Nov 15, 2010

15

கீபோர்ட் கீயை தேவைக்கேற்றார் போல இடம் மாற்றலாம்

  • Nov 15, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து: கண்ணுக்கு தெரியும் மனிதனை நேசிக்கவிட்டால் கண்ணுக்கே தெரியாத கடவுளை எப்படி நேசிக்க முடியும்.

    வணக்கம் நண்பர்களே சில நாட்களாக கணினி சம்பந்த பதிவுகளை எழுதாமல் இருந்தேன் அதற்கான காரணம் வேறொன்றுமில்லை இடையில் சில நண்பர்களின் கருத்துரைகளுக்கு சந்தேகங்களுக்கு பதிலாக பதிவை எழுதிக்கொண்டிருந்தேன். நாம் இந்த பதிவில் பார்க்க போவது நாம் உப்யோகிக்கும் கணினியின் கீபோர்ட் கீயை நமக்கு ஏற்ற வகையில் எப்படி மாற்றியமைப்பது என்பதை பற்றித்தான் இதன் உதவி அதிகமாக மடிக்கணினி பயன்படுத்துபவர்களுக்கு தேவைப்படலாம் அல்லாத கணினி பாவனையார்களுக்கும் சில நேரங்களில் தேவைப்படும்.

    இந்த வழிமுறைகளை செய்வதற்கென்றே இரண்டு மென்பொருள்கள் இருக்கின்றன அதில் முதலாவதாக Map Keyboard என்பதை பற்றி பார்க்கலாம் Map Keyboard தரவிறக்கி வைத்துக்கொள்ளுங்கள் இதை கணினியில் இன்ஸ்டால் செய்ய வேண்டியதில்லை நேரடியாகவே இயக்கலாம் இனி கீயை மாற்றி அமைப்பதற்கு நீங்கள் ஒன்றும் பெரிதாய் மெனக்கெட வேண்டியதில்லை படத்தை பாருங்கள் எந்த கீயை மாற்ற விரும்புகிறீர்களோ அந்த கீயை செலக்ட் செய்யுங்கள், செய்ததும் கீழிருக்கும் Remap selected key to என்பதன் அருகில் இருக்கும் கோம்போ பாக்ஸை கிளிக்கி வேண்டிய கீயை தெரிவு செய்து ஓக்கே கொடுத்துவிடுங்கள் அவ்வளவுதான்.



    இனி அடுத்ததாக பார்க்க போவது Key Tweak இதை தரவிறக்கம் செய்தபின் உங்கள் கணினியில் நிறுவ வேண்டும். கணினியில் நிறுவ ஓரிரு நிமிடங்கள் கூட எடுத்துக்கொள்வதில்லை. நிறுவல் முடிந்ததும் மென்பொருளை இயக்க தொடங்கினால் கீழிருக்கும் படம் போல திறக்கும் இதன் வழியாக நீஙக்ள் ஒரு கீயை வேறொரு கீயாக மாற்றலாம் வேண்டுமானால் அதை மொத்தமாக முடக்கி விடலாம் சரி பிறிதொரு நேரத்தில் செட்டிங்ஸ் மாற்ற நினைத்தால் மீண்டும் டிபால்ட் செட்டிங்கஸ் கொண்டு வரும் வழியும் இருக்கிறது பயன்படுத்தி பாருங்கள்.



    நண்பர்களே இது உங்களுக்கு புரிந்ததா இதில் ஏதாவது சந்தேகம் இருப்பின் கேட்கலாம் எனக்கு தெரிந்தவரை சொல்லித்தர முயற்சி செய்கிறேன் பதிவு பிடித்திருந்தால், உபயோகமானதாக இருந்தால் அவசியம் பதிவை பற்றிய கருத்துரையும், இண்ட்லியில் வாக்கும் பதிந்து செல்லவும்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    15 Comments
    Comments

    15 Responses to “கீபோர்ட் கீயை தேவைக்கேற்றார் போல இடம் மாற்றலாம்”

    மாணவன் said...
    November 15, 2010 at 9:11 AM

    அருமை நண்பா,
    புதுமையான தகவலை தெளிவாகவும் அனைவருக்கும் பயன்படும்படியும் விளக்கியுள்ளீர்கள் மிகவும் பயனுள்ள மென்பொருள் பயன்படுத்துவதற்கு சுலபமாக...

    பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

    தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

    வாழ்க வளமுடன்


    மாணவன் said...
    November 15, 2010 at 9:14 AM

    //ஒரு வரி கருத்து: கண்ணுக்கு தெரியும் மனிதனை நேசிக்கவிட்டால் கண்ணுக்கே தெரியாத கடவுளை எப்படி நேசிக்க முடியும்//

    சிறப்பாக சொன்னீர்கள்...

    ”அனைவரையும் நேசிப்போம்
    மனிதநேயம் காப்போம்”

    நன்றி
    என்றும் நேசமுடன்
    உங்கள் மாணவன்


    Unknown said...
    November 15, 2010 at 10:52 PM

    thanks for this useful info sir!


    வலையுகம் said...
    November 16, 2010 at 1:24 AM

    நண்பர் அவர்களுக்கு
    புதுமையான தகவல்களை தெரிந்து கொண்டேன் நன்றி

    ஒருவரிகருத்து
    மனிதனுக்கு நன்றி செலுத்தாதவன் இறைவனுக்கு நன்றி செலுத்துவதில்லை
    (முஹம்மது நபி அவர்கள்)


    ஜிஎஸ்ஆர் said...
    November 16, 2010 at 11:01 AM

    @மாணவன்தங்களை போன்ற நண்பர்களின் துனையோடு தொடர்கிறேன்


    ஜிஎஸ்ஆர் said...
    November 16, 2010 at 11:02 AM

    @மாணவன் ஆம் நண்பா முடிந்தவரை பகைமை பாரட்டமல் அனைவரையும் நேசிக்க முயற்சிப்போம்


    ஜிஎஸ்ஆர் said...
    November 16, 2010 at 11:03 AM

    @polurdhayanithiதங்களின் வருகையோடு இயைந்த கருத்துரைக்கு நன்றி தொடர்ந்து நம் தளத்தில் இனைந்திருங்கள்


    ஜிஎஸ்ஆர் said...
    November 16, 2010 at 11:04 AM

    @குழந்தை நல மருத்துவன்! என்னைப்போன்றோரின் பதிவுகளை விட இந்த சமுதயாத்தின் தூண்களுக்காக (குழந்தைகளுக்காக) நீங்கள் எடுக்கும் முயற்சியை விட இது ஒன்றும் பெரியதில்லை.

    தங்களின் வரவோடு இயைந்த கருத்துரைக்கு நன்றி


    ஜிஎஸ்ஆர் said...
    November 16, 2010 at 11:05 AM

    @ஹைதர் அலிதொடந்து இனைந்திருங்கள் இது போல இன்னும் நிறைய தகவல்களை நானும் அவ்வப்போது பதிகிறேன்


    ADMIN said...
    November 17, 2010 at 10:56 AM

    //இதன் உதவி அதிகமாக மடிக்கணினி பயன்படுத்துபவர்களுக்கு தேவைப்படலாம் //

    நீங்கள் கூறியதுபோல் மடிக்கணினி உபயோகிக்கும் அனைவருக்கும் மிகச் சிறந்த மென்பொருள் இது.. தேடித் தந்த உங்களுக்கு நன்றி! வாழ்த்துக்கள்..!


    ம.தி.சுதா said...
    November 17, 2010 at 11:52 AM

    ////கண்ணுக்கு தெரியும் மனிதனை நேசிக்கவிட்டால் கண்ணுக்கே தெரியாத கடவுளை எப்படி நேசிக்க முடியும்////
    மனதை தொட்டுட்டிங்க...


    ம.தி.சுதா said...
    November 17, 2010 at 11:55 AM

    நல்ல தகவல் சகோதரா.. ஆனால் என்னால் பிரயோகிக்க முடியவில்லை.. காரணம் நான் பல இடங்களில் கணணி உபயோகிப்பவன்... நன்றிகள்...


    ஜிஎஸ்ஆர் said...
    November 17, 2010 at 5:50 PM

    @தங்கம்பழனி நிச்சியமாக நான் இந்த பதிவை மடிக்கணினி உபயோகிப்பவர்களை மனதில் வைத்தே எழுதினேன்


    ஜிஎஸ்ஆர் said...
    November 17, 2010 at 5:51 PM

    @ம.தி.சுதா மனிதனை நேசிப்போம் மனிதநேயம் காப்போம்


    ஜிஎஸ்ஆர் said...
    November 17, 2010 at 5:52 PM

    @ம.தி.சுதா தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள் நண்பர்கள் யாருக்காவது தேவைப்பட்டால் அவர்களுக்கு சொல்லிக்கொடுங்கள்


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர