Oct 4, 2011

11

ஜாதகம் , திருமண பொருத்தம், வருட பலன்

 • Oct 4, 2011
 • ஜிஎஸ்ஆர்
 • Share
 • ஒரு வரி கருத்து: வேண்டாததை தேடும் போது வேண்டியது கை விட்டு போகும்.

  வணக்கம் நண்பர்களே கடந்தநட்சத்திரம், ராசி,பெயருக்கான முதல் எழுத்து பதிவின் வழியாக பிறக்கும் குழந்தைகளின் நேரம் மற்றும் தேதியை வைத்து குழந்தைகளுக்கான நட்சத்திரம் மற்றும் ராசி, அவர்கள் பிறந்த நேரப்படியான அவர்களுக்கு வரவேண்டிய பெயரின் முதல் எழுத்து அறிவது பற்றி பார்த்தோம்.

  இனி இந்த பதிவின் வாயிலாக நட்சத்திரங்களின் கிரகங்களையும், நட்சத்திரங்களுக்கான ராசிகளும், கிரகங்களுக்கான தெய்வங்களையும், மேலும் நட்சத்திரத்துக்கான அதிஷ்ட தெய்வங்களையும் தெரிந்துகொள்ள
  நட்சத்திரங்களுக்கான முதல் எழுத்து , அதிஷ்ட தெய்வம், பொதுவான குணம் பிடிஎப் தரவிறக்கி வைத்துக்கொள்ளவும் முந்தைய பதிவில் நட்சத்திரங்களுக்கன முதல் எழுத்து ஆங்கிலத்தில் கொடுக்கபட்டிருந்த்து இந்த பதிவில் இனைக்கப்பட்டிருக்கும் பிடிஎப்-பில் தமிழ் எழுத்துகளும் அதற்கு நிகரான ஆங்கில எழுத்துகளும், தமிழுக்கு நிகரான ஹிந்தி எழுத்துகளும் கொடுக்கப்பட்டிருக்கிறது, புத்தகத்தின் தகவல்கள் யாவும் பல தளங்களில் இருந்து சேகரிக்கபட்டவையே.

  இனி அடுத்த்தாக முந்தைய பதிவில் சொல்லியிருந்தபடி பிறந்த நாள், மற்றும் பிறந்த நேரம் வைத்துக்கொண்டு ஜாதகம் கணிப்பது பற்றி பார்க்கலாம் இதற்கு இரண்டு வகையான மென்பொருள்கள் தருகிறேன் அதே நேரத்தில் இதில் வரும் தகவல்கள் 100% உண்மையானது என்பதை உறுதிபட கூற முடியவில்லை. என் ஜாதகத்தையும் இன்னும் சில ஜாதகங்களையும் வைத்துக்கொண்டு சோதித்து பார்க்கும் போது சில மிகச்சரியாய் இருக்கிறது சில தவறாக இருக்கிறது குறிப்பாக குறிப்பாக மதியம் 12 மணி அதற்கு முன்பும் பின்பும், இரவு 12 மணி அதற்கு முன்பும் பின்பும் வரும் பிறப்புகளில் இந்த பிரச்சினை இருப்பதாக உணர்கிறேன் மற்றபடி பொதுவான பலன்கள் மற்றும் சிறப்பு பலன்கள் என பார்க்கும் போது ஓரளவிற்கு ஏற்றுக்கொள்ளும் படியாகவே இருக்கிறது. இப்போதைய நேரத்தில் உள்ள பிரச்சினைகளை அறிய முடிகிறது சில உடல் உபாதைகள் என்பதாக காட்டப்படுபவையை தவறு என்று நிராகரிக்க முடியவில்லை.

  முதலாவதாக Tamil Astrology Software ஜாதகம் மற்றும் கணிக்கும் மென்பொருளை பற்றி பார்க்கலாம், இதை பயனபடுத்துவது மிக எளிது இதில் தேவையான அயானாம்சம் முறையை தெரிவு செய்யவும் இதற்கு File -> Preference செல்லவும்.  இரண்டாவதாக Tamil Horoscope Software ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பது போலத்தான் இந்த மென்பொருள் இருக்கிறது ஒரு மென்பொருளில் மூன்று விதமான பயன்பாடுகள், ஜாதகம் கணிக்கும் வசதி, திருமண பொருத்தம் பார்க்கும் வசதி, வருட பலன் பார்க்கும் வசதி அதை விட ஆங்கிலம், மலையாளம், குஜராத்தி, தெலுகு, ஹிந்தி என எட்டு மொழிகளில் பலன் தெரிந்துகொள்ள முடியும் இதனால் பிற மொழி பேசுபவர்களுக்கும் இந்த மென்பொருள் உதவும்.  பதிவின் நீளத்தை கருத்தில் கொண்டும் மேலும் சில விஷயங்களை பகிர வேண்டியுள்ளதாலும் பிறந்த நாள் பலன்கள், பெயருக்கான எண் பலன்கள் போன்றவை பற்றியதான பதிவை அடுத்த பதிவிற்கு கொண்டு செல்கிறேன்.

  மேலும் சில ஜோதிட பதிவுகள்:

  பிறந்த குழந்தைகளுக்கான நட்சத்திரம், ராசி,பெயருக்கான முதல் எழுத்து

  நியுமரலாஜி (எண் கணிதம்) பிறந்த தேதி, பெயர் பலன்கள்

  கைரேகை ஜோதிடம் ஒரு பார்வை

  என்ன நண்பர்களே படிச்சிங்களா இது உங்களுக்கு உதவியாக இருக்குமென்று நம்புகிறேன் மேலும் இது பற்றியாதான சந்தேகங்கள் எதுவும் என்னிடம் கேட்க வேண்டாம் நான் ஜோதிடன் அல்ல, உங்களுக்கு தெரிந்து இதில் தவறு இருப்பாதாக நினைத்தால் தவறை சுட்டிக்காட்டி உதவும் அது மற்றவர்களுக்கும் உதவும்.

  குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


  வாழ்க வளமுடன்  என்றும் அன்புடன்
  ஞானசேகர் நாகு
  11 Comments
  Comments

  11 Responses to “ஜாதகம் , திருமண பொருத்தம், வருட பலன்”

  வைரை சதிஷ் said...
  October 4, 2011 at 8:42 PM

  அட இந்த மென்பொருள் நல்லாஇருக்கே


  hamaragana said...
  October 5, 2011 at 10:20 AM

  hai friend
  very good ..very easy
  thanks a lot.


  ஜிஎஸ்ஆர் said...
  October 8, 2011 at 1:13 PM

  @வைரை சதிஷ்பயன்படுத்தி பாருங்கள் நல்லதென்று நினைத்தால் உங்கள் நண்பர்களுக்கும், உறவிணர்களுக்கும் அறிமுகபடுத்துங்கள்


  ஜிஎஸ்ஆர் said...
  October 8, 2011 at 1:16 PM

  @hamaragana நன்றி ஐயா தங்களின் வரவிற்கு இதற்கு முன் நான் எழுதியிருந்த எதிர்காலத்தில் பணம் எப்படியிருக்கும் (http://gsr-gentle.blogspot.com/2010/12/indian-future-currency.html) என்கிற பதிவில் தங்களின் கருத்து சரியான புரிதலோடு இருந்தது.


  மாணவன் said...
  October 9, 2011 at 6:48 AM

  சோதிட மென்பொருள் பகிர்வுக்கு நன்றிண்ணே!
  நேரம் கிடைக்கும்போது பயன்படுத்திப்பார்க்கிறேன்...


  ஜிஎஸ்ஆர் said...
  October 9, 2011 at 11:57 AM

  @மாணவன்அவசியம் பயன்படுத்தி பாருங்கள் தம்பி நேரம் கிடைக்கும் போது அதன் அனுபவத்தை பகிரிந்து கொள்ளுங்கள்


  சே.குமார் said...
  October 9, 2011 at 2:23 PM

  சோதிட மென்பொருள் பகிர்வுக்கு நன்றிண்ணே.


  ஜிஎஸ்ஆர் said...
  October 10, 2011 at 11:24 AM

  @சே.குமார்கருத்துரைக்கு நன்றி தம்பி


  sakthivelarul said...
  October 10, 2011 at 8:11 PM

  thank you friend..


  ஜிஎஸ்ஆர் said...
  October 16, 2011 at 5:38 PM

  @sakthivelarulவரவிற்கு நன்றி


  இந்திரத் தேவன் said...
  July 26, 2013 at 10:30 AM

  உள்ளத்தின் வார்த்தைகளை உதடுகள் ஒளிக்காமல் உச்சரிக்கும் உங்களின் பாங்கு என்னைப் பரவசப்படுத்துகிறது. உங்களின் பல பதிவுகள் தெளிந்த நீரோடை போல் தெம்மாங்கு இசைக்கின்றன.
  வசப்படும் வார்த்தைகளில் காணப்படும் வசீகரம் மற்றவர்களை ஈர்க்கும் மந்திர யுக்தி கொண்டவை என்பதில் ஐயமில்லை.
  உங்கள் முகம் மலர சொல்லும் பாராட்டும் சீராட்டும் அல்ல இவை. இணையத்தள சேவையில் உங்களின் பங்களிப்புக்கு என் உள்ளம் தரும் உண்மையான நேசப் பகிர்வு..
  வாழ்த்துக்கள்... வளம் குன்றாமல் வளரட்டும் தங்கள் சேவை.


  அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

  சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
  போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
  சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

  Subscribe


  முதன்மை கருத்துரையாளர்கள்

  கடைசி பதிவுகளில் சில

  நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர