Nov 12, 2010
கடவுள் வெறும் மாயையா?
வணக்கம் நண்பர்களே என்னுடைய கைரேகை ஜோதிடம் ஒரு பார்வை
என்கிற பதிவில் நண்பர் இப்படியான ஒரு கருத்தையும் எழுதி கூடவே ஒரு வேண்டுகோளையும் வைத்தார்.
வருணன் said...
வணக்கம் நண்பரே..
தீபாவளி வாழ்த்துக்கள்..
மிகவும் நல்ல பதிவு.
//...சிலரின் பொய்யான தகவல்களால் இதன் நம்பகத்தன்மை குறைந்திருக்கிறது என்பது மறுப்பதற்கில்லை மேலும் கைரேகை ஜோதிடம் பார்ப்பவர்கள் பெரும்பாலும் வீதிகளில் அலைந்து குறி சொல்வதால் அதன் மீதான மதிப்பும் இல்லை நம் மக்களை பொருத்தவரை கொஞ்சம் விளம்பரமும், ஆடம்பரமும் இருந்தால் அவன் ஒரு ஜோதிடன் என தெரிந்தால் போதும் காலையில் செய்யும் காலைக்கடன்களை கூட எப்போது செய்யவேண்டும் என கேட்பவர்களாயிற்றே நம்மவர்கள்!...//
இங்கு இது எனக்கு மிக பிடித்த கருத்து.....
இருந்தபோதும்..
நான் கடவுள் நம்பிக்கை அற்றவன் ஆனால் காலையில் பத்திரிக்கை பார்க்கும் போது ஜோதிடம் சார்ந்த விடயங்கலை கட்டாயம் பார்ப்பேன் என்னை பொறுத்தவரை கடவுள் என்பது எமது உள் உணர்வெ இவ்வாரான ஜோதிடம் சார்ந்த விடயங்கலை படிக்கும் போது அது அதற்கு எற்றவாறு என்னை வழிநடத்துகின்றது.அதாவது குற்றம் செய்த மனம் குறுகுக்கும் என்பர்களே அது போலதான்.ஆனால் ஜொசித்துப் பார்த்தால் உள் உணர்வு(எனக்குள் இருக்கும் கடவுள்)கடவுளை நம்புகிறது போலதன் இறுக்கிறது. எதொ எனது அறிவினால் கடவுள் இருக்குரார இல்லையா என ஒரு முடிவுக்கு வர முடியவில்லை....
உங்களால் முடிந்தால் இதற்கான முடிவை எழுதுங்கள்....
மிகச் சாதாரணமாக கேள்வியை கேட்டுவிட்டார் இதற்கு ஒரு முடிவான, எல்லோரும் ஏற்றுக்கொள்ளும்படியான ஒரு பதில் எழுதுவது, என்பது என்னால் நிச்சியமாக முடியாது காரணம் இந்த உலகத்தில் ஒரு பக்கம் கடவுள் இருக்கிறார் என்பதான வாதங்கள் மறுபக்கம் கடவுள் இல்லை என்பதான மறுப்பு வாதங்கள், இன்னொரு பக்கம் நான் வழிபடுவது மட்டுமே கடவுள் என வாதங்கள் என பல காலங்களாக இருந்துகொண்டு வருகிறது ஆனால் இந்த மூன்று தரப்பிலும் ஒரு ஒற்றுமை இருக்கிறது! இந்த மூவராலுமே யாவரும் ஏற்றுக்கொள்ளும் படியான ஒரு கருத்தை சொல்ல முடியவில்லை என்பது மட்டுமே உண்மை.
கடவுளை எவரும் காணவில்லை வெறும் புராணங்களிலும் இதிகாசகங்களிலும் படித்ததை மட்டும் வைத்து கடவுள் இருக்கிறார் எனவோ அல்லது இல்லையென்ற முடிவுக்கோ வந்துவிட முடியாது. என்னைப் பொறுத்த வரை அது ஒரு உணர்வு சம்பந்தப்பட்டதாக இருக்கிறது.
பிறக்கும் போதே யாரும் நாத்திகனாகவோ அல்லது ஆத்திகனாகவோ இருப்பதில்லை அவர்கள் வளர்ந்து வரும் காலகட்டத்தில் அவர்களாகவே மாறியிருக்க வேண்டும். மிக சமீபத்தில் கூட ஒரு பகுத்தறிவாளர் ஒருவர் கடவுள் இல்லையென்று அவர் வாழ் நாளில் விவாதித்த மொத்த விஷயங்களையும் கருத்துகளையும் ஒட்டு மொத்தமாக மறந்து இஸ்லாம் மார்க்கத்தை தழுவினார்! ஞாபகமிருக்கிறதா உங்களுக்கு? இந்த விஷயம் தான் ஒருவரின் நம்பிக்கை இந்த உணர்வுக்கு பெயர் தான் கடவுள்.
கடவுளை மறுப்பவரும், கடவுளை நினைப்பவரும், கடவுளை பற்றிய புரிதலை நம்பிக்கையின் அடிப்படையில் தான் விவாதிக்கிறார்கள். இந்த பூமியில் இயற்கையை நாம் படைத்தோமா? அல்லது இல்லாத ஒரு உயிரைத்தான் படைத்திருக்கிறோமா? ஆனால் இயற்கையை நம்புவோம்,இரு வேறு உயிர்களை இனைத்து புதிதாய் ஒரு உயிர் உருவாக்குவோம் ஆனால் இது வரை உலகத்தில் இல்லாத உயிரை படைத்திருக்கிறோமா?
நம்பிக்கையும், உணர்வும் தான் கடவுள் என்பதற்கான சில உதாரணங்களை பார்ப்போம். கடவுள் இருக்கிறார் என நம்பும் நம் மக்கள் அனைவரும் அறிவியல் படித்தவரும் இல்லை கடவுள் இல்லையென்பவர்கள் எல்லம் மொத்தமாக அறிவியலையும் அர்த்த சாஸ்திரத்தையும் கற்று தெளிந்தவரும் இல்லை. இப்போது நான் இதை சொல்ல வருவதன் காரணம் ஒருவரின் நம்பிக்கையே கடவுள் இருக்கிறானவோ அல்லது இல்லையென்கிற விஷயத்தில் அடிப்படையாக இருக்கிறது.
கடவுளை மறுப்பவர்களின் பார்வையில் மூட நம்பிக்கையாகவோ அல்லது அறிவியல் பூர்வமாக விவாதிக்கும் சில விஷயங்களை பார்ப்போம். சாதரணமாக திருவிழாக் காலங்களில் கோவிலில் நேர்த்திகடனாக செய்யும் பூக்குளி மிதித்தல், அலகு குத்துதல் இன்னும் எத்தனையோ விதமான நேர்த்திகடன்கள், வழிபாடுகள் செய்யும் நபர்கள் அதை செய்யும் முன் அறிவியலை உணர்ந்து தான் செய்கிறார்களா? அல்லது நம்பிக்கையில் செய்கிறார்களா? சின்னதாக ஒரு குண்டூசி குத்தி விட்டால் வேதனைப்படும் நம்மில் பலரும் கண்டிருக்க கூடும் திருவிழாக்களில் மக்களின் நேர்த்திகடனின் பெயரில் செய்யும் சில விஷயங்கள் நம்மை ஆச்சரியப்படுத்தும்.
இப்படியெல்லாம் சொல்வதால் நான் மூட நம்பிக்கையுள்ளவனாக நீங்கள் நினைத்தால் அதற்காக கவலையில்லை நம்மை எல்லோரையும் ஆட்டுவிக்கும் ஒரு சக்தி இருக்கிறது அது இயற்கை, இந்த இயற்கையை மிஞ்சிய சக்தி ஒன்றுமில்லை இதை நம்புவர்கள் இயற்கைக்கு “கடவுள்” என பெயர் வைத்து அழைக்கலாம் இல்லை என மறுப்பவர்கள் இருக்கலாம் அதற்கு அவர்கள் வைக்கும் பெயர் “கடவுள் இல்லை” என்பதாக இருக்கும் இங்கேயும் ஒருவரின் நம்பிக்கை தான் கடவுள் உண்டு அல்லது இல்லை என்கிற விஷயத்தை ஏற்றுக்கொள்ளவும் விவாதிக்கவும் வைக்கிறது.
எனக்கு தெரிந்த உறவினர் அவரோ எந்தவித படிப்பறிவும் இல்லாதவர் அவருக்கு அறிவியலை பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாது ஒரு முறை அவர் கோவிலில் வழிபட சென்ற போது அவருக்கு சாமி வந்துவிட்டதென அவர் ஆடிய போது அவரின் நாக்கில் ஒரு பெரிய சூடத்தை கொளுத்தி வைத்தார்கள் அதை எரிந்து முடியும் வரை நானும் ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்தேன் இறுதியில் அவரிடம் உங்களுக்கு சூடத்தை நாவில் எரிய விடும் போது சுடவில்லையா எனக்கேட்ட போது அவரோ எப்போது எரிந்தது என்பது போல பார்த்தார் நானும் அன்று முதல் இப்பவும் இந்த நிகழ்ச்சியை ஆச்சரியத்துடன் நான் கவணிக்கிறேன் இந்த உணர்வு தான் ஒரு வேளை கடவுளின் சக்தி என்பதாக இருக்குமோ? சரி ஒருவேளை இதில் அறிவியல் பூர்வமான ஏதாவது சங்கதி இருந்தாலும் இது எப்படி அவருக்கு தெரிந்தது? சரி அப்படியே இருந்தாலும் நாம் அதை செய்வோமா? இதுவும் நம்பிக்கையின் பெயரில் தான் நடக்கிறது.
இனி அறிவியல் பூர்வமாக ஒரு விஷயத்தை பார்ப்போம் மின்சாரத்தை தொட்டால் ஷாக் அடிக்கும் என்பதும் அதே நேரத்தில் மின்சாரம் செல்லும் இரண்டு கம்பிகளில் ஒரு கம்பியில் அமர்ந்திருக்கும் காக்கை, குருவி, இன்ன பிற உயிர்களுக்கு ஒன்றுமே ஆகாது என்பது படித்தவர் முதல் படிக்காதவர்கள் என அனைவருக்கும் தெரியும். நாம் இதைப்பற்றி பாடப்புத்தகத்திலும் படித்திருக்கிறோம் ஆனாலும் நம்மில் யாரவாது அறிவியாலால் நிருபிக்கபட்ட ஒரு உண்மையை உணர்ந்து நாம் மின்சார கம்பியை பிடிப்போமா? அப்படியானல் அறிவியலை நாம் நம்பவில்லையா?!
இன்னும் ஒரு விஷயத்தை பார்க்கலாம் நாம் யாருமே நம் தாயின் வயிற்றில் கருவரையில் இருக்கும் போது இவள் தான் தாய் என அறிந்திருக்கவில்லை ஆனால் வளர்ந்து வரும் போது நாமாகவே நம் தாயை அடையாளம் காண்கிறோம், உள்ளத்தால் உணர்கிறோம். இப்பொழுதும் குழந்தைகளை கவணித்து பாருங்கள் தாயின் அசைவுகளையும் அன்பையும் உணர்ந்து தாயின் அரவனைப்பை விரும்புவார்கள் இப்படித்தான் கடவுளும் அது ஒரு உணர்வு, நம்பிக்கை, தன்னை மறக்கும் அமானுஷ்ய நேரம் என பட்டியல் இட்டுக்கொண்டே செல்லலாம்.
நம்மில் பலர் கடவுளை ஏற்றுக் கொண்டாலும், ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் தெரிந்தோ தெரியாமலோ கடவுள் பெயரை மறுப்பதானாலும், விவாதிப்பதென்றாலும் கடவுள் பெயரை உச்சரித்துக்கொண்டு தானிருக்கிறோம். நான் எழுதுவதற்காக நீங்கள் கடவுள் இருக்கிறார் என நம்ப வேண்டுமென்பதில்லை நாம் மேலை பார்த்த பகுத்தறிவாளர் பல வருடங்கள் கடவுளை மறுத்தவர் திடீரென இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டது போல நம்மில் கடவுளை மறுப்பவர்கள் கடவுளை ஏற்றுக்கொள்ள ஒரு விநாடி போதும் ஏதோ ஒரு உந்துதல் போதும், புரிதல் போதும் அந்த நிலைதான் அவர்களின் வாழ்வில் உன்னத தருனமாக இருக்கலாம். நம்பும் விஷயத்தை முழுமையாக நம்புங்கள் அதில் சந்தேகம் வேண்டாம் இந்த வாழ்க்கை சக்கரம் முழுவதும் நம்பிக்கை என்கிற அச்சானி துனையோடு தான் ஓடிக்கொண்டு இருக்கிறது.
நண்பர்களே பதிவு பிடித்திருந்தால் அல்லது ஆரோக்கியமான கருத்துக்களை வைக்க நினைத்தால் தயங்காமல் எழுதுங்கள் உங்களின் எண்ணங்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
இந்த பதிவை எழுதியது: ஜிஎஸ்ஆர்
நான் தொழில்முறை சார்ந்த எழுத்தாளன் இல்லை, எனக்கு தெரிந்த விஷயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்வதற்க்காவும்,அடிப்படை கணினி சார்ந்த விஷயங்கள் தெரியாதவர்களுக்கு கற்றுக்கொள்ளும் வாய்ப்பாக இந்த தளத்தை எழுதி வருகிறேன். பதிவு பயனுள்ளதாகாவோ, பிடித்தமானதாகவோ இருந்தால் வாக்கும் கருத்துரையும் அளித்துச்செல்லுங்கள் மேலும் பலரை சென்றடையட்டும் அன்புடன் Gsr
20 Responses to “கடவுள் வெறும் மாயையா?”
-
மாணவன்
said...
November 12, 2010 at 9:52 AM//நம்மில் பலர் கடவுளை ஏற்றுக் கொண்டாலும், ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் தெரிந்தோ தெரியாமலோ கடவுள் பெயரை மறுப்பதானாலும், விவாதிப்பதென்றாலும் கடவுள் பெயரை உச்சரித்துக்கொண்டு தானிருக்கிறோம். நான் எழுதுவதற்காக நீங்கள் கடவுள் இருக்கிறார் என நம்ப வேண்டுமென்பதில்லை நாம் மேலை பார்த்த பகுத்தறிவாளர் பல வருடங்கள் கடவுளை மறுத்தவர் திடீரென இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டது போல நம்மில் கடவுளை மறுப்பவர்கள் கடவுளை ஏற்றுக்கொள்ள ஒரு விநாடி போதும் ஏதோ ஒரு உந்துதல் போதும், புரிதல் போதும் அந்த நிலைதான் அவர்களின் வாழ்வில் உன்னத தருனமாக இருக்கலாம். நம்பும் விஷயத்தை முழுமையாக நம்புங்கள் அதில் சந்தேகம் வேண்டாம் இந்த வாழ்க்கை சக்கரம் முழுவதும் நம்பிக்கை என்கிற அச்சானி துனையோடு தான் ஓடிக்கொண்டு இருக்கிறது//
எனது கருத்தும் இதுதான் நண்பா...
கடவுள் வெறும் மாயையா? நல்ல ஒரு விரிவான அலசல்...
உங்களுக்குத் தெரிந்த கருத்துககளை மிகவும் அழகாககவும் தெளிவாகவும் பதிவு செய்துள்ளீர்கள் அருமை நண்பா!
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி
தொடரட்டும் உங்கள் பொன்னான பணி...
என்றும் நட்புடன்
உங்கள் மாணவன் -
ம.தி.சுதா
said...
November 12, 2010 at 11:59 AMஅதெப்படி சகோதரா பேயிற்கு பயப்படுகிறான். செய்வினை சூனியத்தை நம்புறான் அனால் கடவுள் இல்லை என்கிறானே....
-
மாணவன்
said...
November 12, 2010 at 12:03 PM//ஜிஎஸ்ஆர் said...
இண்ட்லி தளம் திறக்கவில்லையே என்னவென்று தெரியுமா நண்பரே?//
காலையில் பதிவை இணைக்கும்போது நன்றாக இண்ட்லி தளம் வேலை செய்தது
சிறிது நேரம் கழித்து எனது தளத்தை திறக்கும்போது இண்ட்லி ஓட்டுப்பட்டையைக் காணவில்லை சரி எனது தளத்தில்தான் பிரச்சினை இருக்குமென்று உங்கள் தளத்திற்கு வந்தேன் உங்கள் தளத்திலும் ஓட்டுப்பட்டையைக் காணவில்லை.
ஏதாவது தொழில்நுட்பக் கோளாறு காரணமாய் இருக்கலாமென்று நினைக்கிறேன் நண்பா சரியாகத் தெரியவில்லை.
நன்றி -
ஹிப்ஸ்...
said...
November 12, 2010 at 8:03 PMமனிதனையும் கடவுளையும் இணைக்கும் ஊடகத்தின் பெயர்தான் நம்பிக்கை என்பது. இது தான் உலகத்தில் சகலமானவற்றையும் இயக்கிக் கொண்டிருப்பது. நம்பிக்கை இல்லையேல் வாழ்க்கை இல்லை.
-
ஜிஎஸ்ஆர்
said...
November 13, 2010 at 9:01 AM@மாணவன்இதை பற்றி இன்னும் நிறைய விரிவாக எழுத ஆசை ஆனால் அது பதிவின் திசையை மாற்றிவிடும் என்பதால் சிறிய அளவிலேயே முடித்துக்கொண்டேன்
சரியான் புரிதலுக்கு நன்றி நண்பா -
ஜிஎஸ்ஆர்
said...
November 13, 2010 at 9:02 AM@ம.தி.சுதாஅது தான் நம் மக்களின் மன நிலை நண்பா
-
ஜிஎஸ்ஆர்
said...
November 13, 2010 at 9:03 AM@மாணவன்வழங்கியில் சீரமைப்பு பணி செய்திருப்பார்கள் என நினைக்கிறேன் நண்பா
-
ஜிஎஸ்ஆர்
said...
November 13, 2010 at 9:04 AM@ஹிப்ஸ்...மிகச் சரியாய் சொல்லியிருக்கிறீர்கள் நானும் அதைத்தான் பதிவின் ஆரம்பத்திலேயே சுட்டிக்காட்டியிருக்கிறேன்.
சரியான புரிதலுக்கு நன்றி -
Unknown
said...
November 13, 2010 at 11:35 AMகடவுள் - காற்றையும், நறுமணத்தையும் உணருபவனுக்கே.
இந்த இரண்டையும் உணர்ந்துகொண்டே இவை என் கண்ணுக்கு தெரியாததால் இப்படி ஒன்று இல்லை என்பவர்களை என் சொல்வேன்.
அக்காற்று எப்போதும் அவனை விட்டு விலகுவதில்லை. அவன் இழித்தாலும், பழித்தாலும்
அவனுடைய
இதயத்தை உழல வைத்துக்கொண்டு இருக்கிறது. அப்படிப்பட்டவன் தான் கடவுள் நாம் தான் அவனைப்பற்றி ஆராச்சி செய்து கொண்டு இருக்கிறோம். -
Good citizen
said...
November 13, 2010 at 5:06 PMஇந்த அண்டம் ஒரு கடல் என்றால் மனிதன் என்பவன் அந்த கடற்கரை மணலில் ஒரு துகளுக்கு சமம். இந்த அற்ப்ப தகளுக்காகத்தான் அந்த மாபெரும் கடல் படைக்கப்பட்டது என்று சொல்வது எவ்வளவு முட்டால்தனமானது,,கடவுளைப் பற்றி என்னைப் போன்ற் அற்ப் பிறவியால் விளக்க முடியுமென்றால் அவன் கடவுளாகவே இருக்க முடியாது,,ஆனால் மதங்கள் அனைத்தும் கடவுளுக்கு சுப்ரிம் கோர்ட் ஜட்ஜ் போஸ்டை கொடுத்துவிட்டது,,கெட்ட்து செய்தால் தண்டிக்க படுவாய்,உனக்கு சொர்கத்தில் இடமில்லை போன்ற விதிமுறைகளை சொல்கிறார்கள்,,கடவுள்
மறுபாளனும் அதே வழியில் ,கடவுள் உண்டென்றால் ஏன் கெடுத்ல் செய்யும் எல்லோரும் த்ண்டிக்கபடுவதில்லை என்கிற கேள்வியை வைக்கிறான்,இதற்கு
மதவாதுகளின் பதில்கள் மழுப்பல்களே,,கெட்டவனுக்கு நரகம் கிடைக்கும் என்றும் அல்லது அடுத்த பிறவியில் நாயாய் பிறந்து அல்லுருவான் என்று பல
மழுப்பல்கள்தான் பதில்.
என்னைப் போறுத்தவரை எதோ ஒரு சக்தி ஒன்றுமெ இல்லாத ஒன்றிலிருந்து
(இதுவே கற்பனைக்கு அப்பார்பட்டது இந்த அண்டத்தில் உள்ள அனைத்தையும்
படைத்திருக்கிறது,,இதுதான் அறிவியலின் விளக்கமும் கூட,,அந்த சக்தியின்
ரொஉ துளிதான் நான்,,அது இயற்கையாக கூட இருக்கலாம்,,அது என்க்கு சிந்திக்கும் திறனை கொடுத்திருக்கிறது,,அதை வைத்து இந்த மனித வழ்வை
என்னால் வளமாக்கி கொள்ள முடியும்,,போலிகலையும் கற்பனைகளையும்
என்னால் இனம் கண்டுக்கொள்ள முடியும்,,என் வாழ்நாள்வரை அந்த சக்தியின்
மூலத்தை அறிய முற்படுவேன் அது கோடுத்த அறிவை கொண்டு,,என்றாவது ஒருநாள் நான் வேற்றிப்பெற்றாலும் பெறலாம்,,அதற்கு நன்றியும் சொல்வேன் -
ஜிஎஸ்ஆர்
said...
November 14, 2010 at 9:17 AM@விக்கி உலகம்கடவுள் - காற்றையும், நறுமணத்தையும் உணருபவனுக்கே
நல்லது நண்பா சரியாக சொன்னீர்கள் அது ஒரு உணர்வு தான் -
ஜிஎஸ்ஆர்
said...
November 14, 2010 at 9:20 AM@moulefriteஎன்னைப் போறுத்தவரை எதோ ஒரு சக்தி ஒன்றுமெ இல்லாத ஒன்றிலிருந்து
(இதுவே கற்பனைக்கு அப்பார்பட்டது இந்த அண்டத்தில் உள்ள அனைத்தையும்
படைத்திருக்கிறது,,இதுதான் அறிவியலின் விளக்கமும் கூட,,அந்த சக்தியின்
ரொஉ துளிதான் நான்,,அது இயற்கையாக கூட இருக்கலாம்,,அது என்க்கு சிந்திக்கும் திறனை கொடுத்திருக்கிறது,,அதை வைத்து இந்த மனித வழ்வை
என்னால் வளமாக்கி கொள்ள முடியும்,,போலிகலையும் கற்பனைகளையும்
என்னால் இனம் கண்டுக்கொள்ள முடியும்,,என் வாழ்நாள்வரை அந்த சக்தியின்
மூலத்தை அறிய முற்படுவேன் அது கோடுத்த அறிவை கொண்டு,,என்றாவது ஒருநாள் நான் வேற்றிப்பெற்றாலும் பெறலாம்,,அதற்கு நன்றியும் சொல்வேன்
உண்மைதான் நம்மால் காண முடியாத வேறுபடுத்தி பார்க்கமுடியாத சக்தி இந்த பிரபஞ்சம் முழுவதும் பரவி கிடக்கிறது -
தமிழ்போராளி
said...
November 21, 2010 at 8:41 PMஅருமையான பதிவு தோழரே... வாழ்த்துக்கள். இதுபோன்ற கட்டுரைகளை எதிர்பார்க்கிறோம்..
-
ஜிஎஸ்ஆர்
said...
November 22, 2010 at 9:31 AM@விடுதலைவீராஅவசியம் இனி வரும்காலத்திலும் எழுத முயற்சிக்கிறேன்
-
Vengatesh TR
said...
November 26, 2010 at 8:18 AM.நம்பிக்கை தான், கடவுள் !
.அதன் பின்பம் ஒவ்வவருக்கும் பார்ப்பதில் தான், வித்தியாசம் இருக்கிறது !
[தவறுஏதும் இருப்பின், மன்னிக்கவும்] -
ஜிஎஸ்ஆர்
said...
November 26, 2010 at 8:17 PM@சிகப்பு மனிதன் நானும் அதை ஆமோதிக்கிறேன் அருமை நண்பா
-
பகுத்தறிவு?
said...
November 28, 2010 at 9:36 AM -
ஜிஎஸ்ஆர்
said...
November 29, 2010 at 12:52 PM@பகுத்தறிவு?அவசியம் படித்து பார்க்கிறேன்
-
தர்சிகன்
said...
December 10, 2010 at 2:37 PMநன்றி நண்பா..
சிறப்பாக சொல்லியுள்கள்.
...//எனக்கு தெரிந்த உறவினர் அவரோ எந்தவித படிப்பறிவும் இல்லாதவர் அவருக்கு அறிவியலை பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாது ஒரு முறை அவர் கோவிலில் வழிபட சென்ற போது அவருக்கு சாமி வந்துவிட்டதென அவர் ஆடிய போது அவரின் நாக்கில் ஒரு பெரிய சூடத்தை கொளுத்தி வைத்தார்கள் அதை எரிந்து முடியும் வரை நானும் ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்தேன் இறுதியில் அவரிடம் உங்களுக்கு சூடத்தை நாவில் எரிய விடும் போது சுடவில்லையா எனக்கேட்ட போது அவரோ எப்போது எரிந்தது என்பது போல பார்த்தார்...//
நானும் இவை போன்ற சில சம்பவங்களை கண்டுளேன்.
ன்சாரத்தை தொட்டால் ஷாக் அடிக்கும் என்பதும் அதே நேரத்தில் மின்சாரம் செல்லும் இரண்டு கம்பிகளில் ஒரு கம்பியில் அமர்ந்திருக்கும் அதற்கு ஒன்றுமே ஆகாது என்பது படித்தவர் முதல் படிக்காதவர்கள் என அனைவருக்கும் தெரியும். நாம் இதைப்பற்றி பாடப்புத்தகத்திலும் படித்திருக்கிறோம் ஆனாலும் நம்மில் யாரவாது அறிவியாலால் நிருபிக்கபட்ட ஒரு உண்மையை உணர்ந்து நாம் மின்சார கம்பியை பிடிப்போமா?
100% உண்மை.
நம்மால் காண முடியாத வேறுபடுத்தி பார்க்கமுடியாத சக்தி இந்த பிரபஞ்சம் முழுவதும் பரவி கிடக்கிறது. -
ஜிஎஸ்ஆர்
said...
December 12, 2010 at 10:38 AM@வருணன்புரிதலுக்கு நன்றி
அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்
சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>