Aug 6, 2010

10

வசந்த கால நினைவுகள்

  • Aug 6, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து: காதல் வந்தால் அம்மைத் தழும்பும் அதிர்ஷட குறியாகும்.

    நண்பர்களே எனக்கு தெரியும் என் கணினி சார்ந்த பதிவுகளே உங்களிடம் பல முறை வெறுக்கப்பட்டிருக்கிறது இந்த நிலையில் இதற்கு நீங்கள் வாக்கோ கருத்தோ அளிக்க மாட்டீர்கள் என்பதை நான் உணர்ந்தே இருக்கிறேன் இருப்பினும் சில நேரங்களில் எனக்கு தோன்றியதை நான் எழுதுவேன் மன்னிகவும். மேலும் இன்று தான் எதேச்சையாகா சரி இது வரை நம் பதிவுக்கு யார் தான் வாக்களித்திருக்கிறார்கள் என பார்த்த போது என் கணிப்பு தவறவில்லை பெரும்பாலான வாக்குகளை அளித்தவர்கள் வாசக நண்பர்களே உங்களுக்கு நன்றி சொல்லி அந்நியபடுத்த விரும்பவில்லை மாறாக தொடர்ந்து இனைந்திருங்கள் இந்த தளம் உங்கள் தளமாக நினைத்து நீங்கள் விரும்பம் ஆக்கங்களை எழுதி அனுப்பினால் உங்கள் பெயரிலேயே வெளியிட தயாராய் இருக்கிறேன்.

    வசந்த கால நினைவுகள்

    நீ சூடி உதிர்ந்த
    பூவின் ஸ்பரிசம்
    இன்னமும்
    என் நினைவுகளில்

    முதன் முதலில்
    சந்தித்த போது – நீ
    பார்த்த பார்வை
    இன்னமும் நினைவுகளில்

    பள்ளிக்கு செல்லும் போது
    உன் ரெட்டை ஜடை பின்னல்
    இன்னமும் ஆழமாக
    என் நினைவுகளில்

    யாரும் இல்லா வழியில்
    உனக்காய் காத்திருந்த
    நிமிடங்கள்-இன்னமும்
    என் நினைவுகளில்

    நீ தூரமாய் நின்று
    புன்ன்கைத்த நிமிடம்
    இன்னமும் மறக்க முடியாமல்
    என் நினைவுகளில்

    இப்படி எல்லாமே
    நினைவுக்குள் மரிக்காமால்
    நினைவுகளாய் நிகழ்வுகள்
    வந்து வந்து போகின்றன

    ஏனெனில்
    மேகம் தொடும் விண்மீன்களாய்
    பல காலமாய்
    நிதர்சனமாய் வாழ்ந்து விட்டன

    எஞ்சியிருப்பது – நீ
    வாழ்ந்த இதயமும்
    தொலைந்த நிமிடமும்
    இன்னமும் என் நினைவுகளில்


    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    10 Comments
    Comments

    10 Responses to “வசந்த கால நினைவுகள்”

    தமிழார்வன் said...
    August 6, 2010 at 10:06 PM

    நூறு பதிவுகளை கடந்து தொடரும் நண்பர் ஞானசேகருக்கு வாழ்த்துக்கள். மேலும் பல நல்ல பதிவுகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.

    அன்புடன்
    தமிழார்வன்.


    Mohamed Faaique said...
    August 7, 2010 at 8:39 AM

    "நீ தூரமாய் நின்று
    புன்ன்கைத்த நிமிடம்
    இன்னமும் மறக்க முடியாமல்
    என் நினைவுகளில்"
    Superb..


    ஜிஎஸ்ஆர் said...
    August 7, 2010 at 9:13 AM

    @தமிழார்வன்நண்பா நிச்சியம் உங்கள் எதிர்பார்ப்பை வீணடிக்க மாட்டேன் சில நேரங்களில் இடையில் இது போல கிறுக்கல்களும் வரும் அதை மட்டும் தயவுசெய்து நிறுத்த சொல்லாதீர்கள்


    ஜிஎஸ்ஆர் said...
    August 7, 2010 at 9:15 AM

    @Mohamed Faaiqueச்சும்மா இடையில் நம்ம தளத்தில் இது போல கிறுக்கலும் வரும் நண்பா இதுக்கு வரவேற்பு இருந்தா நல்லாயிருக்கும்


    Anonymous said...

    August 8, 2010 at 12:18 PM

    நண்பரே....அருமையான கவிதை..! தொடருங்கள்


    ஜிஎஸ்ஆர் said...
    August 8, 2010 at 1:54 PM

    @lakshu நன்றி நண்பா நிச்சியம் அவ்வபோது எழுதுகிறேன்


    Vengatesh TR said...
    November 26, 2010 at 5:08 PM

    .kavithai thurai yaium, vittu vaikkavillaya, sir !!

    .nice poem la !


    ஜிஎஸ்ஆர் said...
    November 26, 2010 at 7:18 PM

    @சிகப்பு மனிதன்என் மனதிற்கு ஒரு வடிகால் தான் இந்த கவிதை முன்பெல்லாம் அதிகம் எழுதினேன் இப்போதெல்லாம் எழுதுவதற்கான மன நிலை அமைவதில்லை இனி வருங்காலங்களில் அவ்வப்போது வரும்


    rtvenkat said...
    May 4, 2012 at 11:32 PM

    மிக அருமை நண்பரே! எல்லோரின் நினைவுகளையும் தட்டிஎழுப்பிவிட்டீர்கள் என நினைக்கிறேன். வாழ்த்துக்கள்.


    ஜிஎஸ்ஆர் said...
    May 8, 2012 at 4:13 PM

    @rtvenkat புரிதலுக்கு நன்றி நண்பரே


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர