Aug 8, 2010

11

பிளாக்கர் கருத்துரை பெட்டியில் தமிழ் யுனிகோட் வசதி

  • Aug 8, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து: நம்மை தூக்கி எறியும் குதிரையை விட சுமந்து செல்லும் கழுதை எவ்வளவோ மேலானது.

    வணக்கம் நண்பர்களே இந்த பதிவு வலைப்பூ எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் உதவுமென்று நம்புகிறேன் சில நண்பர்கள் என் தளத்திலேயே தமிழில் கருத்துரை எழுதும் வசதி இனைத்தால் நன்றாயிருக்குமே என்றும் மேலும் தமிழ் எழுத்து முறை தெரியாதவர்களுக்கு கருத்துரை எழுத வசதியாய் இருக்கும் என்றர்கள் ஆனால் எனக்கோ அது பற்றி தெரியாது இன்று எதேச்சையாய் இந்த தளத்தில் அந்த வசதி இனைக்கபட்டிருப்பதை கண்டு அவருக்கு இரண்டு கருத்துரையில் இதை பற்றி கேட்டிருந்தேன் ஆனால் அவரோ நாம் எழுதிய கேள்வியை கூட வெளியிடவில்லை சரி நாமகவே முயற்சித்து விடலாமே என முயற்சி செய்தேன் எனக்கு இந்த வலைப்பூவில் பெரிதாக ஒன்றும் தெரியாது ஆனாலும் முயற்சி செய்தால் முடியாதது ஒன்றுமில்லை என்பது உண்மைதானே.

    இனி நீங்கள் கூகுள் யுனிகோட் சென்று அங்கு உங்களுக்கு தேவையான வண்ணம் மற்றும் அளவு போன்றவற்றை தெரிவு செய்து அங்கு கிடைக்கும் நிரலை காப்பி எடுத்துக் கொள்ளுங்கள்,வேண்டுமானால் இந்த கீழிருக்கும் கோடிங்கை காப்பி எடுத்தும் பயன்படுத்தலாம் உங்களுக்கு தேவையான நீளம்,அகலம்,வண்ணம் போன்றவற்றை இதிலேயே மாற்றிக்கொள்ளலாம்.


    <script src="http://www.gmodules.com/ig/ifr?url=http://hosting.gmodules.com/ig/gadgets/file/103159279678197997651/googleindictransliteration.xml&synd=open&w=600&h=170&title=Google+Indic+Transliterator&border=%23ffffff%7C3px%2C1px+solid+%23999999&output=js"></script>


    இனி உங்கள் பிளாக்கர் கணக்கில் உள்ளே நுழைந்து உங்கள் டெம்ப்ளேட் தரவிறக்கி வைத்துக்கொள்ளுங்கள் எல்லாம் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான் அடுத்ததாகDesign->Etil HTML->Expand widget Templates என்பதில் ஒரு டிக் மார்க் குறி ஏற்படுத்தியதும் அங்கு Crtl+F என்கிற கீ பயன்படுத்துவதன் மூலம் <data:blogCommentMessage/> என்பதை கண்டுபிடியுங்கள் அதற்கு கீழாக உங்களிடம் இருக்கும் நிரலை கீழே ஒட்டி விடுங்கள் சந்தேகத்திற்கு படமும் இனைத்துள்ளேன் பார்க்கவும்.





    என்ன நண்பர்களே இனி தமிழ் டைப்பிங் தெரியாவிட்டாலும் உங்களுக்கு பிடித்த படைப்பாளிகளின் பதிவுகளுக்கு கருத்துரை எழுதலாம் தானே மேலும் உங்களுக்கு சந்தேகம் இருந்தாலும் தமிழில் எழுதுவதன் மூலம் விடை காணலாம் தானே, இந்த பதிவு உங்களுக்கு உபயோகமானதாக இருந்தால் பதிவிற்கு வாக்கும் கருத்துரையும் அளித்து மேலும் பலரை சென்றடைய உதவவும் இது உங்களால் முடியும்தானே?

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    11 Comments
    Comments

    11 Responses to “பிளாக்கர் கருத்துரை பெட்டியில் தமிழ் யுனிகோட் வசதி”

    Mohamed Faaique said...
    August 8, 2010 at 2:52 PM

    நன்றி அய்யா நன்றி.. மிகவும் பயனுள்ள ஒரு தகவல். நான் எங்கே தேடியும் கிடைக்கவில்லை.


    Mohamed Faaique said...
    August 8, 2010 at 2:59 PM

    நன்றாக வேலை செய்கிறது. முடிந்தால் என் ப்ளாக்'இற்கு வந்து பார்க்கவும்..
    http://faaique.blogspot.com/


    ஜிஎஸ்ஆர் said...
    August 10, 2010 at 12:25 PM

    @Mohamed Faaique இந்த பதிவு எழுத நீங்களும் ஒரு காரணம்


    ஜிஎஸ்ஆர் said...
    August 10, 2010 at 12:26 PM

    @Mohamed Faaique வருகிறேன் நண்பா நன்றாக எழுதுங்கள்


    கவிதாமணி said...
    August 11, 2010 at 12:44 AM

    நண்பருக்கு வணக்கம்...
    தங்கள் உதவிக்கு மிக்க நன்றி.
    அனைத்தும் பயனுள்ள கிறுக்கல்கள் தொடர்ந்து கிறுக்குங்கள்.


    Aslam Online said...
    August 11, 2010 at 2:35 PM

    சகா உங்கள் பகிர்விற்கு நன்றிகள் சாக அவர் மறைத்த ஒரு விடயத்தினை நீங்கள் எங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள் இப்பொழுது என்னிடம் இது பற்றி யாரவது கேட்டல் உடனே உங்கள் வலைப்பூவை அறிமுக படுத்திவிடுவேன் ............. சாக இருந்தாலும் ஒரு சின்ன சந்தேகம் ஒவ்வொரு முறையும் தமிழ் தட்டச்சு செய்வதற்கு மொழியினை தெரிவு செய்து டிக் பண்ணுவதை விட Default ஆக இதனை தமிழில் வைத்து கொள்ள முடியாதா அடிக்கடி ஹிந்திக்கு மாறி டாச்சர் பண்ணுகிறது சகா


    மு.ம.ராஜன் said...
    August 12, 2010 at 9:41 AM

    நன்றி ஞானசேகர் உங்கள் பதிவு மிகவும் நன்று இந்த யூனிகோடு முறை மிகவும் பயனுள்ளதாக உள்ளது


    Vengatesh TR said...
    November 26, 2010 at 5:05 PM

    .தமிழில் கலர் கலராக, கமெண்ட் செய்ய முடியுமா ??

    .ie, on above, first 3 words in brown color, then next 3 words in red color


    ஜிஎஸ்ஆர் said...
    November 26, 2010 at 7:21 PM

    @சிகப்பு மனிதன்அவர்கள் இதுமாதிரியான வசதிகளை இன்னும் அனுமதிக்கவில்லை என்றே நினைக்கிறேன் முயற்சித்து பார்த்தேன் முடியவில்லை இனி வருங்காலங்கள் ஒரு வேளை நீங்கள் கேட்கும் வசதியும் வரலாம் என்றும் நம்புவோம்


    ஜிஎஸ்ஆர் said...
    November 26, 2010 at 7:22 PM

    @கோட்டை மகா நன்றி நண்பரே


    Unknown said...
    February 5, 2012 at 7:13 PM

    நன்றி.. மிகவும் பயனுள்ள ஒரு தகவல்.


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர