Nov 21, 2010
ஜிமெயிலில் ஓடும் கையெழுத்து
வணக்கம் நண்பர்களே இதைப்பற்றி பலருக்கும் தெரியும் நேரடியாக உங்களுக்கு தெரிந்திருக்காவிட்டாலும் நண்பர்களின் மின்னஞ்சல்களில் கண்டிருப்பீர்கள் ஆனால் சில நேரம் கேட்பதற்கு தயக்கமாய் இருந்திருக்கலாம் சாதரணமாக மின்னஞ்சலில் நமது கையெழுத்துடன் ஏதாவது படம் இனைக்கும் வசதி இருக்கிறது ஆனால் முன்பு இந்த வசதி இல்லை அந்த நேரத்தில் நான் எழுதிய ஜிமெயிலில் HTML கையெழுத்து பதிவு ஆனால் அது யாருக்குமே அந்த நேரத்தில் பெரிதாய் பயன்படவில்லை கொஞ்சம் வருத்தமாய் தான் இருந்தது ஆனால் நாம் இப்போது பார்க்கபோவது உங்களுடைய பெயரை GIF இமேஜாக மாற்றி உங்கள் மின்னஞ்சல் கையெழுத்து பதிவில் எப்படி இனைப்பது என்பதை பற்றித்தான் உங்களுக்கு சந்தேகம் இருக்கும் ஒருவேளை நான் சொல்ல வருவது சரியான கோர்வையாய் கூட இல்லாமல் இருக்கலாம் அதற்கு தான் படத்தையும் கீழே இனைத்துள்ளேன் பாருங்கள் புரியும்.
இந்த பதிவை எழுத உதவிய தம்பி பிரபாகரனுக்கு நன்றி.
சரி இதற்கு நாம் என்ன செய்யவேண்டும் என்பதை பார்க்கலாம் இந்த வசதி இரண்டு தளங்களில் கிடைக்கின்றன ஆனால் நீங்கள் GIF-MANIA பயன்படுத்துங்கள் வசதிகள் சிறப்பாக இருக்கிறது மற்றொரு தளம் 123PIMPION இருக்கிறது இரண்டில் உங்களுக்கு எது பிடிக்கிறதோ அதையே பயன்படுத்துங்கள் ஆனால் நான் இதற்காக எடுத்துக்கொண்டது GIF-MANIA அதனால் பதிவும் இதை அடிப்படையாக வைத்து எழுதியிருக்கிறேன்.
நீங்கள் தளம் சென்றதும் இப்படியாக இருக்கும் இனி நீங்கள் செய்யவேண்டியதை படத்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
நீங்கள் ஓக்கே கொடுத்ததும் இனி இப்படியாக ஒரு விண்டோ திறக்கும் அதில் நீங்கள் உருவாக்கிய GIF இமேஜை நேரடியாக கணினியில் தரவிறக்கலாம் அல்லது மின்னஞ்சலில் வரவைக்கலாம் இரண்டும் ஒன்றுதான் நீங்கள் நேரடியாகவே தரவிறக்குங்கள் மின்னஞ்சல் திறக்கும் நேரம் மிச்சமாகும்.
இனி நீங்கள் அடுத்ததாக ONLINE-IMAGE-EDITOR சென்று இமேஜே அப்லோட் செய்து தேவையான அளவுக்கு மாற்றிக்கொள்ளுங்கள் அதற்கான வழிமுறைகளை கீழிருக்கும் படத்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
சரி இதுவரை எல்லாம் சரியாய் செய்துவிட்டீர்கள் அடுத்து நாம் செய்யவேண்டியது நாம் உருவாக்கிய இமேஜை ஏதாவது ஒரு தளத்தில் அப்லோட் செய்து அதன் முகவரியை எடுக்கவேண்டும் இதற்கும் இரண்டு தளங்கள் பரிந்துரை செய்கிறேன் PHOTOBUCKET மற்றும் IMAGESHACK இதில் ஏதாவது ஒரு தளத்தில் அப்லோட் செய்துவிடுங்கள் நான் PHOTOBUCKET தளத்தில் அப்லோட் செய்கிறேன், அப்லோடு செய்து முடிந்ததும் Direct Link என்பதன் நேராக இருக்கும் லிங்க் காப்பி எடுத்துவைத்துக்கொள்ளவும் இதைத்தான் இனி நாம் ஜிமெயில் கையெழுத்து பகுதியில் இனைக்க போகிறோம் இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தையும் தெளிவு படுத்துகிறேன் இதில் இருக்கும் HTML லிங்க் காப்பி எடுத்து நேரடியாக GIF இமேஜை பதிவில் இனைக்கலாம் அப்படி இனைக்கும் போது நீங்கள் அப்லோடு செய்த தளத்தின் முகவரி இருக்கும் அதை நீக்கவில்லையென்றால் படத்தை கிளிக்கும் போது அவர்கள் தளத்திற்கு கொண்டு செல்லும் அதற்கு பதிலாக அவர்களின் தள முகவரியை எடுத்துவிட்டு அதற்கு பதிலாக உங்கள் தளமுகவரியையோ அல்லது பேவரிட் தள முகவரியையோ கொடுக்கலாம்.
இனி நீங்கள் செய்யவேண்டியது உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து வலது பக்க மேல் மூலையில் இருக்கும் Settings என்பதை திறந்து முதலாவதாக இருக்கு General டேப்பில் கீழே பாருங்கள் Signature:என இருக்கும் அங்கு சென்று படம் இனைப்பதற்கான இடத்தை நான் கீழிருக்கும் படத்தில் அடையாளம் காட்டியிருக்கிறேன் பாருங்கள் அதை கிளிக்கி நீங்கள் முன்னதாகவே காப்பி எடுத்து வைத்திருந்த URL-லை இங்கே ஒட்டி விடுங்கள் ஓக்கே கொடுத்து விடுங்கள் அவ்வளவுதான். இனி உங்கள் மின்னஞ்சலில் கம்போஸ் செய்து பாருங்கள் உங்களுக்கு புரியும்.
மேலும் நான் மேலே குறிப்பிட்ட ஜிமெயிலில் HTML கையெழுத்து பதிவில் இருக்கும் ஆட் ஆன் மற்றும் இந்த ஒடும் கையெழுத்து இரண்டையும் இனைத்து இன்னும் சில வசதிகளை உங்கள் மின்னஞ்சலில் சேர்க்கமுடியும் பதிவின் நீளம் கருதி நிறைவு செய்கிறேன் இனி வரும் சந்தேகங்களை கருத்துரையில் பகிர்வோம். இந்த மாதிரியான முறைகளை அலுவலக மின்னஞ்சல் அனுப்பும் நேரத்தில் பயன்படுத்தாதீர்கள்.
நண்பர்களே இது உங்களுக்கு புரிந்ததா இதில் ஏதாவது சந்தேகம் இருப்பின் கேட்கலாம் எனக்கு தெரிந்தவரை சொல்லித்தர முயற்சி செய்கிறேன் பதிவு பிடித்திருந்தால், உபயோகமானதாக இருந்தால் அவசியம் பதிவை பற்றிய கருத்துரையும், இண்ட்லியில் வாக்கும் பதிந்து செல்லவும்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
இந்த பதிவை எழுதியது: ஜிஎஸ்ஆர்
நான் தொழில்முறை சார்ந்த எழுத்தாளன் இல்லை, எனக்கு தெரிந்த விஷயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்வதற்க்காவும்,அடிப்படை கணினி சார்ந்த விஷயங்கள் தெரியாதவர்களுக்கு கற்றுக்கொள்ளும் வாய்ப்பாக இந்த தளத்தை எழுதி வருகிறேன். பதிவு பயனுள்ளதாகாவோ, பிடித்தமானதாகவோ இருந்தால் வாக்கும் கருத்துரையும் அளித்துச்செல்லுங்கள் மேலும் பலரை சென்றடையட்டும் அன்புடன் Gsr
32 Responses to “ஜிமெயிலில் ஓடும் கையெழுத்து”
-
மாணவன்
said...
November 21, 2010 at 9:37 AMஅசத்தல் பதிவு நண்பா,
அருமையாக பதிவிட்டு படங்களுடன் தெளிவாகவும் அனைவருக்கும் புரியும்படியும் விளக்கியுள்ளீர்கள் சூப்பர்...
மிகவும் பயனுள்ள தகவலை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பா
உங்கள் பொன்னான பணி மென்மேலும் சிறக்க வேண்டும் -
மாணவன்
said...
November 21, 2010 at 9:40 AM//ஒரு வரி கருத்து: சட்டம் ஈக்களை பிடிக்கிறது குளவிகளை பறந்து போகவிடுகிறது.//
முற்றிலும் உண்மையான கருத்து நண்பா,
மிகச் சரியாக சொல்லியுள்ளீர்கள்
நன்றி -
மாணவன்
said...
November 21, 2010 at 9:45 AM//மேலும் நான் மேலே குறிப்பிட்ட ஜிமெயிலில் HTML கையெழுத்து பதிவில் இருக்கும் ஆட் ஆன் மற்றும் இந்த ஒடும் கையெழுத்து இரண்டையும் இனைத்து இன்னும் சில வசதிகளை உங்கள் மின்னஞ்சலில் சேர்க்கமுடியும் பதிவின் நீளம் கருதி நிறைவு செய்கிறேன் இனி வரும் சந்தேகங்களை கருத்துரையில் பகிர்வோம். இந்த மாதிரியான முறைகளை அலுவலக மின்னஞ்சல் அனுப்பும் நேரத்தில் பயன்படுத்தாதீர்கள்.//
பயனுள்ள இந்த வசதிகளை பயன்படுத்திப்பார்த்துவிட்டு ஏதாவது சந்தேகம் இருந்தால் மீண்டும் வருகிறேன், இந்த வசதிகளை அலுவலகத்தில் பயன்படுத்தினால் ஏதாவது பிரச்சினை வரும் என்று அழகாக அறிவுரை செய்துள்ளீர்கள் அருமை...
மிக்க நன்றி
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
மாணவன் -
Unknown
said...
November 21, 2010 at 9:48 AMஅருமை அருமை
எல்லோருக்கும் தேவையான பதிவு -
நிர்மல்
said...
November 21, 2010 at 12:00 PMஅருமை அருமை ...
மிகவும் உபயோகமான தேவைப்படும் தகவல் ..
நன்றி நன்றி நன்றி -
எஸ்.கே
said...
November 21, 2010 at 12:39 PMரொம்ப சூப்பரா இருக்கு! நன்றி நன்றி நன்றி!
-
Vengatesh TR
said...
November 21, 2010 at 1:11 PM.என்னை மிகவும் கவர்ந்தது இந்த பதிவு !
.தன்னியன் ஆனேன் ! -
Mohamed Faaique
said...
November 21, 2010 at 4:07 PMஅருமை அருமை ...
மிகவும் உபயோகமான தேவைப்படும் தகவல் .. -
Ravi kumar Karunanithi
said...
November 21, 2010 at 4:56 PMsuper nice
-
www.mail2pps.com
said...
November 22, 2010 at 12:13 AMCongrats! Useful information. thanks for sharing.
-
சீலன்
said...
November 22, 2010 at 2:51 AMநன்றி நன்றி நன்றி
தெளிவான விளக்கம்,
கையெழுத்துடன் ஜிமெயில் ரெடி -
ஜிஎஸ்ஆர்
said...
November 22, 2010 at 9:33 AM@மாணவன்இன்னும் சில விஷயங்களை சேர்த்திருக்கலாம் ஆனால் பதிவின் நீளம் போதுமான நேரம் இரண்டும் இல்லாதாதால் தவிர்த்து விட்டேன்
-
ஜிஎஸ்ஆர்
said...
November 22, 2010 at 9:49 AM@மாணவன் நம் இந்திய திருநாட்டில் இது தான் நடக்கிறது
-
ஜிஎஸ்ஆர்
said...
November 22, 2010 at 9:49 AM@மாணவன்கொடுத்திருக்கும் பழைய படித்தால் அதன் வழியாக செய்யமுடியும்
-
ஜிஎஸ்ஆர்
said...
November 22, 2010 at 9:50 AM@மகாதேவன்-V.K தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே
-
ஜிஎஸ்ஆர்
said...
November 22, 2010 at 9:51 AM@நிர்மல்இதைப்போலவே இன்னும் சில நல்ல பதிவுகள் நம் தளத்தில் இருக்கும் படித்து பாருங்களேன் நேரம் கிடைக்கும் போது
-
ஜிஎஸ்ஆர்
said...
November 22, 2010 at 9:51 AM@எஸ்.கே நல்லது நண்பா தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கு நன்றி
-
ஜிஎஸ்ஆர்
said...
November 22, 2010 at 9:51 AM@சிகப்பு மனிதன்இதை விட சிறந்த பதிவுகள் நம் தளத்தில் இருக்கிறது படித்து பாருங்களேன் நேரம் கிடைத்தால்
-
ஜிஎஸ்ஆர்
said...
November 22, 2010 at 9:52 AM@Mohamed Faaique நீண்ட நாட்களக பதிவு பக்கம் வரவில்லையே? தற்போது விடுமுறை கழிந்து திரும்பிவிட்டீர்களா
-
ஜிஎஸ்ஆர்
said...
November 22, 2010 at 9:53 AM@Ravi kumar Karunanithi நல்லது நண்பரே தொடர்ந்து நம் தளத்தோடு இனைந்திருங்கள்
-
ஜிஎஸ்ஆர்
said...
November 22, 2010 at 9:53 AM@www.mail2pps.com நன்றி நண்பரே முடிந்தால் தொடர்ந்து இனைந்திருங்களேன்
-
ஜிஎஸ்ஆர்
said...
November 22, 2010 at 10:01 AM@சீலன் நன்றி நண்பரே நம் தளத்தோடு இனைந்திருங்கள்
-
Speed Master
said...
November 22, 2010 at 10:45 AMThanks you useful one
-
ADMIN
said...
November 22, 2010 at 4:28 PMஅட!.. ரொம்ப நல்லாயிருக்கே..!
நன்றி! வாழ்த்துக்கள்..! -
Vengatesh TR
said...
November 23, 2010 at 12:25 PM.இதோ ஆரம்பித்து விட்டேன் !
.இன்று முழுவதும், உங்கள் பதிவு படிக்க நேரம் ஒதுக்கயுள்ளேன் ! -
ஜிஎஸ்ஆர்
said...
November 23, 2010 at 9:21 PM@Speed Masterதங்களின் கருத்து பகிர்வுக்கு நன்றி நண்பரே
-
ஜிஎஸ்ஆர்
said...
November 23, 2010 at 9:21 PM@தங்கம்பழனிபயன்படுத்துங்கள் நண்பரே
-
ஜிஎஸ்ஆர்
said...
November 23, 2010 at 9:22 PM@சிகப்பு மனிதன்சந்தோஷம் நண்பரே படித்து சொல்லுங்கள் மற்றவர்களுக்கும் உபயோகமானதாக இருந்தால் மட்டும்
-
Karthick
said...
November 28, 2010 at 1:17 PMi added my signature . thanks bro !
-
ஜிஎஸ்ஆர்
said...
November 29, 2010 at 11:21 AM@Karthick Bஅப்படியா நல்லது நண்பரே
-
சாந்தி மாரியப்பன்
said...
January 8, 2011 at 7:51 AMஉங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்.
http://blogintamil.blogspot.com/2011/01/blog-post_08.html -
ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன்
said...
August 10, 2011 at 10:42 PMThanks....
அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்
சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>