Jun 20, 2011

8

ஆங்கிலம் தமிழ் டிக்ஸ்னரியும், ஆங்கிலம் வழி தமிழ் தேடலும்

  • Jun 20, 2011
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து: கோபத்திலும் பாவம் செய்யாதீர்கள்.

    வணக்கம் நண்பர்களே இந்த பதிவின் வழியாக நாம் இரண்டு விஷயங்களை பார்க்கலாம் ஒன்று தமிழ் அகராதி(டிக்ஸ்னரி) மற்றொன்று இனையத்தில் எல்லோருக்கும் தமிழில் எழுத தெரியாது ஆனால் தமிழில் இருக்கும் ஒரு விஷயத்தை தான் தேட வேண்டியிருக்கிறது என்றால் என்ன செய்வது அதற்கு தான் இந்த பதிவு இதன் வழியே நாம் puriYaatha kiRukkalkaL என்பதாக கொடுத்து தேடினால் புரியாத கிறுக்கல்கள் சம்பந்தபட்ட பதிவுகளை வெளிக்கொண்டு வரலாம்.

    இனி முதலாவதாக ஐரோப்பியன் டிக்ஸ்னரி குறித்து பார்க்கலாம் இவர்கள் 31 மொழிகளுக்கு அர்த்தம் கொடுக்கிறார்கள் குறிபிட்டு சொல்வதனால் தமிழுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் வேறு இந்திய மொழிகளுக்கு இல்லை என்பதை உணரமுடிகிறது இனி இதன் தேடலின் பதில் எப்படியாக இருக்கும் என நினைப்பவர்களுக்கு உதாரணமாக Aggregate என்பதை தேடினால் அது எந்தவிதமான இடத்தில் பயன்படுத்த படுகிறது வேறு எந்த இடத்தில் இந்த வார்த்தையை பயன்படுத்த முடியும் என்பதையும் நமக்கு தெரிந்துகொள்ளும் வகையில் மிக எளிமையாக தருகிறார்கள் மேலும் தமிழ் வார்த்தைக்கான ஆங்கில சொற்றொடரும் தெரிந்துகொள்ளலாம். ஆனால் என்ன ஒரு குறை இனையத்தில் மட்டுமே பயன்படுத்தும் வசதி கொண்டது.

    ஐரோப்பியன் டிக்ஸ்னரி பயன்படுத்தி பார்க்க நினைப்பவர்களுக்கும் மேலும் புக்மார்க் செய்து கொள்ள விரும்புவர்களுக்கும் ஐரோப்பியன் டிக்ஸ்னரி EUROPEAN DICTIONARY



    இரண்டாவதாக தமிழை தேடுவதற்கு தமிங்கிலீஸ் அதாவது நான் மேலே சொன்ன மாதிரி puriYaatha kiRukkalkaL என்பதாக கொடுத்து தேடினால் புரியாத கிறுக்கல்கள் சம்பந்தபட்ட இனைய தகவல்களை காணலாம் தேவைப்படுபவர்கள் தங்கள் தளத்திலேயே இனைத்துக்கொள்ளலாம்.



    இனி சோதித்து பார்க்க விரும்புவர்கள் இங்கேயே நம் தளத்தின் வலது பக்கம் கீழ் மூலையில் பாருங்கள் தமிழை ஆங்கிலத்தில் தேடு என்பதாக இருக்கும் முயற்சித்து பாருங்கள் உங்களுக்கு தேவையென்று விரும்பினால் மேலிருக்கும் நிரலை பயன்படுத்துங்கள்.

    என்ன நண்பர்களே இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாகவும், உபயோகபடும்படியாக இருக்குமென்றே நம்புகிறேன் இதை இதோடு விட்டுவிடாமல் தாங்கள் தெரிந்துகொண்ட தகவலை தங்கள் நண்பர்களுக்கும், உறவிணர்களுக்கும் அறிமுகபடுத்துங்கள் அவர்களும் தெரிந்துகொள்ளட்டும்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர் நாகு
    8 Comments
    Comments

    8 Responses to “ஆங்கிலம் தமிழ் டிக்ஸ்னரியும், ஆங்கிலம் வழி தமிழ் தேடலும்”

    மாணவன் said...
    June 20, 2011 at 1:06 PM

    வணக்கம் அண்ணே,

    மிகவும் பயனுள்ள தகவலை பதிவிட்டு பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி.
    நேரம் கிடைக்கும்போது தொடரட்டும் உங்களது பதிவுகள்...


    S.முத்துவேல் said...
    June 20, 2011 at 2:32 PM

    ஆம்.நிச்சயமாக நல்ல பதிவு
    நன்றி நண்பரே...


    Unknown said...
    June 20, 2011 at 3:52 PM

    arumai arumai


    ஜிஎஸ்ஆர் said...
    June 21, 2011 at 1:36 PM

    @மாணவன் ஆரம்ப காலம் முதல் இன்று வரை தாங்கள் சிறந்த மனிதன் என்பதை பல தருணங்களில் உணர்த்திக் கொண்டே இருக்கிறீர்கள்

    வாழ்க வளமுடன்


    ஜிஎஸ்ஆர் said...
    June 21, 2011 at 1:37 PM

    @எஸ்.முத்துவேல் தஙகளின் வருகைக்கும் புரிதலுக்கும் மிக்க நன்றி நண்பரே


    ஜிஎஸ்ஆர் said...
    June 21, 2011 at 1:37 PM

    @மகாதேவன்-V.K புரிதலுக்கு நன்றி நண்பா


    'பரிவை' சே.குமார் said...
    June 22, 2011 at 11:18 AM

    நல்ல பதிவு.


    ஜிஎஸ்ஆர் said...
    June 22, 2011 at 7:53 PM

    @சே.குமார் நன்றி நண்பா கூகுளின் ஆங்கிலம்-தமிழ்-ஆங்கிலம் மொழிபெயர்ப்பு வசதியை பயன்படுத்தி பாருங்கள்


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர