Aug 30, 2010

12

எதற்கும் ஒரு ஷார்ட்கட்

  • Aug 30, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து: கோபத்தோடு எழுந்தால் நஷ்டத்தோடு உட்கார வேண்டி வரும்.

    அன்பின் நண்பர்களுக்கு வணக்கம் இன்று ஒரு அருமையான, எளிமையான மென்பொருளை பற்றித்தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம் நாம் வழக்கமாக சில கணினி பயன்பாட்டுகளுக்கு ரன் கமெண்ட் பயன்படுத்துவது வழக்கம் இதன் வழியாக சில பயன்பாடுகளை எளிதாகவும் வேகமாகவும் செய்யமுடியும் இது பற்றி சில் நண்பர்களுக்கு தெரிந்திருக்கும் சிலருக்கு தெரிந்திருக்காது ஆனால் நமது நோக்கமோ நமக்கு தெரிந்த விஷயங்களை தெரியாத நண்பர்களுக்கும் சென்றடைய செய்வதேயாகும்.

    நமது கணினியில் அன்றாடம் பயன்படுத்தும் மென்பொருளையோ அல்லது அலுவலக பைல்களையோ எப்படி வேகமாக திறப்பது என்பது பற்றி இரண்டு பதிவுகள் எழுதியிருந்தேன் இந்த பதிவிற்கும் ஏற்கனவே எழுதிய ரன் கட்டளைகள் உருவாக்கலாம் என்கிற பதிவிற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது நீங்கள் வாசித்து முடிக்கும் போது உணர்ந்துகொள்வீர்கள்.

    என் பழைய பதிவுகள்

    ரன் கட்டளைகள் உருவாக்கலாம்

    அஸைன் ஷார்ட்கட் கீ

    இந்த பதிவு எழுத காரணமாயிருந்த அன்புச் சகோதரிக்கு நன்றி, இரண்டு நாட்களுக்கு முன்னர் என் சகோதரி அண்ணா எக்ஸ்பி இயங்குதளத்தில் நாம் Srat – Run திறக்கும் டயலாக் பெட்டியின் அளவை கொஞ்சம் பெரிதுபடுத்த முடியுமா எனக் கேட்டார் நான் அதன் அளவை கூட்டுவதால் என்ன நண்மை என கேட்ட போதுதான் வழக்கமாக கணினியில் உள்ள அனைத்து பைல்களையும் ரன் கமெண்ட் வழியாகவே திறப்பதாகவும் கொஞ்சம் நீளமான பெயர் வரும் போது எழுத்துக்கள் மறைந்து விடுவதால் டைப் செய்வதில் பிரச்சினை வருவதாகவும் சொன்னார்.



    உதாரணத்துக்கு உங்கள் கணினியில் E:\Gsr\Software\Hacking Software\Recourse Hacker\ResourseHacker.Exe என்கிற இடத்திற்கு செல்லவேண்டும,என்ன சகோதரி சொல்வது போல பகுதிக்கு மேல் எழுத்துக்கள் மறைந்துவிடும் தானே? சரி அதை கொஞ்சம் முயற்சி செய்து பார்க்ககலாமேவென வழக்கம் போல ரிசோர்ஸ் ஹேக்கர் மென்பொருள் கொண்டு முயற்சித்தேன் ரிஜிஸ்டரி மாற்றமெல்லாம் செய்து பார்த்தேன் இறுதியில் கணினியின் இயக்கத்தில் தான் பிரச்சினை உண்டானது பின்னர் ஒரு வழியாய் பிரச்சினையை சரி செய்துவிட்டு கொஞ்சம் இனையத்தில் இதற்கான மாற்று வழிமுறை இருக்கிறாதவென தேடியபோது தான் ஒரு மாற்று மென்பொருளை கண்டேன் இனி ரன் கமெண்ட் மென்பொருள் தரவிறக்கம் செய்யவும் வெறும் 483 கேபி தான் இனி வழக்கம் போல உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளவும்.

    இனி உங்கள் கணினியில் புதிதாக ஒரு நீல நிறத்தில் ஒரு கமெண்ட் பெட்டி வந்து அமர்ந்துகொள்ளும் கீழிருக்கும் படத்தை பாருங்கள் இனி நாம் ரன் கமெண்டில் மேற்க்கொள்ளும் அத்தனை நடவடிக்கைகளையும் இதன் வழியாகவே மேற்கொள்ளலாம்.



    இதனை நமது எலியால் வலது கிளிக் செய்து இதன் மெனுவை திறக்கலாம்.



    இனி இதில் நமக்கு தேவையான நிறத்தை கொடுக்க எழுத்தின் வண்ணம் மாற்ற இதிலிருக்கும் செட்டப் வசதியை பயன்படுத்தலாம், மேலும் சில வசதிகள் இருக்கிறது பயன்படுத்தி பார்த்து தெரிந்துகொள்ளுங்கள், நமக்கு தேவையில்லையென்றால் மறைத்து விடலாம் தேவையான இடத்திற்க்கு மாற்றிக்கொள்ள அதன் மேல் கர்சரை வைத்து இழுத்துச் செல்லலாம் வசதி இருக்கிறது வேண்டிய அளவிற்கு நீளத்தை வலது பக்கம் இருந்து இழுப்பதன் மூலம் முழு ஸ்கீரீன் அளவிற்கு வேண்டுமானாலும் பெரிதுபடுத்தலாம்.



    இனி கீழிருக்கும் படத்தை பாருங்கள் நான் ஒரு பைலை இதன் வழியாகவே திறந்திந்திருக்கிறேன் இதில் என்ன விஷேசம் என்றால் நாம் E:\G என அடிக்கும் போதே E:\GSR_G என வந்துவிடும், அடுத்து H என அழுத்தினாலே Hacking Software வந்துவிடும், அடுத்து R என அழுத்தும் போதே Recourse Hacker என வந்துவிடும், அடுத்து R என அழுத்தினால் Resizer வந்துவிடும், அடுத்து R என அழுத்தினால் RSHacker என்பதும் வந்துவிடும் ஒரு வேளை வராத போது முதல் எழுத்தோடு அடுத்த எழுத்தையும் கொடுக்கவும் உதாரணத்துக்கு ஒரு இடத்தில் GSR,GNR என இரு போல்டர்கள் இருந்தால் நீங்கள் முதல் இரு எழுத்தையும் கொடுக்க வேண்டிவரும் அதாவது GS அல்லது GN இப்படியாக கொடுக்கவும். இதன் வழியாகவே உங்களுக்கு தேவையான புதிய கமெண்ட்கள் உருவாக்கலாம் அதற்கான வசதியும் இருக்கிறது.



    இதில் நீங்கள் Library திறப்பதன் மூலம் உங்களுக்கு வேண்டிய கணினியில் இருக்கும் மென்பொருள் அல்லது ஏதாவது பைல்களுக்கு New Magic word வழியாக நீங்களாக ஒரு சுருக்க பெயர் கொடுத்து அதன் வழியாக எளிதாக பைல்களை திறக்கலாம் நீங்கள் விரும்பும் இனையதளத்தின் முகவரியையும் இது போல சுருக்கமாக மாற்றிக்கொள்ளலாம் நான் எனது தளமான http://gsr-gentle.blogspot.com என்பதை திறக்க gsr என கொடுத்தாலே போதும் தளம் திறந்துவிடும் மொத்தத்தில் இது ஒரு குட்டி சூப்பர் மென்பொருள்.



    என்ன நண்பர்களே இந்த பதிவு நிச்சியம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்குமென்றே நம்புகிறேன் இனிமேல் எந்த பைலையும் நீங்கள் ரன் கமெண்ட் வழியாக திறக்க முடியும் என்ன இதற்கு கொஞ்சம் ஞாபகசக்தி இருந்தால் போதும் எந்த பைலையும் பல கிளிக் சென்று திறக்கமால் ரன் கமெண்ட் வழியாகவே எளிதாக திறக்கலாம் நான் மேலே கொடுத்துள்ள என் பழைய பதிவான ரன் கட்டளைகள் உருவாக்கலாம் என்பதன் வழியாக நீங்கள் உருவாக்கும் கட்டளைகளையும் இதன் வழியாகவே மேற்கொள்ளலாம். இந்த பதிவு உங்களோடு நின்று விடாமல் மேலும் பலருக்கு சென்றடைய உங்கள் வாக்கும் கருத்துரையும் உதவும் உங்களுக்கு பிடித்திருந்தால் அவசியம் ஒரு நிமிடம் செலவழித்து வாக்கு அளிக்கவும் நாம் வாக்களிக்கவில்லை என்றாலும் வேறு யாராவது வாக்களிப்பார்கள் என நினைத்து விட வேண்டாம் காரணம் உங்களை போலவே அவர்களும் நினைக்க வாய்ப்பிருக்கிறது

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    12 Comments
    Comments

    12 Responses to “எதற்கும் ஒரு ஷார்ட்கட்”

    nis said...
    August 30, 2010 at 9:42 AM

    நல்ல தகவல்


    ம.தி.சுதா said...
    August 30, 2010 at 12:50 PM

    தகவலுக்கு நன்றி.... சகோதரா...


    எஸ்.கே said...
    August 31, 2010 at 1:19 AM

    மிக மிக நல்ல பதிவு நான் கூட சில சமயங்களில் ரன் கமாண்ட் மூலம் பைல்களை திறக்கும்போது நீளமாக இருக்கும் கமாண்ட்களை படிக்க முடியாமல், ஏரோ கீக்களை பயன்படுத்துவேன். இனி அந்த பிரச்சினையில்லை! மிக்க நன்றி!


    ஜிஎஸ்ஆர் said...
    August 31, 2010 at 9:11 AM

    @nis (Ravana) நன்றி நண்பா தொடர்ந்து இனைந்திருக்க முயலுங்கள்


    ஜிஎஸ்ஆர் said...
    August 31, 2010 at 9:11 AM

    @ம.தி.சுதா நன்றி சகோதரா


    ஜிஎஸ்ஆர் said...
    August 31, 2010 at 9:12 AM

    @எஸ்.கே நன்றி நண்பரே


    மாணவன் said...
    August 31, 2010 at 12:11 PM

    மிகவும் பயனுள்ள தகவல் அசத்தல் பதிவு நண்பரே,

    அனைவருக்கும் பயன்படும் வகையில் அழகாகவும் விளக்கிவிட்டீர்கள் அருமை...

    பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி...


    ஜிஎஸ்ஆர் said...
    September 1, 2010 at 8:55 AM

    @மாணவன்தங்களின் புரிதலுக்கும் பகிர்வுக்கும் நன்றி நண்பா


    Vengatesh TR said...
    November 26, 2010 at 4:22 PM

    .பதிவில் தந்திருக்கும், சாப்ட்வேர்'ஐ விட, தாங்கள், விளக்கி இருக்கும் விதம், அருமை !!


    .தங்கள் எழுதானிக்கும் என் நன்றி, தகவலை பகிர்ந்தமைக்கு !!


    ஜிஎஸ்ஆர் said...
    November 26, 2010 at 7:30 PM

    @சிகப்பு மனிதன்ஒவ்வொரு பதிவை எழுதும் போதும் என் கவணம் சாதாரண கணினி பாவனையாளர்களை மனதில் வைத்தே எழுதுகிறேன் (அதாவது என்னைப்போன்றவர்களை)


    Vengatesh TR said...
    November 26, 2010 at 9:33 PM

    .என்னையும் அந்த வரிசையில் (list'l) சேர்த்துக் கொள்ளுங்கள்,


    ஜிஎஸ்ஆர் said...
    November 26, 2010 at 9:37 PM

    @சிகப்பு மனிதன்இதற்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை!


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர