Sep 8, 2010

14

பாஸ்வேர்ட் இட்ட சிடி டிரைவ் திறக்கலாம்

  • Sep 8, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து: அறிவுறை விளக்கெண்ணெய் போன்றது கொடுப்பது சுலபம், நடப்பது தான் கடினம்.

    வணக்கம் நண்பர்களே நாம் தினந்தோறும் எத்தனையோ விதமான மென்பொருள்களை பார்க்கிறோம் சில நமக்கு பிரயோசன்படுவதாய் இருக்கும் சில நமக்கு எந்த விதத்திலும் உதவும் வகையில் இருக்காது நாம் பார்க்க போகும் இந்த பதிவும் அப்படிப்பட்ட ஒன்று தான் ஒரு வேளை உங்கள் நீண்ட நாள் பிரச்சினைக்கு தீர்வாக இருக்கலாம் அல்லது உபயோகமில்லாத பதிவாகவும் இருக்கலாம்.

    சமீப காலங்களாக பென்டிரைவ் அதிகமான புழக்கத்தில் இருப்பதாலும் அதில் அதன் வழியாக வைரஸ் வர சாத்தியகூறு அதிகம் உள்ளதாலும் சில கணினிகளில் அதை பயன்படுத்த முடியாதவாறு செய்திருப்பார்கள் அதை பற்றி நாம் ஏற்கனவே நம் பதிவின் வழியாக பார்த்திருக்கிறோம் ஒரு வேளை அப்படிப்பட்ட கணினிகளில் எப்படி தகவல்களை காப்பி எடுப்பது என்பது பற்றியும் பார்த்திருக்கிறோம் இதெயெல்லாம் ஆராய்ந்த சில நண்பர்கள் தகவல்களை கையால குறுந்தகடு பயன்படுத்த தொடங்கியிருக்கிறார்கள் இந்த விஷயம் வீடு முதல் அலுவலகங்களில் உள்ள கணினிகளுக்கும் பொருந்தும்.

    நாம் நம்பும் சிலர் கூட நம் கணினியில் தகவலை எடுக்கக் கூடும் எனவே இந்த கணினியில் சிடி டிரைவ் திறக்கவிடாமல் செய்துவிட்டால் ஒருவேளை தகவல்கள் திருடப்படுவதை தடுக்கலாம் நான் இங்கே சில மென்பொருள்களை பரிந்துரை செய்கிறேன் CD DVD Locker அல்லது CD DVD Locker அல்லது CD DVD Locker அல்லது CD DVD Locker
    கணினியில் நிறுவிக்கொண்டு அதில் தேவையான கீ செட்டிங் செய்து பாஸ்வேர்ட் செட் செய்து விடுங்கள். இனி உங்களை அறியாமல் யாரும் உங்கள் டிரைவின் வழியாக தகவல்களை குறுந்தகடில் பதிய முடியாது.

    சரி இப்போது நீங்கள் பாதுக்காப்புக்காக ஏற்படுத்திய பாஸ்வேர்ட் மறந்துவிட்டீர்கள் என்ன செய்வீர்கள் ஒன்றும் பதற வேண்டியதில்ல இங்கு அதற்கான நான்கு விதமான மென்பொருள்கள் இருக்கின்றன தேவைப்படுபவர்கள் CD DVD Ejector அல்லது CD DVD Ejector அல்லது CD DVD Locker அல்லது CD DVD Ejectorஅல்லது CD DVD Ejector தரவிறக்கவும் இந்த நான்கு மென்பொருள்களும் பாஸ்வேர்ட் இட்ட திறக்க முடியாத சிடி, டிவிடி டிரைவ்களை அழகாக திறந்து விடும் இது பற்றி நான் முன்னமே எழுதிய பதிவு தங்களின் மேலதிக தகவலுக்காக படித்து பாருங்கள்.

    என்ன நண்பர்களே இந்த பதிவு உங்களுக்கு உபயோகமானதாக இருக்கிறதா, இருப்பின் இந்த பதிவு மேலும் பலரை சென்றடையும் வகையில் உங்களின் சில நிமிடங்களை இதற்கென செலவழித்து வாக்கும், பதிவை பற்றிய கருத்துரையும் எழுதுங்கள்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    14 Comments
    Comments

    14 Responses to “பாஸ்வேர்ட் இட்ட சிடி டிரைவ் திறக்கலாம்”

    ம.தி.சுதா said...
    September 9, 2010 at 12:17 PM

    தகவலுக்கு நன்றி சகோதரா...


    Meshak said...
    September 9, 2010 at 1:54 PM

    மிகவும் பயனுள்ள தகவல் நண்பா.


    ஜெயந்த் கிருஷ்ணா said...
    September 9, 2010 at 2:54 PM

    மிகவும் பயனுள்ள தகவல்...


    moon said...
    September 9, 2010 at 3:45 PM

    super thank u


    Faauzudeen Madani said...
    September 10, 2010 at 12:49 AM

    உண்மையிலேயே உங்களின் பதிவுகள் மூலம் நான் பயனடைந்தது ஏராளம் நண்பரே.. என்ன கை மாறு செய்வதென்றே புரியவில்லை..என்னைப்போல் ஆங்கிலம் அறியாதவர்களுக்கு உங்களின் பதிவுகள் ஓர் வரப்ரசாதம்.நன்றி ..நன்றி..நன்றி..தொடரட்டும் உங்கள் பணி...மனதார வாழ்த்துகிறேன்.


    ஜிஎஸ்ஆர் said...
    September 11, 2010 at 9:49 AM

    @ம.தி.சுதாஅன்பின் நண்பருக்கு தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி


    ஜிஎஸ்ஆர் said...
    September 11, 2010 at 9:51 AM

    @Meshakதங்களை போன்ற ஒருவருக்கு அதன் பயன் கிடைத்தாலும் போதும் சந்தோஷமே


    ஜிஎஸ்ஆர் said...
    September 11, 2010 at 9:51 AM

    @வெறும்பய நன்றி சகோதரா


    ஜிஎஸ்ஆர் said...
    September 11, 2010 at 9:52 AM

    @nazurஅன்பின் நண்பருக்கு தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி


    ஜிஎஸ்ஆர் said...
    September 11, 2010 at 9:54 AM

    @Fazudeen Madaniஅதெல்லாம் ஒன்றுமில்லை நண்பரே நான் தான் இதில் மிகுந்த சந்தோஷப்படுகிறேன் காரணம் நான் ஒரு சிலருக்காவது என் எழுத்துக்கள் உபயோகப்படுகிறதே


    Vengatesh TR said...
    November 26, 2010 at 1:25 PM

    .நான் வெகு காலாமாக, தேடிகொண்டிருந்த சாப்ட்வேர் !!

    .தங்கள் எழுதானிக்கு நன்றி !!


    Vengatesh TR said...
    November 26, 2010 at 3:20 PM

    .இதே 'ஒரு வரி கருத்து' சமிபத்தில் மறுபடியும், ஆசிரியரே !!


    ஜிஎஸ்ஆர் said...
    November 26, 2010 at 7:43 PM

    @சிகப்பு மனிதன்அதனால் என்ன இப்போது கிடைத்துவிட்டதே இனி சந்தோஷம் தானே


    ஜிஎஸ்ஆர் said...
    November 26, 2010 at 7:44 PM

    @சிகப்பு மனிதன்மன்னிக்க வேண்டும் நண்பரே சில நேரங்களில் இது போல தவறு நேர்ந்துவிடுகிறது சுட்டியமைக்கு நன்றி இனி வரும் காலங்களில் இதுபோன்ற தவறுகள் நடக்கால் இருக்க முயற்சிக்கிறேன்


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர