Sep 2, 2010

20

அடுத்தவர் மின்னஞ்சல் முகவரி பயன்படுத்தி மின்னஞ்சல் அனுப்பலாம்

  • Sep 2, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து: ஒரு மனிதனின் அழகு அவன் நாவின் இனிமையில் இருக்கிறது.

    வணக்கம் நண்பர்களே சமீபத்தில் சில பதிவுகளை படிக்கும் போது சிலர் அவர்கள் மின்னஞ்சலில் இருந்து மற்றவர்களுக்கு மின்னஞ்சல் செல்வதாக சொல்லியிருந்தார்கள் (என்னிடமல்ல) உடனே அது ஹேக்கர்கள் பணி என நினைத்திருப்பார்கள் என்றே நினைக்கிறேன் சரி அது பற்றி ஒரு பதிவை எழுதுவோமே என எழுதுகிறேன்.

    உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சில தளங்களில் நுழைவதற்கு பயன்படுத்துவீர்கள் அங்கு தான் உங்கள் மின்னஞ்சல் மற்றவர்களுடைய கைகளுக்கு போகிறது அதாவது நீங்கள் மின்னஞ்சல் கொடுத்து நுழைகிற தளங்களில் இருந்து அவர்களே உங்கள் முகவரிகளை விற்க கூடும் இல்லையென்றால் இனையத்தில் பதிந்திருக்கும் மின்னஞ்சல் முகவரிகளை படிப்பதற்கென்றே(விபரம் தெரிந்தவர்கள் அவர்களின் மின்னஞ்சல் முகவரிகளை கொடுக்கும் போது @ என்படை (at) எனவும் . என்பதை (dot) எனவும் எழுதுவதை பார்த்திருப்பீர்கள் ஆனாலும் இது தீர்வல்ல) சில ரோபட்கள் இயங்கும் இவை உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை படித்து தயாரித்த நபர்களுக்கு அனுப்பிவிடும் அதை அவர்கள் முறைகேடாக பலான தளங்கள் இன்ன பிற தளங்கள் தங்கள் விளம்பரத்துக்காக வாங்கி கொண்டு அதன் வழியாக அவர்கள் தள விளம்பரத்தை அனுப்ப ஆரம்பித்து விடுவார்கள்.

    சரி இது போலவே நாமும் நமக்கு தெரிந்த ஒருவரின் மின்னஞ்சல் முகவரியை வைத்து வேறு யாருக்காவது மின்னஞ்சல் அனுப்ப முடியுமா எனக் கேட்டால் அனுப்ப முடியும் என்பதே பதில் இதற்கெனவே சில தளங்கள் இயங்குகின்றன நான் சிலவற்றை இங்கு தருகிறேன்.

    sendanonymoussms

    anonymailer

    send-fake-anonymous-email

    sharpmail

    webwizny

    நான் மேலே ஐந்து தளங்கள் தந்திருக்கிறேன் இன்னும் வேறு நிறைய தளங்கள் இருக்கின்றன இந்த ஐந்தில் நான்கு தளங்கள் நீங்கள் மின்னஞ்சல் அனுப்பும் போது கூடவே அவர்கள் தளத்தின் நோட்டையும் சேர்த்து விடுவார்கள் ஆனால் ஒரு தளம் மட்டும் அவர்களின் விளம்பரத்தையும் இனைப்பதில்லை இந்த தளத்தில் இருந்து மின்னஞ்சல் அனுப்பினால் நிச்சியம் நம்பி விடுவார்கள் ஆனால் எப்படி உண்மையான ஒரு மின்னஞ்சலுக்கும் ஒரு டூப்ளிகேட் மின்னஞ்சலுக்கும் உள்ள வித்யாசத்தை கண்டுபிடிப்பது என்பதை பற்றி கீழே படத்துடன் பார்க்கலாம்.

    இனி நீங்கள் இங்கு சென்று ஏதாவது ஒரு மின்னஞ்சல் அனுப்பி பாருங்கள்.

    webwizny

    இது நான் எனது மின்னஞ்சலில் இருந்து மற்றொரு மின்னஞ்சல் முகவரிக்கு கூகுளின் ஜிமெயில் வழியாக அனுப்பியது.



    இனி உங்கள் ஜிமெயிலில் இருந்து மின்னஞ்சல் அனுப்பினால் கீழிருக்கும் படத்தில் உள்ளது போல Show Details என்பதை கிளிக்கி பாருங்கள் Mailed by signed by என்பதில் gmail.com என்பதாக இருக்கும்.



    இனி நாம் அடுத்தவரின் மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி நாம் வேறொருவருக்கு மின்னஞ்சல் அனுப்பினால் அதுவும் இப்படித்தான் இருக்கும் மேலிருக்கும் மின்னஞ்சலுக்கும் கீழிருக்கும் மின்னஞ்சலுக்கும் ஏதாவது வித்யாசம் இருக்கிறதாவென பாருங்கள்.



    இனி நாம் மற்றவரின் மின்னஞ்சலின் முகவரியை பயன்படுத்தி நாம் வேறு நபர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பினால் அவர்கள் Show Details என்பதை திறந்து பார்க்காதவரை சம்பந்தபட்ட நபர் தான் அனுப்பியிருப்பார் என நினைக்க கூடும், அதன் பின் Show Details திறந்து பாருங்கள் ஜிமெயிலில் இருந்து நேரடியாக அனுப்பிய மின்னஞ்சலுக்கும் நாம் மற்றவர்களின் மின்னஞ்சலை பயன்படுத்தி அனுப்பியதற்கும் வித்யாசம் புரியும்.



    இனிமேல் உங்கள் நண்பரின் பெயரில் ஏதாவது தவறான மின்னஞ்சல் வந்தால் கொஞ்சம் பொறுமையாக பாருங்கள் விபரம் புரியும் அல்லது உங்கள் மின்னஞ்சல் முகவரியில் இருந்து வேறு நண்பர்களுக்கு தவறான மின்னஞ்சல் போகிறது என்றாலும் உடனே பதட்டபடாதீர்கள் உங்கள் வலைத்தளமோ அல்லது மின்னஞ்சலோ மற்றவர்களால் ஹேக் செய்யப்பட்டால் முதல் வேளையாக அவர்கள் செய்வது உங்கள் பாஸ்வேர்ட் செட்டிங்ஸ் மாற்றி விடுவார்கள் ரீட்டிரைவ் மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண் எல்லாவற்றையும் மாற்றுவதுடன் உங்கள் முழுத்தளத்தையும் அழித்து விடுவார்கள் உங்கள் சொந்த தகவல் எல்லாம் திருடப்படும் இவை எதுவும் நடக்காமல் இருந்தால் நிச்சியும் உங்களுக்கு தெரிந்த யாரோ ஒருவர் அல்லது மேலே சொன்ன சில வியாபார தளங்களும் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி விளையாடுகிறார்கள் என புரிந்து கொள்ளுங்கள் உடனடியாக இதற்கெல்லாம் பாஸ்வேர்ட் மாற்றுவதில் பெரிதாக பயன் இல்லை.

    இந்த வழிமுறையை உங்களுக்கு தெரிந்துகொள்ள மட்டுமே தயவுசெய்து நீங்கள் இதனை தவறான வழிக்கு பயன்படுத்தாதீர்கள் குற்றம் செய்ப்வர்கள் நெடு நாட்கள் தப்பிக்க முடியாது.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    20 Comments
    Comments

    20 Responses to “அடுத்தவர் மின்னஞ்சல் முகவரி பயன்படுத்தி மின்னஞ்சல் அனுப்பலாம்”

    Mohamed Faaique said...
    September 2, 2010 at 10:53 AM

    இதை பற்றி ஒரு பதிவு போட்டமைக்கு மிக்க நன்றி....


    தமிழ் உதயம் said...
    September 2, 2010 at 11:17 AM

    நல்ல தகவல். நாம் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. தகவலோடு ஒரு மெசேஜ்ம் சொல்லி விட்டீரகள் "தயவுசெய்து நீங்கள் இதனை தவறான வழிக்கு பயன்படுத்தாதீர்கள் குற்றம் செய்ப்வர்கள் நெடு நாட்கள் தப்பிக்க முடியாது."என்று


    Madurai pandi said...
    September 2, 2010 at 5:41 PM

    தேவையான பதிவு தான் ... நன்றி


    tamil said...
    September 2, 2010 at 11:28 PM

    வணக்கம் நண்பரே


    calmmen said...
    September 3, 2010 at 10:34 AM

    வணக்கம்
    உங்களது தளம் மிக அருமை , அனைவருக்கும் உபயோகமாக இருக்கிறது .எனக்கு ஒரு சந்தேகம் உங்களால் தீர்க்க முடியுமா ? என்னுடைய வலைப்பூவில் தனியாக ஒரு பக்கம் உருவாக்கி உள்ளேன் , ஆனால் அதில் நிறைய இடுகை போட்ட பின்னர் அதை எவ்வாறு தமிளிஷ் போன்ற தளங்களில் சுப்மிட் செய்வது ? வலை பூவில் பேஜ் தனியாக உருவாகுவது பற்றி கொஞ்சம் தெளிவாக சொல்ல முடியுமா ?
    http://karurkirukkan.blogspot.com/


    Butter_cutter said...
    September 3, 2010 at 10:41 AM

    இதை எப்படி முழுவதுமாக தடுப்பது என்று எப்பொழுது எங்களுக்கு தெரிய படுத்துவீர்கள்?


    ஜிஎஸ்ஆர் said...
    September 3, 2010 at 11:51 AM

    @Mohamed Faaique கருத்துக்கு நன்றி நண்பா ஓரளவிற்கு பலான மெயில் பற்றி சந்தேகம் தீர்ந்திருக்குமென்றே நம்புகிறேன்


    ஜிஎஸ்ஆர் said...
    September 3, 2010 at 11:52 AM

    @தமிழ் உதயம் கண்டிப்பாக நண்பா தவறு செய்பவர்கள் நெடு நாட்கள் தப்ப முடியாது என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது நான் சிலவற்றை கண்டிருக்கிறேன், தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே


    ஜிஎஸ்ஆர் said...
    September 3, 2010 at 11:52 AM

    @மதுரை பாண்டிதங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி


    ஜிஎஸ்ஆர் said...
    September 3, 2010 at 11:53 AM

    @P.RAGHUVARMANவருகைக்கு நன்றி நண்பரே


    ஜிஎஸ்ஆர் said...
    September 3, 2010 at 11:59 AM

    @karurkirukkan நண்பரே முடிந்தால் நம் வலைத்தளம் வாயிலாகவே ஒரு மின்னஞ்சல் அனுப்பி விடுங்கள் கூகு உரையாடி வழியாக வருகிறேன்


    ஜிஎஸ்ஆர் said...
    September 3, 2010 at 12:04 PM

    @winstea இதை தடுப்பதற்கு முற்றான வழிமுறை கிடையாது ஆனாலும் சில வழிமுறைகள் இருக்கிறது ஆனால் அது நிரந்தரமல்ல


    Vengatesh TR said...
    November 26, 2010 at 3:59 PM

    .மிகவும் அனுபவம் போல !!

    .இனிமேல் கவனமாக, கவனிக்கிறேன் !!

    .தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி !!


    ஜிஎஸ்ஆர் said...
    November 26, 2010 at 7:35 PM

    @சிகப்பு மனிதன்சோதனை செய்து பார்த்த அனுபவம் இருக்கிறது அவ்வளவே தங்களின் கருத்திற்கு நன்றி


    muthu said...
    December 7, 2010 at 8:13 PM

    really good........like your all posts.


    ஜிஎஸ்ஆர் said...
    December 9, 2010 at 9:06 AM

    @muthuதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி


    Jegan said...
    December 27, 2010 at 8:26 PM

    GSR, தங்கள் இடுகைகள் மிகவும் சிறப்பாக உள்ளன. தொடரட்டும் உங்கள் பணி. தங்கள் மூலம் நான் நிறைய விஷயங்கள் தெரிந்து வைத்துள்ளேன். நண்பர்கள் மத்தியில் வரவேற்ப்பு.. ஓட்டு போட்டாச்சு.


    ஜிஎஸ்ஆர் said...
    December 28, 2010 at 2:20 PM

    @Jegan நல்லது அப்படியே ஆகட்டும் ஓட்டு போடுவது என்பது தங்கள் விருப்பமே பயனுள்ளது என நினைத்தால் உங்களால் முடிந்தால் ஒரு வாக்கு அளிக்கவும்


    ADMIN said...
    December 30, 2010 at 12:27 PM

    நல்ல.. ஆனால் தேவையில்லாத பதிவு...! திருடர்களுக்கு தேவைப்படும்.. நல்லவர்களுக்கு தெரிந்துகொள்வதை விட வேறொன்றும் பயனில்லை திரு ஜிஎஸ்ஆர் அவர்களே..!


    ஜிஎஸ்ஆர் said...
    January 1, 2011 at 6:46 PM

    @தங்கம்பழனிதெரிந்துகொள்வதில் தவறில்லை என நினைக்கிறேன்


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர