Aug 3, 2010

9

நிறுவல் முன்னிருப்பு இடம் மாற்றலாம் (Default Installation Location Change)

  • Aug 3, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து: பெரிய விளைவுகளுக்குக் காரணமான நிகழ்ச்சிகள் எப்போதும் சிறிய சூழ்நிலைகளிலிருந்து தான் உருவாகின்றன.

    வணக்கம் நண்பர்களே இந்த பதிவு உங்கள் கணினியில் சாதரணமாக மென்பொருள் நிறுவும் போது C:வட்டுவில் சென்று பதியும் ஆனால் ஒரு சின்ன மாற்றத்தை உங்கள் பதிவகத்தில் (ரிஜிஸ்டரியில்) ஏர்படுத்துவதன் மூலம் மென்பொருள் நிறுவலை D: அல்லது நீங்கள் விரும்பும் இடத்திற்கு மாற்றலாம் நண்பா என் கணினியில் ஓரே வட்டாக இருக்கிறது எப்படி பிரிப்பது என கேள்வி கேட்பவர்கள் எனது பழைய பதிவான வன்தட்டை (Hard Drive) துண்டு துண்டா வெட்டலாம் பதிவு உங்களுக்கு உதவலாம்.

    சரி இப்போது பதிவகத்தை (ரிஜிஸ்டரியை) திறப்பதற்காக Start-Run Type regedit திறந்து நீங்கள் கண்டுபிடிக்க வேண்டிய இடம் HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion என்பதை கிளிக்கி வலது பக்கம் இருக்கும் பலகத்தில் Program FilesDirஇருமுறை உங்கள் சுண்டெலியால் கிளிக்கி திறக்கும் (அல்லது வலது கிளிக்கில் Modify என்பதை தெரிவு செய்வதன் மூலமும் செய்யலாம்) மேல்மீட்பு (Pop Up) பெட்டியில் C என்பதற்கு பதிலாக D அல்லது நீங்கள் விரும்பும் வட்டின் வெயர் கொடுக்கவும்.





    என்ன நண்பர்களே இந்த பதிவு உங்களுக்கு உபயோகமானதாக இருந்திருக்குமென்றே நம்புகிறேன் இந்த தகவல் உங்களை போல மற்றவர்களுக்கும் சென்றடைய பதிவிற்கு வாக்கும் பதிவை பற்றியதான உங்களை கருத்தையும் எழுதுவதன் தகவலை உறுதிபடுத்தலாமே.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    9 Comments
    Comments

    9 Responses to “நிறுவல் முன்னிருப்பு இடம் மாற்றலாம் (Default Installation Location Change)”

    தமிழ் நாடன் said...
    August 3, 2010 at 11:54 AM

    நல்ல பயனுள்ள தகவல்கள்!

    ”default installation" என்பதற்கு “நிறுவல் முன்னிருப்பு” எனபதுதான் சரியான வார்த்தையாக இருக்கும் என்பது எனது கருத்து!


    ஜிஎஸ்ஆர் said...
    August 3, 2010 at 12:02 PM

    @தமிழ் நாடன் நண்பரே சிரமம் பார்க்கமால் இதையும் கொஞ்சம் பாருங்களேன் http://gsr-gentle.blogspot.com/2010/08/blog-post.html


    தமிழ் நாடன் said...
    August 3, 2010 at 6:12 PM

    அன்பின் ஜிஎஸ்ஆர்,

    உண்மையில் பின்னூட்டம் இடுவதற்கு முன்னாலேயே அந்த அகராதியை தரவிறக்கம் செய்துவிட்டு அதில் "default" க்கு கொடுத்திருந்த மொழியாக்கத்தை பார்த்துவிட்டுத்தான் இந்த பின்னூட்டம் இட்டேன். தமிழில் அந்த சொல் கையாளப்படும் இடத்தைப் பொருத்துதானே பொருளமையும்? இந்த இடத்தில் default என்பது முன்னால் நிறுவப்பட்ட இடம் அல்லது தகவல் நிறுவ முன்னிறுத்தப்பட்ட அல்லது தகவல் நிறுவுதற்கு முன்னால் அறிதியிடப்பட்ட இடம் என்ற பொருளில்தான் அமையும். அதனால் முன்னிருப்பு என்பதுதான் சரியான பதமாக அமையும் என்பது எனது எண்ணம். லெக்சிகன் மற்றும் இதர அகராதிகளில் ”முன்னிருப்பு” என்ற பதம்தான் கையாளப்படுகிறது.கொடாநிலை என்பது மென்பொருள் சூத்திரங்களின் பயன்பாட்டுக்கு பொருத்தமாக இருக்கலாம். ஆனால் இங்கு பொருந்தவில்லை என்பதுதான் எனது கருத்து. ஒரு ஆலோசனை அவ்வளவே!


    ஜிஎஸ்ஆர் said...
    August 3, 2010 at 8:15 PM

    @தமிழ் நாடன்
    மன்னிக்கவும் நண்பரே என் பக்கம் தான் தவறு இருக்கிறது, என் பிழையை சரி பார்க்காமல் மீண்டும் உங்களிடம் விவாதிப்பது என்பது என் முட்டாள் தனமான செயல், நீங்கள் கருத்துரை இட்ட பின் நானும் அது பற்றி தகவலை சரி பார்த்தேன் நீங்கள் சொல்வது தான் சரியாக படுகிறது அதனால் நானும் அந்த தலைப்பை மாற்றி விட்டேன் பொதுவாக இது போல தமிழ்படுத்துதலில் இடங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டுமென்பதை நான் கவணத்தில் எடுத்துக்கொள்ளாதது என் தவறு அதிலும் குறிப்பாக என்னை போல பதிவு எழுதும் நபர்கள் இது போன்ற தவறுகளை செய்வது அது மற்றவர்களையும் பாதிக்கும். என் பிழையை உணர்கிறேன் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்கிறேன் மன்னித்து விடுங்கள், இனிமேலும் என் பதிவில் எங்காவது தவறுகள் கண்டால் அவசியம் தெரிவிக்கவும்.


    தமிழ் நாடன் said...
    August 4, 2010 at 11:56 AM

    அன்பின் ஜிஎஸ்ஆர்,

    மன்னிப்பெல்லாம் பெரிய வார்த்தை. அதற்கு அவசியமே இல்லை. உங்களின் இடுகையை தொடர்ந்து வாசித்து வருபவன் என்ற உரிமையில் அதை சுட்டிக்காட்டினேன். அவ்வளவே! உங்களைப்போன்ற பொறிஞர்கள் தமிழைப் தொழிற்நுட்ப விடயங்களில் பயன்படுத்துவதை உயர்வாக என்னுகிறவன் நான். உங்கள் பணி தொடர வாழ்த்துகிறேன்.


    Vengatesh TR said...
    November 26, 2010 at 5:53 PM

    .தமிழில் தலைப்பை பார்த்ததும், பயந்தே போய்விட்டேன் ...


    .அவசியம் அனைவரும், அறியவேண்டிய தகவல்,!!


    ஜிஎஸ்ஆர் said...
    November 26, 2010 at 9:15 PM

    @சிகப்பு மனிதன்முடிந்தவரை இயங்குதளம் அல்லாத மென்பொருள் நிறுவும் போது வேறு டிரைவில் நிறுவுவது நல்லது


    Krishna said...
    March 6, 2012 at 3:26 PM

    என்னுடைய ப்ளாக் ல் இந்த மாதிரி கட்டம் உண்டாக்குவது எப்படி என்பதைத் தெரிவித்தால் நலமாக இருக்கும்
    நன்றி என் மின்னஞ்சல் முகவரி: krishnalakshmi48@gmail.com


    ஜிஎஸ்ஆர் said...
    April 23, 2012 at 7:40 PM

    @Srinivasan Krishnamoorthyமன்னிக்கவும் எந்த மாதிரியான கட்டம் என்பதை தெளிவு படுத்தினால் உங்களுக்கு உதவ வசதியாய் இருக்கும்.


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர