Nov 17, 2010
அட்வான்ஸ்டு சிஸ்டம் கேர் (Advanced System Care)
வணக்கம் நண்பர்களே இதைப் பற்றி உங்களில் பலருக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும் ஆனால் தெரியாத நண்பர்கள் இருக்ககூடும் அவர்களுக்கு இந்த தகவல் சென்றடையும் நோக்கமாகவே இந்த பதிவை எழுதுகிறேன் சாதரணமாக நம் கணினிகளில் ஒரு ஆண்டிவைரஸ் மற்றும் இன்னும் சில வகையான மென்பொருள்களை அவசியம் நிறுவி வைத்திருப்போம் நாம் பார்க்க போகும் இந்த மென்பொருள் கணினியில் இருந்தால் நல்லதே அதற்காக நிறுவ வேண்டும் என்கிற கட்டாயமில்லை பயன்படுத்தி பாருங்கள் உங்கள் மனதிற்கு கணினியில் இருந்தால் சிறப்பென்று நினைத்தால் அவசியம் நிறுவி விடுங்கள்.
இந்த மென்பொருளில் என்னவிதமான வசதிகள் இனைக்கப்பட்டிருக்கிறது எனபதை நீங்கள் அறியும் வகையில் படங்களை இனைத்திருக்கிறேன் கீழே பாருங்கள்.
இதன் வழியாக உங்கள் கணினியை தானகவே டீபிராக்மென்ட் செய்யும் வசதி இருக்கிறது, ரிஜிஸ்டரி பிரச்சினைகளை தானகவே சரி செய்துவிடும், இனைய இனைப்பின் வேகத்தை கொஞ்சம் வேகப்படுத்தி தரும், ஏதாவது கேம்ஸ் விளையாடியானல் அதற்கென ஒரு பூஸ்டர் இருக்கிறது ஆனால் அது விலை கொடுத்து வாங்கவேண்டும் அதனால் அதை மட்டும் தவிர்த்து விட்டு மற்ற வசதிகளை பயன்படுத்தி பாருங்கள்.
நண்பர்களே மென்பொருள் பயனுள்ளதாக இருப்பின் Advance System Care தரவிறக்கம் செய்து கணினியில் இன்ஸ்டால் செய்துவிடுங்கள் இதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் தயங்காமல் கேளுங்கள் எனக்கு தெரிந்தவரை சொல்லித்தர முயற்சி செய்கிறேன் பதிவு பிடித்திருந்தால், உபயோகமானதாக இருந்தால் அவசியம் பதிவை பற்றிய கருத்துரையும், இண்ட்லியில் வாக்கும் பதிந்து செல்லவும்.
நீங்கள் என் பழைய பதிவுகளுக்கும் எளிதாக வாக்களிக்கும் வகையில் சில மாற்றங்கள் செய்திருக்கிறேன். நம் தளத்தின் வலது பக்க மேல் மூலையில் பாருங்கள் Subscribe என்பதன் கீழ் இருக்கும் ஆறு ஐகான்களில் முதலாவதாக இருக்கும் இண்டிலி ஐகானை கிளிக்குவதன் மூலமாக நான் இண்டியில் இனைத்திருக்கும் அனைத்து பதிவுகளையும் எளிதாக ஓரே இடத்தில் காணலாம் இதன் வழியாக நீங்கள் வாக்களிக்க விரும்பும் பதிவுகளுக்கு எளிதாக வாக்களிக்க் முடியும்
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
இந்த பதிவை எழுதியது: ஜிஎஸ்ஆர்
நான் தொழில்முறை சார்ந்த எழுத்தாளன் இல்லை, எனக்கு தெரிந்த விஷயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்வதற்க்காவும்,அடிப்படை கணினி சார்ந்த விஷயங்கள் தெரியாதவர்களுக்கு கற்றுக்கொள்ளும் வாய்ப்பாக இந்த தளத்தை எழுதி வருகிறேன். பதிவு பயனுள்ளதாகாவோ, பிடித்தமானதாகவோ இருந்தால் வாக்கும் கருத்துரையும் அளித்துச்செல்லுங்கள் மேலும் பலரை சென்றடையட்டும் அன்புடன் Gsr
20 Responses to “அட்வான்ஸ்டு சிஸ்டம் கேர் (Advanced System Care)”
-
எஸ்.கே
said...
November 17, 2010 at 10:16 AMரொம்ப பயனுள்ளதாக இருக்கு!
-
மாணவன்
said...
November 17, 2010 at 11:26 AMஅருமை நண்பா,
இந்த மென்பொருள் பலருக்கும் பயன்படும் என்றாலும்,என்னைப்போன்ற வன்பொருள் துறையில் இருப்பவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
மிகவும் உபயோகமான மென்பொருளை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பா...
உங்கள் பொன்னான பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்களுடன்
உங்கள் மாணவன் -
மாணவன்
said...
November 17, 2010 at 11:28 AM//ஒரு வரி கருத்து: ஒவ்வொரு மனிதனும் அவனுடைய குணங்களில் குறைகளுடையவனே//
அனைவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு கருத்து
அருமையாக சொன்னீர்கள்
பகிர்ந்தமைக்கு நன்றி
நட்புடன்
மாணவன் -
ம.தி.சுதா
said...
November 17, 2010 at 12:03 PMஃஃஃஃஃஒவ்வொரு மனிதனும் அவனுடைய குணங்களில் குறைகளுடையவனே.ஃஃஃஃஃ உண்மையாகத் தான்...
-
ம.தி.சுதா
said...
November 17, 2010 at 12:04 PMஆமாம் இது அனைவருக்கும் தேவையானது தான் பிரயோகித்த விட்டு சொல்கிறேன்...
-
Unknown
said...
November 17, 2010 at 5:03 PMநீங்க ரொம்பவே லேட்டுங்க... நான் ஏற்கனவே இதைப் பற்றி அக்டோபர் 21,2009 அன்னைக்கே எழுதியாச்சு. நீங்களே ஒருமுறை பாருங்க.
http://sineham.blogspot.com/2010/10/blog-post_21.html
நன்றி -
ஜிஎஸ்ஆர்
said...
November 17, 2010 at 5:36 PM@எஸ்.கேவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே
-
ஜிஎஸ்ஆர்
said...
November 17, 2010 at 5:37 PM@மாணவன் நிச்சியமாக நண்பா நம்மில் பலருக்கும் இது நல்ல உபயோகமுள்ள மென்பொருளாக இருக்கும்
-
ஜிஎஸ்ஆர்
said...
November 17, 2010 at 5:38 PM@மாணவன் நான் எழுதும் சில விஷயங்களை என்னை அடிப்படையாக வைத்தே எழுதுகிறேன் நண்பரே
-
ஜிஎஸ்ஆர்
said...
November 17, 2010 at 5:39 PM@ம.தி.சுதா நிச்சியமாக குறைகளிலில்லாத மனிதனே இல்லை நண்பா
-
ஜிஎஸ்ஆர்
said...
November 17, 2010 at 5:40 PM@ம.தி.சுதா அவசியம் உபயோகித்து பாருங்கள் விரும்புவீர்கள்
-
ஜிஎஸ்ஆர்
said...
November 17, 2010 at 5:45 PM@Ding Dong நான் லேட்தான் எனக்கு ஒரு விஷயம் தெரியும் போதுதானே நான் எழுதமுடியும் இருந்தாலும் பரவாயில்லை நீங்கள் கடந்த அக்டோபர் 2009 அன்றே எழுதியிருக்கிறீர்கள் வாழ்த்துகள்.
மேலும் நான் சாதரணமாக நான் எழுதப்போகும் விஷயங்களை வேறு யாராவது முன்னரே எழுதியிருக்கிறார்களா என்பதையெல்லாம் தேடிப்பார்ப்பதில்லை எனக்கு அதற்கான நேரமும் இருப்பதில்லை.
ஒரு விஷயத்தை உங்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன் இந்த மென்பொருள் கடந்த 2008ம் ஆண்டே வெளிவந்திருக்கிறது என நினைக்கிறேன் அதற்காக நான் உங்களை நீங்கள் காலம் கடந்து எழுதியிருக்கிறீர்கள் என்றெல்லாம் சொல்லமாட்டேன்
http://download.cnet.com/Advanced-SystemCare-Free/3000-2086_4-10407614.html
http://www.iobit.com/advancedwindowscareper.html
http://advanced-systemcare.software.informer.com/comments/page/5/
சரியாகவே புரிந்துகொள்வீர்கள் என்றே நம்புகிறேன் -
அ மயில்சாமி
said...
November 17, 2010 at 7:43 PMvery good program. It works well. Thank you for your guidance
-
padmanabang
said...
November 17, 2010 at 10:35 PMரொம்ப பயனுள்ளதாக இருக்கு
-
ஜிஎஸ்ஆர்
said...
November 18, 2010 at 8:41 AM@Myilsamiதங்களின் வருகைக்கும் சரியான புரிதலுடன் கூடிய கருத்துரைக்கு மிக்க நன்றி. தொடர்ந்து இனைந்திருங்களேன்
-
ஜிஎஸ்ஆர்
said...
November 18, 2010 at 8:42 AM@padmanabangஅவசியம் கணினியில் நிறுவி வையுங்கள் சில நாட்கள் முழுமையாய் பயன்படுத்துங்கள் பின்னர் இதன் பலன் தெரியும்
-
Unknown
said...
November 21, 2010 at 5:38 AMஉங்கள் வருகைக்கும் எனக்கு அளித்த பதிலுக்கும் நன்றி.
-
ஜிஎஸ்ஆர்
said...
November 22, 2010 at 9:29 AM@விக்கி உலகம்கருத்து பரிமாற்றமே நண்பா
-
Vengatesh TR
said...
November 26, 2010 at 8:06 AM.புரிந்து கொண்டேன் ..
.ஆனாலும், எனக்கு இந்த மாதிரியான சாப்ட்வேர்-களை பயன்படுத்த பயமா இருக்கிறது !
.இருந்தாலும், என் நண்பர்கள் கணினிகளில் பயன்படுத்தி பார்க்கிறேன் .. !
.புகுட்டமைக்கு நன்றி ! -
ஜிஎஸ்ஆர்
said...
November 26, 2010 at 8:23 PM@சிகப்பு மனிதன்தைரியமாக பயன்படுத்துங்கள் கணினி தீங்கு விளைவிக்கும் மென்பொருள்கள் நிச்சியமாக நம் பதிவில் இடம்பெறாது
அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்
சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>