\\பதிவை பாராட்டி எழுதாமல் இருந்தாலும் உங்கள் மூலம் பயனடையும்போது ஏற்படும் மனநிறைவில் உங்களுக்கு மனதளவில் நன்றி போய் சேர்ந்து விடுகிறது.\\
ஒரு படைப்பாளி அல்லது எழுத்தாளன் இன்னும் எத்தனை வகை இருந்தாலும் எல்லோருக்கும் தேவைப்படுவது நன்றி என்பதை காட்டிலும் சரியான விமர்சணம் தான் அந்த வகையில் நான் நண்பர்களிடம் வாசகர்களிடம் எதிர்பார்ப்பது நாம் குறிப்பிடும் விஷயம் குறித்தான அவர்களின் புரிதலை கருத்துக்கள் வழியாக எதிர்பார்க்கிறேன்.
ஆனாலும் உங்கள் கதை அருமை.
வாழ்த்துகள்
அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்
சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>