Nov 28, 2010

25

உங்கள் கணினியில் இருந்தே நேரடியாக தரவிறக்க அனுமதிக்கலாம்

  • Nov 28, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து: பலனை எதிர்பாரமல் எதை செய்யமுடியுமோ அதை செய்ய ஒரு போதும் நாட்களை தள்ளி போடாதீர்கள்.

    வணக்கம் நண்பர்களே நேற்றைய தினம் எனது மகனின் முதலாம் பிறந்த தினம் அதற்காக ஒரு பதிவு எழுதியிருந்தேன் சாதரணமாக சொந்த விஷயங்களை பதிவில் எழுதுவதோ அல்லது புகைப்படம் இனைப்பதோ எனக்கு விருப்பமில்லை ஆனாலும் அதையெல்லாம் கொஞ்சம் மாற்றி வைத்து விட்டு எனது மகனின் புகைப்படத்தையும் இனைத்திருந்தேன் அந்த பதிவிற்கு வந்து வாழ்த்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை இங்கு பதிவு செய்கிறேன்.

    இனி நாம் பார்க்கபோகும் பதிவை பற்றியதான விஷயத்திற்குள் செல்வோம் சாதரணமாக இது பலருக்கும் தெரிந்திருக்கும் அப்படி தெரியாமல் இருக்கும் நண்பர்களுக்காக தான் இந்த பதிவு. உங்களிடம் இருக்கும் ஏதாவது கோப்புகளை உங்கள் நண்பர்களுக்கோ அல்லது வேறு யாரிடமோ பகிர்ந்துகொள்ள ஏதாவது ஷேர்டு தளங்களில் அப்லோட் செய்து அந்த உரலை நமக்கு வேண்டியவர்களிடம் பகிர்ந்துகொள்வோம் அல்லது மின்னஞ்சல் செய்வோம் இப்படியாக நாம் செய்யும் போது நமக்கு காலவிரயம் இருக்கும் அதற்கு பதிலாக உங்கள் கணினியில் இருக்கும் கோப்புகளை எந்த தளத்திலும் அப்லோட் செய்யாமல் நேரடியாக நீங்கள் உங்கள் நண்பர்களை கோப்புகளை எடுக்க அனுமதிக்கலாம் அதற்கான வழிமுறைகளை இந்த பதிவின் வழியாக பார்க்கலாம்.

    இதன் வழியாக உங்கள் கணினியில் இருக்கும் எந்த கோப்பையும் நீங்கள் எங்கிருந்து வேண்டுமானலும் எடுக்கமுடியும் யாரையும் எடுக்க அனுமதிக்கலாம் ஆனால் என்ன இனைய வழியாய் உங்கள் கோப்புகளை தரவிறக்கம் செய்யும் போது கொஞ்சம் நேரம் அதிகமாகிறது அதாவது பத்து எம்பி அளவுள்ள கோப்பு தரவிறங்க 1 நிமிடம் ஆகிறது என்றால் இந்த வழியாய் நீங்கள் தரவிறக்கும் போது 1 ½ நிமிடம் வரை ஆகலாம் இது சரியான கணக்கீடு இல்லை ஒரு உதாரணமாகத்தான் சொல்லியிருக்கிறேன்.

    இனி Tonido மென்பொருளை தரவிறக்கி கணினியில் நிறுவுங்கள் அளவு 14எம்பி இருக்கிறது உங்கள் கணினியில் நிறுவி முடித்ததும் கீழிருக்கும் விண்டோ திறக்கும் அதை சரியாக பூரிப்பித்து விடுங்கள் இன்ஸ்டால் செய்து முடித்ததும் டாஸ்க் பாரின் இடது பக்கம் பாருங்கள் மஞ்சல் நிறத்தில் ஒரு ஐகான் இருக்கிறதே அது இதற்குறியதுதான் இதில் என்ன ஒரு விஷேசம் இருக்கிறதென்றால் எவ்வளவு கோப்புகளை வேண்டுமானாலும் எளிதாக பகிர்ந்துகொள்ள முடியும்.



    இனி கீழிருக்கும் படத்தில் உள்ளது போல Webshare என்பதை கிளிக்கினால் ஒரு பாப் அப் திறக்கும் அதில் நீங்கள் பகிர்ந்துகொள்ள நினைக்கும் போல்டரை அல்லது கோப்பை பிரவுஸ் செய்து Add என்பதை கிளிக்கினால் போதும் அவ்வளவுதான்.



    நாம் இனைத்த கோப்பிற்கு உரல் URL வந்துவிடும் அதை நண்பர்களோடு அல்லது வலைத்தளத்தில் நீங்கள் இனைத்திருக்கும் தகவலை நேரடியாக உபயோகபடுத்த முடியும் உங்கள் நண்பர்கள் உங்கள் கணினியில் இருந்தே நேரடியாக கோப்புகளை எடுத்துக்கொள்வார்கள்.



    இப்படியாக இருக்கும் நீங்கள் உள் நுழைவதற்கான முகப்பு.



    இதில் இருந்து வெளிவர படத்திலிருப்பது போல Logout செய்துவிடுங்கள்.



    இதை முழுவதுமாக பயன்படுத்தினால் உங்களுக்கு புரிந்துவிடும் நான் ஒரு சிறு கோடு தான் போட்டுக்காட்டியிருக்கிறேன் அதை நேர்த்தி மிகுந்த சாலையாக மாற்றிக்கொள்வதில் உங்கள் பங்கும் இருக்கிறது. மேலும் நீங்கள் பகிர்ந்துள்ள கோப்புகள் எத்தனை முறை தரவிறக்கப்பட்டிருக்கிறது என்பதையும் இதன் வழியாகவே அறியும் வசதி இருக்கிறது.

    இனி இந்த தகவலை பகிர்ந்துகொண்ட் தம்பி பிரபு அவர்களுக்கு நன்றியை தெரிவிப்பதோடு விஷயத்திற்குள் செல்லலாம். இதுவும் மேலே பார்த்தது போலதான் ஆனால் அளவை நிர்ணயம் செய்திருக்கிறார்கள் ஆனால் பயன்படுத்துவதற்கு எளிமையாய் தந்திருக்கிறார்கள்.

    இனி இந்த Dropbox மென்பொருளை கணினியில் தரவிறக்கி நிறுவுங்கள் எல்லாம் வழக்கமான முறைதான் ஆனால் நிறுவும் போதே உங்களை ரிஜிஸ்டர் செய்ய சொல்லும், நிறுவி முடித்ததும் கணினியின் டாஸ்க்பாரில் பாருங்கள் ஒரு அட்டைப்பெட்டியை திறந்து வைத்தது போல இருக்கும் இது தான் இதற்கான ஐகான் அப்படியே உள்ளே பாருங்கள் புதிதாக MY Dropbox என ஒரு போல்டர் வந்திருக்கும் இதன் வழியாக தான் இனி உங்கள் கோப்புகளை பகிர்ந்துகொள்ள போகிறீர்கள்.



    இதில் உள்ள மொத்த கோப்புகளை வேண்டுமானலும் பகிர்ந்துகொள்ளலாம் இல்லை ஏதாவது ஒரு கோப்பை மட்டும் நான் மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன் என்றால் படத்தில் உள்ளது போல அந்த லிங்க் மட்டும் காப்பி எடுத்து நண்பர்களுக்கு அனுப்பி விடுங்கள்.



    உங்கள் கணினியை விட்டு வெளியில் இருந்தால் Dropbox தளம் சென்று உங்கள் பயணர் பெயரையும் கடவுச்சொல்லையும் கொடுத்தால் போதும் உங்கள் கணினியில் உள்ள கோப்புகள் உங்கள் கைகளுக்கு வந்துவிடும்.



    மன்னிக்கவும் நண்பர்களே பதிவை குறித்தான விபரங்களை விரிவாக எழுதமுடியவில்லை நேரமின்மையே காரணம் இருந்தாலும் இதில் விரிவாக எழுதுவதற்கு ஒன்றுமில்லை உங்களுக்கு பார்த்தவுடனேயே நிச்சியம் புரிந்துவிடும் என்பதில் எந்தவித சந்தேகமும் எனக்கு இல்லை.

    நண்பர்களே இது உங்களுக்கு புரிந்ததா இதில் ஏதாவது சந்தேகம் இருப்பின் கேட்கலாம் எனக்கு தெரிந்தவரை சொல்லித்தர முயற்சி செய்கிறேன் பதிவு பிடித்திருந்தால், உபயோகமானதாக இருந்தால் அவசியம் பதிவை பற்றிய கருத்துரையும், இன்ட்லியில் வாக்கும் பதிந்து செல்லவும்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    25 Comments
    Comments

    25 Responses to “உங்கள் கணினியில் இருந்தே நேரடியாக தரவிறக்க அனுமதிக்கலாம்”

    எஸ்.கே said...
    November 28, 2010 at 8:52 AM

    நல்ல தகவல்!
    இதனால் வைரஸ் பரவக் கூடிய வாய்ப்புள்ளதா?


    மாணவன் said...
    November 28, 2010 at 9:19 AM

    அருமை நண்பா,

    மிகவும் பயனுள்ள மென்பொருளை சிறப்பாக பதிவிட்டுள்ளீர்கள்

    பகிர்வுக்கு மிக்க நன்றி

    தொடரட்டும் உங்கள் பொன்னான பணி


    Mohamed Faaique said...
    November 28, 2010 at 9:23 AM

    நன்றி பாஸ்.... ஆபீஸ்'ல அடிக்கடி தேவைப்படும் விஷயம்... அறியத்தந்ததற்கு நன்றி..


    மாணவன் said...
    November 28, 2010 at 9:26 AM

    //இதன் வழியாக உங்கள் கணினியில் இருக்கும் எந்த கோப்பையும் நீங்கள் எங்கிருந்து வேண்டுமானலும் எடுக்கமுடியும் யாரையும் எடுக்க அனுமதிக்கலாம்//

    இந்த தகவல்கள்,கோப்புகள் பரிமாற்றம் செய்வதை TEAM VIEWER என்ற மென்பொருளின் வழியாகவும் செய்யலாம் அல்லவா!

    நேரமிருந்தால் இந்த TEAM VIEWER பற்றியும் ஒரு தெளிவான பதிவிட்டால் சிறப்பாக இருக்கும் நண்பா....

    நன்றி

    வாழ்க வளமுடன்


    Vengatesh TR said...
    November 28, 2010 at 9:39 AM

    .mediafire எனும், தளத்தை நான், உபயோகித்து வருகிறேன், தகவலை, உலகம் முழுவதும் பகிர்ந்து கொள்ள !!

    .இதையும், உபயோகித்து பார்கிறேன், நண்பரே !


    .பகிர்ந்தமைக்கு நன்றி, !


    மாணவன் said...
    November 28, 2010 at 9:56 AM

    //ஒரு வரி கருத்து: பலனை எதிர்பாரமல் எதை செய்யமுடியுமோ அதை செய்ய ஒரு போதும் நாட்களை தள்ளி போடாதீர்கள்.//

    அருமை முற்றிலும் உண்மையான கருத்து,

    தொடரட்டும் உங்கள் பணி


    dsfs said...
    November 28, 2010 at 7:21 PM

    நல்ல பதிவு. நன்றி


    Speed Master said...
    November 29, 2010 at 10:32 AM

    Useful one sir
    thanks


    Raja said...
    November 29, 2010 at 11:39 AM

    Superb sir...
    Thanks


    ஜிஎஸ்ஆர் said...
    November 29, 2010 at 12:53 PM

    @எஸ்.கேஅவர்களின் தளம் வைரஸால் பாதிக்கபடாதவரை நமக்கு பிரச்சினை இருக்காது


    ஜிஎஸ்ஆர் said...
    November 29, 2010 at 12:53 PM

    @மாணவன்எல்லம் உங்களை போன்ற நண்பர்கள் தரும் ஊக்கமே காரணம்


    ஜிஎஸ்ஆர் said...
    November 29, 2010 at 12:54 PM

    @Mohamed Faaiqueதரவிறக்கி வைத்துக்கொள்ளூங்கள் இன்றே பயன்படுத்தவும் தொடங்குங்கள்


    ஜிஎஸ்ஆர் said...
    November 29, 2010 at 12:56 PM

    @மாணவன்Team viewer வழியாக செய்யமுடியும் என்றாலும் டேட்டா டிரான்ஸ்பர் வேகம் குறைவு . நீங்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவசியம் எழுதுகிறேன்


    ஜிஎஸ்ஆர் said...
    November 29, 2010 at 1:02 PM

    @மாணவன்தொடர்கிறேன் நண்பர்களின் புரிதலோடு


    ஜிஎஸ்ஆர் said...
    November 29, 2010 at 1:02 PM

    @பொன்மலர்தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி


    ஜிஎஸ்ஆர் said...
    November 29, 2010 at 1:03 PM

    @Speed Master தஙகளின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி


    ஜிஎஸ்ஆர் said...
    November 29, 2010 at 1:03 PM

    @Rajaதஙகளின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி


    ஜிஎஸ்ஆர் said...
    November 29, 2010 at 1:06 PM

    @சிகப்பு மனிதன்mediafire தளத்திற்கும் இதற்கும் நிறைய வித்யாசம் இருக்கிறது நண்பரே


    Alim said...
    November 29, 2010 at 6:00 PM

    thanks for ur very useful info


    Vengatesh TR said...
    November 30, 2010 at 3:19 AM

    .ஆம், நண்பரே !

    .உபயோகம் செய்த பிறகு தான், தெரிகிறது !


    ஜிஎஸ்ஆர் said...
    December 2, 2010 at 11:32 PM

    @சிகப்பு மனிதன்புரிதலுக்கு நன்றி


    ஜிஎஸ்ஆர் said...
    December 2, 2010 at 11:33 PM

    @Abdulவருகைக்கும் கருத்துக்கும் நன்றி


    சக்தி வீடியோஸ் said...
    October 26, 2011 at 3:10 PM

    வணக்கம் ஞானசேகர்,உங்களின் பதிவுகள் அனைத்தும் மிகவும் பாராட்டுக்குரியது.
    உங்களிடம் ஒரு சந்தேகம் அல்லது வினா?utorrent-ல் பதிவிறக்கம் செயப்படும்
    தமிழ் படத்தை d.v.d.-ல் பதிவு செய்வது எப்படி? தங்கள் பதில் தேவை.
    உங்களின் விண்டோஸ் நிறுவதல் பதிப்பு மிகவும் அருமை.உங்களின் பதிவுகள்
    தொடர என் அன்பான வாழ்த்துகள்.தீபாவளிநல்வாழ்த்துக்கள்.
    mogan.t108@gmail.com


    ஜிஎஸ்ஆர் said...
    October 27, 2011 at 1:48 PM

    @சக்தி வீடியோஸ் உங்கள் கேள்வியை சந்தேகம் அல்லது வினா எப்படி இருந்தாலும் என் பதில் இது தான்...

    பின்வரும் இரண்டு பதிவுகள் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் என்று நம்புகிறேன்

    1)புரொபசனல் டிவிடி கன்வெர்ட்டர் + ரைட்டர்

    http://gsr-gentle.blogspot.com/2010/06/blog-post_22.html

    2)யூ டோரண்ட் தரவிறக்க வேகம் அதிகரிக்க (Torrent Speed 25% முதல் 40%)

    http://gsr-gentle.blogspot.com/2010/06/torrent-speed-25-40.html

    மேலும் உங்கள் கவணத்திற்கு நம் தளத்தில் மிக அத்யாவசியமான தொழில்நுட்ப தேவைகளுக்கான, பிரச்சினைகளுக்கான தீர்வை அளிக்கும் பதிவுகள் நிறையவே இருக்கிறது நேரமிருந்தால் அதையும் படித்து பாருங்கள்...

    பொதுவாக வரும் பிரச்சினைகளை குறித்து மட்டுமே அதிகம் எழுதியிருக்கிறேன்...


    சேக்காளி said...
    December 24, 2012 at 2:45 PM

    பயன் படுத்திக்கொள்வேன்.


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர