Dec 23, 2011

33

போட்டோஷாப்பில் தமிழ் யூனிக்கோட் எழுத்துரு (100% satisfied)

  • Dec 23, 2011
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து: துரதிஷ்டங்கள் எப்பொழுதும் அதற்காக திறந்து வைக்கப்பட்ட கதவின் வழியே வருகின்றன.

    வணக்கம் நண்பர்களே முன்பு போல் அதிகம் பதிவுகள் எழுத முடிவதில்லை எழுதும் நேரங்களில் நல்ல பதிவுகளை உபயோகமானவற்றை மட்டுமே உங்களுக்கு தர விரும்புகிறேன் அந்த வகையில் இந்த பதிவும் உங்களுக்கு மிக உபயோகமாக இருக்குமென்று நம்புகிறேன்.

    முன்பெல்லாம் தமிழ் தட்டச்சு தெரிந்தால் மட்டுமே தமிழில் எழுதும் வாய்ப்பு இருந்து வந்தது கணினியில் அதிலும் எழுத்துரு பிரச்சினை பல தளங்களில் இப்பவும் இருக்கிறது ஆனால் அந்த பிரச்சினையை முற்றிலும் களைய வந்தது தான் யூனிக்கோட் எழுத்துரு முறை இந்த வகையில் எழுத்துரு பிரச்சினை வருவதில்லை இன்று தமிழில் இனைய பக்கங்கள் அதிகமாக வளர்ந்து வருவதற்கும் இந்த தமிழ் யூனிக்கோட் எழுத்துரு மிக முக்கிய காரணமாகும்.

    இப்பவும் யூனிக்கோட் முறை தெரிந்தாலும் அதை நேரடியாக போட்டோஷாப்பில் பயன்படுத்த முடியாது இருப்பினும் சில நண்பர்கள் சில வகை மென்பொருள்களை பயன்படுத்தி போட்டோஷாப்பில் தமிழ் உள்ளிட முடியும் என்றாலும் அவசியம் தமிழ் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும் இந்த முறை எல்லோருக்கும் நிச்சியமாய் வசதியாய் இருக்காது அதிலும் பல வகையான எழுத்துருக்குள். உதாரணமாக: Bamini, Shreelipi, Tab, Tam, TSCII, Vanavil, Senthamiz இப்படி நிறைய இருக்கிறது.

    இனி விஷயத்திற்கு வருகிறேன் நீங்கள் போட்டோஷாப்பில் அல்லது மைக்ரோசாப்ட் ஆபிஸ் தொகுப்புகளில் தமிழ் யூனிக்கோட் எழுத்துருக்களை பயன்படுத்தி விதவிதமான எழுத்துருக்களுக்கு மாற்றி அமைத்துக் கொள்வதுடன் போட்டோஷாப்பில் கிட்டத்தட்ட 512 வகையான தமிழ் ஃபாண்ட்களை நீங்கள் உபயோகிக்க முடியும் ஆனால் நான் கொடுத்திருக்கும் இந்த பொதியில் கிட்டதட்ட 800 வகையான தமிழ் ஃபாண்ட்கள் இருக்கிறது மேலும் இதில் மைக்ரோசாப்ட் டிபால்ட் (Default) ஃபாண்ட்களும் இருக்கிறது அதில் 512 தமிழ் ஃபாண்ட்களை பயன்படுத்த உங்களுக்கு தமிழ் தட்டச்சு தெரியவேண்டிய அவசியமில்லை அதுதான் இந்த பதிவின் விஷேசம்.

    எல்லாவற்றையும் தனித்தனியாக பிரித்து எடுத்து தருவதில் சிரமம் இருந்ததால் மொத்த ஃபாண்டுகளையும் ஒரு பொதியாய் சேர்த்து விட்டேன் எனவே காப்பி எடுத்து உங்கள் ஃபாண்ட் போல்டரில் (Font Folder) சேமிக்கவும் அப்படி சேமிக்கும் போது மைக்ரோசாப்ட் டிபால்ட் (Default) ஃபாண்ட்கள் முன்பே உங்கள் கணினியில் இருப்பதால் அதைப்பற்றி கவலைப்படாமல் Over Write செய்து விடவும் அதிலும் குழப்பம் இருந்தால் பாப் அப் மெனு வரும் போது ஓக்கே கொடுக்கவும்.

    இனி இந்த Photoshop Tamil Unicode Fonts பொதியை தரவிறக்குங்கள் பொதியின் அளவு 185 எம்பி அளவுடையது, இந்த பொதியின் உள்ளே கிட்டதட்ட 512 தமிழ் யூனிக்கோட் ஃபாண்ட்கள், 300க்கும் மேலான தமிழ் ஃபாண்ட்கள் (உபயோகிக்க தமிழ் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்), 1300க்கும் மேலான ஆங்கில வகை ஃபாண்ட்கள் இதில் பலவும் மைக்ரோசாப்ட்டின் டிபால்ட் வகையை சேர்ந்தவை, மற்றும், ஃபாண்ட் மேனேஜர், தமிழ் யூனிக்கோட் எழுதுவதற்கான NHM Writer மற்றும் யூனிக்கோட் எழுத்துருக்களை வேறு வகையான எழுத்துருக்களில் மாற்றம் செய்வதற்கு NHM Convertor மேலும் ஒரு பிடிஎப் தொகுப்பு இது மிக முக்கியமானது இதில் ஃபாண்ட் மாதிரி எழுத்து, அதன் பெயர், அது எந்த வகையான எழுத்துரு வகையை சேர்ந்த்து என்பதை தொகுத்திருக்கிறேன்.. இதை தரவிறக்கி பயன்படுத்தும் போது உங்களுக்கு மிக சாதரணமாக தெரிவதோடு எளிதாக இருக்கும் ஆனால் இதை செய்து முடிப்பதற்கு ஒரு வார காலம் தேவைப்பட்டது ஆரம்பத்தில் என் சொந்த உபயோகத்திற்காக தான் அட்டவனைபடுத்த தொடங்கினே இறுதியில் யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்கிற அடிப்படையில் உங்களுக்காகவும்.

    முதலில் உங்கள் கணினியில் NHM Write இன்ஸ்டால் செய்யவும், இன்ஸ்டால் செய்யும் போது தமிழை தெரிவு செய்யவும் நீங்கள் உங்கள் கணினியில் நிறுவலை முடித்ததும் டாஸ்க்பாரின் வலது பக்க மூலையில் ஒரு மணி போன்ற ஒன்று வந்திருக்கும் அதை கிளிக் செய்து தமிழ் பொனாட்டிக் யூனிக்கோட் என்பதை தெரிவு செய்யவும் அல்லது நேரடியாக கீபோர்டில் Alt+2 என்பதை அழுத்தினால் போதும், நீங்கள் Alt+2 என்பதை அழுத்தியவுடன் அதன் நிறம் பொன்நிறமாக மாறியிருக்கும்.

    இனி தமிழ் யூனிக்கோட் தட்டச்சு செய்யவேண்டியது தான் உதாரணமாக நீங்கள் மைக்ரோசாப்ட் ஆபிஸ் தொகுப்பில் “ஸ்ரீராம், ஸ்ரீதர், ஞானசேகர், புரியாத கிறுக்கல்கள்” என்று தட்டச்சு செய்ய நினைக்கிறீர்கள் என்பதாக இருந்தால் ஆபிஸ் தொகுப்பை திறந்து NHM Writer ல் Alt+2 அழுத்தி அதன் பின்னர் “ஸ்ரீராம், ஸ்ரீதர், ஞானசேகர், புரியாத கிறுக்கல்கள்” என்பதற்கு நீங்கள் sriram, sridhar, gnanasekar, puriyaatha kiRukkalkaL என்பதாக தட்டச்சினால் போதும்.

    புரியவில்லையா? ammaa – அம்மா, appaa – அப்பா, sakOthari- சகோதரி, இப்படி தமிழை நேரடியாக ஆங்கிலத்தில் எழுதுங்கள் சில இடங்களில் பிரச்சினை வரும் உதராணத்திற்கு sakOthari என்பதில் O மட்டும் கேப்பிட்டல் எழுத்தை பயன்படுத்தியிருக்கிறேன் இதையே sakoothari இரண்டு o பயன்படுத்தியும் எழுதலாம், நீங்களாகவே முயற்சி செய்யும் போது எல்லாம் எளிதில் வந்துவிடும் தேவைப்பட்டால் அவர்களின் உதவிப்பக்கத்தை பார்க்கவும்.



    இப்போது நீங்கள் தமிழை எழுத கற்றுக்கொண்டு வீட்டீர்கள் இனி அடுத்த கட்டமாக NHM Convertor பற்றி பார்க்கலாம், நாம் மேலே உள்ள சில பாரக்களில் பார்த்த்து போல நமக்கு தெரிந்த யூனிக்கோட் எழுத்துருக்களை இந்த NHM Convertor வழியாக Bamini, Shreelipi, Tab, Tam, TSCII, Vanavil போன்ற எழுத்துருக்களுக்கு மாற்றிக்கொள்வதன் மூலம் அந்த வகையான எழுத்துருக்களையும் நாம் யூனிக்கோட் வழியாக மாற்றி நாம் பயன்படுத்தலாம். மேலும் சில யூனிக்கோட் எழுதி தமிழில் எழுதுவது எப்படி?

    கீழே படத்தில் இருப்பது போல Input- 1 என்பதில் உங்கள் தெரிவு Unicode எனபதாக இருக்கட்டும் (தேவைப்பட்டல் Bamini, Shreelipi, Tab, Tam, TSCII, Vanavil இவற்றை யூனிக்கோட் முறைக்கும் மாற்றிக்கொள்ளலாம்) Output – 2 என்பதில் எந்த வகையான எழுத்துருக்கு மாற்ற விரும்புகிறீர்களோ அதை தெரிவு செய்யவும், Output – 3 என்பதை கிளிக்குவதன் மூலம் கன்வெர்ட் நொடிக்குள் நடந்து முடிந்து விடும் Copy Converted text – 4 இங்கு நீங்கள் மாற்றி டெக்ஸ்ட் இருக்கும் அதை காப்பி எடுத்து உங்களுக்கு தேவையான இடத்தில் பயன்படுத்த முடியும் அது போடோஷாப்பாக இருக்கலாம், ஆபீஸ் தொகுப்பாக இருக்கலாம்.

    இங்கு நேரடியாக நீங்கள் தட்டச்சு செய்யலாம் அல்லது வேறு இடத்தில் இருந்து காப்பி எடுத்தவற்றை பேஸ்ட் செய்வதன் மூலமும் கன்வெர்ட் செய்துகொள்ள முடியும்.



    இனி விளக்குமுறை வழியாக பார்த்து விடலாம் நான் முன்பே சொன்ன பிடிஎப் தொகுப்பு இது தான் கீழே படத்தில் பாருங்கள்
    நான் ஒரு எழுத்து மாதிரியை தெரிவு செய்திருக்கிறேன் அந்த ஃபாண்ட் பெயர் TAM-Tamil184 என்பதாகும் அந்த எழுத்து மாதிரியோ Tam வகையை சேர்ந்தது
    எனக்கு “ஸ்ரீராம் , ஸ்ரீதர், ஞானசேகர், புரியாத கிறுக்கல்கள்” என்பதை நான் குறிப்பிட்டிருக்கும் எழுத்து வடிவில் கொண்டு வர விருப்பம்.

    நீங்கள் கவணிக்க வேண்டிய விஷயம் நீங்கள் விரும்பும் எழுத்து மாதிரி எந்த வகையை சேர்ந்தது மற்றும் அந்த ஃபாண்ட் பெயர் குறித்து வைத்துக் கொள்ளவும்.

    நான் விரும்பும் மாதிரி ஃபாண்ட் பெயர் TAM-Tamil184 அந்த உருத்தொகுப்பு Tam வகையை சேர்ந்தது அதனால் நான் எனது யூனிக்கோட் எழுத்துருவை Unicode to Tam என்பதாக கன்வெர்ட் செய்யப்போகிறேன். இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்குமென்று நம்புகிறேன்.



    சரி நான் இப்போழுது NHM Convertor திறந்து தட்டச்சு செய்வது மூலமாகவோ அல்லது காப்பி எடுத்து பேஸ்ட் செய்வது மூலமாகவோ NHM Convertor உள்ளே கொண்டு வந்துவிட்டேன் அதில் முதலாவதாக Unicode என்பதை தெரிவு செய்திருக்கிறேன் அடுத்ததாக Tam என்பதை தெரிவு செய்திருக்கிறேன் அடுத்ததாக கன்வெர்ட் கொடுத்தேன் கீழே இருக்கும் படத்தை பாருங்கள் யூனிக்கோட்டில் எப்படி இருந்த எழுத்து Tam வகைக்கு கன்வெர்ட் செய்து முடித்ததும் எழுத்துரு மாற்றம் அடைந்திருப்பதை இனி கன்வெர்ட் செய்த எழுத்துகளை நீங்கள் எங்கே பயன்படுத்த விரும்புகிறீர்களோ அங்கே ஒட்டி (Paste) செய்து எழுத்துருவுக்கான ஃபாண்ட் மாற்றி விடுங்கள் அவ்வளவு தான்.



    நான் மாற்றிய எழுத்துருவை போடோஷாப்பில் பயன்படுத்த விரும்புகிறேன் எனவே நான் போட்டோஷாப்பில் எழுத்துக்களை பேஸ்ட் செய்து அந்த டெக்ஸ்ட்டை செலக்ட் செய்து ஃபாண்ட் TAM-Tamil184-க்கு மாற்றி விட்டேன் கீழிருக்கும் படத்தை பாருங்கள் நான் முதலில் NHM Convertor-ல் இருந்து காப்பி எடுத்துக்கொண்டு வந்த டெக்ஸ்ட் முதலாவதாக இருக்கிறது, அதற்கு கீழே நான் அதற்கு சரியான ஃபாண்ட் TAM-Tamil184 என்பதை மாற்றியதும் அதன் எழுத்துருவும் மாறியிருக்கிறது.



    மேலே சொன்ன ஃபாண்ட் மேனேஜரின் மாதிரி இதில் நீங்கள் ஏதாவது ஒன்றை எழுதி அதன் மாதிரி எப்படி இருக்குமென்பதை தெரிந்துகொள்ள வசதியாய் இருக்கும்.



    என்ன நன்பர்களே இது உங்களுக்கு உபயோகமானதாக இருந்தால் மேலும் இது தெரியாத நபர்களையும் சென்றடையும் விதமாக உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்களேன்.சந்தேகம் இருப்பின் கேளுங்கள் எனக்கு தெரிந்தவரை உதவ முயற்சிக்கிறேன்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர் நாகு
    33 Comments
    Comments

    33 Responses to “போட்டோஷாப்பில் தமிழ் யூனிக்கோட் எழுத்துரு (100% satisfied)”

    srikumarandigitalstudio desaigandhi said...
    December 24, 2011 at 11:10 AM

    நல்ல பதிவு...


    சேலம் தேவா said...
    December 24, 2011 at 3:05 PM

    பயனுள்ள பதிவு..!!


    மாணவன் said...
    December 24, 2011 at 3:28 PM

    தமிழ் எழுத்துருவை பயன்படுத்தும் முறையை தெளிவாக விளக்கி பதிவிட்டமைக்கு நன்றிண்ணே!


    அழக‌ப்ப‌ன் said...
    December 24, 2011 at 5:04 PM

    ‌மிகவு‌ம் பயனு‌ள்ள ப‌திவு. த‌மி‌ழ் த‌ட்ட‌ச்சு தெ‌ரி‌‌ந்தவ‌ர்களு‌க்கு பல‌விதமான த‌மி‌ழ் FONTS ‌நிறு‌வி உபயோ‌கி‌ப்பது ப‌‌ற்‌றி ‌வி‌ரிவாக ‌விள‌க்க‌ம் கொடு‌த்தா‌ல் பயனு‌ள்ளதாக இருக‌்கு‌ம்


    Senthil Ammu said...
    December 24, 2011 at 8:29 PM

    பயனுள்ள பதிவு


    Anonymous said...

    December 24, 2011 at 9:01 PM

    Dear brother i want Dci+Tml+Ismail font please help me.
    Lakshman_tr@yahoo.com


    ஜிஎஸ்ஆர் said...
    December 25, 2011 at 10:13 AM

    @srikumarandigitalstudio desaigandhiபுரிதலுக்கு நன்றி


    ஜிஎஸ்ஆர் said...
    December 25, 2011 at 10:14 AM

    @சேலம் தேவாபயன்படுத்துங்கள் அனுபவத்தை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்


    ஜிஎஸ்ஆர் said...
    December 25, 2011 at 10:17 AM

    @மாணவன் நானே இந்த பதிவை ரொம்ப விரும்புகிறேன் தம்பி எனக்கும் மன நிறைவா இருக்கு


    ஜிஎஸ்ஆர் said...
    December 25, 2011 at 10:48 AM

    @அழக‌ப்ப‌ன்உங்களுக்கு தமிழ் தட்டச்சு தெரியும் என்பதால் (எனக்கு தமிழ் தட்டச்சு தெரியதாதல்) கூடுதல் விபரம் அளிக்க முடியவில்லை மேலே கொடுத்திருக்கும் தரவிறக்கத்தின் உள்ளே கிட்டத்தட்ட 300 வகையான ஃபாண்ட்கள் இனைத்திருக்கிறேன் அவை யாவும் உங்களை போன்றவர்களுக்கே தமிழில் தட்டச்சு செய்ததை வேறோரு ஃபாண்ட்க்கு மாற்றி விட்டு போட்டோஷாப்பிலோ அல்லது வேறேதும் ஆபிஸ் தொகுப்பிலோ பயன்படுத்தலாமே...

    மேலும் ஒரு கன்வெர்ட்டர் கிட்டத்தட்ட 74 வகையான ஃபாண்ட்களை மாற்றம் செய்து கொள்ள முடியும் அதற்கான உதவி பக்கம் உள்ளே இருக்கிறது http://www.4shared.com/rar/ee_tbifX/Tamil_Font_Conversion.html


    முழுமையாய் தங்களுக்கு உதவ முடியாமைக்கு வருந்துகிறேன்...

    அன்புடன்
    ஞானசேகர் நாகு


    ஜிஎஸ்ஆர் said...
    December 25, 2011 at 10:50 AM

    @Senthil Ammu நன்றி நண்பரே வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி


    ஜிஎஸ்ஆர் said...
    December 25, 2011 at 10:55 AM

    @lakshu நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பெயர்கள் ஃபாண்ட் பெயர்கள் தானா? எனக்கு இதைப்பற்றி தெரியவில்லை மன்னிக்கவும்.


    Anonymous said...

    December 25, 2011 at 1:41 PM

    thanks for you sharing the knowledge.


    Unknown said...
    December 27, 2011 at 1:24 PM

    Its valuable


    ஜானகிராமன் said...
    December 30, 2011 at 7:07 PM

    நண்பரே.. அற்புதமாக, மிக அக்கரையுடன் எழுதுகிறீர்கள். பயனுள்ள நல்ல பல கருத்துக்களை தெரிந்துகொண்டேன். மிக்க நன்றி.


    ஜிஎஸ்ஆர் said...
    January 3, 2012 at 10:29 AM

    @saravanan kuruthukuli வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி...


    ஜிஎஸ்ஆர் said...
    January 3, 2012 at 10:29 AM

    @Unknown நன்றி நண்பரே...


    ஜிஎஸ்ஆர் said...
    January 3, 2012 at 10:30 AM

    @ஜானகிராமன்அப்படியெல்லாம் ஒன்றுமில்லை நண்பா இப்படி எழுதி வைத்தால் பின்னாளில் எனக்கும் இது ஒரு டிஜிட்டல் டைரி போல உதவுமே....


    Pushparagam said...
    January 8, 2012 at 5:05 PM

    நான் தமிழில் எழுத அழகி என்ற மென் பொருளை உபயோக்கிரேன்.
    இதில் NHM WRITER போல் உபயோகபடுத்தமுடியுமா.??
    மற்றும், .PDF FILEல் ஆடியோ இணைக்கலாமா??


    Unknown said...
    January 9, 2012 at 7:30 PM

    அன்புள்ள நன்பருக்கு, உஙகளுடைய இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மிக்க நன்றி. இன்னும் இதுபோல் பயனுள்ள பதிவுகளை எழுத என் வாழ்த்துக்கள். அன்புடன் இம்மான்.
    waytoheaven2011.blogspot.com


    ஜிஎஸ்ஆர் said...
    January 10, 2012 at 1:39 PM

    @JESUS COMING SOONஅவசியம் எழுதுவோம் இனைந்திருங்கள்


    ஜிஎஸ்ஆர் said...
    January 10, 2012 at 1:42 PM

    @Pushparagamஅழகி மென்பொருளை பயன்படுத்தி யுனிக்கோட் எழுதுங்கள் அதையே NHM Convertor பயன்படுத்தி உங்கள் விருப்ப எழுத்துருக்கு மாற்றிக்கொள்வதன் மூலம் பதிவில் உள்ள அத்தனை விஷயத்தையும் செயல்படுத்த முடியுமே!...

    பிடிஎப் தொகுப்பில் ஆடியோ பைல் இனைப்பது பற்றி விரைவில் ஒரு பதிவு வெளியிடுகிறேன் ...

    காத்திருப்புக்கு நன்றி


    Prabu Krishna said...
    March 27, 2012 at 11:41 AM

    பாஸ் சரியான நேரத்தில் கிடைத்து உள்ளது உங்கள் பதிவு. மிகவும் நன்றி.

    (அத்தோடு நான் மற்றும் நண்பர்கள் நடத்தும் கற்போம் இதழுக்கு இந்தப் பதிவை பயன்படுத்த விருப்பம் அனுமதி கிடைக்குமா?)


    புதியவன் பக்கம் said...
    April 16, 2012 at 9:05 PM

    அழகாக விளக்கியிருக்கிறீர்கள். ஆனால் இரண்டு குறைகள் -
    http://www.4shared.com/rar/ee_tbifX/Tamil_Font_Conversion.html இணைப்பு வேலை செய்யவில்லை.
    யுனிகோட் எழுத்துருவை போட்டோஷாப்பில் பயன்படுத்துவது என்று ஆரம்பத்தில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். கடைசியில், யுனிகோடில் எழுதியதை டாம்-ஆக மாற்றி போட்டோஷாப்பில் பயன்படுத்தக் கூறியிருக்கிறீர்கள். இது கொஞ்சம் முரணாக இல்லையா...


    ஜிஎஸ்ஆர் said...
    April 23, 2012 at 8:03 PM

    @Prabu Krishnaதாரளமாக பயன்ப்டுத்துங்கள் முடிந்தால் தளத்தின் பெயரையும் குறிப்பிடுங்கள்...


    ஜிஎஸ்ஆர் said...
    April 24, 2012 at 10:50 AM

    @ஷாஜஹான்
    \\அழகாக விளக்கியிருக்கிறீர்கள். ஆனால் இரண்டு குறைகள் -
    http://www.4shared.com/rar/ee_tbifX/Tamil_Font_Conversion.html இணைப்பு வேலை செய்யவில்லை.
    யுனிகோட் எழுத்துருவை போட்டோஷாப்பில் பயன்படுத்துவது என்று ஆரம்பத்தில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். கடைசியில், யுனிகோடில் எழுதியதை டாம்-ஆக மாற்றி போட்டோஷாப்பில் பயன்படுத்தக் கூறியிருக்கிறீர்கள். இது கொஞ்சம் முரணாக இல்லையா...\\

    உங்களுடைய முதல் குறை என்பதை ஏற்றுக்கொள்கிறேன் அதுவும் கூட குறை என்பதாக சொல்ல முடியாவிட்டாலும் ஒரு விதத்தில் ஏமாற்றம் என்பதாக எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது அதே நேரத்தில் தாங்கள் சுட்டிக்காட்டியுள்ள இரண்டாவது குறை பற்றி உங்களுக்கு தெளிவுபடுத்ததான் வேண்டியிருக்கிறது நான் பதிவின் ஆரம்பத்திலேயே எழுதியிருக்கிறேன் யூனிக்கோட் ஃபாண்ட் வகையாறாக்களை நேரடியாக போட்டோஷாப்பில் பயன்படுத்த முடியாது அதே நேரட்த்தில் வேறு சில வழிமுறைகளை பின்பற்றி பயன்படுத்த முடியும் என்பதை குறிப்பிட்டிருக்கிறேன். சந்தேகத்திற்கு மீண்டும் ஒரு முறை பதிவை படித்து பார்க்கவும்.

    மேலும் நீங்கள் கூறிய படி யூனிக்கோட் எழுத்துருவை போட்டோஷாப்பில் பயன்படுத்துவது என்பதாக இருந்தாலும் நான் எந்த இடத்திலும் இதை இப்படித்தான் பயன்படுத்த வேண்டும் என்று எதற்கும் வரைமுறை வைக்கவில்லையே?

    இறுதியில் நான் சொல்ல வருவது பதிவின் எந்த இடத்திலும் எனக்கு வார்த்தைகளோ அல்லது இன்ன பிற விஷயங்களோ எனக்கு முரணாக தெரியவில்லை..

    புரிதலுக்கு நன்றி


    Prabu Krishna said...
    April 27, 2012 at 1:03 PM

    @ஜிஎஸ்ஆர்

    கண்டிப்பாக தளத்தின் பெயரை குறிப்பிடுகிறேன். மிகவும் நன்றி.


    ஜிஎஸ்ஆர் said...
    May 8, 2012 at 4:05 PM

    @Prabu Krishna நன்றி


    சுவடுகள் said...
    December 25, 2012 at 7:38 AM

    நான் யூனிகோட் பயனபடுத்தி கொண்டிருக்கிறவன்.ஃபாண்ட்களை மட்டும் இறக்கி பயன்படுத்த விரும்புகிறேன்.போட்டோ ஷாப் அவசியமில்லை. செய்துகொள்ளமுடியுமா?.டவுன்லோட் லிங்க் தரப்படவில்லையே?
    ரமணன்


    நண்பன் said...
    December 26, 2012 at 5:25 PM

    மிகவு‌ம் பயனு‌ள்ள ப‌திவு. த‌மி‌ழ் த‌ட்ட‌ச்சு தெ‌ரி‌‌ந்தவ‌ர்களு‌க்கு பல‌விதமான த‌மி‌ழ் FONTS ‌நிறு‌வி உபயோ‌கி‌ப்பது ப‌‌ற்‌றி ‌வி‌ரிவாக ‌விள‌க்க‌ம் கொடு‌த்தா‌ல் பயனு‌ள்ளதாக இருக‌்கு‌ம்


    நண்பன் said...
    December 26, 2012 at 5:38 PM

    துரதிஷ்டங்கள் எப்பொழுதும் அதற்காக திறந்து வைக்கப்பட்ட கதவின் வழியே வருகின்றன.


    Balaji said...
    October 3, 2013 at 5:55 PM

    நன்றி


    Unknown said...
    August 3, 2016 at 12:38 PM

    அருமையான பதிவு மேலும் photoshop cc மற்றும் illustrator cc ல் தமிழ் பான்ட் உபயோகிப்பதை தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும். Photoshop CC மற்றும் Illustrator CC ல் தமிழில் எழுத


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர