Sep 19, 2010

13

பூட்டிய பிடிஎப் பைலை திறக்கலாம்

  • Sep 19, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து: தெரியாதவரை எல்லாம் புதுமையே தெரிந்துவிட்டால் எதுவும் எளிமையே.

    வணக்கம் நண்பர்களே சமீப நாட்களாக வலைப்பூவில் எழுதும் ஆர்வம் இருந்தாலும் எழுதுவதற்கான நேரம் ஒதுக்க முடியவில்லை ஆனாலும் எனக்கு எழுதுவதில் இருக்கும் ஆர்வம் குறைவில்லை எல்லாம் உங்களிடம் கிடைக்கும் பாரட்டுகள் தான் என்னை எழுத தூண்டுகின்றன பாரட்டுகளிலும் சுய சொரிதலுக்கும் ஆட்படாதவர்கள் இருக்க முடியாது என்றே நினைக்கிறேன் எல்லாவற்றிலும் ஒரு பிரபல்யத்தை நாம் விரும்புகிறோம் சிலர் இதற்கு மாற்றாக இருக்கலாம் அதற்காக நான் ஒன்றும் விதிவிலக்கல்ல இங்கு நான் முதற்கொண்டு பெரும்பாலவனவர்கள் எனக்கு தெரியும், நான் புத்திசாலி, நான் சிந்தனையாளன், நான் எல்லாம் அறிந்தவன், 50000 ஹிட்ஸ் வாங்கிவிட்டேன், 100 பாலோவர் வந்துவிட்டார், தமிழில் முன்னனி தளமாகிவிட்டேன் எனும் பாங்கில் எழுதுபவர்கள் தான் அதிகம் எப்பொழுதுமே நம் சிந்தனைகளை விட எழுதும் எழுத்துக்களில் ஒரு ஜோடிக்கப்பட்ட வார்த்தை ஜாலங்களே நிறைந்திருக்கும் இதில் நானும் உட்படுவேன்.

    சரி நண்பர்களே நான் இப்படியே எழுதினால் எழுதிக்கொண்டே இருப்பேன் இறுதியில் சொல்ல வந்த விஷயம் விட்டுப்போகும் நான் ஏற்கனவே பிடிஎப்-பில் பாஸ்வேர்ட் இடலாம் என பதிவை எழுதியிருந்தேன் அந்த பதிவின் இறுதியில் ஒரு வேளை உங்களுக்கு அந்த பாஸ்வேர்ட் மறந்து போனாலோ அல்லது இனையத்தில் நீங்கள் தரவிறக்கிய பிடிஎப் பாஸ்வேர்ட் இடப்பட்டிருந்தாலோ அல்லது காப்பி, பிரிண்ட் முடக்கப்பட்டிருந்தாலோ இனி கவலையில்லை. எளிதாக எப்படி திறப்பது என்பதை தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம் இதற்கு பிடிஎப் பாஸ்வேர்ட் ரிமூவர் தரவிறக்குங்கள் இது ஒரு போர்ட்டபிள் மென்பொருள் இதன் அளவு வெறும் 900 கேபி-க்குள் தான், இதை திறந்தவுடன் கீழிருக்கும் படத்தை போல ஒரு விண்டோ திறக்கும் அதில் Open PDF கிளிக்கி திறக்கும் விண்டோவில் நீங்கள் திறக்கவேண்டிய பாஸ்வேர்ட் இட்ட பிடிஎப் பைலை உள்ளிடவும் இனி மீண்டும் ஒரு விண்டோ திறந்து அதை சேமிக்க சொல்லும் அவ்வளவுதான் பாஸ்வேர்டை நீக்கியாகி விட்டது தரவிறக்கி வைத்துக்கொள்ளுங்கள் எப்பொழுதாவது பயன்படும் இதில் சில விஷயங்கள் எனக்கு புரியவில்லை. வேண்டுமானால் அல்லது ஆன்லைன் பிடிஎப் பாஸ்வேர்ட் ரிமூவர் பயன்படுத்தி பாருங்கள் இனைய இனைப்பு அவசியம்



    நான் ஒரு பிடிஎப் பைலை சோதனை செய்ய முயற்சித்து ஒரு பாஸ்வேர்ட் இட்டேன் அதை திறக்க நினைத்த போது திறக்க முடியவில்லை மாறாக நம்மிடமே பாஸ்வேர்ட் கேட்கிறது ஆனால் முதல் முறை மட்டுமே இப்படி கேட்கிறது பின்னர் எதை கொடுத்தாலும் திறந்து விடுகிறது. நான் உங்களுக்கு சொல்ல வருவது என்னவென்றால் இது போல உங்களுக்கும் ஒரு செய்தி வந்தால் நீங்களாகவே ஒரு பிடிஎப் பைலில் பாஸ்வேர்ட் இட்டு பின்னர் இந்த பாஸ்வேர்ட் ரிமூவர் வழியாக திற்க்க முயற்சி செய்யுங்கள் இப்போது உங்களிடம் பாஸ்வேர்ட் கேட்டால் நீங்கள் பிடிஎப்-பை பூட்ட கொடுத்த பாஸ்வேர்ட் கொடுத்து விடுங்கள் பின்னர் எந்த பாஸ்வேர்ட் இட்ட பைலையும் திறந்துவிடும். இது என்ன லாஜிக் என தெரிந்தவர்கள் பின்னுட்டத்தில் பதில் அளித்தால் உதவியாய் இருக்கும்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    13 Comments
    Comments

    13 Responses to “பூட்டிய பிடிஎப் பைலை திறக்கலாம்”

    surivasu said...
    September 19, 2010 at 4:04 PM

    //நீங்கள் வாக்கு அளித்தால் நானும் பதிலுக்கு வாக்கு அளிப்பேன், கருத்துரை எழுதுவேன் என நினைத்து தயவுசெய்து வாக்கோ கருத்துரையோ அளிக்க வேண்டாம்// அடடே!அடடே!அடடே!அடடே!

    //பாரட்டுகளிலும் சுய சொரிதலுக்கும் ஆட்படாதவர்கள் இருக்க முடியாது// அடடா!அடடா!அடடா!அடடா!

    // அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், //
    அடக்கடவுளே! ஒரு கமெண்ட் வாங்க எவ்வளவு கஷ்ட பட வேண்டியிருக்கு.


    R. Gopi said...
    September 19, 2010 at 5:09 PM

    நல்ல தகவல். பகிர்விற்கு நன்றி.


    ஜிஎஸ்ஆர் said...
    September 19, 2010 at 6:20 PM

    @surivasu
    \\//நீங்கள் வாக்கு அளித்தால் நானும் பதிலுக்கு வாக்கு அளிப்பேன், கருத்துரை எழுதுவேன் என நினைத்து தயவுசெய்து வாக்கோ கருத்துரையோ அளிக்க வேண்டாம்// அடடே!அடடே!அடடே!அடடே!

    //பாரட்டுகளிலும் சுய சொரிதலுக்கும் ஆட்படாதவர்கள் இருக்க முடியாது// அடடா!அடடா!அடடா!அடடா!

    // அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், //
    அடக்கடவுளே! ஒரு கமெண்ட் வாங்க எவ்வளவு கஷ்ட பட வேண்டியிருக்கு. \\

    ------
    //நீங்கள் வாக்கு அளித்தால் நானும் பதிலுக்கு வாக்கு அளிப்பேன், கருத்துரை எழுதுவேன் என நினைத்து தயவுசெய்து வாக்கோ கருத்துரையோ அளிக்க வேண்டாம்// அடடே!அடடே!அடடே!அடடே!

    \\\உங்கள் நையாண்டி நக்கலுக்கு என் தளம் சரியாய் இருக்காது இதற்கென்றே நிறைய தளங்கள் இருக்கின்றன அங்கு சென்று உங்கள் பணியை தொடருங்கள்\\\

    //பாரட்டுகளிலும் சுய சொரிதலுக்கும் ஆட்படாதவர்கள் இருக்க முடியாது// அடடா!அடடா!அடடா!அடடா!

    \\\ கருத்துக்களை முன் வைப்பதானால் தெளிவாக எழுதவும் அதை விட்டு விட்டு இது போல சில்லரை தனமான விஷயங்களில் எனக்கு உடன்பாடில்லை\\\


    // அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், //
    அடக்கடவுளே! ஒரு கமெண்ட் வாங்க எவ்வளவு கஷ்ட பட வேண்டியிருக்கு.

    \\\ நல்ல வேளை நீங்கள் ஒரு கருத்துரையை எழுதினீர்கள் இதனால் நான் கட்டிக்கொண்டிருக்கும் வீட்டிற்கான செலவை இதை வைத்து கொஞ்ச நாள் சமாளிக்க முடியும் மேலும் இன்று வங்கியில் அடைக்கவேண்டிய வட்டித்தொகையையும் நீங்கள் எழுதிய கருத்துரையின் வழியாக அடைத்துவிட்டேன் மிகவும் நன்றி நண்பரே\\\

    \\\இதற்கு மேலும் உங்களுக்கு பதில் சொல்ல விருப்பமில்லை இனி மேலும் அநாவசியமான கருத்துக்களை தவிர்த்து விடுங்கள்\\\


    ஜிஎஸ்ஆர் said...
    September 19, 2010 at 6:20 PM

    @Gopi Ramamoorthy நன்றி நண்பா


    ஜானகிராமன் said...
    September 19, 2010 at 10:23 PM

    பயனுள்ள தகவல். என்னிடம் இருக்கும் சில பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்ட் களை மறந்துவிட்டு திண்டாடியிருக்கிறேன். இது பயனுள்ள வகையில் இருக்கும். நன்றி நண்பா.


    மாணவன் said...
    September 20, 2010 at 9:17 AM

    அருமை நண்பரே,
    இந்த மென்பொருளைதான் நான் ரொம்ப நாளா தேடினேன் எதிர்பார்த்த ஒரு பதிவு
    மென்பொருளையும் கொடுத்து தெளிவாகவும் விளக்கி விட்டீர்கள் சூப்பர் நண்பா...
    அப்புறம் அந்த முதல் பின்னூட்டமிட்ட காமெடி பீஸு யாரு நண்பா...
    உங்கள கலாய்ச்சுட்டாராம்
    இப்படியும் மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் இவர்களையெல்லாம் என்ன செய்வது வேறொன்றும் சொல்வதற்கில்லை...
    அதற்கும் நாகரிமான முறையில் பதில் அளித்தீர்கள் நண்பா அதான் GSR-GENTLE
    இதையெல்லாம் நீங்கள் பெரிதாக எடுத்துகொள்ளாதீர்கள்...
    மிகவும் பயனுள்ள பதிவு நன்றி நண்பா...


    surivasu said...
    September 20, 2010 at 1:45 PM

    hello GSR,
    என் கமெண்ட்ஸ் உங்களை காயபடுத்தி இருந்தால் மன்னிக்கவும். உங்கள் தளத்தை முதல் முறையாக பார்வையிடும் போது நான் உணர்ந்ததை கமெண்ட்ஸ் ஆக போட்டேன்.

    ஹலோ மாணவ நண்பா... தேவையில்லாமல் சொம்படிக்க வேண்டாம். உங்கள் வேலையை மட்டும் பார்க்கவும்.


    மாணவன் said...
    September 20, 2010 at 2:16 PM

    ஹலோ surivasu நண்பரே, என் கருத்துரை உங்களை காயபடுத்தி இருந்தால் மன்னிக்கவும் பொதுவாக ஒரு தளத்தை பார்வையிடும்போது பயனுள்ளதாக இருந்தால் நிறைகளை சொல்லி பாராட்டவும் குறைகள் இருப்பின் நாகரிகமான முறையில் சுட்டிகாட்டுவதும் எனது கருத்து ஏன் எல்லோருமே அதைத்தான் விரும்புவார்கள்...
    உங்களது கருத்துரை நீங்கள் எப்படி எடுத்துகொள்கிறீர்களோ ஆனால் மற்றவர்களின் பார்வையில் நண்பர் gsr சொன்னதுபோல் நையாண்டி நக்கலுமாகத்தான் இருக்கும்,வருத்தமாகத்தான் இருக்கும்...

    நான் யாருக்காகவும் எதற்காகவும் சொம்படிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை நண்பரே...
    மீண்டும் சொல்கிறேன் என்னுடைய கருத்துரை உங்கள் மனதை புன்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்...
    நன்றி நண்பா...


    ஜிஎஸ்ஆர் said...
    September 20, 2010 at 7:49 PM

    @ஜானகிராமன்யாருக்காவது பயன்படட்டுமே என்கிற எண்ணத்தில் தான் ஒவ்வொரு பதிவையும் வெளியிடுகிறேன்


    ஜிஎஸ்ஆர் said...
    September 20, 2010 at 7:50 PM

    @மாணவன்பரவாயில்லை நண்பா ஒன்றும் பிரச்சினையில்லை அவருக்கு தெரிந்த நாகரீகம் அது


    ஜிஎஸ்ஆர் said...
    September 20, 2010 at 7:55 PM

    @மாணவன் , @மாணவன் அன்பின் நண்பர்களே உங்களுக்குள் வாக்குவாதம் வேண்டாம் பின்னாளில் யாரவது படித்தால் உங்களை பற்றி என்ன நினைப்பார்கள் வேண்டாம் நண்பர்களே இனிமேல் இது போன்ற தேவையில்லாத விவாதங்கள் வேண்டாம் புரிந்துகொள்வீர்கள் என்றே நம்புகிறேன்


    Vengatesh TR said...
    November 26, 2010 at 1:00 PM

    .http://www.unlock-pdf.com/

    .நான் இந்த தளத்தை பயன்படுத்தி வருகிறேன்...

    .தங்கள் sw-yaum பயன்படுத்த துவங்குகிறேன், ஏன் என்றால், இது offline-laum செயல்படும் அல்லவா !!


    ஜிஎஸ்ஆர் said...
    November 26, 2010 at 7:48 PM

    @சிகப்பு மனிதன்நானும் இதை பார்த்திருக்கிறேன் ஆனால் என் கவணம் இது போன்ற மென்பொருள்கள் மீது தான் காரணம் இனைய வசதி இல்லாதவர்களும் எப்போதவது தரவிற்க்கி வைத்துக்கொண்டால் உதவுமே


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர