Jun 10, 2011

23

கருப்பு வெள்ளை நிழல்படத்தை எளிதாக கலராக மாற்றலாம்

  • Jun 10, 2011
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து: பாரட்டுவதிலும், அங்கிகரிப்பதிலும் கஞ்சத்தணம் வேண்டாம்.

    வணக்கம் நண்பர்களே முன்பு போல அதிகம் பதிவுகள் எழுதமுடியவில்லை பணிச்சுமையோடு மன அழுத்தமும் சேர்ந்து எழுதுவதற்கான சூழலை தடுத்து விடுகிறது பொதுவாகவே நான் எழுதுவதை கொஞ்சம் விரும்புகிற பக்கத்தை சேர்ந்தவன் அது என் சுய நலம் மட்டுமல்ல கூடவே எனக்கு தெரிந்த நல்ல உபயோகபடுகிற விஷயங்களை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளவும் மற்றவர்களுக்கு பயனபடும் என்கிற உள்ளுணர்வு தான் காரணம் அதனால் தான் முடிந்தவரை சிறந்த நல்ல தகவல்களை மட்டுமே இது வரை பகிர்ந்து வந்திருக்கிறேன் விதி விலக்காக சில பதிவுகளும் இருக்கும். சரி நண்பர்களே இனி நேரடியாக பதிவுக்குள் வந்துவிடுவோம்.

    பொதுவாக நம்மிடம் இருக்கும் நமது மூதாதையாரின் நிழல்படங்கள் கருப்பு வெள்ளை சார்ந்ததாகவே இருக்கும் அப்படி இருக்கும் வெள்ளை நிற நிழல்படங்களை கலராக மாற்ற போட்டோஷாப் மென்பொருள் உதவும் அதிலும் கொஞ்சம் மெனக்கெட்டாலே சரி செய்யமுடியும் போட்டோஷாப் தெரிந்தவர்களுக்கு எளிதான காரியம் தான் ஆனால் போட்டோஷாப் தெரியாத எத்தனை நண்பர்கள் இருக்ககூடும் அந்த பிரச்சினைக்கு தீர்வாக இந்த பதிவு இருக்கும் ஆனால் இதிலும் கொஞ்சம் சிரத்தையோடு செய்தால் மிகச்சிறப்பான ரிசல்ட் கிடைக்கும்.

    இனி ReColor (Black and White to Color) 9எம்பி அளவுள்ள இந்த மென்பொருளை தரவிறக்கி வழக்கம் போல கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள் இனி எப்படி கருப்பு வெள்ளை நிழல்படத்தை கலர் வண்ணப்படமாக மாற்றுவதை என்பதை கீழே பார்க்கலாம்.

    உங்களுக்கு செய்து காண்பிப்பதற்காக எனது மகன் ஸ்ரீராம் நிழல்படத்தை எடுத்துக்கொண்டிருக்கிறேன் கீழிருக்கும் படத்தை பாருங்கள் இது ஒரிஜினல் நிழல்படம்.



    மகனின் கலர் நிழல்படத்தை சோதனை முயற்சிக்காக கருப்பு வெள்ளையாக மாற்றப்பட்டிருக்கிறது.



    இனி நான் மேலே கொடுத்திருந்த Recolor மென்பொருள் திறந்து வழக்கமான முறையில் பைலை திறக்கவும் இதன் வலது பக்கத்தில் ஒவ்வொன்றிற்குமான கலர் வகைப்படுத்த பட்டிருக்கும் அதன் வழியாக தேவையான இடங்களை அந்தந்த கலரை செலக்ட் செய்து பிரஷால் நான் படத்தில் காண்பித்துள்ளது போல அந்தந்த பாகத்தை சுற்றி வரைந்து விடுங்கள் ஆனால் நான் உங்களுக்கு இந்த வழிமுறையை பரிந்துரைக்க போவதில்லை கலர் செலக்ட் செய்ய எளிதாக இருக்கும் வகையில் வேறு ஏதாவது ஒரு கலர் நிழல்படத்தையும் திறந்து வைத்துக்கொள்ளுங்கள்.

    நான் இந்த வழிமுறையை பரிந்துரைப்பதன் காரணம் பொதுவாகவே முகம், கை போன்ற தோல் வெளியில் தெரியும் பாகத்தில் உங்களால் சரியான கலர் செலக்ட் செய்யமுடியாத நிலை இருக்கும் அதற்காக தான் கூடவே ஒரு கலர் நிழல்படத்தையும் திறக்க சொல்கிறேன் இனி கிழிருக்கும் படத்தை பாருங்கள் சிவப்பு நிற குறியிட்டு இரண்டு என எழுதியிருக்கும் டூல் தான் Eye Droer அந்த டூலை பயன்படுத்தி கலர் நிழல்படத்தில் உங்களுக்கு எந்த கலர் எந்த இடத்திற்கு சரியாக வரும் என நினைக்கிறீர்களோ அந்த கலரை செலகட் செய்யுங்கள் செலக்ட் செய்ய ஒரு முறை கலரை தொட்டால் போதும் அடுத்தாக சிவப்பு கட்டத்திற்குள் மூன்று என குறிப்பிட்டுருக்கிறேன் பாருங்கள் அந்த டூல் தான் பிரஷ், இனி பிரஷை பயன்படுத்தி வரைந்து விடுங்கள் உதாரணமாக முகத்திற்கான கலர் செலக்ட் செய்தாகிவிட்டது என்றால் கருப்பு வெள்ளை படத்தில் முகத்தை சுற்றி வரைந்து விடுங்கள், வரையும் போது மிகச்சரியாக துல்லியமாக இருக்க வேண்டுமென்பதில்லை ஓரளவிற்கு வரைந்தாலே போதும் இப்படிடையாக ஒவ்வொரு பாகமாக முடிந்த்தும் படத்தை சுற்றி உள்ள பகுதிகளிலும் பின்புலத்துக்கு ஏற்றவாறு கலரை கொடுத்து விடுங்கள். நீங்கள் இபோது வரைந்த்து எப்படி இருக்கிறது என பார்க்க நினைத்தால் நான்கு என்ற எண் அடையாளபடுத்தியுள்ள டூலை கிளிக்கினால் போதும் படத்தின் பிரிவியூ பார்க்கலாம் நீங்கள் எதிர்பார்த்த ரிசல்ட் வந்துவிட்டது என்றால் படத்தை சேமித்து விடுங்கள் தேவையானால் இதன் Working File –யையும் போட்டோஷாப்பில் PSD சேமித்து வைப்பது போல சேமித்து வைக்கலாம்.



    கீழிருக்கும் படத்தை பாருங்கள் எப்படியாக கலர் வரைந்திருக்கிறேன் என இதே போல ஓரளவிற்கு வரைந்தாலே போதும் முதலில் கொஞ்சம் சிரமாக தெரியும் ஆனால் கொஞ்ச நேரத்திலேயே உங்களுக்கு பழகிவிடும் “சித்திரமும் கை பழக்கம் செந்தமிழும் நா பழக்கம்” என்பதை போல எல்லாம் முயன்றால் எளிதாய் முடியும்.



    நான் தங்களுக்காக எடுத்துக்கொண்ட எனது மகனின் கருப்பு வெள்ளை நிழல்படம் இப்போது கலர் வண்ணப்படமாக மாறியிருக்கிறது சிறு குறைகள் இருக்கலாம் உதாரணத்திற்காக என்பதில் நேரம் அதிகம் செலவலிக்காமல் வரைந்த்து மேலும் கொஞ்சம் மெனக்கெட்டால் இன்னும் அருமையாய் வந்திருக்கும் அதனால் என்ன உங்களுக்காக தானெ இது உங்களுக்கு புரிந்திருக்குமென்று நம்புகிறேன் இதை பற்றி ஏதேனும் சந்தேகம் வந்தால் கருத்துரையில் பதியவும் அல்லது மின்னஞ்சல் அனுப்பவும் அதற்கான வசதியும் நம் தளத்தில் இருக்கிறது.



    என்ன நண்பர்களே இந்த பதிவு உங்களுக்கு புரிந்திருக்குமென்றே நம்புகிறேன் பதிவு பயனுள்ளதாகவும், உபயோகபடும்படியாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகபடுத்துங்கள்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர் நாகு
    23 Comments
    Comments

    23 Responses to “கருப்பு வெள்ளை நிழல்படத்தை எளிதாக கலராக மாற்றலாம்”

    S.முத்துவேல் said...
    June 10, 2011 at 11:18 AM

    மிக நல்ல தகவல்


    Mohamed Faaique said...
    June 10, 2011 at 11:24 AM

    எங்க ஸார் இப்படியெல்லாம் தேடி எடுக்குரீங்க.... சூப்பர் ஸார்...


    Mahan.Thamesh said...
    June 10, 2011 at 12:14 PM

    நல்ல பகிர்வு


    Aba said...
    June 10, 2011 at 8:26 PM

    Nice. very useful. thanks


    Ashwin-WIN said...
    June 10, 2011 at 10:36 PM

    நன்றி அருமையான தகவலுக்கு.


    Unknown said...
    June 11, 2011 at 12:49 AM

    ஒரு வரியில் சொன்னால் suuuuuuuuuuuuuuuuuuuuuuuper

    www.masteralamohamed.blogspot.com


    மாணவன் said...
    June 11, 2011 at 9:13 AM

    வணக்கம் அண்ணே,

    வேலைப்பளுவுக்குமிடையில் பயனுள்ள மென்பொருளை அனைவரும் புரிந்துகொள்ளும்படி பதிவிட்டு பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றிண்ணே.


    Arunvetrivel said...
    June 12, 2011 at 9:49 PM

    மிகவும் அருமையான உபயோகமான சாப்ட்வேர் இது.பகிர்ந்ததிற்க்கு மிகவும் நன்றி நண்பரே.


    Unknown said...
    June 14, 2011 at 11:08 AM

    மிக அருமையான மென்பொருள், அடிக்கடி உங்களிடமிருந்து பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.

    வாழ்க வளமுடன்.


    ஜிஎஸ்ஆர் said...
    June 15, 2011 at 5:42 PM

    @எஸ்.முத்துவேல் நன்றி நண்பரே


    ஜிஎஸ்ஆர் said...
    June 15, 2011 at 5:44 PM

    @Mohamed Faaiqueசமீபத்தில் போட்டோஷாப்பில் சில வேலைகள் செய்ய வேண்டி இருந்தது அதனால் சில டுட்டோரியல் புத்தகங்கள் தரவிறக்க தேடிக்கொண்டிருந்தேன் அந்த நேரத்தில் எதிர்பார்க்காமல் இது பற்றி தெரிந்தது தரவிறக்கி பயன்படுத்தி பார்த்தேன் அருமையாய் இருந்தது அப்படியே இதை வைத்து ஒரு பதிவு எழுதிவிட்டேன் அவ்வளவே!


    ஜிஎஸ்ஆர் said...
    June 15, 2011 at 5:45 PM

    @Mahan.Thameshவருகைக்கும் கருத்திற்கும் நன்றி


    ஜிஎஸ்ஆர் said...
    June 15, 2011 at 5:45 PM

    @Abarajithanவருகைக்கும் பதிவை பற்றிய புரிதலுக்கும் நன்றி தொடர்ந்து இனைந்திருங்கள்


    ஜிஎஸ்ஆர் said...
    June 15, 2011 at 5:46 PM

    @Ashwin-WINதங்களின் கருத்திற்கு நன்றி


    ஜிஎஸ்ஆர் said...
    June 15, 2011 at 5:46 PM

    @MASTER ALA MOHAMED நன்றி நண்பா நேரம் கிடைக்கும் போது அவசியம் உங்கள் தளத்திற்கு வருகிறேன்


    ஜிஎஸ்ஆர் said...
    June 15, 2011 at 5:48 PM

    @மாணவன் நன்றி தம்பி இந்த மென்பொருளை முதலில் தங்களிடம் தான் பகிர்ந்து கொண்டேன் ஞாபகமிருக்கிறதா?

    \\வேலைப்பளுவுக்குமிடையில் பயனுள்ள மென்பொருளை அனைவரும் புரிந்துகொள்ளும்படி பதிவிட்டு பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றிண்ணே.\\

    நமக்கும் ஒரு குட்டி சந்தோஷம் தேவைப்படுகிறதே!


    ஜிஎஸ்ஆர் said...
    June 15, 2011 at 5:49 PM

    @arunvetrivel தஙக்ளின் புரிதலுக்கும் கருத்திற்கும் நன்றி


    ஜிஎஸ்ஆர் said...
    June 15, 2011 at 5:50 PM

    @S.ரவிசங்கர் நன்றி நண்பா இறைவன் சித்தம் இருந்தால் உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்


    ranjeeth said...
    December 3, 2011 at 6:39 PM

    good


    ஜிஎஸ்ஆர் said...
    December 23, 2011 at 5:09 PM

    @ranjeeth நன்றி


    hamaragana said...
    December 30, 2012 at 11:40 AM

    அன்புடன் வணக்கம் நண்பரே ,
    எனது தந்தை தாய் படத்தை கலராக மாற்ற நினைத்தேன் உங்கள் பதிவு உற்சாகமூட்டியது
    நன்றி நண்பரே...


    Unknown said...
    December 31, 2012 at 10:29 AM

    அருமையான தகவல் சூப்பரான சாப்ட்வேர் மிக்க நன்றி


    Unknown said...
    January 2, 2013 at 1:41 PM

    Miga Nalla Pathiyu. Nantri Sir.
    Ashok


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர