Nov 18, 2010

15

பாடல்களுக்கு நீங்களே இசையமைக்கலாம்

  • Nov 18, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து: விவேகத்தையும் தன் விருப்பதிற்கேற்ப இணங்க வைப்பது பாசம்.

    வணக்கம் நண்பர்களே இந்த பதிவை பொறுத்தவரை நான் உங்களுக்கு கற்றுத்தர முடியாது இது முழுக்க முழுக்க உங்களின் திறமையை மட்டுமே அடிப்படையாக கொண்டது இதை எல்லோராலும் செய்துவிடவும் முடியாது முதலில் இதை செய்வதற்கு உங்களிடம் நல்ல இசையார்வம் இருக்கவேண்டும் அதைப்பற்றியதான ஒரு புரிதல் இருக்க வேண்டும் இந்த இரண்டும் இருந்தால் உங்களாலும் யாருடைய துனையும் இல்லாமல் நீங்களாகவே ஒரு பாடலை எழுதலாம் அதற்கு நீங்களே இசையும் அமைக்கலாம் அதை யூடியுப்பில் அப்லோடு செய்து சக நண்பர்களிடம் பகிந்து கொள்ளலாம் யாருக்கு தெரியும் உங்களுக்குள்ளும் ஒரு இசைஞானி இளையராஜா இருக்கலாம்.

    இந்த இசையை பொறுத்தவரை மொழிகள் ஒரு தடையில்லை என்பதை நான் சொல்லி தெரியவேண்டியதில்லை தங்களுக்கு பல நாட்களுக்கு முன்பாக நான் நீங்களும் இசையோடு பாடலாம் என்பதாக ஒரு பதிவை எழுதியிருந்தேன் அன்று நிறைய நண்பர்களுக்கு அந்த பதிவு ஒரு அனுபவமாக இருந்திருக்கும் அந்த பதிவிலோ உங்களால் இசையமைக்க முடியாது ஆனால் இந்த பதிவில் இருக்கும் மென்பொருள் வழியாக உங்களால் இசையமைக்கவும் முடியும்.

    முதலாவதாக Easy Music Composer வேண்டுமானால் உங்கள் கணினியில் தரவிறக்கி வைத்துக்கொள்ளுங்கள் ஆனால் ஒரு இலவச தொகுப்பு என்பதால் நான்கு கட்டைகளுக்கு மேல் அனுமதிப்பதில்லை.



    அடுத்ததாக Magix Music Composer தரவிறக்கி கணினியில் இன்ஸ்டால் செய்து விடுங்கள். இதில் நிறைய விஷயங்கள் இருக்கின்றன ஆனால் பதிவின் ஆரம்பத்திலேயே சொன்னபடி இதற்கு உங்கள் திறமையும் கிரியேட்டிவிட்டியும் தான் முக்கியம் இசையில் ஆர்வமுள்ளவர்கள் முயன்றால் நிச்சியமாக அவர்களால் இசையமைக்க முடியும்



    மூன்றாவதாக Encore Music Composer தரவிறக்கி கணினியில் இன்ஸ்டால் செய்து விடுங்கள் ஆனால் எனக்கு தான் இதைப்பற்றி ஒன்றுமே தெரியவில்லை என்னைப்பொறுத்தவரை இசையின் அளவுகோல் என்பது என் மனதிற்கு பிடித்தால் ரசிப்பேன் மற்றபடி அதில் உள்ள ஸ்வரம் , லயம் இதைப்பற்றியெல்லாம் ஒன்றுமே தெரியாது. இதிலும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன ஆனால் பதிவின் ஆரம்பத்திலேயே சொன்னபடி இதற்கு உங்கள் திறமையும் கிரியேட்டிவிட்டியும் தான் முக்கியம் இசையில் ஆர்வமுள்ளவர்கள் முயன்றால் நிச்சியமாக அவர்களால் இசையமைக்க முடியும்.



    நண்பர்களே இந்த மென்பொருளை இன்ஸ்டால் செய்யதெரியவில்லையென்றால் அவசியம் கேளுங்கள் ஆனால் தயவுசெய்து இதை உபயோகிப்பது எப்படி என கேட்டு விடாதீர்கள் எனக்கும் இதைப்பற்றி ஒன்றும் தெரியாது. பதிவு பிடித்திருந்தால், உபயோகமானதாக இருந்தால் அவசியம் பதிவை பற்றிய கருத்துரையும், இண்ட்லியில் வாக்கும் பதிந்து செல்லவும்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    15 Comments
    Comments

    15 Responses to “பாடல்களுக்கு நீங்களே இசையமைக்கலாம்”

    மாணவன் said...
    November 18, 2010 at 8:57 AM

    அருமை நண்பா,

    இசைப் பிரியர்களுக்கு மிகவும் பிடித்த பயனுள்ள மென்பொருள்
    நீங்கள் சொல்வதுபோல் இந்த பதிவை பொறுத்தவரை நான் உங்களுக்கு கற்றுத்தர முடியாது இது முழுக்க முழுக்க உங்களின் திறமையை மட்டுமே அடிப்படையாக கொண்டது இதை எல்லோராலும் செய்துவிடவும் முடியாது முதலில் இதை செய்வதற்கு உங்களிடம் நல்ல இசையார்வம் இருக்கவேண்டும்

    இசையில் ஆர்வமும் ஈடுபாடும் சிறந்த கிரியேட்டிவிட்டியும் இருந்து முயற்சி செய்தால் நிச்சயமாக முடியும்.

    //பயிற்சியும் முயற்சியும் இருந்தால்
    ஒவ்வொரு மனிதனும் சாதனையாளனே//

    பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பா

    வாழ்க வளமுடன்


    மாணவன் said...
    November 18, 2010 at 9:14 AM

    //நண்பர்களே இந்த மென்பொருளை இன்ஸ்டால் செய்யதெரியவில்லையென்றால் அவசியம் கேளுங்கள் ஆனால் தயவுசெய்து இதை உபயோகிப்பது எப்படி என கேட்டு விடாதீர்கள் எனக்கும் இதைப்பற்றி ஒன்றும் தெரியாது//

    உங்களிடம் மிகவும் பிடித்தது இதுதான் நண்பா, உங்களுக்கு தெரிந்தவரையிலும் தகவல்களை சிறப்பாக அனைவருக்கும் புரியும்படியும் விளக்குகிறீர்கள் சில விசயங்கள் தெரியவில்லை என்றால் அதை மறைக்காமல் நேரடியாகவே சொல்லிவிடுகிறீர்கள் அதான் ஜிஎஸ்ஆர்-ஜெண்டில் இட்ஸ் கிரேட்...

    தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

    கற்போம் கற்பிப்போம்

    நன்றி
    என்றும் நட்புடன்
    உங்கள் மாணவன்


    எஸ்.கே said...
    November 18, 2010 at 3:02 PM

    நல்ல மென்பொருள்! நன்றி நண்பரே!


    ஜிஎஸ்ஆர் said...
    November 19, 2010 at 9:34 AM

    @மாணவன்சில் விச்யஙகளில் அடிப்படை புரிந்தால் தான் அவர்களால் சிறப்பாக செயல்படமுடியும் அதற்கு அவர்களின் கிரியேட்டிவிட்டியும் சில இடங்களில் தேவைப்படும்


    ஜிஎஸ்ஆர் said...
    November 19, 2010 at 9:36 AM

    @மாணவன்எனக்கு தெரியாது என்பதை சொல்வதற்கு நான் எப்போதும் தயங்குவதில்லை எல்லாம் தெரிந்தவனாய் காட்டிக்கொள்வதில் எனக்கு விருப்பமில்லை நான் ஒரு சராசரிக்கும் கீழானவனே


    ஜிஎஸ்ஆர் said...
    November 19, 2010 at 9:36 AM

    @எஸ்.கேவிரைவில் ஒரு பாடலை உருவாக்கி யூடியுப்பில் அப்லோட் செய்து பகிர்ந்துகொள்ளுங்கள்


    ம.தி.சுதா said...
    November 19, 2010 at 11:51 AM

    ஃஃஃஃஃஃவிவேகத்தையும் தன் விருப்பதிற்கேற்ப இணங்க வைப்பது பாசம்.ஃஃஃஃஃ
    ஆமாம் மிகவும் உண்மையான கருத்து...


    ம.தி.சுதா said...
    November 19, 2010 at 11:51 AM

    அருமையான தகவல் வாழ்த்துக்கள்... சகோதரா...


    ஜிஎஸ்ஆர் said...
    November 19, 2010 at 4:21 PM

    @ம.தி.சுதாவீரமா விவேகமா எனப் பார்த்தால் விவேகம் வெற்றி பெற்றுவிடும்


    ஜிஎஸ்ஆர் said...
    November 19, 2010 at 4:22 PM

    @ம.தி.சுதாஅவசியம் முயற்சி செய்யுங்கள் உங்களையறியாமல் உங்களுக்குள் நல்ல இசை இருக்கலாம்


    Vengatesh TR said...
    November 26, 2010 at 8:00 AM

    .தொழில் நுட்பத்தை மட்டும் பார்த்த என் கண்களுக்கு, இசையை எப்படி அமைக்கிறார்கள் என்று தெரிய வைத்தமைக்கு நன்றி !


    ஜிஎஸ்ஆர் said...
    November 26, 2010 at 8:25 PM

    @சிகப்பு மனிதன் நம் தளத்தை பொறுத்தவரை தொழில்நுட்பம் என்பதற்குள் அடக்க விருப்பமில்லை இங்கு நிச்சியம் பல தரப்பட்ட தகவல்கள் பதிவேன் ஆனால் நல்ல விஷயங்களை மட்டுமே பதிவேன்


    Vengatesh TR said...
    November 26, 2010 at 8:59 PM

    .நீங்கள் சொல்வது உண்மையே !!


    .பலதரப்பட்ட தகவல்களின் தொகுப்பாக இருக்கிறது !!


    ஜிஎஸ்ஆர் said...
    November 26, 2010 at 9:49 PM

    @சிகப்பு மனிதன்சரியான புரிதலுக்கு நன்றி நண்பா


    ஜிஎஸ்ஆர் said...
    June 9, 2012 at 12:24 PM

    @venkatesh subramanyamபுரிதலுக்கு நன்றி நண்பரே.


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர