Sep 27, 2010

6

விண்டோஸ் இன்ஸ்டால் (இயங்குதளம் நிறுவல் Windows Installation)–பாகம் 6

 • Sep 27, 2010
 • ஜிஎஸ்ஆர்
 • Share
 • ஒரு வரி கருத்து : பிச்சை எடுப்பவனுக்கு கோபம் வந்தால் அவன் வயிறு தான் காயும்.

  வணக்கம் நண்பர்களே இந்த பதிவை படிக்கும் முன் முந்தைய ஐந்து பதிவின் விபரத்தையும் பார்த்து விடுங்களேன்.

  விண்டோஸ் இன்ஸ்டால் (இயங்குதளம் நிறுவல் Windows Installation)–பாகம் 1

  விண்டோஸ் இன்ஸ்டால் (இயங்குதளம் நிறுவல் Windows Installation)–பாகம் 2

  விண்டோஸ் இன்ஸ்டால் (இயங்குதளம் நிறுவல் Windows Installation)–பாகம் 3

  விண்டோஸ் இன்ஸ்டால் (இயங்குதளம் நிறுவல் Windows Installation)–பாகம் 4

  விண்டோஸ் இன்ஸ்டால் (இயங்குதளம் நிறுவல் Windows Installation)–பாகம் 5

  நண்பர்களே முந்தைய ஐந்து பதிவுகளின் வாயிலாக சில விஷயங்களை தெரிந்துகொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன் இப்போது உங்கள் கணினியில் புதிய விண்டோஸ் இன்ஸ்டால் ஆவதை உணர்த்தும் வகையில் கீழிருக்கும் படம் போல விண்டோ வந்திருக்கும் இங்கு ஒரு முக்கியமான விஷயத்தை கவணியுங்கள் இனி நீங்கள் நிறுவும் விண்டோ ஒரிஜினல் பதிப்பு என்றால் மட்டுமே பின்வரும் செட்டிங்ஸ் வரும் ஒரு வேளை இதே போலவே வரவில்லையென்றாலும் கவலைப்படாமல் தைரியமாக முன் செல்லுங்கள் இனி ஒரு வேளை நீங்கள் தவறுதலான செட்டிங்ஸ் செய்து விட்டாலும் ஒன்றும் பிரச்சினை இல்லை பின்னால் சரி செய்துவிட முடியும்.படங்கள் உதவி www.petri.co.il
  இனி இப்படியாக ஒரு விண்டோ வரும் இதில் நீங்கள் சில மாற்றங்களை செய்யவேண்டிவரும் இதில் கஷ்டமைஸ் (Customize) ல் கிளிக்குங்கள்.  இப்போது உங்களுக்கு கீழிருக்கும் படம் போல மேலும் ஒரு பாப் அப் விண்டோ திறக்கும் அதில் Language டேப் திறந்து அதில் Supplemental Language support என்பதன் கீழாக இருக்கும் இரண்டு தேர்வுகளில் முதலாவதாக இருக்கும் Install files for computer script and right to left left language (including Thai) என்பதில் ஒரு டிக் மார்க் குறி ஏற்படுத்தவும் உடனேயே மேலும் ஒரு சிறிய பாப் அப் விண்டோ தோன்றும் அதில் ஓக்கே கொடுத்து விடுங்கள் சந்தேகத்திற்கு படத்தையும் பாருங்கள் இது செய்யவில்லையென்றாலும் பிரச்சினை இல்லை இப்படி செய்தால் தமிழ் யூனிகோட் படிக்க சிரமம் இருக்காது ஒர்வேளை செய்ய விட்டுப்போனால் பின்னாளில் NHM Writer இன்ஸ்டால் செய்யும் போது சரியாகிவிடும்.  மேலே சொன்ன சிறிய பாப் அப் விண்டோவை ஓக்கே கொடுத்த்தும் இனி கீழே உள்ள படத்தில் இருப்பது போல Apply கொடுக்கவும்.  இப்போது கீழிருக்கும் படத்தில் காண்பிப்பது போல ஒரு சிறிய பாப் அப்பில் உங்கள் மொழிகளை இன்ஸ்டால் செய்வதாக சொல்லும் முடிந்தவுடன் ஓக்கே கொடுத்து விடுங்கள்.  இனி இப்படியாக ஒரு விண்டோ வந்து உங்களின் பெயரையும் உங்களின் நிறுவனப்பெயரையும் கேட்கும் நீங்கள் விரும்புகிற ஏதாவது ஒரு பெயரை கொடுத்துவிடுங்கள்.  இனி விண்டோஸ் இன்ஸ்டால் (இயங்குதளம் நிறுவல் Windows Installation)–பாகம் 4 ல் உங்கள் விண்டோஸின் சீரியல் எண்ணை குறித்து வைக்க சொல்லியிருந்தேன் ஞாபகமிருக்கிறதா அதன் தேவை வந்துவிட்டது இனி வரும் பதிவில் அடுத்தடுத்த விஷயங்களை பார்க்கலாம்.

  அன்பின் நண்பர்களே இந்த பதிவு யார் சொல்லியும் கட்டாயமும் இல்லாமல் தான் எழுதுகிறேன் நீங்களும் படிக்கிறீர்கள் நான் எழுதுவது உங்களுக்கு புரிகிறதா எளிமையாக இருக்கிறதா இல்லை இன்னும் எளிமைபடுத்த வேண்டுமா என நீங்கள் உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளலாமே ஏதோரு மனிதனுக்கும் ஏற்படும் இயல்புதானே எதிர்பார்ப்பு.

  விண்டோஸ் இன்ஸ்டால் (இயங்குதளம் நிறுவல் Windows Installation)–பாகம் 7

  விண்டோஸ் இன்ஸ்டால் (இயங்குதளம் நிறுவல்) (Windows Installation)–இறுதி பாகம் 8

  குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


  வாழ்க வளமுடன்  என்றும் அன்புடன்
  ஞானசேகர்
  6 Comments
  Comments

  6 Responses to “விண்டோஸ் இன்ஸ்டால் (இயங்குதளம் நிறுவல் Windows Installation)–பாகம் 6”

  ம.தி.சுதா said...
  September 27, 2010 at 12:41 PM

  சகோதரா தங்களின் ஆக்கத்தை படிக்க முட்டுமே முடிகிறது. அதை பிரயோகிக்கும் சந்தர்ப்பம் விரைவில் எனக்கு வரும்... தங்களுடைய ஆக்கம் பலரை சென்றடையவில்லை என நினைக்கிறென். நான் என் நண்பருக்கு அறிமுகம் செய்யிறனான்.. இப்படியான தகவல் பலரை சென்றடையணும்.. சகல திரட்டிகளையும் எனக்காக பாவியுங்கள் சகோதரா..!!!!


  மாணவன் said...
  September 27, 2010 at 1:47 PM

  அன்பின் நண்பரே,
  நானும் ஒரு வன்பொருள் பொறியாளர் என்பதால் விண்டோஸ் இயங்குதளம் நிறுவுதலில் எந்த சிரமும் இல்லையென்றாலும் உங்கள் மூலம் நிறைய விடயங்கள் கற்றுகொண்டேன் இன்னும் கற்றும் வருகிறேன் இயங்குதளம் நிறுவுதல் அனைவரும் புரிந்துகொள்ளும்படி தெளிவாகவும் அழகாகவும் எழுதி வருகிறீர்கள் இவ்வளவு பொருமையாக நேரத்தை செலவு செய்து எழுதி வருகிறீர்கள் நிச்சயமாக உங்களின் உழைப்பிற்கு பலன் கிடைக்கும் நண்பரே கண்டிப்பாக புதியவர்கள் இயங்குதளம் நிறுவுதலை உங்களின் பதிவைக் கொண்டு ஆர்வத்தோடு முயன்று பார்த்தால் வெற்றிகரமாக நிறுவ முடியும் என்பது எனது கருத்து.
  ”பயிற்சியும் முயற்சியும் இருந்தால்
  ஒவ்வொரு மனிதனும் சாதனையாளன்”தான் நண்பா...
  அந்த வகையில் இதற்கு முன்னர் நண்பர்கள் யாரவது வன்பொருள் துறையில் சந்தேகம் கேட்டால் கைப்பேசி மூலம் ஆலோசனை கூறி வந்தேன் இப்போது உங்களின் பதிவுகளை அறிமுகபடுத்தி வருகிறேன்...
  உங்களின் உழைப்பிற்கு ஒரு பெரிய சல்யூட் நண்பா.....
  வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று சிறப்புபெற இறைவனின் பிரார்த்தனையுடன்
  உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்களுடன்....
  மாணவன்


  மாணவன் said...
  September 27, 2010 at 1:49 PM

  ஜீனியர் ஜிஎஸ்ஆர் எப்படி இருக்கிறார் நலம் விசாரித்தாக சொல்லவும் நன்பரே...
  நன்றி


  ஜிஎஸ்ஆர் said...
  September 28, 2010 at 10:05 AM

  @ம.தி.சுதாபரவாயில்லை நண்பா அவசியம் வரும் போது பயன்படுத்தி பாருங்கள் நிச்சியம் புரியும்


  ஜிஎஸ்ஆர் said...
  September 28, 2010 at 10:07 AM

  @மாணவன்என்னதான் இருந்தாலும் சில நேரம் நமக்குள் இருக்கும் ஆசை வெளிவந்துவிடுகிறது என்ன செய்ய ஆசையை அடக்கி ஆள முடியாதவன் தானே மனிதன் மேலும் நீங்கள் மற்றவர்களுக்கு அறிமுகபடுத்தும் வகையில் நம் பதிவு இருப்பதாக சொல்வது இன்னும் தெளிவாக மற்றவர்களுக்கு எளிதில் புரியும்படியாக எழுதவேண்டும் என்கிற எண்ணம் வருகிறது


  ஜிஎஸ்ஆர் said...
  September 28, 2010 at 10:10 AM

  @மாணவன்ஜூனியர் ஜிஎஸ்ஆர் நலமாய் இருக்கிறார், தாங்கள் மற்றும் தங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் நலம் அறிய ஆவல்


  அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

  சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
  போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
  சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

  Subscribe


  முதன்மை கருத்துரையாளர்கள்

  கடைசி பதிவுகளில் சில

  நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர