Sep 10, 2010
பதிவுலகத்தில் இப்படியும் நடக்குமா?
வணக்கம் நண்பர்களே சில நாட்களுக்கு முன் முகம் அறியா நண்பர் ஒருவர் நம் தளத்தின் பதிவை அப்படியே காப்பி எடுத்து அவர் தளத்தில் பிரசுரித்திருக்கிறார் என பதிவு திருட்டுக்கு எதிராக உங்கள் உதவி தேவை ஒரு பதிவை எழுதியிருந்தேன் அந்த பதிவிற்கு அருமை நண்பர்கள் நீங்களும் ஆதரவாக இருந்தீர்கள் ஆனால் இரு தினங்களுக்கு முன்னர் அந்த நண்பர் நம் தளத்தில் பின்னுட்டத்தில் வழியாக மன்னிப்பு கேட்டிருக்கிறார் நல்ல வேளை நான் அந்த வேகத்தில் அந்த நண்பரே தவறுதலாக எதுவும் எழுதவில்லை அப்படி எழுதியிருந்தால் நான் எழுதிய வார்த்தைகளயோ என்னால் திருப்பி எடுத்திருக்க முடியுமா? ஒன்று மட்டும் நிச்சியமாக உணர்கிறேன் எதையும் ஆத்திரப்பட்டு எழுதினால் ஒரு வேளை இந்த நண்பர் அவர் தவறை உணர்ந்திருப்பாரா? இல்லை தவறைத்தான் ஒத்துக்கொண்டிருப்பாரா? அவர் அவரின் தவறை ஒத்துக் கொண்டிருக்கும் போது நாமும் அதை பெருந்தன்மையோடு மன்னிப்பது தானே மனிதம்.
இதை அவருடைய தளத்திலும் தெரிவித்திருக்கிறார் அவருடைய தள முகவரிகண்ணா 3H.
அவர் நமது தளத்தில் எழுதியதை கீழே படமாக இனைத்திருக்கிறேன் அதனை காண நம் தளத்தின் முகவரிபுரியாத கிறுக்கல்கள் சென்று அவர் எழுதியதை பார்க்கலாம்.
இந்த பதிவை எழுதியதன் நோக்கம் நாம் குற்றப்படுத்திய ஒருவர் அவர் தவறை உணரும் போது நாமும் அதை அங்கீகரிக்க பட வேண்டும் என்பதற்காக மட்டுமே தவறுகள் செய்வது மனித இயல்பு அதை மன்னிக்க தெரிந்தால் தான் சிறந்த மனிதனாக இருக்க முடியும் மறப்போம் மன்னிப்போம்,மனிதனாய் இருப்போம்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
இந்த பதிவை எழுதியது: ஜிஎஸ்ஆர்
நான் தொழில்முறை சார்ந்த எழுத்தாளன் இல்லை, எனக்கு தெரிந்த விஷயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்வதற்க்காவும்,அடிப்படை கணினி சார்ந்த விஷயங்கள் தெரியாதவர்களுக்கு கற்றுக்கொள்ளும் வாய்ப்பாக இந்த தளத்தை எழுதி வருகிறேன். பதிவு பயனுள்ளதாகாவோ, பிடித்தமானதாகவோ இருந்தால் வாக்கும் கருத்துரையும் அளித்துச்செல்லுங்கள் மேலும் பலரை சென்றடையட்டும் அன்புடன் Gsr
16 Responses to “பதிவுலகத்தில் இப்படியும் நடக்குமா?”
-
ம.தி.சுதா
said...
September 10, 2010 at 12:31 PMஆம் சகோதரா எள்ளைப் போட்டாலும் பொறுக்கலாம் சொல்லைப் போட்டால் பொறுக்க முடியாது.... இப்படித்தான் சகோதரர் ரஹீம் ஹசாசி உடைய தளத்தில் நான் யாருக்காவோ போட்ட கருத்து ஒன்று தப்பாக அமைந்துவிட்டது... பின்னர் நானே தவறுக்க மன்னிப்புக் கேட்டுக் கொண்டுவிட்டேன்...
-
சசிகுமார்
said...
September 10, 2010 at 12:54 PMஅருமை
-
முத்து
said...
September 10, 2010 at 9:31 PMசூப்பர்
-
மாணவன்
said...
September 11, 2010 at 6:08 AM”மன்னிப்புக்கேட்பவன் மனிதன்
மன்னிப்பவன் மாமனிதன்” -
ஜிஎஸ்ஆர்
said...
September 11, 2010 at 10:07 AM@ம.தி.சுதாநானும் அப்படித்தான் நண்பரே என் மீது தவறென்றால் மன்னிப்பு கேட்பதற்கு ஒரு போதும் யார் முன்னிலையிலும் தயங்கியதில்லை
-
ஜிஎஸ்ஆர்
said...
September 11, 2010 at 10:09 AM@சசிகுமார் நன்றி
-
ஜிஎஸ்ஆர்
said...
September 11, 2010 at 10:09 AM@முத்துஅன்பின் நண்பருக்கு தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி
-
ஜிஎஸ்ஆர்
said...
September 11, 2010 at 10:12 AM@மாணவன்உண்மை தான் நண்பரே நானும் இந்த வாசகத்தை பயன்படுத்த எண்ணினேன் ஆனால் நான் எழுதாவிட்டாலும் நீங்கள் ஞாபகபடுத்தி விட்டீர்கள் நன்றி நண்பா
-
R. Gopi
said...
September 11, 2010 at 12:23 PMஆஹா சூப்பர். நீங்கள் இருவருமே உயர்ந்து நிற்கிறீர்கள். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
-
Unknown
said...
September 11, 2010 at 6:04 PMவணக்கம் சார். excel-
ல ஒரு cell
ல 100 என்று டைப் செய்தால் மற்றொரு செல்லுல hundred
என்று வார்தைல மாற்ற வேண்டும்.. இதற்கான பார்மலா சொல்லுங்க சார். -
ஜிஎஸ்ஆர்
said...
September 11, 2010 at 6:25 PM@இரா கோபிஇந்த நேரத்தில் சரியாக புரிந்ததோடு அல்லாமல் அதை சந்தோஷமாக நீங்கள் பகிர்ந்ததில் நீங்கள் இந்த இடத்தில் மிகவும் உயர்ந்து இருக்கிறீர்கள்
-
ஜிஎஸ்ஆர்
said...
September 11, 2010 at 6:28 PM@myblogஅன்பின் பிரபு நான் இதை பற்றி ஏற்கனவே மதிப்பிற்குறிய நண்பர் பிகேபி அவர்களின் போரத்தில் எழுதியிருக்கிறேன் தயவுசெய்து கீழிருக்கும் லிங்க்ல் சென்று பார்க்கவும்
http://wiki.pkp.in/forum/t-185670/ -
kannan
said...
September 11, 2010 at 11:54 PMthankyou
-
ஜிஎஸ்ஆர்
said...
September 13, 2010 at 9:06 AM@kannanதங்களின் சரியான புரிதலுக்கு நன்றி
-
Vengatesh TR
said...
November 26, 2010 at 1:17 PM.pkp link'il, download-link error(invalid link) ena, varukirathu !!(4shared)
(excel addon) -
ஜிஎஸ்ஆர்
said...
November 26, 2010 at 7:45 PM@சிகப்பு மனிதன்தங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைக்கிறேன்
அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்
சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>