Nov 16, 2010

24

கீபோர்ட் பவர் பட்டன் டிசாபிள் (Keyboard Power Button Disable)

  • Nov 16, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து: நாணல் வளைந்து கொடுப்பதால் அதற்கு பலமில்லை என்று அர்த்தமில்லை.

    வணக்கம் நண்பர்களே கணினியை உபயோகிக்க எத்தனையோ விதமான ஷார்ட்கட் கீகள் இருக்கின்றன ஆனாலும் கீபோர்டை தவிர்க்க முடியாது நாம் பார்க்க போவது இந்த கீபோர்டில் இருக்கும் பவர் கீயை எப்படி இயங்கவிடாமல் செய்வது என்பதை பற்றித்தான்.

    பொதுவாக இந்த பட்டன் எல்லா கீபோர்டுகளிலும் காணப்படுவதில்லை ஆனால் இந்த வகையான கீபோர்டு இருப்பவர்கள் நிச்சியமாக ஏதாவது தட்டச்சு செய்யும் நேரத்தில் தவறுதலாக செய்துவிட்டால் அதை அழிப்பதற்கு Backspace பயன்படுத்துவார்கள் ஆனால் அந்த நேரத்தில் கொஞ்சம் கவணக்குறைவாக அதன் அருகிலேயே இருக்கும் Power கீயை அழுத்தினால் போதும் கணினி ஷட் டவுன் ஆகிவிடும் இந்த நேரத்தில் நீங்கள் திறந்து வைத்திருந்த பைல் ஆட்டோ சேவ் வசதியோ அல்லது நீங்களாகவோ சேமித்திருக்க விட்டால் நீங்கள் தட்டச்சு செய்த அத்தனையும் காணமல் போய்விட வாய்ப்பு உண்டு. இந்த வகையிலான கீபோர்ட் பயன்படுத்துபவர்கள் நிச்சியமாக பிரச்சினையை சந்தித்திருப்பார்கள் அதற்கு தீர்வுதான் இந்த பதிவு.



    இனி நீங்கள் செய்ய வேண்டியது Start -> Settings -> Control Panel சென்று அங்கிருக்கும் Power Options என்பதை இருமுறை கிளிக்கி அல்லது வலது கிளிக் செய்து திறந்து அதில் Advanced டேப் திறக்கவும் இப்போது When I press the power button on my computer என்பதன் கீழ் இருக்கும் கோம்போவை திறந்து அதில் Do nothing என்பதை தெரிவு செய்து Apply கொடுத்து Ok கொடுத்து விடுங்கள் அவ்வளவுதான் இனிமேல் நீங்கள் வேகமாக தட்டச்சு செய்யும் போது தவறி பவர் பட்டனில் விரல் அழுத்தினாலும் பிரச்சினையில்லை.



    நண்பர்களே இது உங்களுக்கு புரிந்ததா இதில் ஏதாவது சந்தேகம் இருப்பின் கேட்கலாம் எனக்கு தெரிந்தவரை சொல்லித்தர முயற்சி செய்கிறேன் பதிவு பிடித்திருந்தால், உபயோகமானதாக இருந்தால் அவசியம் பதிவை பற்றிய கருத்துரையும், இண்ட்லியில் வாக்கும் பதிந்து செல்லவும்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    24 Comments
    Comments

    24 Responses to “கீபோர்ட் பவர் பட்டன் டிசாபிள் (Keyboard Power Button Disable)”

    THOPPITHOPPI said...
    November 16, 2010 at 11:01 AM

    என் கீபேடில் பவர் பட்டன் இல்லை

    இருந்தாலும் வாழ்த்துக்கள்


    மாணவன் said...
    November 16, 2010 at 11:31 AM

    பயனுள்ள தகவலை பகிர்ந்துள்ளீர்கள் அருமை,

    நான் பயன்படுத்தும் கீபோர்டில் இல்லையென்றாலும் தெரிந்துவைத்துக்கொண்டால் தேவைப்படும்போது பயன்படுத்திக்கொள்ளலாம்.

    அநேகமாக இது பழைய மாடல் ஃகீபோர்டு என நினைக்கிறேன் சில நண்பர்களின் கணினிகளில் பார்த்துள்ளேன்

    பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பா...

    தொடரட்டும் உங்கள் பொன்னான பணி


    மாணவன் said...
    November 16, 2010 at 11:34 AM

    //ஒரு வரி கருத்து: நாணல் வளைந்து கொடுப்பதால் அதற்கு பலமில்லை என்று அர்த்தமில்லை//

    மிகவும் சரியான கருத்து அருமையாக சொன்னீர்கள்

    நன்றி
    நட்புடன்
    மாணவன்


    ADMIN said...
    November 16, 2010 at 12:53 PM

    பார்த்தேன், படித்தேன், கற்றுக்கொண்டேன்.. ஆனால் பயன்படுத்த வழியில்லை.. ஏனென்றால் என் கீபோர்ட்டில் பவர்கீ பட்டன் இல்லை.. நன்றி..வாழ்த்துக்கள்..!


    ப.கந்தசாமி said...
    November 16, 2010 at 3:39 PM

    என் கீபேடில் பவர் பட்டன் இல்லை

    இருந்தாலும் வாழ்த்துக்கள்


    ஜிஎஸ்ஆர் said...
    November 16, 2010 at 8:02 PM

    @THOPPITHOPPIஇது ஸ்டாண்டர்டு கீபோர்டுகளில் வருவதில்லை ஆனால் இப்பொழுதும் சில கீபோர்ட்களில் வந்துகொண்டிருக்கிறது


    ஜிஎஸ்ஆர் said...
    November 16, 2010 at 8:03 PM

    @மாணவன் நீங்கள் வன்பொறியாளர் உங்களுக்கு சில நேரங்களில் உங்களின் பயனாளர்கள் யாரவது உங்களிடம் கேட்கும் வாய்ப்பு இருக்கிறது


    ஜிஎஸ்ஆர் said...
    November 16, 2010 at 8:04 PM

    @மாணவன் நாணல் வளைந்து கொடுப்பது தான் அதன் பலம் அதனால் தான் கடுமையான ஆற்று வெள்ளத்திலும் மடிந்து விடமால் இருக்கிறது


    ஜிஎஸ்ஆர் said...
    November 16, 2010 at 8:05 PM

    @தங்கம்பழனி தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள் உங்களின் நண்பர்கள் யாரவது இவ்வைகயான கீபோர்ட் உபயோகித்தால் அவர்களுக்கு சொல்லிக்கொடுங்கள் பயனுள்ளதாய் இருக்கும்


    ஜிஎஸ்ஆர் said...
    November 16, 2010 at 8:05 PM

    @DrPKandaswamyPhDஇது ஸ்டாண்டர்டு கீபோர்டுகளில் வருவதில்லை ஆனால் இப்பொழுதும் சில கீபோர்ட்களில் வந்துகொண்டிருக்கிறது


    ம.தி.சுதா said...
    November 17, 2010 at 11:57 AM

    ஃஃஃஃஃஃநாணல் வளைந்து கொடுப்பதால் அதற்கு பலமில்லை என்று அர்த்தமில்லை.ஃஃஃஃஃ
    நிழலான நிஜம் சகோதரா....


    ம.தி.சுதா said...
    November 17, 2010 at 12:00 PM

    ஃஃஃஃஃஃஇனிமேல் நீங்கள் வேகமாக தட்டச்சு செய்யும் போது தவறி பவர் பட்டனில் விரல் அழுத்தினாலும் பிரச்சினையில்லை.ஃஃஃஃ
    ஆமாம் நான் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறேன் சகோதரா...


    Raja said...
    November 17, 2010 at 3:18 PM

    Great Sir. Thanks for Sharing


    Raja said...
    November 17, 2010 at 3:20 PM

    We are Dealing in Supermarket Softwares.
    Those Cashiers are always used to complaint
    This while They are Typing. Today we Got
    The Solution. Thanks for Sharing...


    ஜிஎஸ்ஆர் said...
    November 17, 2010 at 5:58 PM

    @ம.தி.சுதா சரியான புரிதலுக்கு நன்றி நண்பா


    ஜிஎஸ்ஆர் said...
    November 17, 2010 at 5:58 PM

    @ம.தி.சுதாஇனிமேல் இந்த பிரச்சினை உங்களுக்கு வராதுதானே!


    ஜிஎஸ்ஆர் said...
    November 17, 2010 at 5:59 PM

    @Raja தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி


    ஜிஎஸ்ஆர் said...
    November 17, 2010 at 6:00 PM

    @Rajaஇப்படித்தான் சில நேரஙக்ளில் மிகச்சிறிய விஷயங்கள் நம்மை சோதனைக்குள்ளாக்கி விடும் இனி உங்கள் வாடிக்கையாளர்களின் கணினிகளில் இதை செயல்படுத்தி விடுங்கள்


    Unknown said...
    November 18, 2010 at 7:49 AM

    தகவலுக்கு நன்றி


    ஜிஎஸ்ஆர் said...
    November 18, 2010 at 8:39 AM

    @விக்கி உலகம்தங்களின் வருகைக்கும் புரிதலுக்கும் நன்றி


    ஜெயகாந்தன் said...
    November 18, 2010 at 1:11 PM

    மிக்க நன்றி, எனக்கிருந்த ஒரு தொல்லையும் இப்ப இல்ல.


    ஜிஎஸ்ஆர் said...
    November 19, 2010 at 9:39 AM

    @ஜெய்காந்த் உங்களை போன்று பிரச்சினையை சந்தித்தவர்களுக்கு தீர்வாய் என் பதிவு இருந்தால் சந்தோஷமே


    Vengatesh TR said...
    November 26, 2010 at 8:09 AM

    .புரிந்து கொண்டேன் ..

    .தங்களின் எழுத்தானிக்கு நன்றி !


    ஜிஎஸ்ஆர் said...
    November 26, 2010 at 8:19 PM

    @சிகப்பு மனிதன் எனக்கு தெரிந்த நண்பர்கள் இந்த பிரச்சினைக்கு ஆளாகி இருக்கிறார்கள் நானும் தான் அதனால் தான் இதை ஒரு பதிவாக எழுதினேன்


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர