Aug 20, 2010

38

பதிவு திருட்டுக்கு எதிராக உங்கள் உதவி தேவை

  • Aug 20, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • வணக்கம் நண்பர்களே இதை படிக்கும் எத்தனை நபர்கள் எனக்கு ஆதரவாக உதவபோகிறீர்கள் என தெரியாது இருப்பினும் சக பதிவு எழுதும் ஒருவன் என்கிற நம்பிக்கையில் உங்களின் ஆதரவு கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்போடு எழுதுகிறேன் பதிவுலகத்தில் பலரும் படைப்புகளை திருடுகிறார்கள் என்னுடைய எத்தனையோ பதிவுகள் திருடப்பட்டிருக்கின்றன ஆனால் எனது சொந்த படைப்பையே நான் மற்றவர்களிடம் இருந்து கவர்ந்து எழுதியது என்கிற குற்ற்ச்சாட்டு இதுதான் பதிவுலகத்தில் முதல் முறை என நினைக்கிறேன்.

    நான் இந்த பதிவுலகத்திற்கு எழுத வந்து சரியாக ஆறு மாத காலம் இருக்கும் இறுதியில் நானகாவே எழுதுவதை நிறுத்திவிட்டேன் பல முறை என் பதிவுகளை பலரும் காப்பி எடுத்து அவர்கள் தளத்தில் அச்சு பிசகாமல் ஒட்டியிருப்பார்கள் ஆனால் நானும் அதை பெரிதாக கண்டுகொள்வதில்லை நேற்று இப்படித்தான் ஓய்வு நேரத்தில் நான் வலைப்பக்கம் வந்த போது http://illamai.blogspot.com/ என்கிற தளத்தில் நான் எழுதிய ஆணுக்கும் பெண்ணுக்கும் எது அழகு (http://gsr-gentle.blogspot.com/2010/03/blog-post_13.html) மற்றும் தாலிக்கு அர்த்தம் என்ன? (http://gsr-gentle.blogspot.com/2010/03/blog-post_13.html) இரண்டு பதிவுகளும் அச்சு பிசகாமல் எழுத பட்டிருந்தது என்ன ஒரு வித்யாசம் எனக்கு ஆரம்ப காலத்தில் எனக்கு பிளாக்கரில் படம் கூட இனைக்க தெரியாது அதனால் அன்று நான் படங்கள் இனைக்கவில்லை இப்போதும் தேவையென்றால் மட்டுமே அதிலும் தொழில்நுட்ப பதிவுகளுக்கு மட்டுமே படங்கள் இனைப்பேன் என் தளத்தை ஆரம்ப காலத்தில் இருந்து வாசிப்பவர்களுக்கு தெரியும்.

    இது பற்றி http://illamai.blogspot.com கருத்துரையில் கேட்டிருந்தேன் அதற்கு அவர்கள் எனது தளத்தில் எனது தளத்தில் இந்த http://gsr-gentle.blogspot.com/2010/08/html.html பதிவில் கீழே உள்ளவாறு பதில் எழுதியிருந்தார்கள்.

    \\ தங்கள் சொல்லுவதை நானும் பாா்த்தேன் இருப்பினும் இது தங்கள் எழுதவில்லை இது எனது நண்பா் விவேகானந்த என்பவா் எழுதியது... தங்களும் அதனை கவா்ந்து தான் உங்கள் தளத்தில் போட்டு உள்ளீா்ள் ஏன் நான் இதே பதிவு FRIDAY, MARCH 26, 2010 இட்டுள்ளேன் தங்கள் இதே பதிவை Sunday, August 1, 2010 தங்கள் இட்டுள்ளீா்கள்... ஏன் இதே பதிவை http://kannan3h.blogspot.com/2010/07/blog-post.html இந்த முகவரியில் உள்ளது இதில் மட்டும் அல்ல இப்படி பல முகவரியில் உள்ளது.... அனால் இதற்கு தங்கள் உரிமை கோருவது... தவறு... என கருதுகிறேன்.

    நன்றியுடன்
    இளமை\\

    பதிலிலும் அவரால் அவர் நண்பர்தான் இதை எழுதினார் என்பதாக கூட சரியான விளக்கத்தை தரவில்லை இதில் நீங்கள் கவணிக்க வேண்டியது பதிவின் நேரத்தை பார்க்கலாம் அதே நேரத்தில் பதிவின் நேரம் என்பதை நானும் பல நேரங்களில் மீள் பதிவிற்காக நேரம் தேதி மாற்றுவது வழக்கம் இதற்கு பிளாக்கர் நம்மை அனுமதிக்கும் ஆனால் அந்த பதிவிற்கான கருத்துரையில் நாம் நேரத்தையோ அல்லது தேதியையோ மாற்ற முடியாது என்பது நான் சொல்லி தெரியவேண்டியது இல்லை உங்களுக்கு அதையும் கவணித்து பாருங்கள் ஆனால் இதிலும் தாலிக்கு அர்த்தம் என்ன? என்கிற பதிவை பற்றி அவர் வாய் திறக்கவே இல்லை.

    இது உங்கள் பார்வைக்கு தயவுசெய்து கொஞ்சம் கவணித்து பார்க்கவும் நண்பர்களே

    ஆணுக்கும் பெண்ணுக்கும் எது அழகு
    http://gsr-gentle.blogspot.com/2010/03/blog-post_13.html (நான் எழுதியது)
    http://kannan3h.blogspot.com/2010/07/blog-post.html
    http://illamai.blogspot.com/2010/03/blog-post_26.html

    தாலிக்கு அர்த்தம் என்ன?
    http://gsr-gentle.blogspot.com/2010/03/blog-post_17.html (நான் எழுதியது)
    http://illamai.blogspot.com/2010/03/blog-post_8724.html

    இறுதியில் நான் http://kannan3h.blogspot.com/2010/07/blog-post.html சென்று அவரிடம் கீழே உள்ளவற்றை நான் கருத்துரை இட்டிருக்கிறேன்.

    \\அன்புள்ள நண்பருக்கு நான் ஞானசேகர் http://gsr-gentle.blogspot.com (புரியாத கிறுக்கல்கள் எனும் வலைத்தளத்தில் எழுதி வருகிறேன் நான் என் தளத்தில் எழுதிய , தாலிக்கு அர்த்தம் என்ன http://gsr-gentle.blogspot.com/2010/03/blog-post_17.html, ஆணுக்கும் பெண்ணுக்கும் எது அழகு http://gsr-gentle.blogspot.com/2010/03/blog-post_13.html இந்த இரண்டு பதிவுகளையும் நேற்று 19/08/10 எதார்த்தமாக http://illamai.blogspot.com/ காப்பி பேஸ்ட் செய்யப்பட்டிருந்தது அதை பற்றி நான் அவரிடம் கேட்ட போது அவர் எனக்கு இப்படியாக (தங்கள் சொல்லுவதை நானும் பாா்த்தேன் இருப்பினும் இது தங்கள் எழுதவில்லை இது எனது நண்பா் விவேகானந்த என்பவா் எழுதியது... தங்களும் அதனை கவா்ந்து தான் உங்கள் தளத்தில் போட்டு உள்ளீா்ள் ஏன் நான் இதே பதிவு FRIDAY, MARCH 26, 2010 இட்டுள்ளேன் தங்கள் இதே பதிவை Sunday, August 1, 2010 தங்கள் இட்டுள்ளீா்கள்... ஏன் இதே பதிவை http://kannan3h.blogspot.com/2010/07/blog-post.html இந்த முகவரியில் உள்ளது இதில் மட்டும் அல்ல இப்படி பல முகவரியில் உள்ளது.... அனால் இதற்கு தங்கள் உரிமை கோருவது... தவறு... என கருதுகிறேன்.



    நன்றியுடன்

    இளமை)

    இப்படியாக பதில் வந்தது நீங்கள் உங்கள் மனச்சாட்சியை தொட்டு சொல்லுங்கள் இவை நீங்கள் எழுதியது தானா? நான் உங்கள் தளத்தை காப்பி எடுத்திருக்கிறேனா?


    எனது பதிவில் கருத்துரையில் இருக்கும் தேதியை பாருங்கள் http://gsr-gentle.blogspot.com/2010/03/blog-post_13.html யார் முதலில் எழுதியிருக்கிறார்கள் என தெரியும் மேலும் ஒரு பதிவை மீள் பதிவாக இடுவதற்கு நான் நேரம் தேதி மாற்றுவது வழக்கம்\\

    நண்பர்களே அவசியம் உங்கள் உதவியை எதிர்பார்க்கிறேன் ஒரு நண்பனாக ஏற்காவிட்டாலும் சக வலைப்பதிவன் என்கிற முறையிலாவது உதவவும்.


    வாழ்க வளமுடன்


    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    38 Comments
    Comments

    38 Responses to “பதிவு திருட்டுக்கு எதிராக உங்கள் உதவி தேவை”

    ராம்ஜி_யாஹூ said...
    August 20, 2010 at 6:11 PM

    இதை எல்லாம் விட்டு தள்ளுங்கள், நீங்கள் தான் அக்மார்க் ஒரிஜினல்.
    மேலும் நல்ல படைப்புக்களை உங்களிடம் இருந்து எதிர் பார்த்து காத்து இருக்கிறோம்


    Siva said...
    August 20, 2010 at 7:13 PM

    forget all this...keep writing...
    u have visitors who are silent in nature looking for learning...tips and new tech news...
    No one erase u'r knowledge...or u'r kind gesture....that is more important than hits....
    Don't pay attention and give publicty to fakes...they fad in no time...


    Meshak said...
    August 21, 2010 at 4:53 AM

    இதுக்கெல்லாம் கவலை படாத தலைவா.இப்பவெல்லாம் இது மாதிரி காபி பேஸ்ட் பண்ற கொசுதொல்ல ஜாஸ்தி ஆயிடிச்சு.என்னதான் கேளுங்க கடைசிவரை ஒத்துக்கவே மாட்டங்க.அவங்ககிட்ட போய் மனசாட்சி பத்தியெல்லாம் கேட்டுக்கினு
    நாங்களும் பார்த்துக்கிட்டுதான் இருக்கோம். அடுத்த சூடான பதிவை ரெடிபண்ணுங்க.


    Mohamed Faaique said...
    August 21, 2010 at 9:05 AM

    vidunga பாஸ்..
    இவனுங்க எதுக்கு எழுத வர்றானுங்கண்டு தெரியல.... சொந்தமா எழுத தெரியாவிடின் சும்மா இருக்க வேண்டியதுதானே...
    எமக்கு உங்களை பற்றியும் உங்கள் பதிவை பற்றியும் நன்கு தெரியும்...
    கவலையை விடுங்க...


    ஜிஎஸ்ஆர் said...
    August 21, 2010 at 9:17 AM

    @ராம்ஜி_யாஹூ நன்றி நண்பரே இதில் வேற அர்த்தம் ஒன்றும் இல்லையே? இந்த பதிவுலகத்தில் அதிக பதிவுகள் என்னிடமிருந்து காப்பி எடுக்கப்பட்டிருக்கிறது இதற்கு சந்தோஷப்படுவதா? வருத்தப்படுவதா? சரி நடப்பது நடக்கட்டும் இவர்களை போன்றவர்களால் படிக்கும் நண்பர்களுக்கு என்ன தோன்றும்


    ஜிஎஸ்ஆர் said...
    August 21, 2010 at 9:19 AM

    @raju நான் சாதரணமாக இது போல எழுதுபவர்களை நான் கண்டுகொள்வதில்லை ஆனால் ஏதோ நினைப்பில் இது பற்றி காப்பி எடுத்தவரிடம் கேட்டு விட்டேன் ஆனால் இப்போது யோசிக்கிறேன் ஏன் அவரிடம் கேட்டோமென்று என்னை புரிந்துகொண்ட தங்களுக்கு நன்றி


    ஜிஎஸ்ஆர் said...
    August 21, 2010 at 9:21 AM

    @Meshakஆம் நண்பா அவர்கள் காப்பி பேஸ்ட் செய்வது கூட எனக்கு வருத்தமில்லை அதற்கு பதிலாக அந்த படைப்பை எழுதியவனேயே நீங்கள் மற்றவரிடம் இருந்து கவர்ந்து எழுதியிருக்கிறீர்கள் என்றால் என்ன செய்வது?


    ஜிஎஸ்ஆர் said...
    August 21, 2010 at 9:23 AM

    @Mohamed Faaique நன்றி நண்பா தங்க்களை போன்ற நண்பர்களாவது நம் தளத்தை பற்றியும் என்னை பற்றியும் புரிந்து வைத்திருக்கிறீர்களே அதுவே மகிழ்ச்சிதான்


    WebPrabu said...
    August 21, 2010 at 9:32 AM

    உங்களின் படைப்புகளின் அருமை,பெருமைகளையும் அதனுடைய மதிப்புகளையும் பார்த்தீர்களா? நீங்கள் முன்பே ஒருமுறை குறிப்பிட்ட மாதிரி "திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது". தயவு செய்து தொடர்ந்து எழுத ஆரம்பித்து எங்களையும் சந்தோஷபடுத்துங்கள். எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு என்றும் துணை இருப்பார். மிக்க நன்றி


    Kiruthigan said...
    August 21, 2010 at 11:12 AM

    விடுங்க பாஸ்..
    சிலருக்கு காப்பியடிக்க தான் தெரியும்..
    ஆனா நமக்கு சொந்தமா எழுத தெரியும்..
    (யார்ல தப்புன்னு நான் ஆராய்ச்சியெல்லாம் பண்ணலை...)


    தோழி said...
    August 21, 2010 at 1:42 PM

    உங்களை தொடர்பு கொள்ள ஏதும் வசதி இருந்தால் என்னால் முடிந்த உதவியை செய்கிறேன்...


    Unknown said...
    August 21, 2010 at 2:18 PM

    நேர்மையான கடின உழைப்பிற்க்கு நிச்சயம் ஒரு நாள் பலன் உண்டு என்பது
    யாராலும் மறுக்க முடியாத உன்மை, என்பது நீங்கள் அறிந்ததே.

    வாழ்க வளமுடன்

    பிரபு திருவண்ணாமலை


    Unknown said...
    August 21, 2010 at 2:34 PM

    நீங்கள் எழுதுவது, தினமும் விரும்பி படிக்கும் எங்களுக்கா? இல்லை உங்கள் பதிவை திருடுபவர்களுக்கா? எங்களுக்காக எழுதுகின்றீர்கள் என்றால் தொடர்ந்து
    எழுதுங்கள்.. உங்கள் பதிவை நான் தொடர்ந்து படித்து வருகின்றேன், இதற்க்காகவாது நீங்கள் தொடர்ந்து எழுதியே ஆக வேண்டும்.

    வாழ்க வளமுடன்

    பிரபு திருவண்ணாமலை


    எண்ணங்கள் 13189034291840215795 said...
    August 21, 2010 at 2:57 PM

    வருத்ததுக்குறியது.. கண்டிக்கப்படவேண்டும்...


    Unknown said...
    August 21, 2010 at 3:05 PM

    இதுக்கெல்லாம் கவலை படாத தலைவா.இப்பவெல்லாம் இது மாதிரி காபி பேஸ்ட் பண்ற கொசுதொல்ல ஜாஸ்தி ஆயிடிச்சு.என்னதான் கேளுங்க கடைசிவரை ஒத்துக்கவே மாட்டங்க.அவங்ககிட்ட போய் மனசாட்சி பத்தியெல்லாம் கேட்டுக்கினு
    நாங்களும் பார்த்துக்கிட்டுதான் இருக்கோம். அடுத்த சூடான பதிவை ரெடிபண்ணுங்க.


    ஜிஎஸ்ஆர் said...
    August 21, 2010 at 5:00 PM

    @WebPrabuவாங்க தம்பி இவங்கள நாம ஒன்றும் செய்யமுடியாது நான் என் தளத்தை காப்பி எடுப்பதை கூட தடுக்கவில்லை மாறாக நானே கவர்ந்து எழுதினேன் என்பதை தான் ஏற்றுக்கொள்ள சிரமாமாய் இருக்கிறது, உங்களின் விருப்பப்படியே விரைவில் இதை விட சிறபாக எழுதுவேன் தம்பி


    ஜிஎஸ்ஆர் said...
    August 21, 2010 at 5:03 PM

    @Cool Boy கிருத்திகன். நானும் சாதரணமாக இது போல் எழுதியவர்களை நான் கண்டுகொள்வதில்லை ஆனால் என்னமோ தெரியவில்லை திடீரென்று என் புத்தி மாறிவிட்டது இனிமேல் இதை எல்லாம் கண்டுகொள்ள கூடாது என்கிற முடிவில் இருக்கிறேன்.


    ஜிஎஸ்ஆர் said...
    August 21, 2010 at 5:05 PM

    @dharshiநம் தளத்தில் இருந்தபடியே நீங்கள் எனக்கு மின்னஞ்சல் அனுப்பும் வசதி இருக்கிறது வலது மேல் பக்கம் பாருங்கள் தொடர்புக்கு என்பதன் கீழாக ஒரு படிவம் இருக்கும் அதன் வழியாக நீங்கள் எனக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்


    ஜிஎஸ்ஆர் said...
    August 21, 2010 at 5:06 PM

    @myblog நீங்கள் சொல்வது உண்மைதான் நண்பரே ஆனால் இந்த காலத்தில் நேர்மைக்கெல்லாம் மதிப்பில்லை என்பதை தான் நடக்கும் சம்பவங்கள் நமக்கு நினைவுறுத்துகின்றன


    ஜிஎஸ்ஆர் said...
    August 21, 2010 at 5:08 PM

    @myblogஅன்பின் பிரபு தங்களின் வேண்டுதலை நிராகரிக்கும் அளவிற்கு கர்வம் எனக்கில்லை எனக்கு கொஞ்சம் நேரம் கொடுங்கள் விரைவிலேயே நம் தளத்தில் முன்னர் எழுதியதை விட இன்னும் சிறப்பாக எழுத முயற்சிக்கிறேன்


    ஜிஎஸ்ஆர் said...
    August 21, 2010 at 5:11 PM

    @புன்னகை தேசம்.அன்பின் நண்பருக்கு நன்றி எனக்கும் இத்தனை நண்பர்கள் இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியளிக்கிறது இது போன்ற செயல் செய்பவர்களை புறக்கனிக்க வேண்டும்


    ஜிஎஸ்ஆர் said...
    August 21, 2010 at 5:14 PM

    @manoharநிச்சியமாக விரைவிலேயே எழுதுகிறேன் நண்பா உங்களை போன்ற நண்பர்கள் ஆதரவு தொடர்ந்து தர வேண்டுகிறேன்


    guru said...
    August 21, 2010 at 8:13 PM

    விடுங்க பாஸ்..
    இப்பெல்லாம் கொசு தொல்லை ஜாஸ்தியாடுச்சு..அதையெல்லாம் ஒழிக்க முடியலை...
    நீங்க அதைப் பத்தியெல்லாம் கவலை படாம அடுத்த பதிவ போடுங்க....


    Anonymous said...

    August 21, 2010 at 9:36 PM

    அந்த பொறுக்கி கம்மனாட்டிய செருப்பாலே அடிக்கணும் தலைவா.நீ கவலைப்படாதே ! சீக்கிரமே அவன் செருப்படி வாங்குவான் ........


    பெருங்காயம் said...
    August 21, 2010 at 9:54 PM

    அவர்களை திருத்த முடியாது. சில நேரங்களில் எனக்கு எது அசல் அன்று புரியாமல் குழம்பியும் உள்ளேன். ஆனால் அந்த மாதிரி ப்ளாக்கிற்கு சென்றால் நிறைய காபி மேட்டர் இருக்கும். கவலை படாதிங்க. நீங்க எப்பவும் அடையாளம் காணப்பட்ட அசல்.


    balakrishna said...
    August 22, 2010 at 2:37 AM

    நண்பரே வணக்கம்,
    கவலையை விடுங்கள்
    நாங்கள் இருக்கிறோம்.
    நாம் உண்மை யாக இருக்கும் பொது மனம் லேசாகும்.
    நீங்கள் வருத்தப்பட வேண்டம்
    உங்கள்
    பாலா


    ஜிஎஸ்ஆர் said...
    August 22, 2010 at 9:22 AM

    @guruதவறு செய்பவர்கள் தாங்களாகவே யோசித்து திருந்தினால் தான் உண்டு தங்கள் அன்பிற்கு நன்றி


    ஜிஎஸ்ஆர் said...
    August 22, 2010 at 9:25 AM

    @lakshuவிடுங்க நண்பா இருந்தாலும் \\அந்த பொறுக்கி கம்மனாட்டிய செருப்பாலே அடிக்கணும்\\ என்பதை நாம் தவிர்த்திருக்கலாம் பின்னர் நமக்கும் அவருக்கும் என்ன வித்யாசம் இருக்கிறது , தங்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி


    ஜிஎஸ்ஆர் said...
    August 22, 2010 at 9:26 AM

    @விஜயகுமார்நன்றி நண்பா உங்கள் வார்த்தைகள் எனக்கு மிகப்பெரிய பலத்தையும் தன்னம்பிக்கையும் தருகிறது


    ஜிஎஸ்ஆர் said...
    August 22, 2010 at 9:29 AM

    @balakrishnaஅன்பின் பாலா அவர்களுக்கு நீங்கள் எப்போதும் நம் தளத்தோடு இனைந்திருப்பீர்கள் என்கிற நம்பிக்கை போதும், தங்களின் அன்பிற்கு மிக்க நன்றி


    முத்து said...
    August 22, 2010 at 4:38 PM

    பாஸ் இதுக்கு போயி கவலை பட்டுகிட்டு .எவ்வளவு காலம் தான் காப்பி பேஸ்ட் பண்ணி பொழப்பை ஒட்டுரானுங்கன்னு பாப்போம்


    மாணவன் said...
    August 23, 2010 at 8:55 AM

    அன்பு நண்பர் ஜிஎஸ்ஆர் சார், பதிவுலகின் குரு பிகேபி அவர்கள் தளத்தின் மூலம் உங்கள் தளத்திற்கு இனைந்தேன் தனக்கு தெரிந்த செய்திகளை மற்ற நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் பதிவுகள் சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் எழுதி வருகீர்கள் தொடர்ந்து இன்னும் நிறைய எழுத வேண்டும்...

    என்ன செய்வது சமீபகாலமாக பதிவுலகில் பதிவு திருட்டு (copy & paste) செய்து வருகிறார்கள் இப்படியும் நண்பர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் அவர்களையெல்லாம் என்ன செய்வது... எதற்கு இந்த பொழப்பு...

    வேறொன்றும் சொல்வதற்கு இல்லை...

    ஒரு படைப்பாளியாய் தமது படைப்புகள் திருடப்படுகிறது என்று வருத்தம் இருக்கத்தான் செய்யும் ....

    இவ்வளவு ஏன் நமது இசைஅரசர் இசைஞானியின் இசையை ஒருசிலர் காப்பி அடித்து பயன்படுத்தியிக்கிறார்கள் அதற்கு இசைஞானியின் நண்பர்கள் இசைஞானியிடம் போய் சொன்னபோது அதற்கு இசைஞானி விடுங்கய்யா இதற்கெல்லாம் அவர்களிடம் போய் நான் சண்டை போட்டுக்கொண்டிருந்தால் எனக்கு இசைமைக்க நேரம் இருக்காது என்று சொன்னாராம்.......

    இதையெல்லாம் நீங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளாதீர்கள்...

    தொடர்ந்து இன்னும் சிற்ப்பாக எழுதுவீர்கள் என்ற நம்பிக்கையுடன்....

    உங்கள். மாணவன்


    ஜிஎஸ்ஆர் said...
    August 23, 2010 at 9:05 AM

    @முத்துவாங்க நண்பா இவங்களால் வாசக நண்பர்கள் நாம் எழுதினத கூட அவர்கள் எழுதியாக நினைக்கவும் வாய்ப்பு இருக்கு உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி நண்பா


    ஜிஎஸ்ஆர் said...
    August 23, 2010 at 9:10 AM

    @மாணவன் அன்பின் நண்பருக்கு வணக்கம் தங்களின் கருத்துரை மிகவும் எதார்த்தமாய் இருக்கிறது என்ன செய்ய நானும் முன்பெல்லாம் நம் தள பதிவு எடுப்பவர்களை கண்டுகொள்வதில்லை சமீப காலத்தில் எழுதுவதை நிறுத்திய போது அந்த வெறுப்பில் தான் இந்த விஷயத்தை காப்பி எடுத்தவரிடம் கேட்டேன் அதற்கு அவர் அளித்த பதில் தான் என்னை மிகவும் வேதனைபடுத்தியது இனிமேல் வரும் காலங்களில் இதையெல்லாம் கண்டுகொள்ள கூடாது என்கிற நிலைக்கு வந்துவிட்டேன்.

    \\இவ்வளவு ஏன் நமது இசைஅரசர் இசைஞானியின் இசையை ஒருசிலர் காப்பி அடித்து பயன்படுத்தியிக்கிறார்கள் அதற்கு இசைஞானியின் நண்பர்கள் இசைஞானியிடம் போய் சொன்னபோது அதற்கு இசைஞானி விடுங்கய்யா இதற்கெல்லாம் அவர்களிடம் போய் நான் சண்டை போட்டுக்கொண்டிருந்தால் எனக்கு இசைமைக்க நேரம் இருக்காது என்று சொன்னாராம்.......\\

    அவர் மிகப்பெரிய மேதை நான் ஒரு சராசரிக்கும் கீழ் தானே நண்பா, தங்களின் அன்பிற்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பா தொடர்ந்து நம் தளத்தோடு இனைந்திருங்கள்


    எஸ்.கே said...
    August 31, 2010 at 1:42 AM

    அன்பு நண்பருக்கு,

    நம் படைப்புகள் மற்றவரிடம் இருக்கும்போது கஷ்டமாகத் தான் இருக்கும். ஒவ்விரு விசயத்தை யோசித்து டைப் செய்ய எவ்வளவு கஷ்டப்படுகிறோம். ஆனால் இவர்கள் அதை எளிதில் கைப்பற்ற விரும்புகிறார்கள். பிளாக்கில் நமக்கென்ன பெரிதாக லாபம் கிடைக்க போகிறது ஆத்ம திருப்தியை தவிர.

    உங்கள் படைப்புகள் அங்கே காணப்படும்போது வாசகர்கள் உங்களை தவறாக நினைக்கலாம்தான். அப்படி நினைத்தாலும் நாளைடைவில் அது புரிந்துவிடும் ஏனெனில் அப்படிப்பட்டவைகளில் பலரின் நகல்கள் இருக்கும்.

    நான் பிளாக் ஆரம்பிச்சு முழுசா 2 மாசம் கூட ஆகலை அதுக்குள்ளேயே என் பதிவுகள் எங்கெங்கேயோ இருக்கு!

    விடுங்க சார்!
    Original always be original.


    ஜிஎஸ்ஆர் said...
    August 31, 2010 at 9:16 AM

    @எஸ்.கேஒன்றிரண்டு பதிவுகளை காப்பி எடுத்திருந்தால் நானும் கண்டுகொள்ள போவதில்லை ஆனால் என் பதிவுகளில் முக்கால்வாசிக்கும் மேலாக காப்பி எடுத்து பல தளங்களில் பிரசுரிக்கபட்டிருக்கிறது உங்கள் பதிவுகள் திருடப்பட்டிருக்குமேயானால் அவசியம் அவர்களுக்கு தெரிவித்து விடுங்கள் நான் ஆரம்பத்தில் கண்டுகொள்ளாமல் விட்டதன் விளைவு இப்பொழுது அறிகிறேன்


    kannan said...
    September 8, 2010 at 9:06 PM

    நண்பரே gsr நீங்கள் எழுதிய பதிவு பிடித்து இருந்தது so அதை எனது பதிவில் போட்டிருந்தேன் but அதில் உங்களது பதிவு என்பதை குறிப்பிட மறந்து விட்டேன். அதற்கு என்னை மன்னிக்கவும். நீங்கள் கஷ்டப்பட்டு எழுதியதை உரிமை கோர நான் கல் நெஞ்ச காரன் அல்ல நண்பரே. எது உங்கள் ப்ளாக் இல் இருந்து தான்
    எடுத்தேன் என்பதை ஒத்து கொள்கிறேன்.
    kannan3h.blogspot.com


    ஜிஎஸ்ஆர் said...
    November 26, 2010 at 7:28 PM

    @சிகப்பு மனிதன்உங்களுக்கு மின்னஞ்சல் செய்கிறேன்


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர