Sep 28, 2010

7

விண்டோஸ் இன்ஸ்டால் (இயங்குதளம் நிறுவல்) (Windows Installation)–பாகம் 7

  • Sep 28, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து : ஒன்றுமே செய்யாமல் சுறுசுறுப்பாய் இருப்பதை விட ஒன்றுமே செய்யாமல் இருப்பது நல்லது.

    வணக்கம் நண்பர்களே இந்த பதிவை படிக்கும் முன் முந்தைய ஆறு பதிவின் விபரத்தையும் பார்த்து விடுங்களேன்.

    விண்டோஸ் இன்ஸ்டால் (இயங்குதளம் நிறுவல் Windows Installation)–பாகம் 1

    விண்டோஸ் இன்ஸ்டால் (இயங்குதளம் நிறுவல் Windows Installation)–பாகம் 2

    விண்டோஸ் இன்ஸ்டால் (இயங்குதளம் நிறுவல் Windows Installation)–பாகம் 3

    விண்டோஸ் இன்ஸ்டால் (இயங்குதளம் நிறுவல் Windows Installation)–பாகம் 4

    விண்டோஸ் இன்ஸ்டால் (இயங்குதளம் நிறுவல் Windows Installation)–பாகம் 5

    விண்டோஸ் இன்ஸ்டால் (இயங்குதளம் நிறுவல் Windows Installation)–பாகம் 6

    நண்பர்களே முந்தைய ஆறு பதிவுகளின் வாயிலாக சில விஷயங்களை தெரிந்துகொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன் இப்போது உங்கள் கணினியில் விண்டோஸின் சீரியல் எண்ணை கேட்டு ( விண்டோஸ் இன்ஸ்டால் (இயங்குதளம் நிறுவல் Windows Installation)–பாகம் 4 ல் உங்கள் விண்டோஸின் சீரியல் எண்ணை குறித்து வைக்க சொல்லியிருந்தேன் ஞாபகமிருக்கிறதா) கீழிருக்கும் படம் போல வந்திருக்கும் அதில் பிழையில்லாமல் கொடுத்து விட்டு நெக்ஸ்ட் கொடுங்கள்.படங்கள் உதவி www.petri.co.il



    இப்போது கீழிருக்கும் படத்தை பாருங்கள் இது போல ஒரு விண்டோ வரும் இனி இதில் Computer Name என்பதில் ஏதாவது உங்களுக்கு பிடித்த பெயரை கொடுங்கள் கீழே இருக்கும் பாஸ்வேர்ட் கட்டத்தில் வேண்டுமானல் கடவுச்சொல் கொடுங்கள் அவசியம் இல்லையென்றால் விட்டு விடுங்கள் தேவைப்பட்டால் பின்னாளில் பார்த்துக்கொள்ளலாம்.



    இனி இப்படியாக ஒரு விண்டோ வந்திருக்கும் இதில் இரண்டு விதமான செட்டிங்ஸ் இருக்கிறது இதில் நீங்கள் Typical Settings என்பதையே தேர்ந்தெடுங்கள் எல்லாவற்றையும் தானக செய்துவிடும்.



    ஒரு வேளை Custom Settings என்பதை தேர்ந்தெடுத்தால் (என்னுடைய அறிவுறுத்தல் Typical Settings) தேர்ந்தெடுத்தால் கீழிருக்கும் படம் போல வரும் இது சாதரணமாக நெட்ஒர்க் கணினிகளுக்கு குறிப்பிட்ட ஐபி வழங்குவதற்காக பயன்படுத்துவார்கள், இதில் Internet Protocol (TCP/IP) என்பதை தெரிவு செய்து அதன் கீழிருக்கும் Properties என்பதை கிளிக்கி சில செட்டிங்ஸ் செய்யவேண்டி வரும் சாதரண கணினி பயன்பட்டாளருக்கு இதன் அவசியம் வராது எனவே இதை பற்றி நான் எழுதபோவதில்லை உங்கள் பார்வைக்கு மட்டுமே படம் இனைத்திருக்கிறேன்



    இனி கீழிருக்கும் படம் போல திறக்கும் இதில் உங்கள் கணினிக்கு ஏதாவது ஒரு பெயர் கொடுங்கள் ஒரு வேளை உங்கள் கணினி வேறு ஏதாவது ஒரு நெட்ஒர்க்கில் இனைக்கப்பட்டிருந்தால் ஏற்கனவே எந்த பெயரில் இயங்கியது என்பதை அறிந்து அதே பெயரை கொடுத்து ஒரு நெக்ஸ் கொடுத்துவிடுங்கள்.



    இனி இப்படியாக ஒரு விண்டோ திறக்கும் சிறிது நேரத்தில் உங்கள் புதிய விண்டோஸ் முழுமையாக நிறுவிக் கொண்டிருக்கும் சிறிது நேரம் காத்திருக்க வேண்டி வரும்.



    அன்பின் நண்பர்களே ஒரு வழியாய் இந்த பதிவையும் விண்டோஸ் நிறுவலையும் முடிக்கும் நிலையில் இருக்கிறோம் இனி அடுத்த பதிவில் இதன் இறுதி கட்டத்தையும் பார்த்துவிடலாம் இந்த பதிவு முழுக்க முழுக்க தனி நபர் பயன்பாட்டை வைத்தே எழுதப்பட்டிருக்கிறது எனவே சில இடங்களில் தேவையில்லாத விஷங்களை தவிர்த்திருக்கிறேன்.

    நான் இதுவரை எழுதிய பதிவுகளுக்கு நல்லென்னத்தோடு வாக்களித்து மேலும் பலரை சென்றடைய செய்த (குறிப்பாக பதிவர் அல்லாத முகம் அறியா நண்பர்களுக்கு நன்றி. இனிமேலும் உங்களின் தொடர்ச்சியான ஆதரவை விரும்பி) நண்பர்களுக்கும் சில பதிவர் நண்பர்களுக்கும் என் நன்றியை இங்கு தெரிவிக்கிறேன். பதிவர் அல்லாத முகம் அறியா நண்பர்களை குறிப்பிட்டு சொல்வதன் காரணம் நேற்று சரி இதுவரை எதுமாதிரியான நண்பர்கள் நம் பதிவுக்கு வாக்களித்திருக்கிறார்கள் என அறிந்துகொள்ளும் நோக்கத்தோடு பார்த்த போது அதிகபட்சம் பதிவர் அல்லாத நண்பர்களே வாக்களித்திருந்தார்கள் விதிவிலக்காக சில பதிவர் அன்பர்களும். இங்கு எல்லாமே கொடுக்கல் வாங்கல் தான் என்பதை மீண்டும் ஒரு முறை உணர்ந்திருக்கிறேன்.

    விண்டோஸ் இன்ஸ்டால் (இயங்குதளம் நிறுவல்) (Windows Installation)–இறுதி பாகம் 8

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    7 Comments
    Comments

    7 Responses to “விண்டோஸ் இன்ஸ்டால் (இயங்குதளம் நிறுவல்) (Windows Installation)–பாகம் 7”

    S.முத்துவேல் said...
    September 28, 2010 at 12:08 PM

    அருமை os போட தெரியாதர்வர்க்ளுக்கு மிக பயனளிக்கும்...


    Chef.Palani Murugan, said...
    September 28, 2010 at 12:39 PM

    நன்றி நண்பா.வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்க.


    மாணவன் said...
    September 28, 2010 at 4:38 PM

    வழக்கம்போலவே அருமையாகவும் தெளிவாகவும் எதிர்பார்த்ததைப்போலவே தொடர்ந்து உற்சாகமாய் எழுதிவருகீர்கள் பாராட்டுக்கள் நண்பரே,
    இதைப்போலவே தொடர்ந்து உங்கள் பணி செவ்வெனே சிறக்க வாழ்த்துக்கள் நண்பா
    என்னைப்பற்றி நலம் விசாரித்தீர்கள் மகிழ்ச்சியாய் இருந்தது ரொம்ப நன்றி நண்பா
    இறைவனின் அருளாள் நானும் எனது குடும்பத்தாரும் மிக நன்றாக இருக்கிறோம் நண்பா மனதுக்கு பிடித்த வேலை திருப்தியான சம்பளம் பழக இனிமையான நண்பர்கள் என்று வாழ்க்கை நன்றாக போய்கொண்டிருக்கிறது, தற்பொழுது சிங்கப்பூரில் ஒரு நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறேன்.
    பதிவுலகில் உங்களைப்போன்ற நன்பர்கள் நட்பு கிடைத்தது ரொம்ப பெருமையாக உள்ளது உங்களிடமிருந்து நிறய கற்று வருகிறேன் இன்னும் என்னை மெருகேற்றி வருகிறேன் அந்த வகையில் உங்களுக்கு பெரிய நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் நண்பா...
    தொடர்ந்து உற்சாகமாய் எழுதுங்கள் நாங்கள் எப்போதும் உங்களோடு இனைந்திருப்போம்.
    பதிவுலகின் குரு நம்ம பிகேபி சார் சமீப காலமாய் பதிவு எதுவும் எழுதவில்லையே நண்பா அதிக வேலைப்பளுவா...

    நன்றி நண்பா....


    மாணவன் said...
    October 4, 2010 at 9:04 AM

    வலைத்தளத்தின் புது டெம்ப்ளேட் புதுப்பொலிவோடு பிரமாதமாக இருக்கிறது
    அருமை நண்பா,
    உங்களின் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
    இந்த முயற்சி இடைவிடாது தொடர வேண்டும் நண்பா...
    அடுத்த பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்து
    மீண்டும் பாராட்டுகளும் வாழ்த்துகளுடன்
    மாணவன்


    ஜிஎஸ்ஆர் said...
    October 4, 2010 at 10:42 AM

    @மாணவன்வணக்கம் நண்பா இடையில் வேலைப்பளுவின் காரணமாக பதில் எழுத முடியவில்லை மேலும் டெம்ப்ளேட் மாற்றவும் செய்தேன் இப்போது கொஞ்சம் புரொபசனல் டச் இருக்கா நண்பா நம்ம தளம். பிகேபி சமீப நாட்களாக ஒன்றும் எழுதவில்லை இடையில் இரண்டு நாட்கள் பிகேபி போரம் பிரச்சினையாய் இருந்தது அதை கூட அவருக்கு தெரிவிக்க முடியவில்லை பின்னர் அவரின் போரத்திலேயே அதை குறிப்பிட்டிருந்தேன்


    ஜிஎஸ்ஆர் said...
    October 4, 2010 at 10:43 AM

    @S.முத்துவேல் நம்மாள் ஒருவராவது கற்றுக்கொண்ட்டால் சந்தோஷமே


    ஜிஎஸ்ஆர் said...
    October 4, 2010 at 10:44 AM

    @Chef.Palani Murugan, LiBa's Restaurantவணக்கம் நண்பா தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பா


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர