Sep 4, 2010

9

வேர்ட் கிளிப்போர்டில் இரண்டு மெமரி

  • Sep 4, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து: ஒருவனை எப்படி அளவிட வேண்டும் என்று தெரிந்துகொண்டால் ஒவ்வொரு மனிதனும் ஒரு புத்தகமே.

    வணக்கம் நண்பர்களே இது உங்களுக்கு அதிகம் உபயோகப்படாது ஆனால் தெரிந்துகொண்டால் எப்போதாவது உங்களுக்கு உபயோகப்படுமே என்பதற்காக இந்த பதிவு. நாம் அநேகம் பேர் மைக்ரோசாப்ட் வேர்ட் பைல் உபயோகித்திருப்போம் அதில் நாம் ஒரு வரியையோ அல்லது ஒரு எழுத்தையோ, வார்த்தையையோ காப்பி எடுத்தால் நாம் கடைசியாக காப்பி எடுத்தவை மட்டுமே கிளிப்பேர்ட் மெமரியில் இருக்கும் அதை மட்டுமே நாம் எங்காவது பேஸ்ட் செய்யவும் முடியும் அதாவது புதியவை காப்பி எடுக்கும் போது தானக பழையவை அழிக்கப்பட்டுவிடும், நாம் இங்கேதான் மைக்ரோசாப்ட் வேர்டில் நாம் அதிகம் உப்யோகம் செய்யாத ஒரு விஷயத்தை பார்க்க போகிறோம்.

    ஒரே நேரத்தில் இரண்டு தகவல்களை கிளிப்பேர்ட் மெமரியில் வைத்து நமக்கு தேவைப்படும் இடத்தில் இரண்டு விதமான தகவல்களையும் பேஸ்ட் செய்யப்போகிறோம்.

    நீங்கள் ஒரு ஐம்பது பக்கம் அளவுள்ள ஒரு வேர்ட் பைல் தயாரித்திருக்கிறீர்கள் என வைத்துக்கொள்ளுவோம் அதில் கடைசி பக்கதிற்கு தேவையான இரண்டு விதமான தகவல்கள் மூன்றாவது பக்கம் மற்றும் பத்தாவது பக்கத்தில் இருக்கிறது இப்போது நீங்கள் மாற்றம் செய்ய விரும்பும் கடைசி பக்கத்தில் பத்தாவது பக்கத்தில் இருக்கும் ஒரு வரி முதலாகவதாகவும் மூன்றாவது பக்கம் இருக்கும் ஒரு வரி இரண்டாதாகவும் பேஸ்ட் செய்ய நினைக்கிறீர்கள், என்ன எப்போதும் செய்வதுதானே என்று நினைக்கிறீர்களா? நீங்கள் முதலில் இரண்டாவதாக பேஸ்ட் செய்ய விரும்புவதை முதலில் Ctrl + C வழியாக காப்பி எடுத்துக்கொள்ளவும் அடுத்து முதலாவதாக பேஸ்ட் செய்யவிரும்பும் வாசகத்தை தேர்வு செய்து Shift + F2 அழுத்தவும், இப்போது இரண்டு வெவ்வேறு விதமான தகவல்கள் கணினியின் மெமரியில் இருக்கும் இப்போது முதலில் பேஸ்ட் செய்ய வேண்டிய இடத்தில் மவுஸ் கர்சரை வைத்து எண்டர் அடிக்கவும் என்ன நண்பர்களே பேஸ்ட் ஆகிவிட்டதா இனி வழக்கம் போல Ctrl + V என அழுத்தி இரண்டாவதையும் பேஸ்ட் செய்யவும்.

    என்ன நண்பர்களே இந்த தகவல் உங்களுக்கு உபயோகமானதாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் சென்றடையட்டும்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    9 Comments
    Comments

    9 Responses to “வேர்ட் கிளிப்போர்டில் இரண்டு மெமரி”

    RAJESH KUMAR said...
    May 6, 2010 at 3:46 PM

    Nice post, really interesting & useful. please keep on continue....


    ஜிஎஸ்ஆர் said...
    September 4, 2010 at 10:04 AM

    @RAJESH KUMARதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பா


    ம.தி.சுதா said...
    September 4, 2010 at 11:54 AM

    //...வணக்கம் நண்பர்களே இது உங்களுக்கு அதிகம் உபயோகப்படாது ஆனால் தெரிந்துகொண்டால் எப்போதாவது உங்களுக்கு உபயோகப்படுமே என்பதற்காக இந்த பதிவு...//
    உங்களுக்கு இப்படி யார் சொன்னது சகோதரா.. நான் இதைப்பற்றி எத்தனை இடத்தில் தேடினேன் தெரியுமா...


    ஜிஎஸ்ஆர் said...
    September 5, 2010 at 9:08 AM

    @ம.தி.சுதா நன்றி சகோதரா


    ஜிஎஸ்ஆர் said...
    September 5, 2010 at 9:09 AM

    @josteepanதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பா


    எஸ்.கே said...
    September 6, 2010 at 3:57 AM

    இந்த கிளிப் போர்ட் விஷயம் தெரிஞ்சாலும் அப்போதைக்கு ஞாபகமே வர மாட்டேன்கிறது!


    ஜிஎஸ்ஆர் said...
    September 6, 2010 at 9:09 AM

    @எஸ்.கேஒரு விஷயத்தை எப்போதும் பயன்படுத்துபவர்களுக்கு எளிதில் மறக்காது எப்போதாவது ஒரு முறை பயன்படுத்தும் போது மீண்டும் அதை ஞாபகத்துக்கு கொண்டுவருவது கொஞ்சம் கடிணம் தான் நான் எனக்கு தெரியாத விஷங்களை கவணிக்கும் போது அப்பொழுதே அதை தனியாக சேமித்து விடுவேன்


    Vengatesh TR said...
    November 26, 2010 at 3:39 PM

    .shortcut il, seithu vittirgal, super !!

    .naan, suthi-valiathu seivaen:

    1.engae paste seiya vendumo, angae cursor nakarthal
    2.clipboard box'ku sendru open seithaal, naam ithuvarai ethanai text-kalai copy senjirundaalum, anaithum angae irukkum,
    3.ethu vendumo, athai click seithal, cursor irukkum idathil, text-paste aagividum !!!

    (not only last 2 selected,we can recover more texts)



    (tamil'il vilakka avvalavaaga, varavillai, thaverundum irundaal, mannikkavum)..


    ஜிஎஸ்ஆர் said...
    November 26, 2010 at 7:37 PM

    @சிகப்பு மனிதன் நீங்கள் தந்திருக்கும் தகவல் எனக்கு புதிது நானும் முயற்சிக்கிறேன்


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர