Sep 7, 2010

9

வோடாபோனும் விளங்காத கஷ்டமர்கேரும்

 • Sep 7, 2010
 • ஜிஎஸ்ஆர்
 • Share
 • ஒரு வரி கருத்து: செல்வாக்கை நாம் தேடுவதை விட அது நம்மை தேடி வர வேண்டும்.

  வணக்கம் நண்பர்களே இது சமீபத்தில் நடந்த சம்பவம் சாதரணமாகவே இந்த மொபைல் சர்வீஸ் வழங்குபவர்களின் தொல்லை பல விதத்திலும் இருக்கும் அவர்களின் ஒரு எண்ணை நாம் தடை செய்து வைத்திருந்தாலும் வெவேறு எண்களில் இருந்து பல தொல்லைகள் கொடுப்பார்கள் அதையெல்லாம் நாம் சகித்துக்கொள்வோம் ஆனால் சமீபத்தில் மொபைல் வழியான திருட்டுத்தனங்களை ஒரு கும்பல் ஆரம்பித்துள்ளது.

  சமீபத்தில் ஒரு அழைப்பு பெண் பேசுகிறார் வணக்கம் நாங்கள் வோடாபோனில் இருந்து அழைக்கிறோம் எங்களின் சிறப்பு சலுகை திட்டத்தில் தென் மாவட்டத்தில் நாங்கள் வழங்கியுள்ள அலைபேசி எண்களில் பத்து எண்களை தெரிவு செய்து அவர்களுக்கு இலவசமாக எல்ஐசி காப்பீட்டு திட்டத்தில் ஒரு இலட்சம் தர இருக்கிறோம் அதில் தெரிவு செய்தவர்களின் பட்டியலில் தாங்களும் ஒருவர் என்பதாக அழைப்பு அழைப்பு வந்த எண்ணோ மதுரையிலிருந்து, நான் என்ன என்று யோசிப்பதற்குள்ளாகவே அவர்கள் நம்மை ஏமாற்றும் விதமாக நம் முகவரியையும் சரியாக சொல்கின்றனர். நான் பொதுவாக இந்த இலவசம் அதிர்ஷ்டம் மண்ணாங்கட்டி இதற்கெல்லாம் எளிதில் நான் என்னை விட்டுக் கொடுப்பதில்ல, அதிலும் அவர்களிடம் அன்று சாயந்திரமே வந்து பெற்றுக்கொள்ள வேண்டுமென்று ஒரு பொய்யான முகவரியையும் கொடுத்தார்கள்.

  வோடாபோன் கஷ்டமர் கேர் தொடர்புகொண்டு என் அலைபேசிக்கு தங்களின் நிறுவணத்தில் இருந்து பேசுவதாகவும் அதில் எனக்கு ஒரு இலட்சம் காப்பீட்டு தொகை இன்சூர் செய்து தருவதாகவும் தகவல் வந்தது இது போல ஒரு திட்டம் உங்கள் நிறுவணம் செய்கிறதா எனக் கேட்டால் அதற்கு அவரின் பதில் ஒரு வேளை இருக்கலாம் என்கிறார் இதற்கு பெயர் தான் கஷ்டமர் கேர் சேவையா? சரி இந்த வீணாப்போன கஷ்டமர்கேரில் இருப்பவர்களுக்கு தெரியவில்லை போலும் என நினைத்து அவர்களின் வலைத்தளத்தில் பார்த்தால் இது போல எந்த அறிவிப்பும் இல்லை ஒரு வழியாக மீண்டும் கஷ்டமர் கேர் தொடர்பு கொண்டபோது இப்போது பேசியவர் மிகவும் தெளிவாக அப்படி எதுவுமில்லை இது யாரோ விஷமிகள் செய்யும் வேலை எனவும் இது குறித்தான தகவலை எங்கள் கவணத்துக்கு கொண்டுவந்ததுக்கு நன்றி என்பதாக முடித்துக்கொண்டார்.

  நான் இது பற்றி நண்பர்களிடம் பேசிய போதுதான் உண்மை புரிகிறது இதற்கு முன்னதாகவே எனது தெருவில் நிறைய பேருக்கு இது போல அழைப்புகள் வந்திருக்கின்றன அதில் சிலர் நேரடியாக அவர்கள் கொடுத்த பொய்யான முகவரிக்கும் சென்றிருக்கின்றனர், அப்படிச் சென்ற எனக்கு தெரிந்த ஒருவர் நேரடியாக சென்ற போது அங்கிருந்த நான்கு இளைஞர்கள் இது போல நூற்றுக்கணக்கான நபர்களை வரவழைத்திருந்தாகவும் அவர்களிடம் சில கேள்விகள் கேட்டு இறுதியில் அவருக்கு மட்டும் ஒரு பத்திரம் கொடுத்திருக்கிறார்கள் அதோடு அல்லாமல் நாங்கள் உங்கள் முதலாண்டுக்கான தொகையை அடைத்து விட்டோம் இனி நீங்கள் செய்துகொள்ளுங்கள் என கூறியிருக்கிறார்கள்.

  அந்த அண்ணனும் அதை பொறுமையோடு வாங்கி வந்திருக்கிறார், அவரிடம் பேசிய போதுதான் அவர்கள் பிராடு என்பது தெரிகிறது இனி அந்த பத்திரத்தை எல்ஐசி அலுவலகம் கொண்டு சென்று காண்பித்தால் அவர்கள் என்ன செய்வார்கள் இதன் மீது ஏதாவது நடவடிக்கை எடுப்பார்களா? இது போல் நீங்கள் யாரவது அனுபவப்பட்டிருக்கிறீர்களா? இதில் எனக்கு புரியாதது இதனால் அந்த விஷமிகளுக்கு கிடைக்கும் இலாபம் என்ன? எப்படி நம் முகவரியை சரியாக சொல்கிறார்கள் யாரவது தெரிந்தவர்கள் சொல்லுங்களேன் என்னைப்போல பிறருக்கும் உதவியாக இருக்கும்.

  இது போல அழைப்புகள் உங்களுக்கு வந்தால் முதலில் கஷ்டமர் கேர் தொடர்புகொண்டு கேளுங்கள் அவர்கள் வலைத்தளத்தில் பாருங்கள், மீண்டும் அடுத்த முறை அதே எண்ணில் உங்களை தொடர்புகொள்ள முடியாதவாறு செய்யஇங்குசிறப்பு மென்பொருள் இனைத்திருக்கிறேன் தரவிறக்கி பயன்படுத்தவும்.

  குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

  வாழ்க வளமுடன்  என்றும் அன்புடன்
  ஞானசேகர்
  9 Comments
  Comments

  9 Responses to “வோடாபோனும் விளங்காத கஷ்டமர்கேரும்”

  துளசி கோபால் said...
  September 7, 2010 at 2:25 PM

  இந்த வோடஃபோனில் ஜங்க் மெயில் அப்படியே டன் டன்னா வருதுங்க. இந்த ஊருக்கு வந்து ஒரு செல் நம்பர் வேணுமுன்னு தெரியாத்தனமா கனெக்ஷன் வாங்கிக்கிட்டு இப்ப போனை சதா ஸ்விட்ச் ஆஃப்லேயே போட்டு வச்சுருக்கேன்.

  ஜங் எல்லாம் எஸ் எம் எஸ்ஸா வந்தக்கூடப் பரவாயில்லை...... பெல்லடிச்சுக் கூப்பிட்டு வருதுங்க:(


  இரா கோபி said...
  September 7, 2010 at 11:30 PM

  \\எப்படி நம் முகவரியை சரியாக சொல்கிறார்கள்\\
  எங்கெல்லாம் நாம் நம்முடைய விலாசமும் அலைபேசி எண்ணையும் தருகிறோமோ அங்கே இருந்து இந்தத் தகவல்கள் விற்கப்படுகின்றன. இந்த ஒரு காரணத்திற்காகவே நான் எந்த லக்கி டிரா கூப்பனையும் நிரப்புவதில்லை.

  முடிந்த வரை அலைபேசி எண், விலாசம் இவற்றை யாருக்கும் தராதீர்கள். ஈமெயில் முகவரி கூட.


  smart said...
  September 8, 2010 at 12:11 AM

  //செல்வாக்கை நாம் தேடுவதை விட அது நம்மை தேடி வர வேண்டும்.//

  சரியா சொன்னீங்க! சிலர் ஓட்டு விழவில்லை ஓட்டு விழவில்லை என்று சொல்லிப் பதிவிட்டவர்களுக்குப் புரிந்தால் சரி.


  ஜிஎஸ்ஆர் said...
  September 8, 2010 at 8:59 AM

  @துளசி கோபால்இவங்க தொல்லை தாங்க முடியலங்க சமீபத்தில் மகனிடம் விளையாட மொபைல் கொடுத்திருந்த நேரம் ஏதோ அழைப்பு வரும் நேரம் ஏதோ பட்டனை மகனும் அழுத்தியிருக்கிறான் 90ரூபாய் போயிருக்கிறது என்னவென்று அவர்களிடம் கேட்டாம் நீங்கள் மூன்று முறை காலர் டியூன் மாற்றியிருக்கிறீர்கள் என்கிறார்கள்


  ஜிஎஸ்ஆர் said...
  September 8, 2010 at 9:02 AM

  @இரா கோபி நான் நினைக்கிறேன் வோடாபோன அலுவலகத்தில் இருப்பவர்களும் பொழுது போக்காக இந்த மாதிரியான வேலையை செய்வார்கள் என நினைக்கிறேன் மேலும் நண்பர் சொல்கிற மாதிரி தான் நானும் பொதுவாகவே நான் பிரைவசியை விரும்புகிறவன் மின்னஞ்சல் விஷயத்திலும் அப்படித்தான்


  ஜிஎஸ்ஆர் said...
  September 8, 2010 at 9:05 AM

  @smart நீங்கள் சொன்ன வேலையை நானே செய்திருக்கிறேன் காரணம் நாம் எழுதுவது அவசிய பதிவுகள் (மொக்கை வகையை சார்ந்தது அல்ல) எனவே அது நாம் அதற்கென நேரம் செலவழித்து எழுதும் போது நிறைய நபர்களை சென்றடைய ஓட்டும் அவசியமாகிறது பின்ன அங்கீகாரம் என்பதை யார் தான் விரும்பாமல் இருக்கிறார்கள்


  The Rebel said...
  September 8, 2010 at 10:03 AM

  Register in DND(Donot Disturb Directory)
  http://www.vodafone.in/existingusers/pages/dnd.aspx


  சிகப்பு மனிதன் said...
  November 26, 2010 at 3:26 PM

  .தகவலுக்கு நன்றி !


  ஜிஎஸ்ஆர் said...
  November 26, 2010 at 7:42 PM

  @சிகப்பு மனிதன்தஙகள் வரவிற்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பா


  அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

  சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
  போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
  சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

  Subscribe


  முதன்மை கருத்துரையாளர்கள்

  கடைசி பதிவுகளில் சில

  நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர