Sep 3, 2010

24

உடை குறைப்பது தான் நாகரீகமா?

  • Sep 3, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து: அளவோடு பேசுங்கள் அதையும் ஆழ்ந்து யோசித்து பேசுங்கள்.

    இப்போதெல்லாம் அடிக்கடி யோசிப்பது நாம் எந்த காலக்கட்டத்தில் இருக்கிறோம் எனபதை பற்றித்தான், மனிதன் தோன்றிய காலத்தில் நிர்வாணமாகத்தான் இருந்தான் பின்னர் அவனாகவே நாகரீகம் எனும் பாதையில் சுயமாக மாறத்தொடங்கினான் வெற்றுடம்புடன் திரிந்த மனிதன் தன் அந்தரங்களை மறைக்க இலை தழைகளை கொண்டு மறைக்க ஆரம்பித்தான் அந்தரங்கள் மறைக்கப்படாமல் வெளிவருவதை அன்றே விரும்பவில்லை என்றே தோன்றுகிறது. பொதுவாகவே ஆணுக்கும் பெண்ணுக்கும் உடலியல் அமைப்பு வெவ்வேறாக இருந்தாலும் பெண் என்கிற விஷயத்தில் ஆண் விருப்பம் கொண்டுள்ளான் என்பது இயற்கையாகவே இருக்கிறது அது நமக்கும் தெரியும்.

    முன்பெல்லாம் நம் முன்னோர்கள் எப்படி இருந்தார்கள் என பார்த்தோமேயானால் ஆண்கள் கோவணமும், வேட்டியுமாக இருந்திருக்கின்றனர், பெண்கள் பதினாறு முழம் சேலை கட்டியிருந்திருக்கிறார்கள் இந்த காலகட்டத்தில் இருவருமே மேலாடை அணிந்திருக்கவில்லை பின்னர் மீண்டும் ஒரு நாகரீகத்தின் வளர்ச்சியில் மேலாடையும் போடத்தொடங்கினர் பின்னர் நாகரீக வளர்ச்சியில் வீடு வாகனம் இன்னும் பல இத்யாதிகள் எல்லாம் மாறின, இப்படி போய்க்கொண்டிருந்த நாகரீக மாற்றத்தில் மீண்டும் சைக்கிளிங் போல பழைய விஷங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க தொடங்கினோம்.

    இயற்கைக்கு இசைவாய் வாழ்கிறோம் என்கிற பெயரில் வீடுகள் இயற்கையை ஒத்ததாக அமைத்தனர் மீண்டும் பழைய ஒரு நிலைக்கு செல்ல விரும்பினர் இது வரவேற்கபட வேண்டிய ஒன்றுதான் ஆனால் இதில் ஒரு வில்லங்கமான விஷயத்தையும் சேர்த்துகொள்ள வேண்டிய அவசியமில்லையே என்கிற ஆதங்கத்தை தவிர்க்க முடியவில்லை, உடை நாகரீகம் இதில் பழைய நிலைக்கு நேரடியாக செல்லவிட்டாலும் மறைமுகமாக அந்த நிலைக்கு சென்று விடுவோமோ என்கிற அச்சம் வருகிறது.

    பொதுவாகவே ஆண்களுக்கு அதிக உடை விஷயங்கள் இல்லை வேஷ்டி, பேண்ட், கைலி, சட்டை என ஒரு சிறிய வட்டத்துக்குள் அடக்கிவிடலாம் ஆனால் பெண்களை பொருத்தவரை எத்தனை உடைகள் எத்தனை நாகரீங்கள் இன்னும் ஏன் இப்போதெல்லாம் பெண்களும் ஆண்கள் அணியும் பேண்ட் டீசர்ட் என அணிய தொடங்கிவிட்டார்கள், சரி அணிந்தால் என்ன இதில் என்ன தவறு இருக்கிறது? சரி ஆண்கள் வெறும் வேஷ்டியோடு இருந்தாலும் அது மற்றவர்களை அதிகம் பாதிப்பதில்லை இன்னும் நேரடியாக சொல்லப்போனால் காமத்தை தோற்றுவிப்பதில்லை ஆனால் பெண்கள் அப்படியில்லையே அவர்களின் சிறு கவனக்குறைவான உடையலங்காராம் கூட பார்ப்பவர்களை முகம் சுழிக்க செய்துவிடுமே அதோடு ஒரு தவறான கண்ணோட்டத்தையும் உருவாக்கும் என்பது தெரியாதா?

    முன்பெல்லாம் பெண்கள் சுடிதார் அணிந்தார்கள் அதோடு சால்வையும் போர்த்திகொண்டார்கள் அப்போது நிச்சியமாக அது நல்ல உடையாகத்தான் இருந்தது ஆனால் அதே சுடிதார் இப்போது வேறொரு வடிவம் பெற்று இருக்கிறது இப்போது உள்ள சுடிதார் எப்படியிருக்கும் என்பதற்கு படம் இனைக்க விரும்பவில்லை காரணம் உங்களுக்கே தெரியும் உடல் அவையங்களை அச்சு பிசகாமல் அளவெடுத்து காண்பிக்கும் உடைதான் நாகரீகமா? முன்பெல்லாம் உடல் அவயங்களை மறைக்கதானே ஆடை அணிந்தோம் ஆனால் இப்போது எடுத்துக்காட்டும் வகையில் ஆடை தேவைதானா? மேலும் இருக்கமான டீசர்ட் மற்றும் பேண்ட் இதை பற்றியும் அதிகம் சொல்லவோ அதற்காக போட்டோவோ இனைக்கவேண்டியதில்லை எல்லாமே உங்களுக்கு தெரியும் ஆனாலும் மாறுவதில்லை யாருக்காக இந்த ஆடை அலங்கரிப்பு?

    சமீபத்திய ஆராய்ச்சியில் பெண்கள் தான் ஆண்களின் தவறான கண்ணோட்டத்துக்கு வித்திடுவதாக வெளியிட்டு இருந்தார்கள் உடனே கோபப்படவேண்டாம் ஆராய்ச்சிக்காக பங்கெடுத்தவர்கள் எல்லோருமே பெண்கள்தான், மேலும் இப்போதெல்லம் நாம் நம்முடைய தனிமையை இழந்துகொண்டிருக்கிறோம் நாம் ரோட்டில் நடந்து சென்றாலும் நம்மையும் அறியாமல் மொபைல் போனில் உள்ள கேமரா கொண்டு படம் எடுத்து விடுகிறார்கள் நாம் நினைப்போம் நம்மை யார் போட்டோ எடுக்க போகிறார்கள் என நினைத்தால் நாம்தான் ஏமாந்துகொண்டிருக்கிறோம் இப்போதெல்லாம் மார்பிங் வழியாக போட்டோவையே மாற்றிவிடுகிறார்கள் இதனால் எவ்வளவு பாதிப்பு? இருந்தாலும் சர்வ சாதரணமாக பேஸ்புக் மற்றும் ஆர்குட்டில் எந்த தயக்கமும் இல்லாமல் போட்டோவை வெளியிடுவது ஆச்சரியமளிக்கிறது சரி அவர்கள் என்ன படிக்காதவர்களா என்றால் நன்கு படித்தவர்க்ள் இதன் விளைவுகளை யோசிக்கமாட்டர்களா? கொஞ்சம் பொறுமையாய் கூகுளில் தேடிப்பார்த்தால் நம் போட்டோ கூட கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

    பழைய காலத்து பெண்கள் போல முழுவதும் மூடி சுற்றாவிட்டாலும் குறைந்தபட்சம் சேலையாவது அணியலாமே, சுடிதார் அணியும்போது கொஞ்சம் இறுக்கமில்லாமல் அணிந்தால் உங்கள் உடலை அப்படியே எடுத்துக்காட்டாதே? உடலை மறைக்க தானே உடை? நீங்கள் அழகாக சேலை உடுத்தி சென்று பாருங்கள் உங்களை பார்ப்பவரின் கண்ணோட்டம் நல்லவிதமாகவே இருக்கும் அதே வேளையில் கொஞ்சம் நாகரீகம் என்கிற பெயரில் மேலே சொன்ன உடைகளை அணிந்து செல்லுங்கள் உங்களை பார்ப்பவர்களின் கண்களில் வித்யாசம் தெரிவதை உங்களால் உணரமுடியும்.

    நிர்வாணம் என்பது கூட பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை ஆனால் அரைகுறை ஆடைகள் ஆபாசத்தை தோற்றிவிக்கிறது என்றால் நிச்சியம் மிகையில்லை. நாம் ஆடை அணிவது உடலை மறைக்கவும் கொஞ்சம் அழகுக்காவும் தானே! அதே ஆடையே நமக்கு பாதுகாப்பில்லாத நம்மை சமுதாயத்தில் தவறாய் பிரதிபலிக்க கூடிய நாகரீகம் எனும் பெயரில் உடுத்தும் ஆடை நமக்கு தேவைதானா? வெளிநாட்டினர் நம்மை வியந்து பார்த்த்தில் நம் ஆடைக்கும் பங்கு உண்டுதானே இப்போதும் வெளிநாட்டு பெண்கள் நம் இந்தியாவில் சேலை உடுத்துவதை பார்த்திருப்பீர்கள் தானே. வெளிநாட்டினர் எப்படியெல்லாம் உடை உடுத்துகிறார்கள் என கேள்வி வேண்டாம் அவர்களின் கலாச்சாரமும் சூழ்நிலையும் வேறு ஆனால் நமக்கு ஒரு பாரம்பரியம் இருக்கிறதே, குறைந்தபட்சம் நம் கலாச்சார காவலர்களாக இல்லாவிட்டாலும் மனதில் தவறான சிந்தையை விதைக்க நம் உடை ஒரு காரணமாய் இருக்கவேண்டாமே.

    பெற்றோர்களின் கவணத்திற்கு இப்போது நமது உணவு முறை மாற்றத்தினால் நமது குழந்தைகள் சீக்கிரமே பெரியவர்களாகி விடுகின்றனர் அதிலும் பெண் குழந்தைகள் பத்து முதல் பதிநான்கு வயதுக்குள் பெரிய பெண்களாகி விடுகின்றனர் வயதில் சிறியவர்களாக இருந்தாலும் உருவத்தில் பெரியவர்களாக இருக்கின்றனர் சில இடங்களில் பார்த்திருக்கிறேன் குழந்தைகள் தானே என்று சிலவிதமான உடைகளை அணிவித்து விடுகிறார்கள் பெற்றோர்களை முதலில் புரிந்துகொள்ளுங்கள் உங்கள் குழந்தையின் மீது உங்களுக்குள்ள கண்ணோட்டமும் மற்றவர்களின் கண்ணோட்டமும் ஒரே மாதிரியாய் இருக்காது அன்றாடம் செய்திகளில் பார்க்கத்தானே செய்கிறோம் குழந்தைகளும் பாலியல் தொல்லைக்கு உள்ளாவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

    மேலும் நம் குழந்தைகளுக்கு நாம் ஒரு முன்மாதிரியாக இருக்கவேண்டும் உங்களுக்கு தெரியும்தானே உங்கள் குழந்தைகளை பொருத்தவரை நீங்கள் தான் முதலில் ஹீரோ உங்களிடமிருந்துதான் குழந்தைகள் நல்ல விஷயங்களையும் கெட்ட விஷய்ங்களையும் கற்றுக்கொள்கின்றனர்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    24 Comments
    Comments

    24 Responses to “உடை குறைப்பது தான் நாகரீகமா?”

    virutcham said...
    May 4, 2010 at 5:17 PM

    போச்சு, பெண்ணிய எதிரி அல்லது பழம் பஞ்சாங்கம் என்று ஒதுக்கப் படுவீர்கள்.

    உடைகள் விஷயத்தில் குழந்தைகள் வளர வளர ஆண் குழந்தைகள் உடல் மறைக்கும் உடை அணிய விரும்புகிறார்கள். பெண் குழந்தைகள் எதிர் மறையாக யோசிக்கிறார்கள். இதில் பெற்றோர் பங்கு கண்டிப்பாக இருக்கிறது. பதின்ம வயது பெண் குழந்தைகளுக்கு தங்களை பாதுகாத்துக் கொள்ளத் தெரியாது. பெற்றோர் தேவை இல்லாமல் உடை விஷயத்தில் அலட்சியம் காட்டி பிள்ளைகளுக்கு ஆபத்தை வரவழைக்காமல் இருக்க வேண்டும்.
    நல்ல பதிவு.
    எழுத்துப் பிழைகளை தவிர்த்தல் நல்லது.

    http://www.virutcham.com


    Muthu Kumar N said...
    May 4, 2010 at 5:48 PM

    நிர்வானமாகதான் = நிர்வாணமாகத்தான்
    மறைக்கபடாமல் = மறைக்கப்படாமல்
    கோவனமும், = கோவணமும்
    வாகணம் = வாகனம்
    கவணக்குறைவான = கவனக்குறைவான
    கண்னோட்டத்தையும் = கண்ணோட்டத்தையும்
    கோப்படவேண்டாம் = கோபப்படவேண்டாம்

    வாழ்த்துகள்
    வாழ்க வளமுடன்
    என்றும் நட்புடன்
    ந.முத்துக்குமார்


    Kumaran said...
    May 20, 2010 at 1:31 PM

    Google la porumuya kooda illa. summa ennoda email id kuduthu photo thedunaen. ennoda padam vandhadhu.


    ஜிஎஸ்ஆர் said...
    May 20, 2010 at 5:27 PM

    @Kumaran

    சொன்னால் யார் கேக்கிறார்கள் நண்பா

    வாழ்க வளமுடன்

    என்றும் அன்புடன்
    ஞானசேகர்


    hamaragana said...
    September 3, 2010 at 4:06 PM

    நல்ல கருத்து பதிந்து உள்ளீர்கள் நண்பரே
    ஆனால் யார் கேட்பது ?? இன்று தலை விரி கோலமாக அங்கங்கள் தெரிய இறுக்கமான உடை அணிந்து இருப்பது தான் நாகரீகம் தொ(ல்)லைகாட்சிவரும் நங்கையர்கள் பார்த்தல் ??? இன்னும் வருங் காலம் இதை விட மோசமாக போகும் ?? சகிக்க palagi kollavendum


    Robin said...
    September 3, 2010 at 7:27 PM

    //அதே வேளையில் கொஞ்சம் நாகரீகம் என்கிற பெயரில் மேலே சொன்ன உடைகளை அணிந்து செல்லுங்கள் உங்களை பார்ப்பவர்களின் கண்களில் வித்யாசம் தெரிவதை உங்களால் உணரமுடியும்.// அதற்காகத்தானே அநாகரீகமாக உடையணிகிறார்கள்.


    Thekkikattan|தெகா said...
    September 3, 2010 at 8:40 PM

    //பெண் என்கிற விஷயத்தில் ஆண் விருப்பம் கொண்டுள்ளான் என்பது இயற்கையாகவே இருக்கிறது//

    அப்போ இயற்கையில் பெண்ணிற்கு இயல்பாவே தன்னோட எதிர் பாலினத்தவரின் மீது ஈர்ப்பு குறைச்சல் என்று பொருள் கொள்ளணுமா - உங்க பார்வைப் படி?

    //பழைய நிலைக்கு நேரடியாக செல்லவிட்டாலும் மறைமுகமாக அந்த நிலைக்கு சென்று விடுவோமோ என்கிற அச்சம் வருகிறது.//

    ஏன் அச்சம் வரணும்? அப்போ உங்க மேலே உங்களுக்கே நம்பிக்கையில்லையா ;)?

    இன்னும் வருது... படிக்க படிக்க


    Thekkikattan|தெகா said...
    September 3, 2010 at 8:42 PM

    சரி ஆண்கள் வெறும் வேஷ்டியோடு இருந்தாலும் அது மற்றவர்களை அதிகம் பாதிப்பதில்லை இன்னும் நேரடியாக சொல்லப்போனால் காமத்தை தோற்றுவிப்பதில்லை//

    இது நம்ம பார்வை. அதை அவர்களைத்தான் கேக்கணும். எப்பூடின்னு :)


    Thekkikattan|தெகா said...
    September 3, 2010 at 8:45 PM

    சிறு கவனக்குறைவான உடையலங்காராம் கூட பார்ப்பவர்களை முகம் சுழிக்க செய்துவிடுமே அதோடு ஒரு தவறான கண்ணோட்டத்தையும் உருவாக்கும் என்பது தெரியாதா?//

    இதுவும் ஒரு காட்சிப் பிழைய அன்பரே! முகம் சுழிக்கிறீங்களா?? எனக்கு பின்னூட்டம் போட்டு கம்பெனி நொடிச்சிருப் போலவே... இன்னும் படிக்கிறேன் ...


    Thekkikattan|தெகா said...
    September 3, 2010 at 9:06 PM

    ஒரு தவறான கண்ணோட்டத்தையும் உருவாக்கும் என்பது தெரியாதா?//

    அது கற்பிதப் பார்வையைக் கொண்டு நாம கொடுக்கவிருக்கும் அடையாளங்கள்... இது யாரோட வளர்ச்சிப் பின்னடைவு?

    //வெளிநாட்டினர் நம்மை வியந்து பார்த்த்தில் நம் ஆடைக்கும் பங்கு உண்டுதானே இப்போதும் வெளிநாட்டு பெண்கள் நம் இந்தியாவில் சேலை உடுத்துவதை பார்த்திருப்பீர்கள் தானே.//

    அப்படியா? இல்லைப்பூ, இழுத்து போர்த்திக்கிட்டு போங்க அங்க காஞ்சி கெடக்கிறவன் நிறைய இருக்காய்ங்க, ஏடாகூடாமாகிப்பூடும்னு - ட்ரவலர்ஸ் பொஸ்தகத்திலேயே எழுதி வைச்சிருக்காய்ங்க. அதுனாலே நமக்கு முட்டாயி கொடுத்து ஏமாத்திபுடுறாய்ங்கப்பூ :(

    தல, உங்க கரிசனம் புரிகிறது. ஆனா, மொதல்லா நம்ம பார்வையை சரி செஞ்சிக்குவோம். எல்லாம் பார்க்கும் பார்வையில்தான் கோளாறு இருப்பதாகத் தெரிகிறது. எல்லாக் காலக் கட்டத்திலும் நமக்காக அவங்கதான் மறைஞ்சிட்டு இருக்கணுமா? ஏன், நாம அதில இருந்து மீண்டு வளர்ந்து வந்திரக் கூடாது... சும்மா ஒரு கேள்வி. யோசிச்சு சொல்லுங்க.

    அப்படியே இதையும் ஒரு லுக் விடுங்க சொல்லுறேன்...

    உடல், உடை = அரசியல்!


    Thekkikattan|தெகா said...
    September 3, 2010 at 11:53 PM

    என்னோட பதிவு இணைப்பு வேல செய்யல போலிருக்கே... சரியான இணைப்பு உடல் + உடை = அரசியல்!


    மங்கை said...
    September 4, 2010 at 1:35 AM

    பதிவையும்..பின்னூட்டங்களையும் படித்த பின் வருத்தம் தான் மிஞ்சுகிறது.. ஒரு பெண்ணின் நாகரீகத்தையும் அநாகரீகத்தையும் ஆடை அணிவதை வைத்து தீர்மானிப்பதை பார்த்தால்..

    12 வயது குழந்தை அணியும் ஆடையில் கூட ஆபாசத்தை மட்டுமே பார்க்கும் பார்வையில் இல்லாத ஆநாகரீகமா அந்தப் பெற்றோர்களிடம் இருக்கிறது?...

    உங்கள் பதிவின் முகப்பில் "அளவோடு பேசுங்கள் அதையும் ஆழ்ந்து யோசித்து பேசுங்கள்" இது யாருக்கு தலைவா...மத்தவங்களுக்கு மட்டுமா

    அந்த சேலை மேட்டர் சொன்னீங்களே.. சேலை மட்டுமே உடுத்துபவள் நான்.. தில்லியில் பேருந்து நெரிசலில்...நடந்த சில அனுபவங்களும் இருக்கு.. கண்களாலேயே கற்பழிக்கும் பேர்வழிகளுக்கு எந்த ஆடையும் ஒரு பொருட்டல்ல

    தெகா சொன்ன அதே கருத்து தான் ///தல, உங்க கரிசனம் புரிகிறது. ஆனா, மொதல்லா நம்ம பார்வையை சரி செஞ்சிக்குவோம்///


    எஸ்.கே said...
    September 4, 2010 at 3:04 AM

    மிக நல்ல பதிவு.


    ஜிஎஸ்ஆர் said...
    September 4, 2010 at 9:37 AM

    @hamaragana தங்களின் வருகைக்கும் சரியான புரிதலுக்கும் நன்றி


    ஜிஎஸ்ஆர் said...
    September 4, 2010 at 9:38 AM

    @Robinசிலருக்கு சொன்னாலும் புரிவதில்லை தானகவும் மாறுவதில்லை


    ஜிஎஸ்ஆர் said...
    September 4, 2010 at 9:40 AM

    @Thekkikattan|தெகா

    \\
    அப்போ இயற்கையில் பெண்ணிற்கு இயல்பாவே தன்னோட எதிர் பாலினத்தவரின் மீது ஈர்ப்பு குறைச்சல் என்று பொருள் கொள்ளணுமா - உங்க பார்வைப் படி?\\

    நான் அப்படி எழுதவில்லையே அப்படியாக நீங்கள் புரிந்துகொண்டால் நிச்சியம் என் தவறல்ல

    \\ஏன் அச்சம் வரணும்? அப்போ உங்க மேலே உங்களுக்கே நம்பிக்கையில்லையா ;)?\\

    என் மேல் நம்பிக்கை இருக்கிறது சில திருந்தாத, புரியாத ஜென்மங்கள் மேல் நம்பிக்கையில்லை


    ஜிஎஸ்ஆர் said...
    September 4, 2010 at 9:43 AM

    @Thekkikattan|தெகா\\சரி ஆண்கள் வெறும் வேஷ்டியோடு இருந்தாலும் அது மற்றவர்களை அதிகம் பாதிப்பதில்லை இன்னும் நேரடியாக சொல்லப்போனால் காமத்தை தோற்றுவிப்பதில்லை//

    இது நம்ம பார்வை. அதை அவர்களைத்தான் கேக்கணும். எப்பூடின்னு :) \\

    நான் என் பார்வையில் படுவதை நான் உணர்ந்ததை என்னை சுற்றி நடப்பதை எழுதியிருக்கிறேன் நீங்கள் முடிந்தால் கேட்டு சொல்லுங்களேன்


    ஜிஎஸ்ஆர் said...
    September 4, 2010 at 9:44 AM

    @Thekkikattan|தெகா

    \\சிறு கவனக்குறைவான உடையலங்காராம் கூட பார்ப்பவர்களை முகம் சுழிக்க செய்துவிடுமே அதோடு ஒரு தவறான கண்ணோட்டத்தையும் உருவாக்கும் என்பது தெரியாதா?//

    இதுவும் ஒரு காட்சிப் பிழைய அன்பரே! முகம் சுழிக்கிறீங்களா?? எனக்கு பின்னூட்டம் போட்டு கம்பெனி நொடிச்சிருப் போலவே... இன்னும் படிக்கிறேன் ... \\

    ஆம் உண்மைதான் நீங்கள் சொல்வது போல எனக்கு காட்சி பிழைதான் பூனை கண் அடைத்துக்கொண்டு உலகமே இருட்டு என்று நினைக்குமாம்


    ஜிஎஸ்ஆர் said...
    September 4, 2010 at 9:49 AM

    @Thekkikattan|தெகா

    \\ஒரு தவறான கண்ணோட்டத்தையும் உருவாக்கும் என்பது தெரியாதா?//

    அது கற்பிதப் பார்வையைக் கொண்டு நாம கொடுக்கவிருக்கும் அடையாளங்கள்... இது யாரோட வளர்ச்சிப் பின்னடைவு?

    //வெளிநாட்டினர் நம்மை வியந்து பார்த்த்தில் நம் ஆடைக்கும் பங்கு உண்டுதானே இப்போதும் வெளிநாட்டு பெண்கள் நம் இந்தியாவில் சேலை உடுத்துவதை பார்த்திருப்பீர்கள் தானே.//

    அப்படியா? இல்லைப்பூ, இழுத்து போர்த்திக்கிட்டு போங்க அங்க காஞ்சி கெடக்கிறவன் நிறைய இருக்காய்ங்க, ஏடாகூடாமாகிப்பூடும்னு - ட்ரவலர்ஸ் பொஸ்தகத்திலேயே எழுதி வைச்சிருக்காய்ங்க. அதுனாலே நமக்கு முட்டாயி கொடுத்து ஏமாத்திபுடுறாய்ங்கப்பூ :(

    தல, உங்க கரிசனம் புரிகிறது. ஆனா, மொதல்லா நம்ம பார்வையை சரி செஞ்சிக்குவோம். எல்லாம் பார்க்கும் பார்வையில்தான் கோளாறு இருப்பதாகத் தெரிகிறது. எல்லாக் காலக் கட்டத்திலும் நமக்காக அவங்கதான் மறைஞ்சிட்டு இருக்கணுமா? ஏன், நாம அதில இருந்து மீண்டு வளர்ந்து வந்திரக் கூடாது... சும்மா ஒரு கேள்வி. யோசிச்சு சொல்லுங்க.

    அப்படியே இதையும் ஒரு லுக் விடுங்க சொல்லுறேன்...\\

    இப்படியாக கேள்வி கேட்பது என்பது மிகவும் இயல்பான எளிதான ஒன்று தான் எனக்கு யார் மேலும் கரிசனமில்லை நான் கரிசனபடுவதால் மட்டும் பெரிய மண்ணாங்கட்டி மாற்றமும் வர போவதில்லை இனிமேல் அவர்கள் மறைஞ்சு இருக்க வேண்டாம் நாம் அதிலிருந்து மீண்டு வந்து விடலாம் மேலும் மாற்றங்கள் உங்களிடமிருந்து ஆரம்பமாகட்டும்


    ஜிஎஸ்ஆர் said...
    September 4, 2010 at 9:51 AM

    @Thekkikattan|தெகா உங்கள் பதிவை படித்தென் எனக்கு ஒன்றுமே புரியவில்லை அல்லது புரிந்துகொள்ளும் வகையில் இல்லை


    ஜிஎஸ்ஆர் said...
    September 4, 2010 at 10:00 AM

    @மங்கை
    \\பதிவையும்..பின்னூட்டங்களையும் படித்த பின் வருத்தம் தான் மிஞ்சுகிறது.. ஒரு பெண்ணின் நாகரீகத்தையும் அநாகரீகத்தையும் ஆடை அணிவதை வைத்து தீர்மானிப்பதை பார்த்தால்..
    \\

    ஆடையும் ஒரு காரணியாக இருப்பதை தான் சொல்லியிருக்கிறேன்.

    \\12 வயது குழந்தை அணியும் ஆடையில் கூட ஆபாசத்தை மட்டுமே பார்க்கும் பார்வையில் இல்லாத ஆநாகரீகமா அந்தப் பெற்றோர்களிடம் இருக்கிறது?...\\

    அனைவரின் பார்வையும் ஓரே மாதிரியாக இருப்பதில்லயே உங்களால் இல்லையென்று மறுக்க முடியுமா?

    \\உங்கள் பதிவின் முகப்பில் "அளவோடு பேசுங்கள் அதையும் ஆழ்ந்து யோசித்து பேசுங்கள்" இது யாருக்கு தலைவா...மத்தவங்களுக்கு மட்டுமா\\

    மற்றவர்களுக்கு புத்தி புகட்ட எனக்கு நேரமில்லை என் தளத்தில் உள்ளவை எல்லாம் என்னை சுற்றி நடப்பவை நான் கண்டவை இப்படித்தான் நான் மற்றவர்களை சொல்லும் முன் நாம் கடைபிடிக்க வேண்டும் என நினைப்பவன்

    \\அந்த சேலை மேட்டர் சொன்னீங்களே.. சேலை மட்டுமே உடுத்துபவள் நான்.. தில்லியில் பேருந்து நெரிசலில்...நடந்த சில அனுபவங்களும் இருக்கு.. கண்களாலேயே கற்பழிக்கும் பேர்வழிகளுக்கு எந்த ஆடையும் ஒரு பொருட்டல்ல\\

    உண்மைதான் பெண்கள் ஆண்களின் சில தவறான கண்ணோட்டத்தினால் பார்வையாலே கற்பழிக்கபடுகிறார்கள் என்பது உண்மைதான் ஆனால் நான் சொல்வது பெண்களின் உடையும் ஒரு காரணமாக வேண்டாமே என்பது தான்.

    \\தெகா சொன்ன அதே கருத்து தான் ///தல, உங்க கரிசனம் புரிகிறது. ஆனா, மொதல்லா நம்ம பார்வையை சரி செஞ்சிக்குவோம்/// \\

    நிச்சியம் ஒருவரின் மாற்றம் என்பது வெறும் அவனை மட்டும் சார்ந்ததாக இருக்க முடியாது சமுதாயம் சார்ந்தது சமுதாயத்த்ல் சில விஷயங்கள் மாறும் போது எல்லாமே மாறிவிடும் நானும் உங்களோடு மாற்றத்துக்காக காத்திருக்கிறேன்


    ஜிஎஸ்ஆர் said...
    September 4, 2010 at 10:01 AM

    @எஸ்.கே தங்களின் வருகைக்கும் சரியான புரிதலுக்கும் மிக்க நன்றி நண்பா


    பூபாலன்(BOOBALAN) said...
    September 17, 2010 at 9:38 PM

    நீங்கள்
    சொல்வது சரி தான் ஆனால் அப்படி யாரும் நடப்பது இல்லை


    ஜிஎஸ்ஆர் said...
    September 19, 2010 at 9:28 AM

    @BOOBALANதங்களின் புரிதலுக்கு நன்றி நண்பா


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர