Sep 26, 2010

10

விண்டோஸ் இன்ஸ்டால் (இயங்குதளம் நிறுவல் Windows Installation)–பாகம் 5

  • Sep 26, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து : அன்பளிப்பு பொருளின் மதிப்பை விட அதை கொடுக்கும் முறையில் தான் உங்கள் மதிப்பு உயரும்.

    வணக்கம் நண்பர்களே இந்த பதிவை படிக்கும் முன் முந்தைய நான்கு பதிவின் விபரத்தையும் பார்த்து விடுங்களேன்.

    விண்டோஸ் இன்ஸ்டால் (இயங்குதளம் நிறுவல் Windows Installation)–பாகம் 1

    விண்டோஸ் இன்ஸ்டால் (இயங்குதளம் நிறுவல் Windows Installation)–பாகம் 2

    விண்டோஸ் இன்ஸ்டால் (இயங்குதளம் நிறுவல் Windows Installation)–பாகம் 3

    விண்டோஸ் இன்ஸ்டால் (இயங்குதளம் நிறுவல் Windows Installation)–பாகம் 4

    நண்பர்களே முந்தைய நான்கு பதிவுகளின் வாயிலாக சில விஷயங்களை தெரிந்துகொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன் ஏற்கனவே சொன்னபடி இப்போது விண்டோஸ் இன்ஸ்டால் செய்வதற்கு முழுமையான தயார் நிலையில் இருக்கிறீர்கள், கணினியில் இனைய இனைப்பு இனைக்கப்பட்டிருந்தால் அவசியம் நீக்கிவிடவும் தேவையில்லாத பிரச்சினைகளை தவிர்க்கலாம் இப்போது நீங்கள் Press any key to boot from Cd…_ என்பதாக வரும் விண்டோவில் ஏதாவது ஒரு கீயை அழுத்தியவுடன் பின்வரும் விண்டோ வரும் இதில் நீங்கள் ஒன்றுமே செய்யவேண்டியதில்லை. படங்கள் உதவி www.petri.co.il



    இனி கீழிருக்கும் படத்தை போல இரு முறை வரும் ஆனால் ஒன்றை மட்டுமே இனைத்திருக்கிறேன் இதையெல்லாம் பெரிதாக கவணத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை மேலும் இந்த விண்டோவில் மூன்றாம் நபர் மென்பொருள்கள் நிறுவ விரும்பினால் F6 அழுத்த சொல்லும் நீங்கள் அதெயெல்லாம் ஒன்றும் செய்யவேண்டாம் விண்டோவை நிறுவியதும் பின்னர் நிறுவிக்கொள்ளலாம்.



    இனி கீழிருக்கும் விண்டோ வரும் இதில் கவணிக்க வேண்டியது நீங்கள் புதிதாக விண்டோ நிறுவ விரும்பினால் இந்த திரை வந்ததும் ஒரு எண்டர் அடிக்கவும் இல்லை கணினியின் இயங்குதளத்த ரிப்பேர் செய்ய நினைத்தால் R என அழுத்தவும் எல்லாமே எழுதி காண்பிக்கும் அதனால் ஒன்றுக்கும் கவலைபட வேண்டியதில்லை ஆனால் புதியதாக நிறுவதுதான் நல்லது ஒருவேளை விண்டோஸ் நிறுவுவதில் இருந்து வெளியேற நினைத்தால் F3 அழுத்தி இன்ஸ்டாலை விட்டு வெளியே வந்துவிடலாம் ஆனால் நம் தேவை இயங்குதளம் நிறுவுவது தானே எனவே ஒரு எண்டர் கொடுத்து உள்ளே செல்லுங்கள்.



    இனி விண்டோஸ் உரிமையாளர்கள் நம்மிடம் அக்ரிமெண்ட் கேட்பார்கள் சாதரணமாக எந்த மென்பொருள் நிறுவினாலும் இது போல வரும் இதை மொத்தமாக படித்து பார்த்து ஓக்கே என்பதற்கு F8 கீயை அழுத்தவும் பொதுவாக யாரும் படித்து பார்ப்பதில்லை என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன் எனவே நீங்கள் படித்து பார்த்தாலும் படித்து பார்க்கவிட்டாலும் இதிலிருந்து அடுத்த கட்டம் செல்ல அவசியம் F8 கீயை அழுத்தவேண்டும்.



    இனி கீழிருக்கும் படத்தை பாருங்கள் Un partitioned Space என்பதாக இருக்கிறது பாருங்கள் இது புதிய கணினிக்கு மட்டுமே பொருந்தும் நம்முடைய கணினி நாம் ஏற்கனவே உபயோகித்து கொண்டிருப்பது என்றால் கணினியில் ஏற்கனவே எத்தனை பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்ததோ அத்தனை பகுதிகளையும் காண்பிக்கும். உங்கள் கணினியில் ஏற்கனவே மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்தால் ஒவ்வொரு டிரைவின் பெயரோடு அதன் அளவையும் காண்பிக்கும் , இதில் ஒரு டிரைவை அழிப்பதற்கு D புதிதாக ஒரு டிரைவை உருவாக்குவதற்கு C என்கிற கீயை பயன்படுத்தவேண்டும், இப்போது உங்கள் கணினியில் C டிரைவ் 80000எம்பி, D டிரைவ் 80000எம்பி என இருக்கிறது என வைத்துக்கொள்ளுங்கள் (அளவுகள் எம்பியில் தான் கொடுக்கவேண்டும்) இப்போது இரண்டு டிரைவ்களாக இருப்பதை மூன்றாக அல்லது நான்காக எப்படி வேண்டுமானாலும் பிரித்து வைக்க நினைக்கிறீர்கள், நீங்கள் செய்யவேண்டியது முதலில் C டிரைவ் செலக்ட் செய்து D (D என்பது DELETE) என்பதை அழுத்தவும் இப்போது C டிரைவ் காணாமல் போயிருக்கும் அதே நேரத்தில் Un partitioned Space 80000 என வந்திருக்கும், அடுத்து D டிரைவ் செலக்ட் செய்து D (D என்பது DELETE) என்பதை அழுத்தவும் இப்போது ஏற்கனவே Un partitioned Space 80000 என இருந்தது D டிரைவும் மறைந்ததும் அதன் மொத்த அளவு 160000 எம்பி என மாறியிருக்கும்.

    இனி மீண்டும் Un partitioned Space 160000 எம்பி என இருப்பதை உங்கள் விருப்பம் போல பிரித்துக்கொள்ள C (C என்பது CREATE) என்பதை அழுத்தவும் அருகில் அதற்கான அளவை கொடுக்கவும் அதாவது C டிரைவ் 40000எம்பி எனக் கொடுத்தால் Un partitioned Space 120000 எம்பி ஆகிவிடும் இவ்வாறாக நீங்கள் எத்தனை பார்ட்டிசியன் செய்ய விரும்புகிறீர்களோ அத்தனையும் செய்துகொள்ளுங்கள் இனி ஏதாவது ஒரு டிரைவை செலக்ட் செய்து ஒரு எண்டர் கொடுத்தல் போதும் நீங்கள் செலக்ட் செய்த டிரைவில் விண்டோஸ் நிறுவலாம்.



    இனி கீழிருப்பது போல ஒரு விண்டோ வரும் அதில் நான்கு விதமான இன்ஸ்டால் செய்வதற்கான முறைகள் இருக்கும் அதில் நீங்கள் முதலாவதாக இருக்கும் Format the partition using NTFS file system என்பதயே தேர்ந்தெடுங்கள் அல்லது அதற்கு பதிலாக மூன்றாவதாக இருக்கும் Format the partition using NTFS file system என்பதையும் தேர்ந்தெடுக்கலாம் இரண்டுமே ஒன்றுதான்,ஒன்று வேகமாக நிறுவல், மற்றொன்று நார்மல் இன்ஸ்டாலேசன் என்பதாகும், மேலிருந்து கீழாக அல்லது கீழிருந்து மேலாக செல்ல ஆரோ கீயை பயன்படுத்தவும். இதில் ஏதாவது ஒன்றை தெரிவுசெய்து ஒரு எண்டர் கொடுத்தால் பழைய தகவல்களை அழித்துவிட்டு புதிதாக இயங்குதளம் நிறுவ தயாராகிவிடும்.



    இனி கீழிருக்கும் இரண்டு படங்களையும் பாருங்கள் ஒன்றன் பின் ஒன்றாக இரு விண்டோக்களும் தோன்றும் முதல்படம் நாம் ஏற்கனவே பிரித்த பார்ட்டிசியன் டிரைவை சரிபார்த்து விண்டோஸ் சிடியின் இயங்குதள பைல்களை காப்பி செய்யத்தொடங்கும், இரண்டாவது படம் காப்பி ஆகி கொண்டிருப்பதை காண்பிப்பதாகும் இதையெல்லாம் நீங்கள் ஒன்றுமே செய்ய வேண்டாம் முதல் படம் போல வந்ததும் தானகவே அடுத்த படத்தில் இருக்கும் விண்டோவிற்கு தானக சென்றுவிடும். அவசரமோ பதட்டமோ இல்லாமல் நிதானமாக செயல்படுங்கள்.





    இனி மேலே சொன்ன பைல் காப்பி செட்டப் முடிந்ததும் கணினி ரீஸ்டார்ட் (Restart) ஆக தொடங்கும். கணினி ரீஸ்டார்ட் (Restart) ஆகும் போது நாம் ஏற்கனவே விண்டோஸ் இன்ஸ்டால் (இயங்குதளம் நிறுவல் Windows Installation)–பாகம் 4 ல் நாம் பூட் சீக்குவன்ஸ் மாற்றுவது பற்றி பார்த்தோம் அதில் பூட் சிடியிலிருந்து தொடங்க வேண்டும் என்பதாக கட்டளையை கொடுத்திருந்தோம் ஆனால் இப்போது கணினியின் இயக்கம் வண்தட்டில் இருந்து பூட் ஆகுமாறு மாற்றிக்கொடுக்கவும் இந்த இடத்தில் தவறு நேர்ந்தால் மீண்டும் தொடக்கத்தில் இருந்து செய்ய வேண்டிவரும் எனவே கவணமாக செய்துவிடுங்கள் அவ்வளவுதான் இனி எல்லாம் எளிமையாக இருக்கும்.

    நான் மேலே குறிப்பிட்ட விஷயங்களை சரியாக செய்துவிட்டால் கீழிருக்கும் விண்டோ வரும் இதுவரை சரியாக செய்துவிட்டீர்களா? கர்வத்தோடு ஒரு சபாஷ் சொல்லிக்கொள்ளுங்கள் இனி வரும் விஷங்கள் எல்லாமே எளிமையாக இருக்கும் இப்போது இயங்குதள நிறுவலில் முக்கியமான கட்டத்தை கடந்துவிட்டீர்கள்.



    இனி வரும் பதிவில் இதன் அடுத்த நிகழ்வுகளை பற்றி பார்க்கலாம் இந்த பதிவு எனக்கே ஒரு கோர்வையாய் இருப்பது போல தெரியவில்லை ஏதாவது ஒரு இடத்தில் தகவல்கள் புரியாமலோ அல்லது தெளிவில்லாமல் இருந்தால் அவசியம் சுட்டிக்காட்டுங்கள் நண்பர்களே நான் எழுதுகிற இந்த பதிவின் வாயிலாக ஓரே ஒரு நபர் தனியாக யாருடைய துனையும் இல்லாமல் இன்ஸ்டால் செய்துவிட்டாலே என் வெற்றியாக கருதுகிறேன், அவசியம் பதிவிற்கான வாக்கும் பதிவை பற்றிய உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.

    விண்டோஸ் இன்ஸ்டால் (இயங்குதளம் நிறுவல் Windows Installation)–பாகம் 6

    விண்டோஸ் இன்ஸ்டால் (இயங்குதளம் நிறுவல் Windows Installation)–பாகம் 7

    விண்டோஸ் இன்ஸ்டால் (இயங்குதளம் நிறுவல்) (Windows Installation)–இறுதி பாகம் 8

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    10 Comments
    Comments

    10 Responses to “விண்டோஸ் இன்ஸ்டால் (இயங்குதளம் நிறுவல் Windows Installation)–பாகம் 5”

    ம.தி.சுதா said...
    September 26, 2010 at 12:16 PM

    வகுப்பிற்கு வந்தேனய்யா....


    Chef.Palani Murugan, said...
    September 26, 2010 at 11:31 PM

    ப‌ய‌னுள்ள‌ த‌க‌வ‌ல் ந‌ண்பா


    மாணவன் said...
    September 27, 2010 at 6:29 AM

    ”நண்பர்களே நான் எழுதுகிற இந்த பதிவின் வாயிலாக ஓரே ஒரு நபர் தனியாக யாருடைய துனையும் இல்லாமல் இன்ஸ்டால் செய்துவிட்டாலே என் வெற்றியாக கருதுகிறேன்”
    நிச்சயமாக இந்த பதிவு பலருக்கு உதவியாய் இருக்கும் நண்பரே....
    தொடர்ந்து எழுதுங்கள் எப்போதும் உங்களோடு இனைந்திருப்போம்...
    பணி மென்மேலும் சிறக்க வேண்டும்
    வாழ்க வளமுடன்


    ஜிஎஸ்ஆர் said...
    September 27, 2010 at 10:34 AM

    @ம.தி.சுதாபதிவை பற்றிய கருத்துரை எழுதியிருந்தால் படிப்பவர்களுக்கும் நம் தளத்தின் மீது நம்பிக்கை ஏற்படும்


    ஜிஎஸ்ஆர் said...
    September 27, 2010 at 10:35 AM

    @Chef.Palani Murugan, LiBa's Restaurantயாருக்காவது இது பயன்பட்டு விடாத என்று தான் ஒவ்வொரு பதிவையும் நான்கு மணி நேரங்களுக்கு மேல் செலவழித்து எழுதுகிறேன் தங்கள் வருகைக்கு நன்றி


    ஜிஎஸ்ஆர் said...
    September 27, 2010 at 10:36 AM

    @மாணவன்உண்மையை சொல்லப்போனால் இதை யாராவது கற்றுக்கொள்கிறார்களா என்பதே சந்தேகமாயிருக்கிறது ஒவ்வொரு பதிவிற்கும் செலவழிக்கும் நேரம் வீணோ என சிந்திக்க வேண்டியிருக்கிறது நண்பா


    ம.தி.சுதா said...
    September 27, 2010 at 10:45 AM

    வணக்கம் சகோதரா தங்களின் ஆக்கங்கள் மிகவும் பிரயோசனமாகத்தான் இருக்கிறது. ஆனால் இவையெல்லாம் எனக்க புதிய விடயங்கள் ஆதனால் தான் என்ன சொல்வதென்று தெரியாமல் வரவை மட்டும் பதிந்து போகிறேன்.. நீங்கள் நம்பாமல் இருக்கலாம்.... நான் கைப்பேசியில் டயல் பண்ணப் பழகி இன்னும் ஒரு வருடம் கூட முடியவில்லை.. என்னசெய்வது இவ்வளவு நாளும் மற்றவருக்காக என் (எம்) வாழக்கை ஒருவட்டத்தில் அமுங்கிவிட்டது... நான் கற்று முடித்ததும் கட்டாயம் மீள வருவேன்...


    ஜிஎஸ்ஆர் said...
    September 28, 2010 at 10:02 AM

    @ம.தி.சுதாபரவாயில்லை நண்பா ஒவ்வொருவரும் சிறிய நுணுக்கங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ஆவலில் தான் எழுதுகிறேன் சில நேரம் அது பொய்த்து விடுகிறது


    G.MUNUSWAMY said...
    October 3, 2010 at 11:51 AM

    Dear Sir,
    I have installed Firefox recently. Since, my Internet Explorer and Google Chrome browsers are crashed. After installing the Firefox the browser is working slowly. Moreover the videos of the Youtube, Google Videos and many others are working. It shows that the Flashplayer is crashed. I uninstalled the flashplayer and re-installed for restoration. But I could not get the video. So, Kindly help me to solve the problem how to watch video and improve the speed of the browse. I am using BSNL -512Kbps. Pl. reply by return e-mail.

    Thanking you,
    Yours,
    G.Munuswamy,
    Chennai Thuraimugam,
    gmunu_2008@rediffmail.com.


    G.MUNUSWAMY said...
    October 3, 2010 at 11:54 AM

    Sir,
    One correction. The videos are not working properly after installation of the Firefox browser. Before that the same firefox was used and the videos worked. Now the problems are videos are not working and browser speed is very slow.

    Thanking you,
    G.Munuswamy.


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர