Nov 11, 2010

22

அடையாள அட்டை உருவாக்கலாம் I (ID Card Creator I)

  • Nov 11, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து: எதைக் கண்டு ஒருவன் சிரிக்கிறான் என கவணி அவன் எப்படிப்பட்டவன் என தெரிந்துவிடும்.

    வணக்கம் நண்பர்களே, நானும் எப்படியாவது ஒரு பதிவை எழுதவேண்டும் என நினைப்பேன் ஆனால் எழுதமுடிவதில்லை இப்படித்தான் மதிப்பிற்குறிய பிகேபி அவர்களின் போரத்தின் கேள்விப்பகுதியில் அடையாள அட்டை உருவாக்குவதற்கான மென்பொருள் கேட்டிருந்தார் நானும் அவருக்கு ஓரிரு நாட்களில் பதில் அளிப்பதாக சொல்லியதோடு எழுத முடியாமல் இருந்தேன் இன்று ஒரு வழியாய் எழுதுகிறேன். இந்த பதிவு நம்மில் நிறைய நண்பர்களுக்கு உதவக்கூடும். இப்பொழுதுதான் எல்லா அலுவலகங்களிலும், மற்றும் பள்ளியிலும் எல்லோருக்கும் அடையாள அட்டையை கழுத்தில் கட்டி விடுகிறார்களே அதிலும் அதை கழட்டி வைப்பதில்லை என்கிற முடிவோடு இருப்பார்கள் போலத்தெரிகிறது. சரி நாம் பதிவிற்கு வருவோம் இந்த அடையாள அட்டை உருவாக்குவது சம்பந்தமாக ஐந்துவிதமான மென்பொருள் சேகரிப்பு இருக்கிறது அதில் இரண்டை மட்டும் இந்த பதிவில் பார்க்கலாம்.

    முதலாவதாக நாம் பார்க்க போவது Easy card Creator. இந்த Easy Card Creatorமென்பொருளை தரவிறக்கி கண்னியில் நிறுவி விடவும். இனி திறக்கும் போது கீழிருக்கும் விண்டோவில் உள்ளது போல வரும் அதில் நீங்கள் விரும்பும் ID Card, Business Card, Badges, Post Cards, Labels இதில் ஏதாவது ஒன்றை தெரிவு செய்து படத்தில் வரிசைப்படுத்தி காண்பித்துள்ளபடி செய்து விடுங்கள்.



    இப்போது உங்களுக்கு ஒரு வெற்று அடையாள அட்டை திறந்திருக்கும் அதில் கீழிருக்கும் படத்தில் காண்பித்துள்ள வரிசைப்படி படத்தை இனைத்து விடுங்கள் படம் தேவையில்லை என்றால் இந்த வழிமுறையே வேண்டியதில்லை.



    இனி படம் இனைத்து விட்டால் நீங்கள் விரும்பும் அல்லது தேவையான அட்ரஸ் டெக்ஸ்ட்களை நிரப்பவும் அதிலேயே எழுத்துருவை மாற்றும் வசதியும் இருக்கிறது இப்படியாக எத்தனை விதமான டெக்ஸ்ட்களும் இனைக்கலாம்.



    இந்த மென்பொருளை பொருத்தவரை சொல்லிக்கொடுப்பதை விட உங்கள் கிரியேட்டிவ் தான் இதற்கு சிறப்பாக இருக்கும்.

    இனி இரண்டாவதாக நாம் பார்க்க போவது Business Card Creator இந்த Business Card Creator மென்பொருளை மேலுள்ள மென்பொருளோடு ஒப்பிட்டு பாருங்கள் புரியும் இதன் தனித்துவம் இந்த பொருளையும் வழக்கம் போலவே தறவிறக்கி கணினியில் நிறுவி விடவும்.

    இனி இந்த மென்பொருளை இயக்க தொடங்கியதும் இப்படியாக விண்டோ திறக்கும் அதில் இருக்கும் டெம்ப்ளேட் மாதிரியை தெரிவு செய்யுங்கள் உங்களின் துறை எந்த மாதிரியோ அதற்கு தகுந்தாற்போல் தெரிவு செய்யவும் இதிலும் உங்களின் கிரியேட்டிவ் தான் சிறப்பாக அமைய உதவும்.



    இனி நீங்கள் விரும்பும் அளவை தெரிவு செய்து ஓக்கே கொடுத்து அடுத்த பக்கத்திற்கு செல்லுங்கள்.



    இனி உங்கள் அடையாள அட்டையில் வரவேண்டிய வார்த்தைகளை பூர்த்தி செய்து அடுத்த பக்கத்திற்கு செல்லுங்கள் இதில் நீங்கள் கொடுக்க நினைக்கவும் படிவம் இல்லையா? ஒன்றும் கவலையில்லை நான் மேலே சொன்ன மாதிரி உங்களின் கிர்யேட்டிவ் தான் முக்கியம் நீங்கள் விரும்பும் வகையிலான ஒரு அடையாள அட்டையை உருவாக்கி விடலாம்.



    இதை பாருங்கள் உங்களுக்கு மாதிரி காண்பிப்பதற்காக நான் எனது மகன் ஸ்ரீராம் நிழற்படத்தை வைத்து ஒரு மாதிரி உருவாக்கியிருக்கிறேன் இது பதிவிறாக அவசரத்தில் உருவாக்கியது ஆனால் உங்களால் சிறப்பாக உருவாக்க முடியும்.



    இந்த இரண்டு மென்பொருளிலும் நிறைய வசதிகள் இருக்கிறது அதை ஒவ்வொன்றாக செய்து பார்த்தால் இதில் நீங்கள் நிறைய வழிகளை கற்றுக்கொள்ள முடியும். இன்னும் மூன்று மென்பொருள்கள் மீதமிருக்கின்றன ஒரு சிறிய இடைவெளி விட்டு அதையும் பதிகிறேன் ஒவ்வொன்றிற்குமான வித்யாசம் புரிந்து உங்களுக்கு சரியானதை தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள்.

    நண்பர்களே இது உங்களுக்கு புரிந்ததா இதில் ஏதாவது சந்தேகம் இருப்பின் கேட்கலாம் எனக்கு தெரிந்தவரை சொல்லித்தர முயற்சி செய்கிறேன் பதிவு பிடித்திருந்தால், உபயோகமானதாக இருந்தால் அவசியம் பதிவை பற்றிய கருத்துரையும் வாக்கும் பதிந்து செல்லவும்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    22 Comments
    Comments

    22 Responses to “அடையாள அட்டை உருவாக்கலாம் I (ID Card Creator I)”

    மாணவன் said...
    November 11, 2010 at 9:53 AM

    பிகேபி தளத்தில் நண்பர் ஒருவர் கேட்ட இந்த “அடையாள அட்டை உருவாக்கலாம் (ID Card Creator)” மென்பொருளை பதிவிட்டு அசத்திவிட்டீர்கள் அருமை நண்பா,

    ”இந்த பதிவு நம்மில் நிறைய நண்பர்களுக்கு உதவக்கூடும்”

    நிச்சயமாக இந்த மென்பொருள் பலருக்கும் பயன்படும்

    மிகவும் பயனுள்ள மென்பொருளை பகிர்ந்தமைக்கு
    மிக்க நன்றி நண்பா...

    தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

    வாழ்க வளமுடன்


    யூர்கன் க்ருகியர் said...
    November 11, 2010 at 10:00 AM

    thx frd!


    சிவகுமார் said...
    November 11, 2010 at 1:46 PM

    Good ...


    MRSelvam said...
    November 11, 2010 at 1:57 PM

    its very nice


    Good citizen said...
    November 11, 2010 at 3:03 PM

    வணக்கம் சார்,
    இது நான் பண்டிச்சேரி போகும் போது உதவும் என்று நினைக்கிறேன்,,இங்கே[france] பப்பு வேகாது,, இங்கே எல்லாம் ஸ்கென் கார்ட்ஸ் தான்,,அதை கொண்டு நம் ஐடெண்டியின் தலை எழுத்தை சொல்லிவிடுவார்கள்

    Anyway thanks to you


    Ravi kumar Karunanithi said...
    November 11, 2010 at 4:32 PM

    thanks for ur sharing


    எஸ்.கே said...
    November 11, 2010 at 5:00 PM

    இது ரொம்ப நல்லாயிருக்கு நண்பரே! இதை தேடிக் கொண்டிருந்தேன்! நன்றி!


    சித்திரகுள்ளன் said...
    November 11, 2010 at 6:37 PM

    வணக்கம் நண்பரே,
    நான் இந்த மென்பொருளை பயன்படுத்தி உள்ளேன். ஒரு சிறிய சிக்கல் என்னவென்றால் இந்த மென்பொருளைப் பயன்படுத்தி ஒரு அட்டையை முழுவதுமாக தயாரித்த பிறகே சேமிக்க முடியும். பாதியில் நிறுத்தி, தெரியாமல் மூடிவிட்டால், நாம் செய்து வைத்த பழைய அட்டையை பெற முடியாது. மீண்டும் நாம் முதலில் இருந்துதான் தயாரிக்க முடியும். ஒருவேளை மாற்று வழியிருந்தால் தெரியப்படுத்தவும்.


    ஜிஎஸ்ஆர் said...
    November 12, 2010 at 12:27 AM

    @மாணவன் நண்பா இன்னும் மூன்று மென்பொருள்கள் இருக்கிறது அதையும் இனைக்கிறேன் சில நாட்கள் கழித்து.

    தங்கள் வரவிற்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பா


    ஜிஎஸ்ஆர் said...
    November 12, 2010 at 12:28 AM

    @யூர்கன் க்ருகியர்

    வருகைக்கு நன்றி நண்பரே


    ஜிஎஸ்ஆர் said...
    November 12, 2010 at 12:29 AM

    @sivakumar

    வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பா


    ஜிஎஸ்ஆர் said...
    November 12, 2010 at 12:31 AM

    @MRSelvam
    வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பா


    ஜிஎஸ்ஆர் said...
    November 12, 2010 at 12:32 AM

    @moulefrite

    நமது இந்தியா இன்னும் அத்தகைய நிலைக்கு வரவில்லை நண்பா

    தஙக்ளின் வரவிற்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பா


    ஜிஎஸ்ஆர் said...
    November 12, 2010 at 12:40 AM

    @Dhosai

    வாங்க நண்பா! வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பா


    ஜிஎஸ்ஆர் said...
    November 12, 2010 at 12:41 AM

    @எஸ்.கே

    வணக்கம் நண்பா இதைபோல இன்னும் மூன்று மென்பொருள்கள் இருக்கிறது அதையும் விரைவில் பதிவிடுகிறேன்


    ஜிஎஸ்ஆர் said...
    November 12, 2010 at 12:44 AM

    @சித்திரகுள்ளன் மன்னிக்கவும் நண்பா நான் அதை கவணிக்கவில்லை இரண்டு நாட்கள் அவகாசம் கொடுங்கள் ஏதாவது வழி இருக்கிறாதெவென பார்த்து இந்த பதிவிலேயே பதில் எழுதுகிறேன்


    ம.தி.சுதா said...
    November 12, 2010 at 12:07 PM

    நன்றி சகோதர்... எனது நண்பர் ஒரவர் ரெயில் வெசன் ஒன்றை வைத்த செய்த விட்டு இப்போ முழிக்கிறார் அவரிடம் இதை கொடுத்து விடுகிறேன்.. நிச்சயம் அவர் நன்றியையையும் வந்து சொல்கிறேன்...


    ஜிஎஸ்ஆர் said...
    November 13, 2010 at 9:07 AM

    @ம.தி.சுதா நல்லது நண்பா அப்படியே செய்து விடுங்கள் இதைப்போல இன்னும் வேறு மென்பொருள்கள் பதிவிடுகிறேன் அதையும் கொடுங்கள் அவருக்கு எது சிறப்பாக இருக்கிறது என நினைக்கிறாரோ அதையே பயன்படுத்தட்டும்


    ஜெயகாந்தன் said...
    November 18, 2010 at 1:19 PM

    தன்னிலை விளக்கம் - தயவு செய்து கருத்து கூறவும் - இந்த பதிவுக்கு வந்த பின்னூட்டம் வழியத்தான் உங்க தளத்துக்கு வந்தேன். ரொம்ப பயனுள்ள தகவல்கள் இருக்கு. தகவல்கள் தொடரட்டும் நன்றி.


    ஜிஎஸ்ஆர் said...
    November 19, 2010 at 9:37 AM

    @ஜெய்காந்த் நல்லது நண்பரே தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி தொடர்ந்து இனைந்திருங்கள்


    Vengatesh TR said...
    November 26, 2010 at 8:22 AM

    .பகிர்ந்தமைக்கு நன்றி !

    .உங்கள் எழுது-ஆற்றல் என்னை கவர்கிறது !


    ஜிஎஸ்ஆர் said...
    November 26, 2010 at 8:16 PM

    @சிகப்பு மனிதன்எழுத்து ஆற்றல் என்பதெல்லாம் ஒன்றுமில்லை நான் ஏதோ எனக்கு தெரிந்த வகையில் எழுதுகிறேன் அவ்வளவு தான் நானும் ஒரு நேரத்தில் கதை எழுதியிருக்கிறேன் ஆனால் சில வருடங்களுக்கு முன்பாக ஆனால் இன்று வரை அதை பூர்த்தி செய்யவில்லை நண்பரே


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர