May 24, 2011

20

பணம் பத்தும் செய்யுமாமே!

  • May 24, 2011
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து: பணத்தை விட நாம் நேசிக்க உலகில் எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன.

    வணக்கம் நண்பர்களே ஐந்து மாத இடைவெளிக்கு பின்னர் இன்று எழுதியிருக்கிறேன் சரி நண்பர்களே இனி நம் பதிவிற்குள் செல்லும் முன் உங்கள் அனைவரின் நலமும் அறிய விழைகிறேன்.

    பணம் என்பதை பற்றி நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியதில்லை ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இந்த பணம் தனக்கென ஒரு இடத்தை நமக்கே தெரியாமல் ஆக்ரமித்துகொண்டிருக்கிறது, சில நேரம் நாமே இது போன்ற சிக்கல்களில் வழிய சென்று மாட்டிக்கொள்வதும் உண்டு, சில நேரம் விலகிச்சென்றாலும் விக்ரமாதித்தன் போல நம்மை துரத்தவும் செய்யும் பணம்.

    இந்த உலகத்தில் எல்லாவற்றிற்கும் பணம் தேவையாய் இருக்கிறது அன்றாட தேவைகள் முதல் அத்யாவசிய தேவைகள், ஆடம்பர தேவைகள் வரை பணத்தை சுற்றியே எல்லாமும் நடக்கிறது யோசித்து பாருங்கள் ஒரு வேளை சாப்பிட வேண்டும் என்றாலும், சிறுநீர் கழிப்பதென்றாலும் கூட பணம் தேவைப்படுகிறது இதில் என்ன இருக்கிறது என்கிறீர்களா நமக்கு தேவையான உணவுக்கும் பணம் தேவைப்படுகிறது, நம் உடலுக்கு தேவையில்லை என நினைத்து வெளியேற்றும் சிறுநீருக்கும் பணம் தேவைப்படுகிறது இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் பணம் தான் இந்த உலகத்தை ஆள்கிறது.

    உலகில் முதன் முதலாய் இந்த பண்டமாற்று முறை வந்த போது யாருமே சிந்தித்து இருக்க மாட்டார்கள் பின்னாளில் வெள்ளைத்தாளில் அச்சிடப்பட்ட ஒரு காகிதம் வரும் அது தான் உலகத்தை மாற்றப்போகிறது என்பதை என்ன அதிசியம் இன்று பணம் இருந்தால் எதையும் சாதித்து விடலாம் என்கிற நம்பிக்கை நமக்குள்ளும் இருக்கிறது தானே.

    நம்மிடம் கொஞ்சம் பேச்சு திறமையும் பணமும் இருந்துவிட்டால் நமக்குள் கானல் நீராய் நம்பிக்கை வருவது இயல்பு தானே! இப்படி நாம் பணத்தை மட்டுமே நம்பி பணத்திற்காகவே வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறோம் ஆனால் இதையெல்லாம் வெறுக்கின்ற மனிதர்கள் எங்கோ ஒருபக்கம் ஞானிகளாக வாழ்ந்துகொண்டு தானே இருக்கிறார்கள்.

    பொதுவாக பேச்சு வழக்கில் சொல்வார்கள் ”பணம் பத்தும் செய்யும்” என்று எங்கே உங்களில் யாராவது பணம் இருந்தால் எதையும் சாதித்துவிடலாம் என உறுதியாக சொல்ல முடியுமா நிச்சியமாய் முடியாது பணத்தை விட உலகில் உன்னதமான விஷயங்கள் இருக்கத்தான் செய்கிறது அன்பு, காதல், விட்டுகொடுத்தல், இப்படி அடுக்கடுக்காய் சொல்லிக்கொண்டே போகலாம்.

    பசிக்கும் போது நம்மிடம் இருக்கும் பணத்தை தின்று நம் பசியை தீர்க்க முடியுமா?

    நோய்வாய் பட்டிருக்கும் ஒருவரிடம் அன்பை காட்டாமல் வெறும் பணத்தை பாதுகாவலனாய் வைக்க முடியுமா?

    விண்ணில் ராக்கெட் விடலாம், செயற்கைகோள் நிறுவலாம் ஆனால் இறந்த ஒருவரின் உயிரை வாங்க முடியுமா?

    முலைப்பாலுக்கு அழும் குழந்தையின் பசியை நம்மிடம் இருக்கும் பணம் தீர்த்து விடுமா?


    இங்கு நான் பணம் தேவையில்லை என்கிற விவாதத்துக்கு வரவில்லை ஆனால் பணம் மட்டுமே வாழ்க்கையில்லை என்பதை தான் சொல்ல விரும்புகிறேன். இந்த பணத்திற்கு ஒரு விஷேச குணம் இருக்கிறது ஒரு முறை பணத்தை விரும்ப தொடங்கிவிட்டால் அதன் பின்னால் அதன் மீது காதல் என்பதை விட பணத்தின் மீதான வெறி அதிகமாக இருக்கும். இதற்கு இன்னொரு குணமும் உண்டு அதாவது இருப்பவரிடம் மேலும் மேலும் சேரும் இல்லாதவனுக்கு அவன் விரும்பும் போது கைக்கு வருவதில்லை இந்த இடத்தில் நீங்கள் நினைக்கலாம் உழைத்தால் முடியும் என்கிற முட்டாள்தனமான வாசகத்தில் எனக்கு நம்பிக்கையில்லை உங்களுக்கு தெரிந்த எத்தனையோ நபர்கள் கடுமையான உழைப்பாளியாக இருப்பார்கள் அவர்களின் வாழ்க்கை தரம் என்னவோ மோசமானதாக இருக்கும்.

    பணம் உள்ளவனிடம் பணம் சேரும் என்பார்கள் அது எப்படி என பார்த்தால் உங்களேயே இதற்கு உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள் உங்களிடம் தேவைக்கு மேல் பணம் இருந்தால் நீங்கள் நினைப்பது போல ஒரு தொழிலை தொடங்கலாம், வெற்றியும் பெறலாம் மேலும் சம்பாதிக்கலாம் ஒருவேளை உங்கள் கணக்கு தவறானல் மீதம் இருப்பதை வைத்து நீங்கள் வாழ்ந்து விடுவீர்கள் அதே நேரத்தில் தங்களிம் குறைவான பணம் மட்டும் இருக்கிறது என்றால் உங்களால் தைரியமாக ஒரு தொழிலை தொடங்கமுடியமா? அப்படியே உங்களிடம் திறமை இருந்தாலும், உங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தாலும் பயமே அதிகம் இருக்கும் இதை இழந்தால் என்ன செய்வது இந்த விஷயத்தில் தான் பணம் பணத்தோடு சேர்கிறது.

    பெரிய கோடீஸ்வரர்களாக இருப்பவர்களின் வாழ்க்கையை பாருங்கள் புரியும் அவர்களிடம் இருக்கும் பணம் வெறும் கணக்குக்கு மட்டுமே இருக்கும் அத்தனையும் அவர்களுக்கு உபயோகபடுமா என்றால் பதில் கேள்விக்குறியாக தான் இருக்கும். ஒரு நிலைக்கு மேல் இருக்கும் எல்லாம் வெறும் பொருளாக மட்டுமே இருக்கும் அதனால் பயன் இருக்காது இதைத்தான் முனோர்கள் சொன்னார்கள் “ அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” என்பதாக.

    எழுத்தில் நிறைய தடுமாற்றம் இருக்கும் ஒருவேளை சொல்ல வந்த விஷயம் கோர்வையாக இல்லாமல் கூட இருக்கலாம் மன்னிக்கவும் செரிவான எழுத்திற்கு மன அமைதியும் அவசியமாகிறது.நேரம் கிடைத்தால் படித்து பாருங்கள் எதிர் காலத்தில் பணம் எப்படி இருக்கும்


    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர் நாகு
    20 Comments
    Comments

    20 Responses to “பணம் பத்தும் செய்யுமாமே!”

    ADMIN said...
    May 24, 2011 at 1:49 PM

    உண்மையில் பணம் பத்தும் செய்யும்தான்.. ஆனால் அதற்கு உணர்வுகள் இருக்காது..!!

    பகிர்வுக்கு நன்றி,வாழ்த்துக்கள்..!


    முனைவர் இரா.குணசீலன் said...
    May 24, 2011 at 2:36 PM

    அழகாகச் சொல்லியிருக்கீங்க நண்பா..


    முனைவர் இரா.குணசீலன் said...
    May 24, 2011 at 2:37 PM

    நீண்ட கால இடைவெளிக்குப்பின் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.


    முனைவர் இரா.குணசீலன் said...
    May 24, 2011 at 2:38 PM

    தாங்கள் கூறிய கருத்துக்களையே இலக்கிய நடையில் இவ்வாறு வெளியிட்டுள்ளேன்.


    http://gunathamizh.blogspot.com/2010/03/blog-post_26.html


    Anonymous said...

    May 25, 2011 at 2:36 PM

    மௌனம் கலைத்ததிற்கு மிக்க நன்றி அண்ணா. மிக்க சந்தோஷம் ! குட்டி GSR எப்படி இருக்கிறார்?


    அ மயில்சாமி said...
    May 25, 2011 at 5:10 PM

    பணம் பத்தும் செய்யும்; சிலவேளை பத்தாமலும் செய்யும்.தன்னிடம் உள்ள செல்வமே போதும் என்று எவனொருவன் நினைக்கிறானோ அவனே இவ்வுலகில் செல்வந்தன்.பகிர்வுக்கு நன்றி!
    www.myilsami.blogspot.com


    Mohideenjp said...
    May 25, 2011 at 7:32 PM

    fantastic artical


    தர்சிகன் said...
    May 25, 2011 at 10:58 PM

    மீள வந்தமை மிக்க மகிழ்ச்சியளிக்கின்றது.


    இராஜராஜேஸ்வரி said...
    May 30, 2011 at 11:47 AM

    பணம் தான் இந்த உலகத்தை ஆள்கிறது. பணம் பாதாளம் வரை பாயும். ஈட்டியோ எட்டின வரையே பாயமுடியும்.
    பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.


    ஜிஎஸ்ஆர் said...
    June 2, 2011 at 3:38 PM

    @தங்கம்பழனிஇல்லை நண்பா பணத்தால் எல்லாவற்றையும் செய்து விட முடியாது


    ஜிஎஸ்ஆர் said...
    June 2, 2011 at 3:40 PM

    @முனைவர்.இரா.குணசீலன்தங்களின் வரவிற்கும் கருத்திற்கும் நன்றி நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பதிவில் நான் ஏற்கனவே படித்திருக்கிறேன் அதோடு எனது கருத்தையும் பதிவு செய்திருக்கிறேன்.


    ஜிஎஸ்ஆர் said...
    June 2, 2011 at 3:41 PM

    @lakshuஸ்ரீராம் (ஜூனியர் ஜிஎஸ்ஆர்) நலமாய் இருக்கிறார் தங்களை போன்றவர்களின் ஆசியோடு.


    ஜிஎஸ்ஆர் said...
    June 2, 2011 at 3:42 PM

    @மயில்சாமிதங்களின் கருத்தை ஆமோதிக்கிறேன்


    ஜிஎஸ்ஆர் said...
    June 2, 2011 at 3:42 PM

    @vaan moli நன்றி!


    ஜிஎஸ்ஆர் said...
    June 2, 2011 at 3:43 PM

    @தர்சிகன்முடிந்தவரை தொடர்ந்து இனைந்திருங்கள்


    ஜிஎஸ்ஆர் said...
    June 2, 2011 at 3:43 PM

    @இராஜராஜேஸ்வரிஉவ மொழியை சரியான இடத்தில் தான் பயன்படுத்தியிருக்கிறீர்கள்


    Vengatesh TR said...
    January 30, 2012 at 2:01 PM

    மீண்டும் வந்தமைக்கு மிக்க நன்றி ..... என்னை நியாபகம் இருக்கிறதா, தோழரே ?

    நீண்ட நாட்களுக்கு பிறகு, உங்கள் எழுத்துக்களை இன்று தான், சந்திக்கிறேன் !.. மிக்க மகிழ்ச்சி !


    ஜிஎஸ்ஆர் said...
    January 30, 2012 at 2:31 PM

    @சிகப்பு மனிதன்எப்படி மறப்பேன் சகோதரா சில நேரம் நினைப்பதுண்டு... சரி இப்போது படிப்பு எப்படி இருக்கிறது? நான் நினைத்தேன் நீங்கள் மறந்துவிட்டீர்கள் என!


    RAAFI RASHEEDI said...
    January 15, 2014 at 11:05 PM

    பசிக்கும் போது நம்மிடம் இருக்கும் பணத்தை தின்று நம் பசியை தீர்க்க முடியுமா?

    நோய்வாய் பட்டிருக்கும் ஒருவரிடம் அன்பை காட்டாமல் வெறும் பணத்தை பாதுகாவலனாய் வைக்க முடியுமா?

    விண்ணில் ராக்கெட் விடலாம், செயற்கைகோள் நிறுவலாம் ஆனால் இறந்த ஒருவரின் உயிரை வாங்க முடியுமா?

    முலைப்பாலுக்கு அழும் குழந்தையின் பசியை நம்மிடம் இருக்கும் பணம் தீர்த்து விடுமா?


    சூப்பர்


    ஜிஎஸ்ஆர் said...
    April 15, 2014 at 1:50 PM

    @RAAFI RASHEEDI புரிதலுக்கு நன்றி


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர