Nov 23, 2010
விமான டிக்கெட் விலை, நேரம் தேடுவதற்கு எளிய வழி
வணக்கம் நண்பர்களே நம் வலைத்தளத்திற்கு பல நாடுகளில் இருந்தும் வருகிறார்கள் அப்படி வருபவர்களுக்கும் இந்தியாவில் இருந்து வெளிநாடு செல்கிறவர்களுக்கும் இந்தியாவுக்குள்ளே விமான போக்குவரத்தை அதிகமாக பயன்படுத்துபவர்களுக்கு இந்த பதிவு நிச்சியம் உதவும் இது முன்னமே உங்கள் எல்லோருக்குமே தெரிந்திருக்கும் ஆனாலும் தெரியாதவர்களும் இருக்ககூடுமே அதனால் தான் இதை ஒரு பதிவாக எழுதுகிறேன்.
முதலாவதாக YATRA இனையதளம் பற்றி பார்க்கலாம் இது இந்தியாவிற்குள்ளே ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு இதன் வழியாக தேடலாம், இதன் வழியாகவே இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் விமான போக்குவரத்துகளை தேடலாம் ஆனால் வெளிநாட்டில் இருப்பவர்கள் அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு தேடமுடியாது அதாவது From என்பது இந்தியா அல்லது இந்தியாவிற்குள் உள்ள விமான நிலையமாக இருக்கவேண்டும் இருந்தாலும் இதன் சிறப்பு என்னவென்றால் ஓரே நேரத்தில் நாம் தேடும் தேதியில் எந்ததெந்த விமானங்கள் செல்கின்றன அதன் நேரம், விலை மற்றும் நாம் தேடும் தேதியின் முன்னதாக மூன்று நாட்கள் பின்னதாக மூன்று நாட்கள் என தேடும் வசதி இருக்கிறது மற்றும் நாம் செல்லும் இடங்களில் நாம் தங்குவதற்கான ஹோட்டல் வசதியையும் இதன் மூலம் முன்பதிவு செய்து விடலாம் .இந்தியாவின் சிறந்த தளம் என்பதில் சந்தேகமில்லை
Yatra தளம் செல்ல கீழிருக்கும் படத்தை கிளிக்கவும்
இரண்டாவதாக MAKE MY TRIP, TRAVEL .TRAVELOCITY ,CLEAR TRIP, BARGAIN TRAVEL, SKYSCANNER, CHEAPOAIR இந்த இனையதளங்கள் வழியாக இந்தியாவிற்குள்ளே ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு இதன் வழியாக தேடலாம், இதன் வழியாகவே இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் விமான போக்குவரத்துகளையும் வெளிநாட்டில் இருந்தபடியே இந்தியாவிற்குள் இருக்கும் விமான சர்வீஸ்களையும் இன்னும் பிற வெளிநாடுகளுக்கான விமான சர்வீஸ்களையும் எளிதாக தேடமுடியும். இதன் சிறப்பு என்னவென்றால் ஓரே நேரத்தில் நாம் தேடும் தேதியில் எந்ததெந்த விமானங்கள் செல்கின்றன அதன் நேரம், விலை மற்றும் நாம் தேடும் தேதியின் முன்னதாக மூன்று நாட்கள் பின்னதாக மூன்று நாட்கள் என தேடும் வசதி இருக்கிறது மற்றும் நாம் செல்லும் இடங்களில் நாம் தங்குவதற்கான ஹோட்டல் வசதியையும் இதன் மூலம் முன்பதிவு செய்து விடலாம் இதுவும் சிறந்த தளம் என்பதில் சந்தேகமில்லை.
சம்பந்தபட்ட தளங்களுக்கு செல்ல அந்தந்த படத்தை கிளிக்குங்கள்
நண்பர்களை நீங்கள் விமாணப்பயணம் மேற்கொள்ளும் முன் நேரடியாக நீங்கள் டிக்கெட் எடுக்க விரும்பும் விமாணத்தின் இனையதளத்திற்கு சென்று தேடினால் அவர்களின் விமானத்திற்கான தகவல்கள் கிடைக்கும் நான் மேலே கொடுத்துள்ள தளங்களின் வாயிலாக தேடினால் நீங்கள் தேடும் தேதியில் எந்ததெந்த விமாணங்கள் அந்த வழியில் செல்கிறது அதன் விலை விபரம், நேரம் இன்ன பிற தகவல்களை ஓரே நேரத்தில் கண்டுபிடித்து விடலாம ஆனால் நீங்கள் பதிவு செய்ய விரும்பினால் நீங்கள் செல்லவிரும்பும் விமாணத்தில் இனையதளத்திற்கே சென்று டிக்கெட் எடுக்கவும் அல்லாது இவர்களின் தளம் வழியாக டிக்கெட் எடுத்தால் ஒரு டிக்கெட்டிற்கு சுமாராக 500 ரூபாய் வரை அதிகமாக இருக்கும் அல்லது அதற்கு மேலாகவும் இருக்கலாம் வெளி நாட்டில் இருப்பவர்கள் இதில் காண்பிக்கும் தொகையை தங்கள் நாட்டின் நாணயமதிப்பை கன்வெர்ட் செய்து பார்த்துக்கொள்ளுங்கள். உங்களிடம் கடன் அட்டை இருந்தால் இதையே கூட உங்கள் பகுதி நேர தொழிலாக செய்யலாம் விருப்பமிருந்தால் மட்டும்.
நண்பர்களே இது உங்களுக்கு உபயோகமானதாக இருக்குமென்று நம்புகிறேன் இதில் ஏதாவது சந்தேகம் இருப்பின் கேட்கலாம் எனக்கு தெரிந்தவரை சொல்லித்தர முயற்சி செய்கிறேன் பதிவு பிடித்திருந்தால், உபயோகமானதாக இருந்தால் அவசியம் பதிவை பற்றிய கருத்துரையும், இண்ட்லியில் வாக்கும் பதிந்து செல்லவும்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
இந்த பதிவை எழுதியது: ஜிஎஸ்ஆர்
நான் தொழில்முறை சார்ந்த எழுத்தாளன் இல்லை, எனக்கு தெரிந்த விஷயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்வதற்க்காவும்,அடிப்படை கணினி சார்ந்த விஷயங்கள் தெரியாதவர்களுக்கு கற்றுக்கொள்ளும் வாய்ப்பாக இந்த தளத்தை எழுதி வருகிறேன். பதிவு பயனுள்ளதாகாவோ, பிடித்தமானதாகவோ இருந்தால் வாக்கும் கருத்துரையும் அளித்துச்செல்லுங்கள் மேலும் பலரை சென்றடையட்டும் அன்புடன் Gsr
24 Responses to “விமான டிக்கெட் விலை, நேரம் தேடுவதற்கு எளிய வழி”
-
மாணவன்
said...
November 23, 2010 at 9:10 AMஅசத்தல் நண்பா,
மிகவும் பயனுள்ள தகவல்களையும்,தளங்களையும் பதிவிட்டு தெளிவாகவும் புரியும்படியும் பதிவு செய்துள்ளீர்கள் அருமை,
நிச்சயமாக இது பலருக்கும் உபயோகமானதாக இருக்கும் நண்பா...
சிறப்பானத் தகவல்களைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி
உங்கள் பொன்னான பணி மென்மேலும் சிறக்க வேண்டும்
வாழ்க வளமுடன் -
மாணவன்
said...
November 23, 2010 at 9:15 AM//ஒரு வரி கருத்து: தவறுகளை மற்றவர்கள் மிகைப்படுத்துவதற்கு முன்பாக ஒத்துக்கொள்//
மிகச்சரியான அனைவராலும் ஏற்றுக்கொள்ளவேண்டிய கருத்து அருமை நண்பா,
தொடரட்டும்...
வாழ்க வளமுடன்
நன்றி -
ம.தி.சுதா
said...
November 23, 2010 at 11:39 AMநல்லதொரு பதிவு சகோதரா கட்டாயம் பலருக்க உதவும்...
-
ம.தி.சுதா
said...
November 23, 2010 at 11:41 AMஃஃஃஃதவறுகளை மற்றவர்கள் மிகைப்படுத்துவதற்கு முன்பாக ஒத்துக்கொள்.ஃஃஃஃஃ
கட்டாயம் தவறை விட்டது நானென்றால் நானே எற்றுக் கொள்ளவேண்டும்... -
Unknown
said...
November 23, 2010 at 11:57 AMVERY USE FULL LINE
-
Vengatesh TR
said...
November 23, 2010 at 12:42 PM.மிகவும் உபயோகம் உள்ள தகவல், ஆசிரியரே !
-
Rajan
said...
November 23, 2010 at 1:06 PMvery useful info.
-
பொன்கார்த்திக்
said...
November 23, 2010 at 1:12 PMixigo எங்க சகா? அது தான் முதல் தளம் பலர் தேடுறது அதுல தான். ஆனா புக் பண்ண முடியாது. ஹிட்ஸ் ரேடிங் பாருங்க.
-
Unknown
said...
November 23, 2010 at 1:44 PMதகவல்களுக்கு நன்றி
-
Good citizen
said...
November 23, 2010 at 2:11 PMவெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள இந்த தளங்கள் உதவுமா பாஸ்?
-
ஜிஎஸ்ஆர்
said...
November 23, 2010 at 9:26 PM@மாணவன் நம்மால் நான்கு பேர் நல்லது அடைந்தால் அதைவிட சந்தோஷம் ஏதுமில்லை நண்பரே
-
ஜிஎஸ்ஆர்
said...
November 23, 2010 at 9:27 PM@மாணவன்ஒரு தவறை மறைக்க நினைத்தால் அதன் பின்னர் அதை மறைக்க ஆயிரம் பொய்கள் சொல்லவேண்டிவரும்
-
ஜிஎஸ்ஆர்
said...
November 23, 2010 at 9:28 PM@ம.தி.சுதா நல்லது நண்பா இவையெல்லாம் நான் பயன்படுத்துவதில்லை ஆனால் சில தளங்கள் மட்டும் பயன்படுத்துவேன் இதனால் நேரம் மிச்சம் நண்பரே
-
ஜிஎஸ்ஆர்
said...
November 23, 2010 at 9:30 PM@ம.தி.சுதாஒரு தவறை மறைக்க போய் ஆயிரம் பொய் சொல்லி அதன் பின்னர் நாம் பித்தலாட்டகாரன் எனும் பெயர் எடுக்கும் முன்னால் அழகாய் ஒத்துக்கொண்டு நேர்மையாளனாய் இருந்து விடலாம் நண்பா
-
ஜிஎஸ்ஆர்
said...
November 23, 2010 at 9:30 PM@BAHRU நன்றி நண்பரே
-
ஜிஎஸ்ஆர்
said...
November 23, 2010 at 9:32 PM@சிகப்பு மனிதன்மன்னிக்கவும் நண்பா ஆசிரியர் எனும் புனிதமான வார்த்தையே என்னைப்போல ஒருவனுக்கு வழங்கி அந்த ஆசிரியர் பெயரை களங்கபடுத்தாதீர்கள் நான் அதற்கெல்லாம் தகுதியானவன் இல்லை
தங்களின் சரியான புரிதலுக்கு நன்றி -
ஜிஎஸ்ஆர்
said...
November 23, 2010 at 9:34 PM@பொன்கார்த்திக்உண்மை தான் விடுபட்டு விட்டது நண்பரே மன்னிக்கவும் அதே நேரத்தில் உங்களுக்கு ஒரு தகவலை சொல்கிறேன் நான் கொடுத்திருக்கும் தளங்கள் மூன்றை தவிர மற்றவை யாவும் நீங்கள் கொடுத்திருக்கும் தளத்தின் முன்னிலயில் தான் இருக்கிறது அந்த மூன்று தளங்களும் சில நாடுகளில் மட்டுமே முதன்மையாக இருக்கிறார்கள்
தங்களின் சரியான புரிதலுக்கு நன்றி -
ஜிஎஸ்ஆர்
said...
November 23, 2010 at 9:35 PM@விக்கி உலகம்தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே
-
ஜிஎஸ்ஆர்
said...
November 23, 2010 at 9:36 PM@moulefriteஇந்தியாவில் சுற்றுப்பயனம் மேற்கொள்ள இந்த தளங்கள் உதவாது நண்பரே
-
ஜிஎஸ்ஆர்
said...
November 23, 2010 at 9:38 PM@Rajanதஙக்ள் வருகைக்கு நன்றி நண்பரே முடிந்தால் தொடர்ந்து இனைந்திருங்கள்
-
Unknown
said...
February 28, 2017 at 11:01 AMOk
-
gunjan
said...
January 10, 2020 at 11:26 AMBook a resort at cheap and affordable price with all the activities
like rafting, kayaking and jungle safari etc. Visit Dandeli in Karnataka for a better
experience. To book now visit the website:
Dandeli Luxury Resorts -
Mohsin
said...
June 5, 2020 at 2:33 PM This comment has been removed by the author. -
Lowest Flight Fare
said...
April 15, 2022 at 1:22 PMThank you so much for this informative blog. I liked it very much and learned a lot from it. Your blog inspires so many adventurers like me. Further, you can book cheap flights with Lowest Flight Fare if you're looking for a fantastic vacationing experience.
அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்
சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>