Sep 22, 2010

8

விண்டோஸ் இன்ஸ்டால் (இயங்குதளம் நிறுவல் Windows Installation)–பாகம் 3

  • Sep 22, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து : வினை விதைத்தவன் வினை அறுப்பான். தினை விதைத்தவன் தினை அறுப்பான்.

    வணக்கம் நண்பர்களே இந்த பதிவை படிக்கும் முன் முந்தைய இரண்டு பதிவின் விபரத்தையும் பார்த்து விடுங்களேன்.

    விண்டோஸ் இன்ஸ்டால் (இயங்குதளம் நிறுவல் Windows Installation)–பாகம் 1

    விண்டோஸ் இன்ஸ்டால் (இயங்குதளம் நிறுவல் Windows Installation)–பாகம் 2

    சில நேரங்களில் ஏதாவது பிரச்சினையால் மேற்சொன்ன விஷயங்களை காணமுடியாத போது சிபியூ மானிட்டர் தரவிறக்கி உங்கள் கணினியில் வழக்கம் போல இன்ஸ்டால் செய்துவிடுங்கள், எல்லாம் முடிந்ததும் இந்த மென்பொருளை இயக்கினால் உங்க்ள் கணினியின் மதர்போர்டு விபரத்தை சொல்லிவிடும் பெரும்பாலு இதன் அவசியம் வராது அப்படி வந்துவிட்டால் ஒரு தீர்வுக்காக தான் இந்த விளக்கமும் இனி கீழிருக்கும் படத்தை பாருங்கள் அதில் மொத்த விபரமும் இருக்கும்.



    சரி நண்பா கணினியே இயங்கவில்லை ஆனால் இயங்குதளத்திற்கு தேவையான டிரைவர்ஸ் அவசியம் அதற்கு முன் எப்படி தெரிந்துகொள்வது என கேட்பவர்கள் உங்கள் சிபியூ-வின் உறையை கழட்டி பாருங்கள் உள்ளே மதர்போர்டின் ஏதாவது ஒரு பாகத்தில் நிச்சியம் அதன் விபரம் கொடுக்கப்பட்டிருக்கும்.



    இப்போது உங்களிடம் இயங்குதளம் நிறுவ தேவையான விண்டோஸ் சிடி, அதற்கான டிரைவர்ஸ் எல்லாம் தயராய் இருக்கிறது இனி உங்கள் கணினியில் எந்தவிதமான முக்கியமான கோப்புகளும் இல்லையென்றால் நேரடியாக பார்மட் அல்லது இன்ஸ்டாலேசன் தொடங்கிவிடலாம். அதுவல்லாமல் கணினியில் முக்கிய கோப்புகள் இருக்குமேயானால் முதலில் அதை எல்லாம் பேக்கப் எடுத்துக்கொள்ளுங்கள், கணினி இயங்காத பட்சத்தில் உங்கள் ஹார்ட்டிரைவை வேறொரு கணினியில் இனைத்து பேக்கப் எடுத்துக்கொள்ளவும், சரி கணினி இயக்க நிலையில் இல்லை அதே நேரத்தில் வேறொரு கணினியும் இல்லை இந்த நேரத்தில் எப்படி கோப்புகளை காப்பி எடுப்பது இதற்கு உங்களுக்கு ஹைரன் உதவும் இனி பேக்கப் எடுத்த கோப்புகளை ஒன்றிரண்டு முறை வைரஸ் சோதனை செய்துவிடவும் சரியான முறையில் சோதனை செய்யாவிட்டால் மீண்டும் உங்கள் கணினியில் வைரஸ் அதன் கைவரிசையை ஆரம்பித்துவிடும் இனி என்ன உங்கள் விருப்பம் போல பார்மட் அல்லது விண்டோஸ் இன்ஸ்டாலேசன் தொடங்கிவிடலாம் அதற்கு முன்னதாக பயாஸ் செட்டிங்குகள் மற்றும் பூட்டிங் தொடக்கம் இவற்றையும் சிறிதாக பார்த்துவிடலாம்?

    என்ன நண்பர்களே இது எல்லாம் உங்களுக்கு தெரியவேண்டும் என்பதற்காக மட்டுமே ஒரு விஷயத்தை படிக்கும் போது அடுத்தடுத்து ஏற்படும் சந்தேகங்களுக்கு தீர்வுகள் பதிவில் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் நானும் பல விஷயங்களையும் இதனுள்ளே திணித்திருக்கிறேன் தெரிந்தவர்கள் மன்னிக்கவும் தெரியாவதவர்கள் கொஞ்சம் பொறுமையாக படிக்கவும் இடையில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேட்கலாம் முடிந்தவரை பதில் அளிக்க முயற்சி செய்கிறேன் காரணம் நானும் உங்களை போல ஒருவன் தான்.
    இனி அடுத்து வரும் பதிவில் பூட் செட்டிங்ஸ் பற்றியும் பூட் சீக்குவன்ஸ் மாற்றுவது பற்றியும் அதன் அவசியம் எப்போது ஏற்படும் எனபது பற்றியும் எழுதுகிறேன் இனி நாம் ஒருவிதம் விண்டோஸ் இன்ஸ்டாலேசன் செய்ய தயாராகிவிட்டோம் அதையும் முடிந்தவரை புரியும் வகையில் எழுத முயற்சி செய்கிறேன்.

    விண்டோஸ் இன்ஸ்டால் (இயங்குதளம் நிறுவல் Windows Installation)–பாகம் 4

    விண்டோஸ் இன்ஸ்டால் (இயங்குதளம் நிறுவல் Windows Installation)–பாகம் 5

    விண்டோஸ் இன்ஸ்டால் (இயங்குதளம் நிறுவல் Windows Installation)–பாகம் 6

    விண்டோஸ் இன்ஸ்டால் (இயங்குதளம் நிறுவல் Windows Installation)–பாகம் 7

    விண்டோஸ் இன்ஸ்டால் (இயங்குதளம் நிறுவல்) (Windows Installation)–இறுதி பாகம் 8

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    8 Comments
    Comments

    8 Responses to “விண்டோஸ் இன்ஸ்டால் (இயங்குதளம் நிறுவல் Windows Installation)–பாகம் 3”

    S.முத்துவேல் said...
    September 22, 2010 at 12:37 PM

    நிறைய கற்று கொடுக்கிறிர்கள்

    வாழ்க வழமுடன்..


    ம.தி.சுதா said...
    September 22, 2010 at 2:10 PM

    தகவலுக்கு நன்றி சகோதரா... எல்லா இடுகையிலும் ஊட்டம் போட நேரம் போதவில்லை மன்னிக்கவும்...


    Admin said...
    September 22, 2010 at 5:05 PM

    புதியவர்களுக்கு பயனுள்ள பதிவு...
    மென்மேலும் தொடரட்டும் உங்கள் பணி


    மாணவன் said...
    September 23, 2010 at 6:26 AM

    அருமை நண்பரே,
    உங்கள் பணி தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்கள்
    இயங்குதளம் நிறுவுதல் நிச்சயமாக பலருக்கும் உதவியாய் இருக்கும்
    முடிந்தவரையில் தமிழிலும் தெளிவாகவும் அனைவரும் புரிந்துகொள்ளும்படியும் உங்களின் பதிவுகள் பாமரனும் கணினி அறிவை தெரிந்துகொள்ள வேண்டும் என்ற உங்களின் நோக்கம் பாராட்டதக்கது நண்பா...
    உங்களின் உழைப்பிற்கு ஒரு சல்யூட்...
    இன்னும் நிறய எதிர்பார்ப்புகளுடன்
    நாங்கள் எப்போதும் உங்களோடு இனைந்திருப்போம்
    நன்றி நண்பா.....


    ஜிஎஸ்ஆர் said...
    September 23, 2010 at 9:15 AM

    @S.முத்துவேல் நண்பா நானெல்லாம் பெருங்கடலில் ஒரு துளி எனக்கு தெரிந்ததை நான் மற்றவர்களுக்கு பயன்படட்டும் என்கிற நோக்கில் எழுதுகிறேன் அவ்வளவே. மதிப்பிற்குறிய நண்பர் பிகேபி http://wiki.pkp.in தளம் போயிருக்கிறீர்களா நேரம் கிடைத்தால் பாருங்கள்


    ஜிஎஸ்ஆர் said...
    September 23, 2010 at 9:18 AM

    @ம.தி.சுதாபரவாயில்லை நண்பா நேரம் கிடைக்கும் போது படித்து பாருங்கள் பதிவு பிடித்திருந்தால் மட்டும் கருத்துரையோ அல்லது வாக்கோ அளியுங்கள், குறைகள் இருந்தால் அவசியம் சுட்டிக்காட்டுங்கள் மேலும் பிழைகள் நடக்காதிருக்க


    ஜிஎஸ்ஆர் said...
    September 23, 2010 at 9:19 AM

    @Farhathதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி


    ஜிஎஸ்ஆர் said...
    September 23, 2010 at 9:21 AM

    @மாணவன் அன்பின் நண்பா முடிந்தவரை அத்யாவசியமும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியதுமான பதிவுகளை இனிமேலும் எழுத முயற்சிக்கிறேன் தங்கள் வருகையோடு கருத்துரைக்கும் நன்றி


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர