Nov 1, 2010

28

புரியாத கிறுக்கல்கள்- வழிகாட்டி

  • Nov 1, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து: சட்டம் ஒரு சிலந்தி கூடு வண்டுகள் அதை அறுத்துக் கொண்டு அப்பால் போகின்றன. பூச்சிகள் அதில் சிக்கிக் கொள்கின்றன.

    வணக்கம் நண்பர்களே இந்த பதிவு முழுக்க முழுக்க நம் தளத்தை பற்றியது மட்டுமே இந்த பதிவு நம் தளத்திற்கு தினமும் வந்து போகம் உங்களை போன்ற நண்பர்கள் தெரிந்துகொள்ள மட்டுமே. ஒவ்வொருவரும் அவர்களுக்கு பிடித்தமான வலைத்தளங்களுக்கு செல்கிறார்கள் படிக்கிறார்கள் ஆனால் அவர்கள் அந்த தளத்தின் எழுத்தாளருக்கு அவர்கள் ஆதரவையோ கருத்துக்களோயே தெரிவிக்கிறார்களா என்பது என்னால் உறுதியாக சொல்ல முடியவில்லை உதாரணத்துக்கு நம் வலைத்தளத்தில் தினமும் எத்தனையோ நண்பர்கள் வருகிறார்கள் அதில் சிலர் மட்டும் வந்ததற்கான தடமாய், விரும்பியதன் பொருளாய் வாக்கு, கருத்துரை எழுதுகிறார்கள் இன்னும் சிலர் அவர்கள் சந்தேகத்தை கேட்டு தெளிவு பெறுகிறார்கள் நான் எனக்கு தெரிந்த விஷயங்களை உடனே பதில் அளித்து விடுவேன் தெரியாத விஷயங்களை அழகாய் எனக்கு தெரியாது என சொல்லி விடுவேன் எல்லாம் தெரிந்தவனாய் காட்டிக்கொண்டு ஒரு கேள்வி கேட்டால் பதில் அளிக்காமல், மழுப்பி சமாளிப்பதில்லை, அதற்காக தெரியாத கேள்வியை கேட்டுவிட்டால் அந்த கேள்வியை வெளியிடாமலும் இருப்பதில்லை.

    சரி நண்பர்களே இந்த பதிவு நம் தளத்திற்கு ஒரு வழிகாட்டியாக இருக்கும் ஒரு முறை பார்த்து தெரிந்துகொள்ளுங்களேன் இதன் பின்னால் இருக்கும் நம் நோக்கம் மேலும் பதிவை பலரையும் சென்றடைய வேண்டும் என்பது மட்டுமே. நம் தளத்தில் நிறைய வசதிகள் இருக்கின்றது ஆனால் எத்தனை நண்பர்கள் இதை பயன்படுத்தி பார்த்திருப்பார்கள் அல்லது தெரிந்து வைத்திருக்கிறார்கள் என தெரியவில்லை அதனாலே தான் இந்த சிறு முயற்சி.

    வழக்கமாக நம் பதிவில் படம் இனைப்பதற்கும் இந்த பதிவில் படம் இனைத்ததற்கும் ஒரு வித்யாசம் இருக்கிறது படத்தை கிளிக்கி பாருங்கள் அது என்னவென்று புரியும்.

    பதிவின் முகப்பில் பாருங்கள் ஒரு நான்கு பதிவுகளை எப்பொழுதும் அனுகும் வகையில் வைத்த்திருப்பேன் அதில் முதலாவதாக இருக்கும் புரியாத கிறுக்கல்கள் – வழிகாட்டி என்பது இந்த பதிவைத் தான் குறிக்கிறது இது நம் தளத்திற்கு புதிதாய் வருபவர்கள் ஒருவேளை படித்தால் அவர்களின் பங்களிப்பு நம் தளத்திற்கு கிடைக்கவேண்டும் என்பதற்காக மேலும் நம் தளம் பற்றிய சந்தேகங்களை தீர்க்கவும் உதவும்.



    இனி கீழிருக்கும் இந்த படத்தை பாருங்கள் நிறைய நண்பர்கள் கவணித்திருக்க்கூடும் ஆனால் யாரவது திறந்து பார்த்தீர்களா என்பது தெரியாது இது நம் தளத்தின் வலது மேல் பக்கம் இருக்கும் இதில் இருக்கும் எந்தவொரு ஐகானை கிளிக்கினாலும் அது சம்பந்தபட்ட தளத்திற்கு அழைத்துச்செல்லும் உதாரணத்துக்கு மின்னஞ்சல் வழி படிக்க விருப்பம் என்றால் முதலில் இருக்கும் மின்னஞ்சல் ஐகானை கிளிக்கி உங்கள் மின்னஞ்சல் முகவரி கொடுத்து அதன் வழியாக நீங்கள் தளத்திற்கு வந்து படிக்கலாம், இரண்டாவதாக RSS ஓடை, மூன்றாவதாக டிவிட்டர் இங்கு நான் டிவிட்டரில் ஏதாவது நம் தளத்தின் பதிவுகளை அல்லது செய்திகளை டிவிட்டினால் நீங்கள் நேரடியாக இதன் வழியாக அறியலாம் இந்த வழியில் புரியாத கிறுக்கல்களின் மொத்த டிவிட்டுகளையும் இங்கு காணலாம், நான்காவதாக பேஸ்புக் இங்கு புரியாத கிறுக்கல்கள் பகிர்ந்து கொள்ளும் தகவல்களை காணலாம் இதற்கு உங்கள் கணக்கில் உள் நுழைய வேண்டியது இல்லை இதில் எனக்கிருந்த சந்தேகத்தை தீர்த்த தம்பி பிரபுவிற்கு நன்றி, ஐந்தாவதாக யூடியுப் இங்கு நான் ஏதாவது வீடியோ பகிர்ந்துகொண்டால் நான் பகிர்ந்துள்ள மொத்த வீடியோவையும் ஓரே இடத்தில் காணலாம்.



    இதன் வழியாக உங்கள் மின்னஞ்சல் முகவரியை கொடுத்து பதிந்துகொள்வதன் மூலம் புதிய பதிவுகள் வெளியிடும் போது உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு வந்துவிடும், இதில் நான் முழுபதிவும் அனுப்பும் வகையில் செய்யவில்லை பதிவின் முதல் நான்கு வரிகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வரும் அதன் வழியாக நீங்கள் நம் தளத்திற்கு வந்து படிக்கலாம்.



    நம் தளத்தில் உள்ள பதிவுகளை நம் தளத்திலேயே தேடலாம் அதோடு சம்பந்தப்பட்ட வேறு தள தகவல்களையும் தேட முடியும்.



    இது நம் தளத்தின் பிரபல பதிவுகளின் பட்டியல் இது ஒவ்வொரு பதிவின் ஹிட்ஸ் பொறுத்து பதிவுகளின் வரிசைகள் மாறிக்கொண்டே இருக்கும்.



    இது உங்கள் எல்லோருக்குமே தெரியும் நண்பர்கள் பட்டியல், இது ஒரு தளத்தின் நம்பிக்கையவும் அதன் திறனையும் வெளிப்படுத்தும் இதில் இனைவதால் ஒன்றும் பெரிதாய் பலனில்லை அதே நேரத்தில் இதில் இனைவதன் மூலம் நம் தளத்தின் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறீர்கள், உங்கள் ஆதரவை வழங்குகிறீர்கள். மேலும் நண்பர்களின் எண்ணிக்கை கூடும் போது வரும் பயணாளர்களின் எண்ணிக்கையும் கொஞ்சம் கூடும். இதில் யாரையும் கட்டாயபடுத்தி சேர்க்க முடியாது உங்களுக்கு இனைய விருப்பம் இருந்தால் இனையலாம் இதில் இனைவதால் உங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை மின்னஞ்சல் அடுத்தவர் கைகளுக்கு போய்விடுமே என்கிற அச்சம் வேண்டியதில்லை இதை இங்கு நான் கூறுவதன் காரணம் இதுவரை நிறைய நண்பர்கள் நம் தளத்தில் இனைந்திருந்து பின்னர் வெளியேறியிருக்கிறார்கள் இனிமேலாவது இது போல நடக்காமலிருக்க தான் இந்த பதிவு.



    இது போல் எத்தனை தளங்களில் இந்த வசதியை செய்திருக்கிறார்கள் என தெரியாது ஆனால் நம் நோக்கம் என்னிடம் உங்களுக்கு தெரியாத விஷயங்களை கேட்பதற்காக வைத்திருக்கிறேன் அதற்காக நான் எல்லாம் தெரிந்தவன் இல்லை இன்னும் சொல்லப்போனால் எனக்கு லினக்ஸ், மேக் இயங்குதளம் குறித்து ஒன்றுமே தெரியாது.



    இதுவும் நீங்கள் விரும்பும் பதிவை எளிதாக கண்டுபிடிக்க உதவும் நான் இதை முழுவதுமாக இன்னும் செய்து முடிக்கவில்லை இன்னும் தொடங்கு நிலையில் தான் இருக்கிறது இருப்பினும் உங்களால் எளிதில் பதிவுகளை வகைப்படுத்தி படிக்கமுடியும்.



    இதுவரை நம் தளத்திற்கு வந்து சென்ற நண்பர்களின் எண்ணிக்கை இதில் படிக்க வந்தவர்களும் அடங்கும் வழி தவறி வந்து சென்றவர்களும் அடங்கும்.



    ஒரு தளத்திற்கு கருத்துரையும் வாக்கும் மிக முக்கியமாக இருக்கிறது அதனால் தான் உங்களை போன்ற நண்பர்கள் அறிந்துகொள்வதற்காக இது வரை நான் எழுதிய மொத்த பதிவுகளின் எண்ணிக்கையையும் , அதற்கான கருத்துரைகளையும் வெளிப்படுத்தியிருக்கிறேன்.



    இது அலைக்ஸா தரவரிசை இவர்கள் தான் உலகத்தில் உள்ள மொத்த இயங்குதளங்களையும் அதன் ஹிட்ஸ் அடிப்படையில் தர வரிசை வழங்குகிறார்கள் அதில் நம் தளத்தின் நிலைமை இதுதான்.



    இந்த கிறுக்கல்கள் என்பதில் மொத்த பதிவுகளையும் மாதம் வாரியாக வருடம் வாரியாக காணமுடியும் நேரம் கிடைக்கும் போது பாருங்கள் மேலும் சில நல்ல பதிவுகள் உங்களுக்கு தென்படலாம்.



    இந்த வரிசை முறையற்ற பதிவுகள் என்பது நீங்கள் ஒவ்வொரு முறை நீங்கள் கிளிக்கும் போதும் வெவ்வேறான பதிவுகள் வரும் ஒருவேளை இதன் வழியாகவும் சில நல்ல பதிவுகளை காண நேரிடலாம்.



    இது சமீபத்திய கருத்துரை என்கிற பெயரில் கடைசியில் வெளியிட்ட 20 கருத்துரைகளை காண்பித்திருக்கிறேன் ஆனால் இது சரிவர இயங்குவதில்லை சில நேரங்களில் புதிய கருத்துரை நண்பர்கள் எழுதியிருந்தாலும் பதிவுகளில் காணப்படுகிறது ஆனால் இந்த சமீபத்திய கருத்துரை பகுதியில் சில நேரம் வராமல் பின்னர் தானாகவே சரியாகி விடுகிறது விரைவில் இதற்கான ஒரு தீர்வை கண்டுபிடிக்கவேண்டும்.



    இந்த முதன்மை கருத்துரையாளர்கள் என்பது இதுவரை நம் தளத்தின் பதிவுகளை விவாதித்தவர்கள் அல்லது சந்தேகம் கேட்பவர்கள் அல்லது பாரட்டியவர்கள் என இந்த பட்டியலில் இருக்கிறார்கள் எது எப்படி இருந்தாலும் நம் தளத்தின் தூண்கள் தான் இவர்கள் இவர்களை போன்ற நண்பர்கள் இல்லையென்றால் நான் இந்தளவிற்கு எழுதியிருப்பேனா என்பது சந்தேகமே! இப்பவும் பெரிதாய் ஒன்றுமே எழுதவில்லை! ஒரு பதிவிற்கு கருத்துரை என்பது அவசியம் இனி படிக்கும் நண்பர்கள் உங்களால் முடிந்தவரை உங்கள் பங்களிப்பை நம் தளத்திற்கு வழங்குங்கள்.



    இது கடைசி சில பதிவுகளின் பட்டியல் எல்லாம் உங்களை படிக்க வைப்பதற்க்காக தான் இப்படி பலவிதமான வகையில் பதிவை பல இடங்களில் வெளிப்படுத்துவதன் நோக்கம்.



    இது நம் பதிவு தொடங்கும் போதே உங்கள் கண்னில் படும்படி தான் வைத்திருக்கிறேன் உங்களுக்கு பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களோடு இதை பகிர்ந்துகொள்ள விரும்பினால் இந்த வழியாக பகிர்ந்துகொள்ளலாம் ஆனால் அவசியம் உங்களிடம் இரண்டிற்குமான கண்க்கு அவசியம்.



    பதிவின் கீழே பாருங்கள் Share என்பதில் நான் ஒரு சிகப்பு கட்டம் இட்டு அடையாளப் படுத்தியிருக்கிறேன் இதன் வழியாக நீஙக்ள் மின்னஞ்சல் அனுப்பலாம் அதாவது உங்களிடம் பேஸ்புக், டிவிட்டர் இரண்டிற்குமான கணக்கு இல்லையென்றால் நீங்கள் பகிர்ந்துகொள்ள விரும்புவதை மின்னஞ்சல் வழியாக பகிர்ந்துகொள்ள முடியும்.



    இனி இதிவும் மிக முக்கியமானது இந்த பதிவை படிக்கிறீர்கள், உங்கள் பாரட்டையோ அல்லது சந்தோஷத்தை வெளிபடுத்தவும் மேலும் உங்களை போன்ற நண்பர்கள் இந்த பதிவை படிக்க வகை செய்வதற்காக நீங்கள் வாக்களிபதன் மூலம் இண்ட்லி வலைத்திரட்டியில் பிரபல பகுதிக்கு வருவதன் மூலம் மேலும் சில பலரை சென்றடையலாம் நான் சமீபத்தில் நம் வலைத்தளத்தின் ஒரு நாளைய சராசரி பயணரின் வருகை கணக்கிட்ட போது 400 முதல் 500 வரை வருகிறது விதி விலக்காக சில பதிவுகள் ஆயிரத்துக்கும் மேலான ஹிட்ஸ் கிடைக்கிறது இந்த சராசரி வருகை 500 என்பதை 1000 வரை உயர்த்துவதில் நீஙக்ள் அளிக்கும் வாக்கின் பங்கு மகத்தானது. ஒவ்வொருவருக்கும் நேரமின்மை இருக்கத்தான் செய்கிறது இருந்தாலும் உங்களால் முடிந்தவரை வாக்களிக்க மற்க்க வேண்டாம் இது என வேண்டுகோளாக ஏற்றுக்கொள்ளுங்களேன்.



    சரி உஙகளுக்கு வாக்களிக்க விருப்பம் ஆனால் எப்படி என தெரியாது என்கிறீர்களா? அதற்கான வழிமுறையை நான் சொல்கிறேன் நம் தளத்தில் இருக்கும் ஓட்டுப்பட்டையை கிளிக்கினால் போதும் உங்களை நேரடியாக இண்ட்லி வலைத்தளத்துக்கு அழைத்துச் செல்லும் அங்கு நீங்கள் ஏற்கனவே பயனர் கணக்கு வைத்திருந்தால் அதில் பயனர் பெயரும்(User Name) கடவுச்சொல்லும் (Password) கொடுத்து உள் நுழைந்துவிடுங்கள். உங்களிடம் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் இரண்டுமில்லையா அந்த பக்கதிலேயே பாருங்கள் பயனர் கணக்கு துவங்குக என இருக்கும் இடத்தில் கிளிக்கினால் போதும் உங்களால் ஓரிரு நிமிடங்களில் உங்களுக்கான அக்கவுண்ட் உருவாக்கிவிட முடியும் இனி என்ன உங்களுக்கு யார் பதிவு பிடித்திருந்தாலும் ஒட்டுப்பட்டையில் ஒரு கிளிக்கு கிளிக்கினால் போதும் ஓட்டு போட்டு விடலாம்.



    இனி நீங்கள் ஓட்டு அதாவது வாக்களித்து விட்டல் இப்படியாக இருக்கும். அவசியம் என் பதிவென்றில்லை நல்ல பதிவுகளை கண்டால் வாக்களியுங்கள்.



    இது தான் கருத்துரை எழுதுவதற்கான பகுதி இதில் உங்கள் கருத்துக்களை கருத்து பெட்டியில் எழுதி Comment as என்கிற இடத்தில் கிளிக்கி உங்கள் உங்கள் மின்னஞ்சல் முகவரியை கொடுத்து Post Comment என்பதை கிளிக்கினால் போதும் உங்கள் கருத்துரை பதிவாகி விடும் உங்கள் கவணக்குறைவால் ஏதாவது தவறாக எழுதியிருந்தால் அதை நீங்களே அழித்து விடலாம் ஆனால் Sign Out செய்து விட்டு மீண்டும் அழிக்க நினைத்தால் அனுமதிப்பதில்லை.

    அடுத்ததாக Subscribe by email என்பதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்துவிட்டால் போதும் நீங்கள் ஏதாவது கருத்துரை எழுதியிருந்தால் அல்லது கேள்வி எழுப்பியிருந்தால் அதற்கு நான் பதில் அளித்திருக்கிறேனா என்பதை அறிய தளத்தில் தேடவேண்டியது இல்லை நான் பதில் அளித்தல் நேரடியாக உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு வந்துவிடும் ஆனால் இதில் ஒரு பிரச்சினை இருக்கிறது நீங்கள் எந்த பதிவில் உங்கள் மின்னஞ்சல் முகவரி கொடுக்கிறீர்களோ அந்த பதிவிற்கு வரும் மொத்த கருத்துரையும் உங்கள் மின்னஞ்சலுக்கு வரும் அதே நேரத்தில் அதை Unsubscribe செய்யும் வசதியும் இருக்கிறது.



    என்ன நண்பர்களே இது ஓரளவிற்கு புரிந்திருக்குமென நம்புகிறேன் ஏதாவது சந்தேகம் இருந்தால் கேட்கலாம் அவசியம் முடிந்தவரை பதில் அளிக்கிறேன் இன்னும் கொஞ்சம் நம் தளத்தை மேம்படுத்தும் ஆலோசனை இருக்கிறது உங்கள் ஆலோசனைகளை வழங்கலாம் இதில் பொதுநலத்தோடு என்சுய நலமும் கலந்தே இருக்கிறது.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    28 Comments
    Comments

    28 Responses to “புரியாத கிறுக்கல்கள்- வழிகாட்டி”

    மாணவன் said...
    November 1, 2010 at 11:17 AM

    தளத்தைப்பற்றிய அனைத்து செய்திகளையும் படங்கள் மூலம் அழகாக விளக்கி எழுதியுள்ளீர்கள் இதில் நானே நிறைய விடயங்களை தெரிந்துகொண்டேன் என்னைப்போன்ற பலர் மற்றும் புதியவர்களுக்கு மிக மிக உதவியாய் இருக்கும்

    பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா

    என்றும் நட்புடன்
    மாணவன்


    மாணவன் said...
    November 1, 2010 at 11:27 AM

    //ஒரு வரி கருத்து: சட்டம் ஒரு சிலந்தி கூடு வண்டுகள் அதை அறுத்துக் கொண்டு அப்பால் போகின்றன. பூச்சிகள் அதில் சிக்கிக் கொள்கின்றன//

    மிகச்சரியாகவும், சிந்திக்கக்கூடியதாகவும் உள்ளது
    நல்ல சிந்தனை

    உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்களுடன்
    மாணவன்


    ஜிஎஸ்ஆர் said...
    November 1, 2010 at 11:59 AM

    @மாணவன்தங்களை போன்ற விஷயம் தெரிந்த நண்பகள் இப்படி சொன்னால் புதியவர்களுக்கு நிச்சியமாய் தெரிய வாய்ப்பில்லை தானே நண்பா அதனால் தான் இப்படியொரு நீளமான பதிவு


    ஜிஎஸ்ஆர் said...
    November 1, 2010 at 12:01 PM

    @மாணவன்சரியாக புரிந்துகொண்டீர்கள் நண்பா, உங்களை போன்ற நண்பர்களின் ஆதரவோடு தொடந்து செல்வோம்


    ம.தி.சுதா said...
    November 1, 2010 at 12:14 PM

    நம்ம சகோதரரின் பதிவில் படங்கள் குறைவு என்று (விசயம் அதிகம்) நினைப்பதுண்டு.. இப்போது தான் தெரியுது எப்போது பாவிக்கிறார் என்று... நான் தங்களின் தளத்திற்கு மின் அஞ்சல் மூலமாகத் தான் வருகிறேன்... வாழ்த்துக்கள் சகோதரா தொடரட்டும் தங்கள் பணி...


    Unknown said...
    November 1, 2010 at 12:45 PM

    மனதைத்ட்தொட்டுவிட்டது நண்பா..சக பதிவராய் உங்கள் ஏக்கம் எனக்கு புரிகிறது.. இன்னும் மேலும் மேலும் எழுத வாழ்த்துக்கள்..


    அன்புடன் மலிக்கா said...
    November 1, 2010 at 7:55 PM

    நல்ல விளக்கங்களுடன் கூடிய மிக அருமையான பதிவு. அனைவருக்கும் சென்றடையவேண்டும்.. பாராட்டுக்கள் நானும் சிவைகள் அறிந்துகொண்டேன் முயற்சிக்கிறேன்


    தர்சிகன் said...
    November 2, 2010 at 9:16 AM

    ஒவ்வெரு வாசகரும் கட்டாயம் தெரிந்திருக்க் வேண்டியது.
    நன்றி


    ஜிஎஸ்ஆர் said...
    November 2, 2010 at 7:47 PM

    @மாணவன்இப்படியெல்லாம் எழுதியாவது நம் தளத்தின் வருகையை அதிகரிக்க முயற்சிக்க வேண்டியிருக்க ஆனாலும் பெரிதாக மாற்றமில்லை


    ஜிஎஸ்ஆர் said...
    November 2, 2010 at 7:47 PM

    @மாணவன்சத்தியாம இது என் சிந்தனை இல்லை நண்பா ஏதோ ஒரு புத்தகத்தில் படித்தது


    ஜிஎஸ்ஆர் said...
    November 2, 2010 at 7:48 PM

    @ம.தி.சுதாஆமா நண்பா அவசியத்திற்கு மட்டுமே படங்கள் இனைப்பேன் அழகுக்காக படம் இனைப்பதில்லை சரியான புரிதலுக்கு நன்றி


    ஜிஎஸ்ஆர் said...
    November 2, 2010 at 7:49 PM

    @அஸ்பர்-இ-சீக்எழுத வேண்டும் ஆர்வம் இருக்கிறது இனிமேல் கொஞ்சம் வேறு சில விஷயங்களையும் இனைக்கலாம என நினைக்க வைக்கிறது


    ஜிஎஸ்ஆர் said...
    November 2, 2010 at 7:50 PM

    @அன்புடன் மலிக்காஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும் என நினைத்து தான் ஒவ்வொரு பதிவையும் சிரத்தையோடு எழுதுகிறேன் ஆனால் படிக்கும் நபர்களின் எண்ணிக்கை மட்டும் குறைவாகவே இருக்கிறது


    ஜிஎஸ்ஆர் said...
    November 2, 2010 at 7:51 PM

    @வருணன்அதற்காக தான் நண்பா எழுதினேன் ஆனாலும் வந்த வாசகர்களின் எண்ணிகையோ அல்லது நண்பர்களின் எண்ணிக்கையோ கூடவில்லை


    ADMIN said...
    November 17, 2010 at 11:09 AM

    தங்களின் ஆக்கம் மிக நன்றாக உள்ளது.. இது முற்றிலும் புதியவர்களுக்கு மட்டுமே பயன்படும் என்பது என் கருத்து.. !

    நன்றி! வாழ்த்துக்கள்..!


    ஜிஎஸ்ஆர் said...
    November 17, 2010 at 5:54 PM

    @தங்கம்பழனி வலைத்தளத்திற்கு புதிதாய் வரும் யாவருக்கும் பயன்படும் என்றாலும் இதில் என் சுயநலமே இருக்கிறது


    புலிகுட்டி said...
    November 19, 2010 at 1:29 PM

    வலைத்தளத்திற்கு புதிதாய் வரும் யாவருக்கும் பயன்படும் என்றாலும் இதில் என் சுயநலமே இருக்கிறது//ரொம்ப அனியயத்திற்க்கு நல்லவரா இருப்பீங்கபோல.இனிமேல் நான் வந்தால் ஓட்டும் பின்னூட்டமும் நிச்சியமாய் இருக்கும்.(முதல் பின்னூட்டத்தில் எழுத்து பிழையாய் தட்டச்சு செய்து விட்டேன் அதனால் நீக்கிவிட்டேன்)நன்றி.


    ஜிஎஸ்ஆர் said...
    November 19, 2010 at 4:53 PM

    @புலிகுட்டிவெளுத்ததெல்லாம் பால் என்று நம்பி விடாதீர்கள் நான் நல்லவன் தான் ஆனால் எனக்குள்ளும் எனக்கே தெரியாமல் குறைகள் இருக்கும் மேலும் முதலில் நீங்கள் எழுதியிருந்த கருத்துரையி உங்கள் பெயர் மட்டும் இருந்தது கருத்துரை இல்லாமல் அதனால் அந்த தடத்தையும் அழித்து விட்டேன்

    அவசியம் வாருங்கள் உஙகளால் முடிந்த பங்களிப்பை நம் தளத்தில் தொடருங்கள்


    Vengatesh TR said...
    November 26, 2010 at 8:43 AM

    .இந்த கிறுக்கல் மிக நன்றாக இருக்கிறது !!





    .(கிறுக்கல் - பதிவு), சரியாக புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன் !!

    (தவறுஏதும் இருப்பின், உரிமையாக பேசியதற்கு மன்னிக்கவும்)


    ஜிஎஸ்ஆர் said...
    November 26, 2010 at 8:10 PM

    @சிகப்பு மனிதன்ஒன்றும் தவறில்லை நானும் தலைப்பை அப்படித்தானே வைத்திருக்கிறேன் நண்பரே


    SABA1972 said...
    December 9, 2010 at 6:46 AM

    நன்றி


    தேவா said...
    December 9, 2010 at 6:50 AM

    நன்றி


    ஜிஎஸ்ஆர் said...
    December 9, 2010 at 9:39 AM

    @SABA1972புரிதலுக்கு நன்றி


    ஜிஎஸ்ஆர் said...
    December 9, 2010 at 9:39 AM

    @மடிப்பாக்கம்புரிதலுக்கு நன்றி


    avvavm said...
    December 25, 2010 at 5:10 PM

    நண்பர் GSR அவர்களுக்கு

    நண்பரே உங்களுக்கு தனியாக ஈமெயில் அனுப்பும் 'மின்னஞ்சல் தொடர்புக்கு' என்னும் லிங்க்ல் Error message வருகிறதே. நீங்கள் கவனிக்கவில்லையா?


    avvavm said...
    December 25, 2010 at 5:13 PM

    நண்பர் GSR அவர்களுக்கு

    நண்பரே உங்களுக்கு இடும் பின்னூட்டத்தில் படங்களை (Photos) இணைப்பது எப்படி? (பல ஆயிரம் வார்த்தைகள் சொல்வதை விட ஒரு படம் அனைத்தையும் விளக்கிவிடுமே )


    ஜிஎஸ்ஆர் said...
    December 27, 2010 at 10:20 AM

    @avvavm மின்னஞ்சல் அனுப்புவதற்கு முன் நான் மேலே எழுதியிருப்பதை கவணித்தீர்களா மின்னஞ்சல் அனுப்பும் முன் http://gsr-gentle.blogspot.com என்பதாக இருக்கவேண்டும்.

    இனி முயற்சித்து பாருங்கள் சரியாகவே இயங்குகிறது சோதித்து பார்த்து விட்டேன்.

    \\நண்பரே உங்களுக்கு இடும் பின்னூட்டத்தில் படங்களை (Photos) இணைப்பது எப்படி? (பல ஆயிரம் வார்த்தைகள் சொல்வதை விட ஒரு படம் அனைத்தையும் விளக்கிவிடுமே )\\

    மன்னிக்கவும் அதற்கான வசதி நம் தளத்தில் இனைக்கவில்லை இனைப்பதற்கான ஆலோசனையும் இல்லை தேவைப்பட்டால் ஏதாவது ஒரு தளத்தில் அப்லோட் செய்து உரலை(URL) இங்கு பகிந்து கொள்ளுங்கள்.


    ju said...
    May 14, 2011 at 10:41 AM

    புரியாத கிறுக்களுக்கு புதிதாய் வந்தேன்......
    நல்லா இருக்கு நன்பரே....
    தோடர வாழ்த்துக்கள்.
    மின்னஞ்சல் முகவரியை உள்ளிட முடியலை... ஏன்?
    மு.நட்ராஜ்
    புதுப்பை.
    திருப்பூர் மாவட்டம்


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர