Oct 17, 2011

7

இனையமும் பொழுதுபோக்கும் காமமும்

 • Oct 17, 2011
 • ஜிஎஸ்ஆர்
 • Share
 • ஒரு வரி கருத்து: சரியான சந்தர்ப்பதில் சொல்லவேண்டியதை தெளிவாக சொல்ல வேண்டும்.

  வணக்கம் நண்பர்களே கடந்த சில பதிவுகளாகவே ஜோதிடம் சாந்த பதிவுகளை பார்த்தோம் இனி இந்த பதிவின் வாயிலாக இனைய பயன்பாட்டையும் அதில் நிறைந்திருக்கும் பொழுதுபோக்கு அம்சமும் அதனால் ஏற்படும் குடும்ப சிதைவுகளையும் கொஞ்சம் பார்க்கலாம் தலைப்பை பார்த்து வேறு ஏதாவது இருக்குமென்று எண்ணி வந்தால் உங்கள் நினைப்புக்கு மாறான சிந்தனைகளை மட்டுமே இந்த பதிவில் காணமுடியும்.

  நானெல்லாம் பனிரெண்டு வருடங்களுக்கு முன் இனையம் உபயோகிக்க தொடங்கியதே வெறும் பொழுதுபோக்காக தான் ஆனால் அந்த நேரத்தில் இனையம் என்பது பொழுதுபோக்கு சாராமல் தொழில்நுட்பங்களை சார்ந்து இயங்கி கொண்டிருந்த்து ஆனால் இப்போதெல்லாம் இனையம் தொழில்நுட்பம் என்பதை விட சினிமா, கிசுகிசு, அரட்டை, காமம், இன்னும் பல இத்யாதிகள் என நீண்ட பட்டியலோடு இயங்குகிறது.

  நம் தமிழை பொருத்தவரை இனையத்தில் காமமும், சினிமாவும், பொழுதுபோக்கும் மிக பிரதானமான இடத்தை பிடித்திருக்கிறது அதற்காக உடனே கேள்வி கேட்க வேண்டாம் தமிழில் பயனுள்ள தளங்கள் இருக்கின்றனவா? நிச்சியமாய் இருக்கிறது ஆனால் என்னால் வகைப்படுத்தி தர இயலாது பலரும் பலவிதமான தேடல்கள் சார்ந்து இயங்குகின்றனர்.

  தமிழ் எப்பவுமே சினிமாவுக்கு முக்கியத்துவம் கொடுத்தே வந்திருக்கிறது சினிமா இல்லையென்றால் நம் மக்கள் உயிருடன் இருப்பார்களா என்று கூட நினைக்க தோன்றுகிறது நாமும் செய்தித்தாள்களில் பொதுவாக சினிமாவிற்கும், நடிகைகளின் கிசுகிசுவிற்கும் கொடுக்கும் முக்கியத்தும் நம் நாட்டின் பிராந்திய நலனோ எல்லோக்கோடு பிரச்சினைகளையோ அல்லது அண்டை நாட்டுடனா உறவின் பிரச்சினைகளை எல்லாம் படிப்பது இல்லை! நாம் பார்த்து என்ன ஆகிவிடப்போது என்பதான கேள்வி? அதனால் தான் என்னவோ தமிழக அரசியல் கூட சினிமாவை சார்ந்திருக்கிறது நாமும் அதை அனுபவத்தில் உணர்ந்திருக்கிறோம், பார்த்துகொண்டிருக்கிறோம்.

  அடுத்ததாக அடல்ட் தளங்கள் முன்பெல்லாம் கூகுளில் தமிழ் என்று தொடங்கும் போது அதன் முடிவு எழுதுக்கள் வேறு விதமாக இருக்கும் இப்பொழுது அப்படியில்லை ஆனாலும் எண்ணிக்கை குறைவில்லை என்றே நினைக்கிறேன் இளம் சமுதாயம் கெட்டுபோவதற்கு இன்றையை நிலையில் அலைபேசியும், இனையமும் பெருமளவில் உதவி செய்கிறது.

  குறிப்பாக நான் இந்த பதிவு எழுத தொடங்கிய நோக்கமே சமீபத்தில் மகேஷ் என்பவரின் மனைவி பேஸ்புக்கால் வந்த வினை என்பதாக ஒரு செய்தியை படித்த போது இந்த உலகம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது என்பது கேள்வியாய் இருக்கிறது. காதல் என்றால் என்ன? அர்த்தம் என்ன? இப்படி நிறைய கேள்விகளை நமக்குள் எழுவதை நம்மாள் தவிர்க்க முடியவில்லை ஒரு பெண்ணிற்கு பத்து காதலர்களுடன் உறவு என்பதை பார்க்கும் போது கலச்சாராமும் பாரம்பரியமும் நிறைந்த தமிழகத்தில் தான் வாழ்கிறோமா! என் சந்தேகம் வருகிறது .

  பேஸ்புக் எனும் சமுதாய தளம் வந்த போது இந்தளவிற்கு இதன் வீரியம் இருக்குமென்று நினைக்கவில்லை மேலும் பொதுவாகவே நான் சமுதாய தளங்கள் பொழுதுபோக்கு தளங்கள் அதிகம் விரும்புவதில்லை. பேஸ்புக் தளம் வழியாக பல குடும்ப பிரச்சினைகளையும் , கள்ளக்காதலையும், அன்றாடம் செய்திகளில் பார்க்க முடிகிறது. நான் எப்பவும் சிந்திக்கும் விஷயம் இது தான் முகம் அறியாத நண்பர்களோடு எப்படி இவர்கள் தொடர்புகொண்டு வீழ்த்துகிறார்கள் தங்களை பற்றிய தகவல்களை பொதுவெளியில் வெளியிடுகிறார்கள், தங்களின் நிழற்படங்களையும் வெளியிடுகிறார்கள் ஆனால் அந்த நிழல்படத்தை யாரும் எளிதாக பயன்படுத்த முடியும் என்பதோ அல்லது அந்த புகைப்படத்தின் வழியாக ஒருவரின் வாழ்க்கையில் எத்தகைய மாற்றங்கள் வரை நிகழக்கூடும் என்பதை கூட யோசிக்க மாட்டார்களா? ஆனால் இதில் ஒரு கொடுமையான விஷயம் என்னவென்றால் சிலர் தெரிந்தே தங்களின் புகைப்படத்தை பொதுவெளியில் வெளியிடுகிறார்கள் ஆனால் பாவம் எத்தைனையோ நபர்களுக்கு தெரியாது அவர்களின் புகைப்படங்களும் இருக்குமென்பது சில விஷயங்களை குறிப்பிட்டு எழுதமுடியவில்லை ஆனால் கூகுலிடம் கொஞ்சம் சூசகமாக தேடினால் எல்லாம் தெரிந்துவிடும்.

  இதை படிக்கும் சிலராவது பேஸ்புக் உபயோகிப்பதை விருப்பமாக கொண்டிருக்கலாம் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன் உங்கள் நண்பர்கள் கூட்டத்தில் உங்களுக்கு எத்தனை நண்பர்களை தெரியும், சரி பரவாயில்லை ஒரு பொழுதுபோக்கிற்காக பேஸ்புக் பயன்படுத்துகிறீர்கள் தாரளமாக பயன்படுத்துங்கள் ஆனால் அது உங்களை பாதிக்காதிருக்கட்டும். இனையம் என்பது பொதுவெளியாய் இருந்து போய் கொலைக்களமாக மாறிக்கொண்டு வருகிறது.

  என்ன நண்பர்களே படிச்சிங்களா இது உங்களுக்கு பிடித்திருக்க வாய்ப்பில்லை என்றே நம்புகிறேன், இப்படித்தான் முன்புஉடை குறைப்பது தான் நாகரீகமா? என்று ஒரு பதிவு எழுதினேன் முடிந்தால் படித்து பாருங்கள் அவசியம் கருத்துரைகளை படித்து பாருங்கள் உங்கள் கருத்துகளையும் பதிவு செய்யுங்கள். பொதுவாக இந்த மாதிரியான விஷயங்கள் படிப்பதை சுவராஸ்யமாக இருப்பதில்லை மேலும் இது பற்றியாதான விவாதங்களை நீங்கள் விருப்பபட்டால் கருத்துரையில் விவாதிக்கலாம்.

  குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


  வாழ்க வளமுடன்  என்றும் அன்புடன்
  ஞானசேகர் நாகு
  7 Comments
  Comments

  7 Responses to “இனையமும் பொழுதுபோக்கும் காமமும்”

  K.s.s.Rajh said...
  October 17, 2011 at 6:35 PM

  வணக்கம் இன்றுதான் முதன் முதலில் உங்கள் தளத்திற்கு வருகின்றேன் உங்கள் எழுத்துக்கள் ரசிக்கவைக்கின்றது இனி தொடர்ந்து வருவேன்


  கவிப்ரியன் said...
  October 18, 2011 at 1:41 PM

  அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது நண்பரே! பெண்களில் சிலர் வேண்டுமென்றே புகைப்படங்களை வெளியிடுகிறார்கள். நம்மிடம் எத்தனை பேர் வழிகிறார்கள் என்று பார்த்து ஆனந்தப்பட! சிலர் பகட்டான வாழ்வுக்காகவும், சிலர் காமத்தை அனுபவிப்பதற்காகவும் இப்படிப்பட்ட சமூக இணையதளங்களைப் பயன்படுத்துகிறார்கள் என்பது வெட்கக்கேடு. இது பற்றி எனது வலைதளத்திலும் பதிவிட்டிருக்கிறேன். http://kavipriyanletters.blogspot.com/2011/10/blog-post_17.html


  ஜிஎஸ்ஆர் said...
  October 22, 2011 at 6:25 PM

  @K.s.s.Rajh நல்லது சந்தோஷம் மீண்டும் வாருங்கள் என்னோடு இனைந்திருங்கள்


  ஜிஎஸ்ஆர் said...
  October 22, 2011 at 6:26 PM

  @கவிப்ரியன்தங்களின் பதிவை பார்த்தேன் அதில் வந்திருந்த கருத்துகளையும் பார்த்தேன்.


  சக்தி வீடியோஸ் said...
  October 26, 2011 at 1:18 PM

  வணக்கம் தங்களின் இந்த பதிவு வரும் தலைமுறைக்கு நெத்தியடி இத்தலைமுறைக்கும் சாட்டைஅடி.


  ஜிஎஸ்ஆர் said...
  October 27, 2011 at 1:40 PM

  @சக்தி வீடியோஸ்புரிந்துகொண்டு செயல்பட்டால் சந்தோஷமே...


  ravikumar palraj said...
  June 23, 2016 at 12:18 PM

  P.Ravikumar 26.04.1989


  அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

  சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
  போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
  சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

  Subscribe


  முதன்மை கருத்துரையாளர்கள்

  கடைசி பதிவுகளில் சில

  நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர