Sep 23, 2010

8

விண்டோஸ் இன்ஸ்டால் (இயங்குதளம் நிறுவல் Windows Installation)–பாகம் 4

  • Sep 23, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து : ஒவ்வொரு விவாதத்தின் பின்னும் ஒருவருடைய அறிவீனம் இருக்கிறது.

    வணக்கம் நண்பர்களே இந்த பதிவை படிக்கும் முன் முந்தைய மூன்று பதிவின் விபரத்தையும் பார்த்து விடுங்களேன்.

    விண்டோஸ் இன்ஸ்டால் (இயங்குதளம் நிறுவல் Windows Installation)–பாகம் 1

    விண்டோஸ் இன்ஸ்டால் (இயங்குதளம் நிறுவல் Windows Installation)–பாகம் 2

    விண்டோஸ் இன்ஸ்டால் (இயங்குதளம் நிறுவல் Windows Installation)–பாகம் 3

    நண்பர்களே முந்தைய மூன்று பதிவுகள் உங்களுக்கு கொஞ்சமாவது உபயோகமாக இருந்திருக்குமென்று நம்புகிறேன் இனி உங்கள் கணினி வைரஸ் பிரச்சினை இல்லாமல் கணினி இயங்கும் நிலையில் இருந்தால் மென்பொருளை பயன்படுத்தி உங்கள் கணினியில் இருக்கும் டிரைவர்ஸ் பேக்கப் எடுத்து வைத்துக்கொள்ளலாம் பின்னாளில் உதவியாய் இருக்கும் இதனுள்ளே இரண்டு டிரைவர் பேக்கப் (Driver Backup) மென்பொருள்கள் இனைத்துள்ளேன் தேவைப்படுபவர்கள் தரவிறக்கி பயன்படுத்தவும்.

    சரி நண்பர்களே இப்போது உங்களிடம் விண்டோஸ் பதிவதற்கான குறுந்தகடு மற்றும் தேவையான டிரைவர்ஸ் எல்லாமே உங்கள் கைவசம் இருக்கிறது இனி உங்கள் விண்டோஸ் சிடியின் சீரியல் எண்ணை குறித்து வைத்துக்கொண்டு விண்டோஸ் குறுந்தகடை கணினியின் குறுந்தகடு தட்டில் இட்டு ரீஸ்டார்ட் Restart செய்யுங்கள் இனி தானகவே சிடி பூட் ஆக தொடங்கி சிறிது நேரத்தில் Press any key to boot from Cd…_ என வந்துவிடும் கீழ்ருக்கும் படத்தை பாருங்கள் இது வந்து விட்டால் நீங்கள் வேறு பயாஸ் செட்டிங்குகள் எதுவும் செய்யவேண்டி இருக்காது சில நேரங்களில் பூட்டபிள் சிடியாக இருந்தாலும் பூட் ஆவதில்லை அந்த நேரத்தில் என்ன செய்வதென்று கீழே பார்க்கலாம்.



    சரி மேலே சொன்ன மாதிரி பூட்டபிள் சிடியாக இருந்தும் தானகவே பூட் ஆகவில்லை இனி அதற்காக நீங்கள் பதற தேவையில்லை உங்கள் கணினி பழைய கணினியாக இருந்தால் அதாவது குறைந்தது ஆறேழு வருடங்களுக்கு முந்தயதாக இருப்பின் கணினியை ஸ்டார்ட் (Start) செய்து நான் கீழே கொடுத்திருக்கும் கீகளை விட்டு விட்டு அழுத்துங்கள் உங்களுக்கு பயாஸ் செட்டிங் வந்துவிடும் இதற்கு படங்கள் இல்லாததால் இனைக்க முடியவில்லை இருப்பினும் புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்.

    1. CTRL + ALT + ESC
    2. CTRL + ALT + INSERT
    3. CTRL + ALT + ENTER
    4. CTRL + ALT + S
    5. PAGE UP KEY
    6. PAGE DOWN KEY

    உங்கள் கணினி கொஞ்ச நாட்கள் பழக்கமுள்ளதுதான் என்றால் பின்வரும் கீகளை அழுத்துங்கள் இப்போதுள்ள உள்ள கணினி என்றால் பெரும்பாலும் F2 என்பதாக இருக்கும் இருப்பினும் கீழுள்ள ஏதாவது ஒரு கீ உங்களை பயாஸ் செட்டிங்குக்குள் அழைத்துச்செல்லும்.

    1. F2
    2. DEL
    3. ESC
    4. F10

    இல்லை நீங்கள் மேலே கொடுத்துள்ள கீகளை நான் முயற்சித்தும் பலனில்லை என்பவர்கள் நீங்கள் ஊகிக்கும் கீயை வேறு சில கீகளோடு அழுத்தி பிடித்துக்கொள்ளுங்கள் ஒரு வேளை தானகவே எர்ரர் ஆகி பயாஸ் செட்டப் செல்ல வாய்ப்பு இருக்கிறது அல்லது இனையத்தில் தேடிப்பாருங்கள் அல்லது உங்கள் நண்பர்களிடம் கேட்டு பாருங்கள். அநேகமாக மேலுள்ள கீகளில் ஏதாவது ஒன்று பொருந்தி விடும்.

    மேலும் உங்கள் கவணத்திற்கு படம் உதவி www.whitecanyon.com



    இனி விளக்கபட்த்துடன் பயாஸ் செட்டிங்கில் சிடியிலிருந்து பூட் ஆவதற்கான செட்டிங்கு அமைப்பதை பார்க்கலாம் படங்கள் உதவி pcsupport.about.com

    இனி இப்படி வரும் விண்டோவில் பாருங்கள் கீழே DEL என இருக்கிறது இந்த கணினிக்கு பயாஸ் செட்டிங்கிற்குள் நுழைய DEL கீயை அழுத்தினால் போதும் பயாஸ் செட்டிங்கிற்குள் நுழைந்துவிடலாம்.



    இனி இதே போலவே பயாஸ் செட்டிங்குகள் எல்லா கணினியிலும் இருக்க வேண்டுமென்பதில்லை சில சில சிறிய மாறுதல்கள் இருக்கும் இருந்தாலும் கொஞ்சம் ஆங்கிலம் வாசிக்க தெரிந்தால் போதும் பொறுமையால் படித்தால் கண்டுபிடித்துவிடுவீர்கள்.

    இந்த படம் பயாஸ் செட்டிங்க்ஸ் மெயின் ஏரியா இதில் நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம். ஒரு மெனுவில் இருந்து வேறொரு மெனுவிற்கு செல்ல ஆரோ கீயை பயன்படுத்துங்கள்.



    இனி கீழிறுக்கும் இந்த படத்தை பாருங்கள் அதில் பூட் எனும் தெரிவு இருக்கிறதல்லவா இந்த பகுதியில் தான் நீங்கள் இனி கணினி தொடங்கும் போது சிடியிலிருந்து தொடங்குவதற்கான அமைப்பை செய்யப்போகிறீர்கள்.



    இனி கீழிருக்கும் படத்தை பாருங்கள் நீங்கள் செய்யவேண்டியது CD-ROM என்பதை தெரிவு செய்து முதன்மை பூட் ஏரியாவாக மாற்றப்போகிறோம் அதை செலக்ட் செய்ய எண்டர் கீயை உபயோகியுங்கள்.



    இனி நீங்க்ள் EXIT போய்த்தான் சேமித்து வெளியேற வேண்டுமென்பதில்லை மாறாக F10 என்பதை அழுத்தினால் போதும் நீங்கள் செய்ய மாற்றங்களை சேமித்து கணினி தொடங்கும் போது விண்டோஸ் சிடியிலிருந்தே பூட் ஆக தொடங்கி விடும் இது உங்களுக்கு தெரிந்துகொள்வதற்காக மட்டுமே.



    இனி கீழிருக்கும் படத்தை பாருங்கள் நீங்கள் சரியாக மாற்றிவிட்டீர்கள் என்றால் எந்த தயக்கமும் இல்லாமல் EXIT சென்று EXIT SAVING CHANGES என்பதை எண்டர் கொடுக்கவும்.



    இப்போது உங்களுக்கு இப்படி ஒரு செய்தி வரும் அதில் ஆம் எனபதாக சம்மதம் சொல்ல எண்டர் கீயை தட்டவும் அவ்வளவு தான் இனி உங்கள் கணினி ஸ்டார்ட் (Start) ஆகும் போது இனி சிடி வழியாகவே பூட் ஆக தொடங்கும் ஒவ்வொரு விஷயத்தையும் அவசரப்படாமல் படித்து பார்த்து நிதானமாக செய்யவும். ஒரு வேளை நாம் எங்கேயே பிழை செய்துவிட்டோம் என நினைத்தால் EXIT DISCCARDING CHANGES என்பதை தெரிவு செய்து எண்டர் கொடுத்து வெளியே வந்து பின்னர் மீண்டும் முதலில் இருந்து தொடங்கவும்.



    இப்போது நீங்கள் பயாஸ் செட்டிங்கில் கணினி இயங்க தொடங்கும் போது நீஙகள் சிடி டிரைவில் இட்டுள்ள விண்டோஸ் குறுந்தகடில் இருந்து தொடங்க வேண்டும் என்கிற கட்டளைய சரியாக செயல்படுத்தியிருந்தால் கீழிருக்கும் விண்டோ வந்திருக்கும் இந்த மாதிரி வந்தவுடன் ஏதாவது ஒரு கீயை அழுத்தி விண்டோஸ் இன்ஸ்டால் செய்வதற்கான முதல் கட்டத்துக்குள் நுழையவும்.



    இனி அடுத்த பதிவில் இதன் அடுத்த கட்டமான வண்தட்டு பிரித்தல் முதல் இயங்குதளம் நிறுவும் எல்லா விஷயங்களையும் அடுத்தடுத்த பதிவில் பார்க்கலாம். பதிவில் சந்தேகம் மற்றும் பதிவை பற்றியதான உங்கள் கருத்துக்களை அவசியம் எழுதுங்கள் உங்களின் பதிவை பற்றிய கருத்துக்கள் மேலும் எழுத ஊக்கமளிப்பதாக இருக்கும்.

    விண்டோஸ் இன்ஸ்டால் (இயங்குதளம் நிறுவல் Windows Installation)–பாகம் 5

    விண்டோஸ் இன்ஸ்டால் (இயங்குதளம் நிறுவல் Windows Installation)–பாகம் 6

    விண்டோஸ் இன்ஸ்டால் (இயங்குதளம் நிறுவல் Windows Installation)–பாகம் 7

    விண்டோஸ் இன்ஸ்டால் (இயங்குதளம் நிறுவல்) (Windows Installation)–இறுதி பாகம் 8

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    8 Comments
    Comments

    8 Responses to “விண்டோஸ் இன்ஸ்டால் (இயங்குதளம் நிறுவல் Windows Installation)–பாகம் 4”

    மாணவன் said...
    September 23, 2010 at 12:27 PM

    இதே உற்சாகத்துடன் தொடர்ந்து எழுத வேண்டும் நண்பரே
    உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகளுடன்
    வாழ்க வளமுடன்


    ம.தி.சுதா said...
    September 23, 2010 at 2:33 PM

    இன்றைய வகுப்பிற்கும் வந்தேன் ஐயா..?


    Anonymous said...

    September 23, 2010 at 5:42 PM

    தங்கள் உழைப்பின் அருமை தெரிகிறது தங்கள் எழுத்துக்களில்.. தொடருங்கள் உற்சாகமாய்...!என்றும் உறுதுணையாய் நாங்கள்..

    -lakshu


    ஜிஎஸ்ஆர் said...
    September 25, 2010 at 9:58 AM

    @மாணவன்முடிந்தவரை எழுத முயற்சிப்பேன் நண்பா


    ஜிஎஸ்ஆர் said...
    September 25, 2010 at 9:59 AM

    @ersதகவலுக்கு நன்றி


    ஜிஎஸ்ஆர் said...
    September 25, 2010 at 9:59 AM

    @ம.தி.சுதாசந்தோஷம் மகிழ்ச்சி


    ஜிஎஸ்ஆர் said...
    September 25, 2010 at 9:59 AM

    @lakshu உங்கள் அன்ப்பிற்கு நன்றி நண்பரே


    PrintXpand said...
    May 1, 2018 at 3:46 PM

    Nice post, Thanks for Sharing it with us.
    extension power cords


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர