Aug 4, 2010

4

திரைக் காப்பும் கடவுச் சொல்லும் (Screen Saver & Password)

  • Aug 4, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து: நூல்களும் நண்பர்களும் குறைவாக இருந்தாலும் தரமாக இருக்க வேண்டும்.

    வணக்கம் நண்பர்களே இந்த பதிவு நாம் கணினியை பயன்படுத்தாத இடைவெளியில் திரைக் காப்பும் (Screen Saver) அதனுடன் கடவுச்சொல்லும் இடுவது என்பதை பற்றித்தான், இது உங்களுக்கு தெரிந்திருக்கும் ஆனால் நீங்கள் விரும்பும் படத்தையே திரைக் காப்பாக வைத்துக்கொள்ளலாம் அது எப்படி என்பதை பார்க்கலாம்.

    கணினியின் டெஸ்க்டாப்பில் (யாரவது இதன் தமிழ் பதம் கொடுங்களேன்) ஏதாவது ஒரு இடத்தில் உங்கள் சுண்டெலியின் வலது கிளிக்கில் பிராப்பர்ட்டிஸ் (இதன் தமிழ் பதம் பண்புகள் என அகராதிகளில் இருக்கிறது தெரிந்தவர்கள் தெரியப்படுத்தலாம்) திறக்கவும் அதில் ஸ்கீர்ன் சேவர் டேப் திறந்து (முடிந்த வரை தமிழில் எழுத விருப்பம் ஆனால் சிலருக்கு இது புரியாமல் போக வாய்ப்பிருக்கிறது சில இடங்களில் தவிர்க்க முடியவில்லை மன்னிக்கவும்) My Picture Screen saver என்பதை தெரிவு செய்யவும் வழக்கமாக இது உங்கள் D வட்டில் My Picture என்னும் போல்டருக்குள் இருக்கும் போட்டோக்களை எடுத்துக்கொண்டு செயல்படும் நீங்கள் வேண்டுமானால் Settings திறப்பதன் மூலம் வேறு இடங்களில் இருக்கும் படங்களை தெரிவு செய்யலாம் அதற்கான படம் இனைத்திருக்கிறேன் பாருங்கள் புரியும்.

    செட்டிங்ஸ்ல் ஒரு படத்திருக்கும் அடுத்த படம் திரையில் தோன்றுவதற்கான கால அளவை மாற்றிக்கொள்ளவும் விருப்பம் இருந்தால் மட்டும் மேலும் படத்தின் அளவு மாற்றலாம் மேலும் சில செட்டிங்குகள் விரும்பினால் மாற்றலாம்.





    உங்கள் கணினியில் நீங்கள் கடவுச்சொல் கொடுத்திருந்தால் On Resume, Password Protect என்பதை தெரிவு செய்யலாம் மேலும் கீழிருக்கும் Power பட்டனை திறப்பதன் மூலம் சில மாற்றங்கள் மேற்கொள்ளலாம். மேலும் Appearance டேப் திறந்து அதன் வழியாக உங்கள் டெஸ்க்டாப்பில் இருக்கும் போல்டர் அளவு கூட்டி குறைக்கலாம் எழுத்தின் மாதிரியை மாற்றலாம் அளவை பெரிதாக்கலாம் இப்படி இன்னும் எத்தனையோ விஷயங்கள் இதனுள் அடங்கி கிடக்கின்றன நீங்களாகவே முயற்சி செய்து பாருங்கள் வேண்டுமானல் இதையே சில பதிவுகளாக இடும் அளவிற்கு இதற்குள் விஷயம் இருக்கிறது

    வேகம் குறைந்த கணினிகளில் ஸ்கிரீன்சேவர் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது சில நேரங்களில் கணினி உறை நிலைக்கு சென்று விடும் வாய்ப்பு இருக்கிறது.

    மன்னிக்கவும் நண்பர்களே விரிவாக எழுத முடியவில்லை இதில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் பின்னுட்டத்தில் கேள்வியாக பதியவும் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்களை போல மற்றவர்களும் பயணடைய பதிவிற்கு வாக்கும் கருத்துரையும் அளிப்பதன் மூலம் மேலும் பலரை சென்றடைய உதவலாமே?

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    4 Comments
    Comments

    4 Responses to “திரைக் காப்பும் கடவுச் சொல்லும் (Screen Saver & Password)”

    ஜெயந்த் கிருஷ்ணா said...
    August 4, 2010 at 10:30 AM

    நல்ல தகவல் .. பகிர்வுக்கு நன்றி..


    ஜிஎஸ்ஆர் said...
    August 5, 2010 at 8:56 AM

    @வெறும்பயநன்றி நண்பரே


    Vengatesh TR said...
    November 26, 2010 at 5:39 PM

    .உங்கள் திறமைக்கு இதுவே எடுத்துகாட்டு !

    .சிறிய தகவலையும், எல்லோருக்கும் புரியும் வகையில் எழுதுவது !!

    .பகிர்ந்தமைக்கு நன்றி, !


    ஜிஎஸ்ஆர் said...
    November 26, 2010 at 9:17 PM

    @சிகப்பு மனிதன்திறமையெல்லம் நிச்சியமாய் ஒன்றுமில்லை எங்கே படித்ததை அனுபவத்தில் கற்றதை பகிர்ந்துகொள்கிறேன் அவ்வளவு தான்


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர