Sep 22, 2010

5

விண்டோஸ் இன்ஸ்டால் (இயங்குதளம் நிறுவல் Windows Installation)–பாகம் 2

  • Sep 22, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து : தன்னடக்கம் ஒரு சிறந்த ஆபரணம்.

    வணக்கம் நண்பர்களே இந்த பதிவை படிக்கும் முன் முந்தைய பதிவின் விபரத்தையும் பார்த்து விடுங்களேன்.

    விண்டோஸ் இன்ஸ்டால் (இயங்குதளம் நிறுவல் Windows Installation)–பாகம் 1

    இப்பொழுது உங்களிடம் விண்டோஸ் இயங்குதளம் நிறுவுவதற்கான குறுந்தகடு இருக்கிறது ஆனால் இப்போதும் நீங்கள் உடனேயே சிடி டிரைவில் இட்டு இயங்குதளம் நிறுவ தொடங்கி விட கூடாது அதற்கு முன்னதாக செய்ய வேண்டிய சில விஷயங்களையும் சொல்லிவிடுகிறேன். உங்களிடம் அவசியம் மதர்போர்டின் டிரைவர்ஸ் இருக்கவேண்டும் சாதரணமாக நீங்கள் புதிய கணினியாக வாங்கியிருந்தால் உங்களுக்கு டிரைவர்ஸ் அடங்கிய குறுந்தகடு கிடைத்திருக்கும் ஒரு வேளை நீங்கள் பழைய கணினியை வாங்கியிருக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம் சில வேளை உங்களிடம் டிரைவர்ஸ் அடங்கிய குறுந்தகடு இருக்க வாய்ப்பில்லை எனவே அவசியம் உங்கள் கணினியின் டெஸ்க்டாப்பில் ஏதாவது ஒரு வெற்றிடத்தில் கிளிக்கி திறக்கும் பாப் அப்பில் செட்டிங்ஸ் திறந்து அதில் உங்கள் கிராப்பிக்கல் டிரைவர் பெயரை குறித்துக்கொண்டு இனையத்தில் தேடி தரவிறக்கி வைத்துக்கொள்ளவும் அதே போல முன்பு நெட்ஒர்க் டிரைவர் இன்ஸ்டால் செய்யப்பட்டிருந்தால் அதையும் தரவிறக்கி வைத்துக்கொள்ளவும்.



    அடுத்த்தாக Administrative Tools ->>Computer Management ->>System Tools ->>Device Manager திறந்து சவுண்ட் டிரைவர் என்ன என்பதை பார்த்த்துக்கொள்ளுங்கள் சந்தேகத்திற்கு படத்தை பாருங்கள் விண்டோஸ் இயங்குதளம் நிறுவாத பட்சத்தில் தேவையானால் டிரைவர்களை அப்டேட் இதன் வழியாகவே செய்யமுடியும். இதை வைத்து டிரைவர் தரவிறக்கி வைத்துக்கொள்ளுங்கள் ஒரு வேளை கிடைக்கவில்லையென்றாலும் பின்னர் பார்த்துக்கொள்ளலாம் சில நேரங்களில் மதர்போர்டோடு சவுண்ட் கார்டு இனைக்கப்பட்டிருக்குமானால் டிரைவர் தேடவேண்டிய அவசியம் இருக்காது ஆனால் அவசியம் கிராப்பிக்கல் டிஸ்பிளே டிரைவர் வேண்டும்.



    அல்லது Start->> Settings->>Control Panel->>Sounds and Audio Devices திறந்து இதன் வழியாகவும் ஆடியோ டிரைவரை கண்டுபிடிக்க முடியும்.



    இதெயெல்லாம் கண்டுபிடிப்பதற்கு வேறு ஒரு வழியும் இருக்கிறது Start->>Run->>type dxdiag என டைப் செய்து (type என்பதை எழுதவேண்டியதில்லை) திறக்கும் பாப் அப் விண்டோவில் மொத்த தகவலும் அடங்கியிருக்கும் படத்தை பாருங்கள் எளிதாக புரியும்.



    என்ன நண்பர்களே இந்த பதிவின் வாயிலாக டிரைவர்ஸ் பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் இனி உங்களிடம் இனையம் இல்லை, இருந்தால் உங்களால் டிரைவர்ஸ் தேடி கண்டுபிடிக்க பெரிய கடினம் இருக்காது ஆனால் இனையம் இல்லாதவர்களுக்கு உங்கள் கணினியில் இருக்கும் டிரைவர்ஸை பேக்கப் எடுக்கும் வசதி பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம் இது உங்கள் கணினியில் வைரஸ் இல்லை என்கிற நம்பிக்கை இருந்தால் மட்டுமே உதவும் ஒரு வேளை வைரஸ் பிரச்சினையால் தான் இயங்குதளம் மாற்றி நிறுவப்போகிறீர்கள் என்றால் அவசியம் நீங்கள் டிரைவர்ஸ் தேடி தரவிறக்க வேண்டியிருக்கும்.

    அடுத்த பதிவின் வாயிலாக மேற்சொன்ன இந்த வழிமுறையில்லாமல் டிஸ்பிளே டிரைவர்ஸ் கண்டுபிடிப்பதற்கான ஒரு மென்பொருளை பற்றியும், இயக்கமே இல்லாத கணினியின் மதர்போர்டு டிரைவர் கண்டுபிடிப்பதையும் பார்க்கலாம் அதற்கடுத்ததாக விண்டோஸ் நிறுவல் (விண்டோஸ் இன்ஸ்டாலேசன்) Windows Installation க்குள் நுழைந்து விடலாம் இத்தனையும் உங்களுக்கு தெரிந்திருந்தால் உங்களுக்கு முழுமையாய் புரிந்துகொள்ள வசதியாய் இருக்கும் எனபதற்காகத்தன் எழுதுகிறேன்.

    விண்டோஸ் இன்ஸ்டால் (இயங்குதளம் நிறுவல் Windows Installation)–பாகம் 3

    விண்டோஸ் இன்ஸ்டால் (இயங்குதளம் நிறுவல் Windows Installation)–பாகம் 4

    விண்டோஸ் இன்ஸ்டால் (இயங்குதளம் நிறுவல் Windows Installation)–பாகம் 5

    விண்டோஸ் இன்ஸ்டால் (இயங்குதளம் நிறுவல் Windows Installation)–பாகம் 6

    விண்டோஸ் இன்ஸ்டால் (இயங்குதளம் நிறுவல் Windows Installation)–பாகம் 7

    விண்டோஸ் இன்ஸ்டால் (இயங்குதளம் நிறுவல்) (Windows Installation)–இறுதி பாகம் 8

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    5 Comments
    Comments

    5 Responses to “விண்டோஸ் இன்ஸ்டால் (இயங்குதளம் நிறுவல் Windows Installation)–பாகம் 2”

    யாழ் பறவை said...
    September 22, 2010 at 5:26 PM

    மென்மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்...........


    Anonymous said...

    September 23, 2010 at 12:44 AM

    நன்றி! தங்களின் கருத்துரை ஊக்கத்தை தருகிறது!
    எனக்கு கணினி துறை சார்ந்த அவ்வளவு விசயம் தெரியாது! எனது இடுகை இமெயிலில் வந்த செய்திகளின் தொகுப்பு மட்டுமே! வாக்களித்து பிரபலமாக்கியமைக்கு நன்றி!


    ஜிஎஸ்ஆர் said...
    September 23, 2010 at 9:25 AM

    @யாழ் பறவைஅவசியமாக தொடர்ந்து எழுதவே விருப்பம் ஆனாலும் இறைவனின் சித்தம் எதுவோ அப்படியே நடக்கட்டும்


    ஜிஎஸ்ஆர் said...
    September 23, 2010 at 9:28 AM

    @Sai Gokula Krishna நல்ல செய்தியை எளிமையான தமிழில் புரிந்துகொள்ளும் வகையில் கொடுத்திருந்தீர்கள் என்னைப்பொருத்தவரை நான் இனையத்தில் செலவழிக்கும் நேரம் குறைவு கிடைக்கும் நேரத்தில் தொழில்நுட்ப தகவல்களையோ அல்லது நகைச்சுவையோ கண்டால் படிப்பது வழக்கம் எனக்கு பிடித்திருந்தால் அவசியம் கருத்துரையும் வாக்கும் அளித்திருப்பேன்


    A IAUDHAYARAJ said...
    February 13, 2011 at 9:05 AM

    வனக்க நன்பறே மிகஅருமையான இனையதளம்
    உங்களுடைய பதவு புரியாதவர்களுக்குக்கூட
    புரியுபடியாக உள்ளது தங்களுடைய பணிசிறக்க
    நான் இறைவனிடம் வேன்டிக்கொல்கிறேன்
    வாழ்க வளமுடன்��


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர