Sep 2, 2010

28

வலைப்பதிவரும் வாசகர்களும்.

  • Sep 2, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து: புகழ்ச்சியை விரும்பாத மனிதன் இல்லை, அப்படியொருவன் இருந்தால் அவன் மனிதனே இல்லை.

    வணக்கம் நண்பர்களே நான் சில நாட்களுக்கு முன்பு இந்த வலைத்தளம் மூடப்படுகிறது என பெரிதாய் ஒரு பதிவிட்டு கொஞ்ச நாள் எழுதாமல் இருந்தேன் ஆனாலும் என் பழைய பதிவுகளை அவ்வப்போது இண்டலியில் இனைத்துக்கொண்டு தான் இருந்தேன் சரி எத்தனை நாள் தான் எழுதாமல் இருப்பது என யோசித்து இறுதியில் மீண்டும் இன்று ஒரு பதிவு எழுதுகிறேன். உடனே நீங்கள் என்னை பாரட்டினாலும் சரி அல்லது பரிகசித்தாலும் சரி. நான் பதிவு எழுதமாட்டேன் என எழுதிய பதிவில் சில நபர்கள் கருத்துரை என்கிற பெயரில் அவர்களின் திமிர்த்தனத்தையும் காட்டியிருந்தார்கள் அவர்களுக்கெலாம் நான் பதில் சொல்லிக்கொண்டிருக்க போவதில்லை.

    இந்த பதிவு முழுக்க முழுக்க வலைப்பதிவர்களுக்கும், வலைப்பதிவின் வாசகர்களுக்கும் மட்டுமே நான் எழுதாத காலத்தில் கிடைக்கும் நேரத்தில் சில பல வலைத்தளங்களை படிப்பேன் அதில் நல்ல விஷயங்கள் உள்ள பதிவுகளை கண்டால் நிச்சியம் என் வாக்கும் கருத்துரையும் இருக்கும் அதில் நிச்சியமாக சில பதிவர்களின் பதிவுகளை என்னவென்று தெரியாமல் ஒரு முறை திறந்து பார்த்து நொந்து போயிருக்கிறேன், அதில் என்ன இருக்கிறதென்று வாக்குகளும் கருத்துரைகளும் அளித்தார்கள் என தெரியவில்லை ஆனால் நான் எப்போது இண்டலி வலைத்தளம் திறந்தாலும் முன்னனி இடுகைகளாக இருக்கும் இது ஆரோக்கியமானதா என்றால் நிச்சியம் இல்லை என்பதை தவிர வேற பதில் என்னிடமில்லை.

    இந்த வலைத்தளம் என்பது எல்லோருக்கும் கிடைத்த வாய்ப்பு ஒவ்வொருவரும் அவர்களுக்கு பிடித்த விஷங்களை எழுதுகிறார்கள் அதை நாம் குறை சொல்வதற்கில்லை காரணம் நம்மை படிக்க சொல்லி அவர்கள் கட்டாயபடுத்துவதில்லை, அவர்கள் எழுதுகிறார்கள் அவர்களுக்கென ஒரு ஓட்டுக்கூட்டமும், கருத்துரை அளிக்க ஒரு கூட்டமும் இருக்கிறார்கள் அது பற்றி நமக்கு கவலையில்லை ஆனால் இது போன்ற உதவாக்கரை பதிவுகள் மற்றவர்களை பாதிக்கிறது, இந்த பதிவுகள் படிக்கப்பட்டு வாக்களிக்க படுவதில்லை எல்லாமே கண்ணை மூடிக்கொண்டு செய்யும் வேலைதான் சமீபத்தில் சில வலைத்தளங்களை நான் கவணித்த போது ஒரு அணியாக இருந்து தான் செயல்படுகின்றனர் குறைந்த பட்சம் இருபது நண்பர்களை கூட்டாக சேர்த்தால் போதும் பதிவு இனைத்த சிறிது நேரத்தில் வாக்குகள் விழத்தொடங்கி விடும் இவையெல்லாம் பதிவை படித்து வாக்களிப்பது இல்லை.

    உங்களுக்கு புரியும் வகையில் ஒரு உதாரணத்தை சொல்கிறேன் சில முன்னனி பதிவுகளை நீங்கள் காப்பி எடுத்துக்கொள்ளுங்கள் நீங்களாக சோதனைக்காக ஒரு ஒரு வலைத்தளம் தொடங்கி அதில் முன்னனி பதிவின் பதிவை வெளியிட்டு பாருங்கள் அவர்கள் எழுதிய தலைப்பையே வைத்து விடுங்கள், பதிவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் இண்டலியில் இனைத்து விடுங்கள, உண்மையில் உங்களுக்கு அதிகபட்சம் போனால் சில வாக்குகள் கிடைக்கலாம், யோசித்து பாருங்கள் ஓரே விஷயம் அதில் எந்த மாற்றமுமில்லை ஆனால் நீங்கள் இனைப்பதற்கும் அவர்கள் இனைப்பதற்கும் மிகப்பெரிய வித்யாசம் இருக்கும்.

    இது போன்ற வலைப்பதிவுகள் இண்டலியில் இனைத்தவுடன் அவர்களின் கூட்டு சகாக்கள் பார்ப்பது பதிவை இனைத்தவரின் அவதாரையோ அல்லது இனைத்தவரின் பெயரைத்தான், அது தெரிந்தால் போதும் கண்ணை மூடிக்கொண்டு வாக்கும் ஓ, அருமை, நல்ல சிந்தனை, வெங்காயம் என டெம்ப்ளேட் பின்னுட்டங்கள் இருக்கும் ஆங்கில வலைத்தளங்களில் பார்ந்தால் பதிவை பற்றியதான விவாதம் மட்டுமே கருத்துரையில் நடக்கும் ஆனால் நம் தமிழ் வலைப்பூவை பொருத்தவரை சம்பந்தமே இல்லாமல் கருத்துரை எழுதுவதில் வல்லவர்கள் அவர்களை சொல்லி குற்றமில்லை என்ன செய்வார்கள் எல்லாம் ஒரு ஒப்பந்த கொடுக்கல் வாங்கல் தானே.

    இது போன்ற விஷயங்கள் உதவாக்கரை பதிவுகளில் மட்டுமல்ல ஒட்டு மொத்த பதிவு எழுதுபவர்களுக்கும் பொருந்தும் ஒவ்வொரு வாக்கு அளிக்கும் போதும் ஒவ்வொரு விஷயத்தையும் கற்றுக்கொண்டு அல்லது பயன்படுத்தி பார்த்து தான் வாக்கோ அல்லது கருத்துரையோ அளிக்கிறார்களா? நீங்களே உங்கள் மனதை கேட்டு பாருங்கள் அதற்கான விடை கிடைக்கும். இங்கு எல்லோரும் பெரிய சேவை மனப்பாண்மை உள்ளவர்கள் இல்லை எல்லோரின் சேவை என்கிற பெயரில் அவர்கள் சுய விருப்பம் இருக்கிறது. புகழ்ச்சி இதை பிடிக்காதவர்கள் யாராவது இருக்கிறார்களா? இங்கு எல்லாமே சுய சொரிதல்கள் தான் என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன் மேலும் சேவை என்பதை விட சிலர் இதையே மூலதனமாக்கி சம்பாதிக்கவும் முடியும் அவர்கள் பிரச்சினை இல்லை அவர்களின் நோக்கம் வலைத்தளத்தின் மூலம் சம்பாதிப்பது அதை நாம் தவறு என்பதற்கில்லை ஆனால் இரட்டை வேடம் இடும் நபர்களை என்ன செய்வது?

    இன்னும் சில வகையான மனிதர்கள் அவர்களின் ஆண் பதிவர்களின் பதிவை திரும்பி கூட பார்ப்பதில்லை என சபதம் செய்திருப்பார்கள் போல வாழ்க அவர்கள் சபதம் கொள்கையும். இதை பற்றி ஏற்கனவே சில பதிவர்கள் சுட்டி காட்டியிருக்கிறார்கள் அதனால் இது பற்றி அதிகம் பேச விரும்பவில்லை இவ்வளவு எழுதுறானே ஒருத்தர் பெயரையும் குறிப்பிடவில்லையே என நினைக்க வேண்டாம் உங்களுக்கு தெரியும் யார் அவர்களென்று! ஒரு வேளை இதை நீங்கள் படிக்கும் போது மேலே சொல்ல விஷயங்கள் உங்களுக்கு பொருந்துமேயானல் சந்தேகமே இல்லை அது நீங்கள் தான் தயவுசெய்து இனிமேலாவது மாற்றிக்கொள்ளுங்கள்.

    சில நண்பர்கள் சொல்வார்கள் நல்ல பதிவு என்றால் நிச்சியம் அவர்களாகவே வந்து படிப்பார்கள் மக்கள் தேடி வந்து படிக்க வைக்கவேண்டுமென்றால் கொஞ்சம் பலான விஷயங்களை பதிவின் மேல் தூவினால் மலரை மொய்க்கும் வண்டு போல வந்துவிடுவார்கள் நானும் எழுத வந்த ஆறு மாத காலத்திற்குள் சில நல்ல பதிவர்களை கண்டிருக்கிறேன் அவர்களின் பதிவு எப்போதுமே பிரபல பகுதிக்கு கூட வருவதேயில்லை இங்கு ஒருவரின் வளர்ச்சியை மற்றவர் விரும்புவதில்லை இது மனித இயல்புதானே என்ன செய்வது இங்கு திறமைக்கு மதிப்பில்லை மாறாக இங்கு வேறு நடக்கிறது.

    உங்கள் நண்பராகவே இருந்தாலும் பதிவின் தரத்தை பொருத்து வாக்கோ கருதுரையோ அளியுங்கள் நல்ல விஷயங்களை கானும் போது அதை ஊக்கபடுத்துங்கள் அதற்கான என்ன உங்கள் சொத்தையா எழுதிக் கொடுத்துவிட போகிறீர்கள் வெட்டி பதிவுகளுக்கு நீங்கள் செலவழிக்கும் நேரத்தில் நல்ல பதிவுகளுக்கு ஒரு சில நிமிடங்கள் செலவழித்து வாக்கும் கருத்துரையும் அளியுங்கள் அது அவர்களுக்கு ஊக்கமாய் இருக்கும்.

    இங்கு நீயெல்லாம் என்ன எழுதுறேனு நீங்க நினைப்பிங்க அதுக்கும் நானே பதில் சொல்லிறேன் சும்மா கணினி பதிவுகள் எழுதுறேனு கொஞ்சம் ட்டிரிக்ஸ், டெக்னிக்ஸ், அப்புறம் மென்பொருள் பத்திதான் எழுதுறேன் நீங்கள் நினைப்பது புரிகிறது என்ன பெரிசா மென்பொருள் இனையத்தில் தேடினா கிடைக்க போவுது உண்மைதான், இனையத்தில் கிடைப்பதை தான் எழுதுகிறேன் அதிலும் நான் எப்போது எந்த மென்பொருள் பற்றி எழுதினாலும் கீயையோ அல்லது கிராக் பேட்ச் நிச்சியம் இனைத்திருப்பேன் இது உங்களாலும் முடியும். கூடிய விரைவிலேயே இனையத்தில் எங்கும் கிடைக்காத ஒரு மென்பொருள் நமது சொந்த தயாரிப்பில் வெளி வர இருக்கிறது ஆனால் அது போல மென்பொருள்கள் இனையத்திலும் கிடைக்கும்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    28 Comments
    Comments

    28 Responses to “வலைப்பதிவரும் வாசகர்களும்.”

    Mohamed Faaique said...
    September 2, 2010 at 9:59 AM

    welcome back.....


    Robin said...
    September 2, 2010 at 10:14 AM

    நல்ல பதிவை படிப்பவர்கள் என்று ஒரு சிறு கூட்டம் வலையுலகில் உண்டு. நீங்கள் நல்ல பதிவைத்தான் எழுதுவேன் என்று நினைத்தால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் எழுதிக் கொண்டேயிருங்கள். எண்ணிக்கையைவிட தரமே முக்கியம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ரசனை இருக்கும். இதை எளிதில் மாற்ற இயலாது.


    ஜிஎஸ்ஆர் said...
    September 2, 2010 at 10:36 AM

    @Mohamed Faaique நன்றி நண்பா


    ஜிஎஸ்ஆர் said...
    September 2, 2010 at 10:40 AM

    @Robinஉண்மைதான் நான் எண்ணிக்கையை பற்றி கவலைப்படவில்லை நான் நினைத்தால் தினம் இரு மென்பொருள் சம்பந்தமான பதிவுகள் எழுதுவதற்கு ஒன்றும் பெரிதாய் சிரமமில்லை ஆனால் மென்பொருளாக இருந்தாலும் அத்யாவசிய மென்பொருள் பற்றி மட்டுமே எழுதுவேன் என் பதிவை பாருங்கள் புரியும் வேண்டுமானல் இலட்சகணக்கான மென்பொருள்கள் சந்தையில் இருக்கிறது அவற்றை கண்டுபிடித்து எழுதுவது ஒன்றும் பெரிய கடினமில்லை பின்னர் சமுதாய சிந்தனை பற்றி எழுதாலம் எழுதுவதை விட வாழ்க்கையில் நடக்க வேண்டும் என நினைப்பவன் நான்.


    ப.கந்தசாமி said...
    September 2, 2010 at 5:04 PM

    நல்ல கருத்துக்கள். ஆனாலும் பதிவுலக உள் நுணுக்கங்களை இப்படி வெளிப்படையாக போட்டு உடைக்கலாமா?

    சரிங்க, ஏன் பெரும்பாலானோர் முகமூடி போட்டுக்கொண்டு எழுதுகிறார்கள்? எதற்கு, யாரிடம் பயம்?


    பெருங்காயம் said...
    September 2, 2010 at 5:31 PM

    நண்பா இங்கு எல்லாம் கொடுக்கல் வாங்கல்-தான். இடுகை நல்ல இருக்கோ இல்லையோ அவர் நமது இடுகைக்கு ஓட்டு போட்டார், ரெடிமேட் கமெண்ட் போட்டார் என்பதற்காகவே பலரும் அதையே திருப்பி செய்கிறhர்கள். இதனால் சில மொக்கை இடுகைகள் 70-80 ஓட்டுகள் வாங்கியிருக்கும். இங்கு இதெல்லாம் சகஜமப்பா. ஓட்டு, கமbண்ட் போன்றவைகளை பற்றி கவலைப்படாதீர்கள், உங்கள் இடுகையால் பலர் பயன்பெறுவர்.

    நல்ல இடுகைக்கு என்று சில வாசகர்கள் இருப்பார்கள்.

    உங்களின் ஓய்வு நேரத்தில் மட்டும் இடுகையை எழுதுங்கள், மாறhக வேலையை, குடும்பத்தினருடன் செலவழிக்கும் நேரத்தை குறைத்துக் கொண்டு தயவுசெய்து இங்கு செலவு செய்யாதீர்கள். ஏனென்றhல் இதனால் உங்களுக்கு ஏதும் பெரியதாக வருமானம் கிடையாது. சில நண்பர்கள் கிடைப்பார்கள். அவ்வளவே....
    இது எனது கருத்து. ஏதும் தவறhக இருந்தால் மன்னித்துக்கொள் நண்பா...


    எண்ணங்கள் 13189034291840215795 said...
    September 2, 2010 at 5:53 PM

    மக்கள் தேடி வந்து படிக்க வைக்கவேண்டுமென்றால் கொஞ்சம் பலான விஷயங்களை பதிவின் மேல் தூவினால் மலரை மொய்க்கும் வண்டு போல வந்துவிடுவார்கள்

    _____________

    மஞ்சள் பத்திரிக்கை நடத்தவேண்டியவர்கள் அவர்கள்..

    நீங்க சொன்ன விஷயங்கள் பல உண்மையே..

    இது பதிவுலக அரசியல்...

    ஒண்ணும் செய்ய முடியாது..:((


    curesure Mohamad said...
    September 2, 2010 at 6:08 PM

    ஒட்டு போட்டால் என்ன ?போடாவிட்டால் என்ன ?..எனக்கு ஒட்டு விழுந்ததே இல்லை ..http://ayurvedamaruthuvam.blogspot.com/ எழுதி வருகிறேன் .பாராட்டுக்கள் மனதை மகிழ்விக்கும் ..ஆனால் அது மட்டுமில்லை ..ஒரு ஆத்மார்த்த திருப்தி எந்த ஓட்டையும் எதிர் பார்க்காது ..


    R. Gopi said...
    September 2, 2010 at 7:57 PM

    உங்கள் ஆதங்கம் புரிகிறது. குழுவாக இயங்குதல், ஒரே நபர் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகள் வைத்து வோட்டு போடுவது எல்லாம் நடக்கத்தான் செய்யும். அதையும் மீறி நல்ல பதிவு எழுத வேண்டும்.

    ஒருவர், யார் எழுதிய பதிவைப் படிக்க வேண்டும் என்று அவர்தான் முடிவு செய்ய வேண்டும். நாம் திணிக்க முடியாது.

    உதாரணத்திற்குச் சொல்கிறேன். நீங்கள் நிறைய மென்பொருள் சம்பந்தமான பதிவுகளை எழுதுகிறீர்கள். தனிப்பட்ட முறையில் எனக்கு அதில் அவ்வளவு ஆர்வம் கிடையாது. நான் பெரிதாக அவற்றைப் பயன்படுத்துவதும் இல்லை. எனவே அதைப் பற்றிக் கருத்து சொல்லவோ ஓட்டு போடவோ ஒன்றும் இல்லை. இதற்காக நீங்கள் என்னைக் குறை கூற முடியாது. அதே நேரம் நீங்கள் எழுதுவது நிறைய பேருக்கு நிச்சயம் உபயோகமாக இருக்கும்.

    ஓட்டிற்காகவும் பின்னூட்டத்திற்காகவும் பதிவு எழுதாதீர்கள். உங்கள் பதிவை விரும்பிப் படிக்க நிறைய பேர் இருக்கின்றனர். அவர்களுக்காக எழுதுங்கள்.

    happy blogging!


    Meshak said...
    September 2, 2010 at 8:17 PM

    உதவாக்கரை பதிவுகளுக்கு ஓட்டுபோட ஒரு கூட்டம் இருக்கும்போது.நல்ல பிரயோசனமுள்ள பதிவுகளிடும் உங்களுக்கு என்று நாங்கள் உண்டு,தேவை இல்லாமல் அதிகம் குழப்பிக்கொள்ள வேண்டாம் தலைவா.மீண்டும் வந்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி,தொடர்ந்து எழுதவும்.


    Raja said...
    September 3, 2010 at 1:05 AM

    தூற்றுவோர் தூற்றட்டும் வாழ்த்துவோர் வாழ்த்தட்டும், நாம் நம் வழியில் பயணிப்போம்..


    Thanujan said...
    September 3, 2010 at 6:44 AM

    மீண்டும் வந்ததற்கு வாழ்த்துக்கள்.
    மிக்க மகிழ்ச்சி நண்பரே.


    ஜிஎஸ்ஆர் said...
    September 3, 2010 at 12:16 PM

    @DrPKandaswamyPhD இன்னும் கொஞ்சம் விஷயங்களை விட்டிருக்கிறேன் அதையும் கூட நேரம் கிடைக்கும் போது இன்னொரு பதிவில் வெளிப்படுத்துவேன்.

    சிலர் அப்படித்தான் முகமூடி அணிந்து எழுதுகிறார்கள். இவ்வளவு ஏன் நானும் கூட என்னை முழுவதுமாக வெளிப்படுத்தவில்லை ஒரு போதும் வெளிப்படுத்த மாட்டேன் ஆனால் சிலர் மறைமுக தாக்குதலுக்காக மட்டுமே முகமூடி அணிபவர்கள் இருக்கிறார்கள் ஆனால் எளிதில் அவர்களை அடையாளம் காண முடியாது


    ஜிஎஸ்ஆர் said...
    September 3, 2010 at 12:19 PM

    @விஜயகுமார் நிச்சியமாக நண்பா எனக்கு என் குடும்பம் தான் முக்கியம் அதன் பின் தான் சேவை எல்லாம் அந்த விஷயத்தில் எந்த மாற்றமுமில்லை மேலும் நான் என் வலைத்தளம் வழியாக ஒன்றிரண்டு நண்பர்களொடு உரையாடியிருக்கிறேன் அதிலும் கூட நான் அவர்களின் சுய விபரத்தையோ அல்லது என் சுய விபரத்தையோ பரிமாரிக்கொள்வதில்லை


    ஜிஎஸ்ஆர் said...
    September 3, 2010 at 12:21 PM

    @புன்னகை தேசம். உண்மைதான் நண்பா கேட்டால் அவர்கள் எதார்த்த்மாய் எழுதுகிறார்களாம் இவர்களை எல்லாம் ஒன்றும் செய்யமுடியாது மேலும் நம் மக்களும் ரோடின் ஓரத்தில் ஏதாவது சண்டையில் நடக்கும் பலான வார்த்தைகளை கேட்பதில் ஆர்வமுள்ளவர்கள் தானே!


    ஜிஎஸ்ஆர் said...
    September 3, 2010 at 12:24 PM

    @curesure4u மன்னிக்கவும் தாங்கள் ஓட்டு பட்டியை இனைக்கவில்லை மேலும் எந்த காரணத்துக்காக நீங்கள் கருத்துரையோடு உங்கள் தள முகவரியை கொடுத்திருக்கிறீர்கள் மற்றவர்கள் பயனடைய அல்லது உங்களை வெளிப்படுத்த தானே அதற்கு தான் இந்த ஓட்டு பல வாக்குகள் பெற்று வலைத்திரட்டிகளில் பிரபல பகுதிக்கு வந்தால் மேலும் சிலரை சென்றடையுமே அதற்கு ஓட்டு அவசியப்படுகிறதே


    ஜிஎஸ்ஆர் said...
    September 3, 2010 at 12:28 PM

    @R Gopi நீங்கள் கருத்துரையில் பகிரிந்த விஷயங்களை நானே மேலே சொல்லியிருக்கிறேனே அதேபோல் ஓட்டும் பின்னுட்டமும் என் ஒரு வேளை பசியை கூட தீர்க்க முடியாது என்பது நான் சொல்லி தெரியவேண்டியதில்லை தங்களுக்கு .

    \\ஓட்டிற்காகவும் பின்னூட்டத்திற்காகவும் பதிவு எழுதாதீர்கள். உங்கள் பதிவை விரும்பிப் படிக்க நிறைய பேர் இருக்கின்றனர். அவர்களுக்காக எழுதுங்கள். \\

    நீங்கள் சொல்லியிருப்பது போல விரும்பி படிக்கும் சிலரை பலராக மாற்ற இந்த ஓட்டும் பின்னுட்டமும் அவசியமாகிறதே நாம் ஒரு பதிவை எழுதி 50பேர் பயனடைவதை விட 500பேர் பயனடைந்தால் நல்லது தானே அதற்கு ஓட்டும் பின்னுட்ட்மும் உதவும் தானே இல்லையென்று தங்களால் மறுக்க முடியுமா?


    ஜிஎஸ்ஆர் said...
    September 3, 2010 at 12:31 PM

    @Meshak இல்லை நண்பா நான் விரும்புவதெல்லாம் உங்களுக்கு பதிவு பிடித்தால் அவசியம் வாக்கும் கருத்துரையும் அளியுங்கள் என்று தான் கூறுகிறேன் நல்ல பதிவுகளையும் முன்னுரிமை படுத்துங்கள் என்று தான் வேண்டுகோள் விடுக்கிறேன் இப்போதும் சில நண்பர்கள் மின்னஞ்சல் அனுப்பினார்கள் நாங்கள் உங்கள் வாசகன் என்று ஆனால் அவர்கள் நம் பதிவில் வாக்கோ கருத்துரையோ அளிப்பதில்ல என்ன செய்ய? அவர்கள் வாக்கு அளித்தால் கூடுதலாக பத்து நபர்களுக்கு சென்றடையும் தானே


    ஜிஎஸ்ஆர் said...
    September 3, 2010 at 12:33 PM

    @Raja நான் மற்றவர்கள் சொல்வதையெல்லாம் நான் கருத்தில் எடுத்துக்கொள்வதில்லை நண்பா என் மனதில் எது சரியென படுகிறதோ அதை செய்கிறேன், செய்வேன்


    ஜிஎஸ்ஆர் said...
    September 3, 2010 at 12:34 PM

    @Thanujanதங்கள் வருகைக்கும் , ஆதரவுக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே


    மோகன்ஜி said...
    September 4, 2010 at 12:03 AM

    உங்கள் பதிவு சிந்திக்கத் தூண்டியது. வலையில் யாரும் பணத்திற்காக
    எழுதுவதில்லை.தனி வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களும்,பொறுப்பான பதவியில் இருப்பவர்களும் கூட,தம் கிரீடங்களை எல்லாம் கழற்றி வைத்து விட்டு, ஒரு ஆர்வமுள்ள சிறுவனைப் போல் வலையில் எழுதுகிறார்கள். சின்ன சின்ன அங்கீகாரங்கள் வாழ்க்கையை ரசமுள்ளதாய் ஆக்குகிறது.முத்து போல் நாலு நல்ல உள்ளங்கள் பாராட்டினால் கூட போதுமே? எடுத்த காரியத்தை உளமார செய்வோம்.. நான் சொல்வது சரிதானே?.


    Unknown said...
    September 9, 2010 at 3:40 PM

    தங்களின் கருத்து மிகவும் சரியே !!

    நன்றி


    Writer said...
    October 21, 2010 at 1:31 PM

    புரியாத கிறுக்கல்களும் புரிந்தது.


    ஜிஎஸ்ஆர் said...
    October 21, 2010 at 6:52 PM

    @மோகன்ஜிஉண்மைதான் நண்பரே


    ஜிஎஸ்ஆர் said...
    October 21, 2010 at 6:52 PM

    @THE PEDIATRICIAN நன்றி நண்பரே


    ஜிஎஸ்ஆர் said...
    October 21, 2010 at 6:52 PM

    @Writerபுரிதலுக்கு நன்றி


    Vengatesh TR said...
    November 26, 2010 at 4:14 PM

    .மேலே இருந்து எழுத்துக்களை படித்து வரும் போது, எனக்கு சூப்பர்ஸ்டார் சொன்ன, ஓர் டயலாக் நியாபகம் வருகிறது !

    ..kettavangalukku, aandavan neraiaya koduppaan, aanal kaivittiruvaan

    ..nallavanagalukku, aandavan kaividamaataan...



    (en eluttukalil, thaveridhum irundaal, manikkavum, ena naan koora maataen, yaen endraal, naan yethum, tappaaga koora-villaiyae..)


    ஜிஎஸ்ஆர் said...
    November 26, 2010 at 7:31 PM

    @சிகப்பு மனிதன்உண்மைதான் நீங்கள் எதுவும் தவறாக சொல்லவில்லை நம் பக்கம் தவறிருந்தால் மன்னிப்பு கேட்பதில் தவறில்லை


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர